arrow_back
பரமபதம் அத்தியாயம் 14
பரமபதம் chevron_right பகுதி 14 / 54

அத்தியாயம் 14

visibility 265
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.4/5 (11 மதிப்பீடுகள்)
பகிர்

ஷேர் ஹோல்டர்ஸ் அனைவரும் அந்த ஹாலில் குழுமியிருக்கக் கம்பெனி செக்ரட்டரி வாசுதேவ நாயர் அனைவரையும் வரவேற்றார். எதிர்பாரா விதமாக இறந்த ராஜசேகருக்கு அஞ்சலி செலுத்தியவுடன் அதிகாரபூர்வமாகச் சத்யப்ரகாஷ் பிஆர் குரூப்பின் சேர்மன் பொறுப்பை ஏற்றான்,

மைக் முன் நின்று தன்னைச் சமன்படுத்திக் கொண்டான். பக்கவாட்டில் ஓரத்தில் நின்றிருந்த அமிர்தா கட்டை விரலை உயர்த்திக் காட்ட சத்யனும் புன்னகைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“My Dear Shareowners,

A very warm good morning to each and every one of you,

It gives me great pleasure to welcome you to the 19th Annual General Meeting of PV companies Limited,

The Company’s accounts for the year ended March 31, 2013, along with the Directors’ and Auditors’ report, a Letter to the Shareholders, and Management’s Discussions and Analysis, have already been circulated to you,

With your permission, I would like to take them as read,

Strategic Perspective…”

வருடாந்திர கணக்கு வழக்கு எதிர்காலத் திட்டம்பற்றிப் பேசிக்கொண்டு இருந்தவனின் பார்வையில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த சீதாராம் விழுந்தார். உடன் அவர் அருகில்,

சுபர்ணா!

கருப்பு நிற பிசினெஸ் சூட்டில் கால்மேல் காலைப் போட்டு அமர்ந்திருந்தாள்! கண்களில் தீவிரமான சிந்தனை. அழுத்தமான இத்தனை நாட்களில் பார்த்திராத முகபாவம். ஒரு நிமிடம் மூச்சடைத்தது அவனுக்கு. அடுத்த நொடியே சுதாரித்துத் தனது பேச்சைத் தொடர்ந்தான். அந்த ஒரு நிமிட தடுமாற்றத்தை உடனே கண்டுகொண்டாள் சுபர்ணா. இந்தத் தடுமாற்றத்தை தான் நான் எதிர்பார்த்தேன் என்று அவளது மனம் எக்காளமிட்டது!

அவன் படித்து முடிக்க ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தோன்றிய சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தனர்! பொதுவாகப் பார்க்கும்போது ராஜசேகர் இறந்த பின் சத்யன் இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து நடத்த வருவான் என்பதையே நம்பாதிருந்த தன்மை வெளிப்பட்டது,

மிகச் சாதுர்யமாக அவர்கள் அனைவரையும் கையாண்டு கொண்டிருந்ததைப் பார்த்தவர்களுக்கு நிறுவனத்தின் மேல் நம்பிக்கை பிறக்கத் துவங்கியது. பேசி முடித்து அமர்கையில் பெருமித உணர்வோடு அமிர்தாவை பார்த்துப் புன்னகைக்கத் தயங்கவில்லை அவன்,

பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்த்த ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங் எந்தவித நலுங்களும் இல்லாமல் வெற்றிகரமாக முடிய அங்கு உற்சாகமான மனநிலையைக் கொண்டு வந்தது! அதே உற்சாகம் பஃபேவிலும் தொடர்ந்தது! அனைவரையும் பிரத்யோகமாக உபசரித்துப் பேசிக்கொண்டிருந்தாள் அமிர்தா உடன் சத்யா!

“ஹலோ சீதாராம் சார்…” சத்யன் புன்னகை முகமாக அவரிடம் பேச ஆரம்பிக்க முகம் மாறிப் பின் பதில் முகமன் செய்தார் சீதாராமன்!

“ஹலோ பிரகாஷ்…”

“உங்களுக்குச் சௌகர்யமா இருக்கா சீதாராம் சார்?”

“எஸ் அப்கோர்ஸ்…” என்றவாறு சுபர்ணாவை பார்க்க அவள் சத்யனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அருகில் நின்று கொண்டிருந்த அமிர்தாவிடம்,

“ஹேய்… நீ அமிர்தவர்ஷினி தானே எங்க கிட்ட லீகல் ஆபீசரா வேலை செய்தாய் இல்லையா?” குரலில் கேலியோடு சுபர்ணா கேட்க,

“எஸ் சுபர்ணா…” எதார்த்தமாகப் பதில் கூறினாள் அமிர்தா!

“கால் மீ மேடம்…” நறுக்கென்று அவள் பதிலிறுக்க அதனால் எல்லாம் தான் பாதிக்கப்பட்டு விடமாட்டேன் என்று அவளது அமைதி அவளிடமே இருந்தது.

“ஓகே மேடம்…” புன்னகை மாறாமல் அமிர்தா பதில் கூற சத்யாவுக்குத் தான் அந்த அமைதி பறிபோகும் போலத் தோன்றியது!

“சோ… இங்கே என்ன செய்கிறாய்? அதுவும் பிரகாஷோடு?” அவளைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டாள் சுபர்ணா.

“மேடம்… பார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன்… ஷி இஸ் மை பார்ட்னர்…” அமிர்தாவை கையமர்த்தி விட்டு சத்யன் பதில் கூற,

“வாட்?” சுபர்ணா அதிர்ந்தாள். மனதிற்குள் அதிர்ந்தாலும்அதை இத்தனை பேர் முன்னிலையில் காட்டிகொள்வதின் சிரமம் புரிந்தது அமிர்தாவிற்கு. இவன் ஏன் இப்படிக் கூறுகிறான் என்று ஆயாசமாக இருந்தது,

“எஸ்… அமிர்தா என்னோட கசின். இப்போ கம்பெனில பார்ட்னராகப் போறாங்க. போதுமா மேடம் எக்ஸ்ப்ளநேஷன்?” நக்கலாக அவன் கூற, சுபர்ணாவின் முகம் கறுத்தது!

மூவருமாகப் அருகில் வந்தான் ராகவன். சென்னையைச் சேர்ந்த இன்வஸ்டர். மிக வளமான குடும்பப் பின்னணி. அதிகமாக உழைக்காமல் பங்கு வர்த்தகத்தின் மூலமும் பிற நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமும் பணத்தைப் பேருக்கும் மகா புத்திசாலி. அதைத் தாண்டி வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசனையுடன் அணுகும் அமிர்தாவின் தீவிர விசிறி!

“ஹாய் ஏவி…”

“ஹாய் ராகவ்…” புன்னகை விரிந்தது அமிர்தாவுக்கு. தன் திறமையைப் போற்றும் ரசிகனை கண்டால் எந்தக் கலைஞனுக்குத்தான் உற்சாகம் பெருகாது?

“மியுசிக் அகாடமில உங்க ப்ரோக்ராம் சூப்பர் ஏவி. யூ ஆர் ஆசம்…”

“ஒஹ்… தேங்க்ஸ் ராகவ்…”

“அதென்ன அம்மு ஏவி?” சத்யன் புரியாமல் கேட்க,

“சத்யப்ரகாஷ் சார்… நாங்க இவங்களை ஷார்ட்டா கூப்பிடறது ஏவி. இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு திறமை அபூர்வம். அதற்கான மரியாதையை இந்த அழகு தேவதைக்குக் குடுக்க வேண்டாமா?”

ராகவன் அவளைப் புகழ, சத்யன் அவளைப் பெருமையாகப் பார்த்தான். அதே பெருமிதத்தோடு சுபர்ணாவை அவன் பார்க்க அந்தப் பார்வையில் உள்ளுக்குள் கொதித்தாள் அவள். நீ வேலையாள் என்று கூற வந்தாய்… ஆனால் எங்கள் அமிர்தாவின் உயரம் வேறு என்பதை வார்த்தைகளால் சொல்லாமல் கண்களால் காட்டினான். ராகவனோ எதையும் கண்டுகொள்ளாமல் அமிர்தா சகஸ்ர நாமம் பாட ஆரம்பித்து இருந்தான்!

“அதுவும் கிருஷ்ணலீலைல கிருஷ்ணரை பார்த்து ஒரு ரொமாண்டிக் லுக் விடுவீங்களே… ஷப்பா நான் அப்படியே பிளாட் ஆகிட்டேன். வாவ் வாட் எ பர்பார்மன்ஸ்! வாட் எ பியுட்டி! அப்படியே கண்ணுக்குள்ள நிற்கறீங்க ஏவி…” அவன் சிலாகித்துக் கொண்டிருக்க அவனது புகழ்ச்சி, அமிர்தாவிற்கு வெட்கத்தைத் தருவித்தது.

“ராகவ்… போதுமே! ப்ளீஸ்”

“நீங்க வர்றது தெரிஞ்சு இருந்தா… நான் முன்னமே வந்திருப்பேன் ஏவி. இன்னைக்கு ஐ ம் வெரி லேட். அதுவும் இல்லாம மீடிங்க்ஸ் எல்லாம் அப்பாத்தான் அட்டென்ட் பண்ணிட்டு இருந்தாங்க. சோ உங்களை மிஸ் பண்ணிட்டேன்…” சோகமாக அவன் கூறிய தொனியில் சிரித்தான் சத்யன்.

“ராகவ் சார்… இந்த ஆவி… ச்சே ஏவிக்கு இப்படியொரு கிராம்ப்டன் கிரீவ்ஸ் ஃபேனா?”

“பின்ன? சத்யப்ரகாஷ் சார்… இவங்க டான்ஸ் மட்டும் இருந்தா போதும். எனக்குச் சாப்பாடு கூடத் தேவைஇருக்காது…” அவனது புல்லரிப்பு நிற்காமல் தொடர, அமிர்தாவை குறும்பாகப் பார்த்தான் சத்யன்,

“ஏய் ஆவி… நீ இம்புட்டு வொர்த்தா?” வேண்டுமென்றே கிண்டலடிக்க,

“சத்யா…” சிணுங்கினாள் அமிர்தா.

“அப்படீன்னா பஃபே ஐட்டம்ஸ் எதுவுமே சாருக்கு வேணாம் போல… அமிர்தா மட்டுமே போதுமே. ராகவ் சார்… அமிர்தா டேஸ்ட் எப்படி இருந்ததுன்னு எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க…” புன்னகையைப் பூசிக்கொண்டே விஷத்தைக் கக்கினாள் சுபர்ணா இரட்டை அர்த்தத்தோடு!

ராகவன் அதைப் புரிந்து கொள்ளாமல் சிரிக்க, புரிந்து கொண்ட மற்ற இருவருக்கோ சுரீரென்றது. ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொள்ள,

“ராகவ்… உங்களுக்குத் தெரியுமா? உங்க ஏவி இந்தக் கம்பெனில பார்ட்னராகப் போறாங்க…” சுபர்ணா ராகவனின் பலவீன பகுதியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அது அமிர்தாவிற்கு நெருப்பு துண்டங்களின் மேல் அமர்ந்தது போலிருந்தது!

“வாவ்… ரியலி? அப்போ என்னோட இன்வஸ்ட்மென்ட் எல்லாம் இங்க மட்டும் தான்…” அமிர்தா பைத்தியம் முற்றிய நிலையில் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு உதடுகள் ஏளனமாக வளைந்தது!

“ஒஹ் பிரகாஷ்… நீங்க இன்வஸ்ட்டர்ஸ் தேடி அலையவே தேவையில்லை. அமிர்தாவே பெரிய இன்வஸ்ட்மென்ட் போல…” என்று கூறிவிட்டு பெரிய ஹாஸ்யத்தைக் கண்டுவிட்டவளை போலச் சிரிக்க, சத்யனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

ஆனாலும் அமிர்தா அசைந்து விடுபவள் அல்லவே. அவனைப் பார்வையாலேயே அடக்கி விட்டுத் தான் பேச்சைத் தொடர்ந்தாள். இவன் ஏதாவது பேசிவிட்டால் ஏதாவது ரசாபாசம் ஆகிவிடுமோ என்ற கவலை அவளுக்கு. இருக்கின்ற நிலையில் ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங் வெற்றிகரமாக முடியவேண்டுமே!

“சுபர்ணா மேடம்… கம்பெனி பத்தி கவலைப்படறதுக்கு ரொம்பத் தேங்க்ஸ். பட் எங்க இன்வஸ்ட்மென்ட் இதோ இங்க நிற்கற எங்க சத்யா தான். சியுர்ஷாட் இன்வஸ்ட்மென்ட்…” பேச்சை வேறு திசையில் மாற்றிவிட்டாள். இது போன்ற குத்தல்கள் ஆயிரத்தை நான் பார்த்திருக்கிறேன். கவலைப்படாதே என்று சத்யனுக்கு உரைத்தது அவளது பார்வை!

ராகவன் சுபர்ணாவின் உள்குத்தை உணரவில்லை என்றாலும் ஏதோ தவறு என்ற மட்டிலும் புரிந்து கொண்டான்.

இதற்கு மேல் இந்தப் பெண்ணிடம் பேசுவது சரியில்லை என்பதையுணர்ந்து, “ஓகே ஏவி… அடுத்த ப்ரோக்ராம் எப்போ? எங்க? என்கிட்டே இன்பார்ம் பண்ணாம இருந்துடாதீங்க…” விடை பெற ஆயத்தமானான்.

“சியூர் ராகவ்… கண்டிப்பா…”

அமிர்தா கூறிகொண்டிருக்கும் போதே ராகவனின் செல்பேசி அழைத்தது. எடுத்துப் பேசியவன் முகம் கறுத்தான். சத்யாவையும் அமிர்தாவை முகம் சுருங்க பார்த்தவன்,

“ஐ ஆம் சாரி… யூ போத் ஆர் இன் ட்ரபிள். ஷேர்ஸ் ஆர் அண்டர் ஹெவி செல்லிங்” (மன்னிக்கவும் நீங்கள் இருவரும் பெரும் பிரச்சனையில் இருக்கிறீர்கள். பங்குகள் சந்தையில் அழுத்தமான விற்பனையில் இருக்கின்றன)

“வாட்…”

“எஸ்… தட் டூ அட் தர்ட்டி!” அவனது குரல் நடுங்கியது. ஏனெனில் மார்கெட் வால்யு முன்னூறு ரூபாய்க்கு வாங்கிய பங்குகள் முப்பது ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அவ்வளவு அமைதியாக அணுக முடியவில்லை அவனால்!

“பட் ஹவ்?” எதையும் அமைதியாக அணுகும் அமிர்தாவே பதட்டமடைந்தாள்,

இருவரின் பார்வையும் இருவருக்கும் குறையாத பதட்டத்தில் செல்பேசியில் பேசிகொண்டிருந்த பரமேஸ்வரனின் மேல் பாய்ந்தது! அவர் தனது இயலாமையை மறைக்க முடியாத பார்வையோடு தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார். நொடி நேரத்தில் பதட்டம் சூழ அந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் அமிர்தாவை பார்த்தான் சத்யன்.

பரமேஸ்வரன் முன்னே வந்து, “சத்யா… பத்து மணிக்கு நாம் மீட்டிங் ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். பதினோரு மணிக்கு பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ல செல்லிங் ஸ்டார்ட்டாகியிருக்கு. அதுவும் எடுத்தவுடனே ஐம்பது முப்பதுன்னு. சம்திங் பிஸ்ஸி…”

அவர் கூறிகொண்டிருக்கச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவனின் பார்வை வட்டத்தில் விழுந்தது சீதாராமனும் சுபர்ணாவும். ஏளன புன்னகை முகத்தில் மின்ன… இனி என்ன செய்யப் போகிறாய் என்ற சவாலான முகபாவத்தோடு!

ஆகச் சுபர்ணா ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 15

வெகு நிசப்தமாக இருந்தது அந்த டிஸ்கஷன் ஹால். சத்யன், அமிர்தா, பரமேஸ்வரன் முதலான முக்கியத் தலைகளோடு மற்ற மேலதிகாரிகளும் கூடி இருந்த அறையில் யார் முதலில் பேச்சைத் துவக்குவது என்று தயங்கி கொண்டிருந்தனர். சத்யனின் முகத்தில் அதீத யோசனை. அதற்குக் குறையாத…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

உங்கள் கருத்தைப் பகிருங்கள்