arrow_back
பரமபதம் அத்தியாயம் 17
பரமபதம் chevron_right பகுதி 17 / 54

அத்தியாயம் 17

visibility 791
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.1/5 (8 மதிப்பீடுகள்)
பகிர்

“எப்படி நடந்தது இது?” அதீத கோபத்தில் இருந்தாலும் சிறிதும் நிதானம் இழக்காதவர் சீதாராமன்,

“ஏதோ செய்து இருக்கிறார்கள் சார். என்னவென்று புரியவில்லை… விசாரித்துக் கொண்டிருக்கிறோம்…” பவ்யமாக அதே நேரத்தில் பயத்தோடு பதிலளித்தார் அவரது செக்ரட்டரி மாதவகிருஷ்ணன்.

“இது தகுந்த பதிலில்லை மாதவன். எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தேன் என்பதை அறியாதவர் அல்ல நீங்கள். ஆனாலும் இப்படியொரு பதில்… எதிர்பார்க்கவில்லை…” அவரது கொக்கிபிடியில் அயர்ந்து நின்றார்.

“மன்னிக்க வேண்டும் சார். நடந்தது என்ன என்பதை முழுவதுமாக ஆராய எங்களுக்குச் சிறிது நேரம் தேவைப்படுகிறது.” நேராகப் பதில் கூறினார் மாதவக் கிருஷ்ணன்.

இது தான் இவர். எதுவாக இருந்தாலும் நேராகப் பேசிவிடுவார் அதோடு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போன்ற அணுகுமுறையாகத்தான் இருக்கும். இவரது நேர்மைக்காகவே சீதாராமன் எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டி கொடுக்கத் தயாராக இருந்தார்.

“எவ்வளவு நேரம்?”

“ஒரு நாள்…”

“எடுத்துகொள்ளுங்கள் ஆனால் கம்ப்ளீட் அனலிசிஸ் வேண்டும் எனக்கு… நீங்கள் செல்லலாம்…” மாதவக் கிருஷ்ணன் வெளியேறியதை உறுதிப்படுத்திக் கொண்ட சுபர்ணா கையில் இருந்த கண்ணாடி டம்ளரை தூக்கி எறிந்தாள்.

அது தூரமாகச் சென்று விழுந்து படீரென்று உடைந்தது. அவள் முகம் ஜிவுஜிவு என்று சிவந்து இருந்தது.

“சுபி… உணர்ச்சிவசப்படாதே… அதற்கான நேரமல்ல இது…”

“பின் வேறு எதற்கானது? என் கண் முன்னரே பிரகாஷ் அவளுடன் குலவுவதைப் பார்த்த பின்னரும் என்னால் எப்படியப்பா பேசாமல் இருக்க முடியும்?”

“இப்போது அதுவல்ல பிரச்சனை. நம்முடைய திட்டங்கள் பாழாகி விட்டன. இதில் நமக்குக் கிட்டதட்ட இருபது கோடி நஷ்டமாகி விட்டிருக்கிறது. அதைப் பார் சுபி.”

“அது என்னுடைய டேஷுக்குச் சமானம். என்னுடைய தேவையெல்லாம் என்னிடம் சவால் விட்ட… சத்யப்ரகாஷ்…” இன்னும் என்ன கெட்டவார்த்தையெல்லாம் இவள் வாயிலிருந்து வருமோ என்று ஒரு கணம் மூச்சை இழுத்து பிடித்து விட்டார்.

“இவ்வளவு நஷ்டத்தையும் ஏற்றது உனக்காகத்தான் சுபி. என் முன்னரே என் மகளைப் பற்றி எவ்வளவு தரக்குறைவாகப் பேசினான். அதை நான் விட்டுவிடுவேனா?” பதிலுக்குக் கொதித்தார்.

“அவன் எனக்கு வேண்டும் டேடி. அவன் கண்டிப்பாக வேண்டும்…” குரலில் இருந்த சைக்கோத்தனமான வெறியை கண்டு ஒரு நிமிடம் சீதாராமனே ஆடிவிட்டார்!

“கண்டிப்பாகச் சுபி… அதை நான் நடத்தி காட்டுகிறேன்…” மகளுக்கு ஏற்றத் தந்தையாகச் சூளுரைத்தார்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 18

“கடைசி நாள் இல்லையா...” அந்தக் கட்டிடத்தைச் சுற்றி பார்த்தபடி உணர்ச்சிகளைத் துடைத்த முகத்தோடு கேட்டான் சத்யன். அதன் காரணத்தை அறிந்த அமிர்தாவின் முகமும் வெளுத்திருந்தது. ஒன்றும் பேசாமல் வேறுபுறமாகத் திரும்பினாள். கண்கள் கலங்கி இருந்தது. “நோ செண்டிமெண்ட்ஸ் அம்மு.” அவனுக்கும் சோகம்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்