arrow_back
பரமபதம் அத்தியாயம் 2
பரமபதம் chevron_right பகுதி 2 / 54

அத்தியாயம் 2

visibility 385
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (10 மதிப்பீடுகள்)
பகிர்

Conscience is a sacred sanctuary where god alone enter as judge

-Lamennais

கடவுள் மட்டும் நீதிபதியாக நுழையக்கூடிய கோவில் மனசாட்சி,

-லமேனியஸ்

மும்பை

(ஹிந்தி வசனங்கள் தமிழில்)

மும்பையின் பிரபல செயின் ஆப் ஹோட்டல்ஸின் அதிபர் நேமிசந்த் சத்யனின் கட்டிட ப்ளானை கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தார்! அவருக்கு, தான் நினைத்ததற்கு மேலேயே மிக அழகாக வந்திருந்தது அடிப்படை வடிவமைப்பின் முன்மாதிரி. மும்பையில் உள்ளது போன்ற சகல வசதிகளையும் அடக்கிய ஒரு உணவு விடுதி தான் அவரது நோக்கம்.

“இதற்குத் தீம் செலெக்ட் செய்து விட்டாயா சத்யன்?”

“தற்போது உங்களின் யோசனையின் பெயரில் மூன்று தீம்கள் தயாராக இருக்கிறது. அதைப் பார்வையிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள் நேமிசந்த்ஜி”

“பாபிலோன் தோட்ட முன்மாதிரி மிக அழகாகப் பொருந்தி போகிறது சத்யன். கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக… அதை நீச்சல் குளத்தோடு கூடிய வெளிப்புற உணவகத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உள் உணவகத்திற்கு மெலிதான ஆடம்பரம் போதும். அதைப் பின்னர் டிசைன் செய்து கொள்ளலாம். பார் வித் டிஸ்கோத்தே தீம் மிகவும் புது மாதிரியாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. இங்கே மும்பையிலும் எல்லாக் கிளைகளுக்கும் இதையே மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் சத்யன்…”

“கண்டிப்பாகஜி… நீங்கள் உங்கள் பட்ஜக்ட்டை சொல்லுங்கள். அதற்கேற்ப உங்களுக்கு முடித்துத் தந்து விடுகிறேன். உங்களது கால அவகாசத்திற்குள்… ஏனென்றால் இயங்கி கொண்டிருக்கும் ஹோட்டல் அல்லவா…” சத்யன் இவ்வாறு கூறவும் மெலிதாகப் புன்னகைத்த நேமிசந்த்,

“உனது சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது சத்யா… எனது இளவயதை நானே திரும்பிப் பார்க்கும் உணர்வு வருகிறது. உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னை அழை சத்யா…” வாஞ்சையாகக் கூறினார். அவருக்கு இவன்மேல் தனிப் பாசம். தன் மகன் நிகிலுடன் படித்தவன் என்பதைத் தாண்டிய பரிவு!

“உங்களது அன்பிற்கு நன்றி நேமிசந்த்ஜி. உங்களைப் போன்றவர்களின் ஆசிகள் தான் என்னை இயக்கும் சக்தி…” வார்த்தைகள் உண்மையாக உள்ளத்திலிருந்து வெளிப்பட்டன!

“எதோ ஒரு இனம் கான முடியாத அன்பு உன்மேல் ஏற்பட்டு விட்டது. எனக்கு ஒரு பெண் இல்லையே என்றும் கூட வருந்துகிறேன்…” என்று அவர் கூறவும் சிரித்த சத்யன்,

“ஆஹா… இதைச் சுபி கேட்க வேண்டும்ஜி…” சத்யன் இவ்வாறு கூறவும் பெரும் குரலெடுத்து சிரித்தார் நேமிசந்த்!

“அவளுக்கும் எனது வாழ்த்துக்களும் ஆசிகளும். அடுத்த மாதம் இரண்டாவது வெள்ளி தானே உங்களது திருமணம்? மிகுந்த கனவில் இருப்பீர்கள் அல்லவா இருவரும்…” என்று அவர் கேட்கவும் முகம் சிவந்தது சத்யனுக்கு!

“அடடா… ஆண்கள் முகம் சிவப்பது மிகவும் அழகாக உள்ளது சத்யன். எனது இளவயது நினைவுகள் எனக்குத் திரும்புகின்றன. விட்டால் அந்தக் கதைகளைப் பேசி உன்னை அறுத்துத் தள்ளி விடுவேன். உனது இன்றைய திட்டங்கள் அனைத்தும் பாழாகிவிடும். நீ இந்த முன்மாதிரிகளையும் வரைபடங்களையும் நிகிலிடம் கொடுத்து விட்டுக் கிளம்பு சத்யா…” என்று மனம் நிறையச் சிரித்துக் கொண்டே கூறினார் நேமிசந்த். நிகில் அவரது மூத்த மகன். அவருக்கு உதவியாகத் தொழிலில் இருப்பவன். சத்யனின் நண்பன்!

அவரிடம் பேசிவிட்டுநிகிலிடம் வரைபடங்களைக் கொடுக்க வந்தான்! அவனிடம் தொழில் ரீதியாக அந்த வரைபடங்களை விளக்கிக் கூறினான். அவற்றை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு அவனும் சில சஜஷன்களைச் சொன்னான். சத்யன் அவற்றையும் பரிசீலிப்பதாக வாக்கு கொடுத்து விட்டுக் கிளம்புவதற்காக எழுந்தான். அவனைக் கையமர்த்திய நிகில்,

“எப்படிப் போகிறது உனது நாட்கள் உனது வருங்கால மனைவியுடன்…” தோழனாகக் கேட்க,

“மிக மிகச் சுவாரசியம்… காதலித்துக் கொண்டிருக்கும் இந்த நாட்களின் சுவாரசியங்களை நேசிக்கிறேன் நிகில்…” உணர்ந்து கூறினான் சத்யன்!

“அதெப்படி சத்யா? நீயாக அந்தப் பெண்ணைத் தேர்வு செய்யவில்லை… ஆனால் காதலிப்பதாகச் சொல்கிறாயே… இடறுகிறதே…” கிண்டலாகக் கூறியவனுக்குத் தெரியும் சத்யனின் இயல்பு. ஸ்டான்போர்டில் ஒன்றாகப் பயின்ற அனுபவம். எல்லாவற்றிலும் பங்கெடுத்துக் கொள்ளும் அவனது நண்பன் பெண்கள் விஷயத்தில் கற்பை கடைபிடித்தது அங்கு எல்லோருக்குமான ஆச்சரியம். ஆனால் பெண்களிடம் பழகாதவனில்லை! பெண் தோழிகள் எக்கச்சக்கம்… ஆனால் ஒரு எல்லையோடு நின்று விடும். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் அவன் கண் சிமிட்டிஉதிர்க்கும் வார்த்தை,

“ரிசர்வ்ட்…”

“ஏன் நிகில்… பெற்றோர்கள் திருமணத்தை நிச்சயித்த பின்னர்க் காதல் வரக் கூடாதா? என்னைக் கேட்டால் நான் மிகவும் பாதுகாப்பாகக் காதலித்துக் கொண்டிருக்கிறேன். நீயும் காதலித்துப் பார் அப்போது இந்தச் சுவாரசியம் உனக்கும் தெரியும்…” சிரித்தான் சத்யன்!

நிகில் அனைத்தையும் சுவைத்தவன். இப்போது சத்யன் கூறுவது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது!

“காதலித்துப் பார் என்கிறாயே… எனக்குள்ள காதல் அனுபவங்கள் நீ அறியாததா சத்யா? எனக்குச் சிரிப்பாக வருகிறது…” என்று நிகில் சிரிக்க,

“காதலுக்கும் கலவிக்கும் உனக்கு வேறுபாடு தெரியவில்லை நிகில்… அதனால் உனக்கு இந்த அணுகுமுறை இப்போதைக்குப் புரிய வாய்ப்பில்லை…” என்று சிரித்தவனை,

“அடடா… அய்யா இதிலெல்லாம் மிகுந்த தேர்ச்சி அடைந்து விட்டார் போல…” முதுகில் தட்டி சிரித்து,

“சரி கிளம்பு… நமது நண்பர்கள் காத்து கொண்டிருப்பார்கள்…” அவர்களது செட் நண்பர்கள் அனைவரும் ஹோட்டல் லீலாவில்சந்திப்பதாகத் திட்டம்! முதலில் ஸ்னோ பவுலிங்கும் லீலாவில் டிஸ்கோத்தேவும் அவர்களது திட்டத்தில் இருக்க, அதை முடித்து அரட்டை அடிக்கக் கூடுவதாக ப்ளான் செய்திருந்தனர். சத்யன், நிகிலோடு இன்னும் நண்பர்களான விஸ்வா, நிஷா, தேவ், அக்ஷிதா சேர ஸ்னோ பவுலிங் களை கட்டி இருந்தது. இதில் நிஷாவும் தேவ்வும் காதலர்கள். விஸ்வாவும் தேவ்வும் லண்டனிலிருந்து இந்தியா வந்திருக்க அக்ஷிதா சென்னையைச் சேர்ந்தவள். அவளுடைய தந்தையும் பெரிய பிசினஸ்மேன். நிஷா மும்பையைச் சேர்ந்தவள். தற்போது ஹெச்ஆரில் இருப்பவள். அனைவரும் ஸ்டான்போர்டில் ஒன்றாகப் படித்தவர்கள்!

“ஹே நிஷா… தேவ் கண்களுக்குப் பவுலிங் ஃபிரேம் தெரியாதாமே? நீ மட்டும் தான் தெரிவாயாமே… அப்படியா…” விஸ்வா வம்பிழுக்க,

“டேய் அரட்டை… வேண்டுமென்றே வம்பிழுக்காதே! ஏதோ இன்றைக்கு அவனுக்கு ஸ்பேர் போட முடியவில்லை என்பதற்காக அவனை ஒன்றுக்கும் உதவாதவன் போலக் கூறுகிறாயே?” என்று தேவ்வுக்குச் சப்போர்ட் பேசுவது போல அவளும் தேவ்வை வார,

“தாயே… நீயே அவனுக்குப் பாய்ன்ட் எடுத்துக் கொடுக்காதே! புண்ணியமாகப் போகும் நிஷா…” தேவ் நிஷாவை கெஞ்சினான்!

“நீ வரிசையாக மூன்று டர்கிக்களை அடித்தவன் என்று சொல்ல வருகிறேன் தேவ்…” என்று சொல்லிவிட்டு அவனது முகத்தைப் பார்க்க, அதற்கு அவன் கடுப்பாகி முறைக்க,

“சரி… சரி நான் வாயை மூடிக் கொள்ள வேண்டுமென்றால் ஒரே ஒரு டர்கி அடி. அதன் பின் நானும் பேசமாட்டேன். இந்த வெட்டிப்பயல் விஸ்வாவும் பேசமாட்டான். என்ன விஸ்வா?” விஸ்வாவை பார்த்து நிஷா கேட்க,

“ஆமாம் ஆமாம்… ஆனால் வெட்டிப்பயல் என்று கூறியதற்கு அப்ஜக்ஷன் யுவர் ஆனர்…” என்று சிரித்தான்! பொதுவாக ஸ்னோ பவுலிங் பிரேமில் பத்துப் பின்கள் இருக்கும். ஒரே தடவையில் பத்துப் பின் அடித்து விட்டால் அதற்குப் பெயர் ஸ்ட்ரைக் அல்லது ஸ்பேர் என்பார்கள். வரிசையாக மூன்று ஸ்பேர் அடித்தால் அதற்குப் பெயர் டர்கி.

“சரி வெட்டாத பயல்… போதுமா விஷ்…” நிஷா கண்ணைச் சிமிட்டினாள்!

“சரி சரி… உங்களது சண்டை பின்னால் வைத்துக் கொள்ளுங்கள். சப்போஸ் டர்கி போட்டுவிட்டால் என்ன தருகிறாய் நிஷா? அதை முதலில் சொல்லு…” என்று தேவ் கிடுக்கி பிடி போடவும் நண்பர் கூட்டம் ஆர்பரித்தது!

“ஹா அதைச் சொல்லு…” கூட்டமாக அனைவரும் கேட்கவும்,

“என்ன வேண்டும் என்று நீயே சொல் தேவ்… பார்ட்டியா மதிய உணவா…” அலட்சியமாகவே அவளும் கேட்க,

“உன் சாப்பாடை நீயே வைத்துக்கொள். ஐ நீட் கிஸ். ஓகே வா…” என்று அனைவருக்கும் முன்னாலேயே தேவ் கண்ணடித்தவாறே சொல்லவும் அனைவரும் ஹோ என்று சப்தம் எழுப்ப, நிஷாவுக்குக் கோபத்தில் முகம் சிவக்க, அவனது தலைமேல் நங்கு நங்கு என்று குட்டு வைத்தாள்.

“அறிவு கெட்ட கூமுட்டை. இந்தப் பிசாசுகளின் முன் எதைக் கேட்பது என்று அறிவு வேண்டாம்? இனி உன்னுடன் தனியாக வரமாட்டேன். டாடியிடம் சொல்லி விடுகிறேன்…”

“ஐயோ… ஒரு எல்கேஜி பிள்ளையையா நான் காதலிக்கிறேன்? ஆண்டவா…” என்று தேவ் புலம்ப… இவற்றை அமைதியாகப் பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான் சத்யா. அவர்கள் இருவரும் எப்போதும் இப்படித்தான். இருவரின் பெயரே டாம் அன்ட் ஜெர்ரி. அதற்கேற்ப எப்போதும் இது போன்ற சிறிய சிறிய சண்டையிலேயே இருப்பார்கள். தேவ்வும் விஸ்வாவும் இந்தியா வரும் போதெல்லாம் சத்யன் எல்லாரையும் இது போன்ற சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விடுவான் உடன் நிகிலும் சேர்ந்து கொள்வான்!

“ஓகே சைலன்ஸ்… இப்போது சத்யனுக்கு ஒரு சேலஞ்ச். என்னடா ஓகே வா…” சிரித்துக்கொண்டே அக்ஷிதா அவனை அழைக்க… அவளது பார்வையில் இருந்த குறும்பு அவனுக்கு எதையோ உணர்த்தியது!

“என்னவென்று நீ சொல் அக்ஷி. செய்யலாமா வேண்டாமா என்று நான் சொல்கிறேன்…” மீனாக நழுவ பார்த்தான் சத்யன்! அவன் கூறியதை கேட்டுநக்கலாகச் சிரித்துக் கொண்டு,

“நீயும் தான் டர்கி அடிப்பதில் வல்லவனாயிற்றே சத்யா. இது கொஞ்சம் அதிகம். மொத்தமாகப் பத்து ஸ்பேர் அடிக்க முடியுமா உன்னால்? அடித்தால்…” என்று கூறி கேள்வியாக நிறுத்தினாள்!

“அடித்தால்…” இருந்த அனைவரும் ஆர்வமான குரலில் கேட்க,

“அடித்தால்… ஒவ்வொரு ஸ்ட்ரைக்குக்கும் மொத்தமாகச் சேர்த்து பத்து கிஸ்…” என்று அவள் கூறவும் அனைவரும் கை தட்டி ஆரவாரித்தனர்! சத்யனோ ஒன்றும் பேசாமல் குறும்பு பார்வையோடு அக்ஷிதாவை குறுஞ்சிரிப்பாகப் பார்த்தான்!

“என்ன எனது சேலஞ்சை உன்னால் ஏற்க முடியுமா சத்யா? உன்னால் முடியும் என்றால் செய் பார்க்கலாம்…” வெறுமனே சொல்லி இருந்தால் மறுத்து இருப்பானோ என்னவோ… ஆனால் இப்போது அவனுக்குக் கௌரவப் பிரச்சனை ஆனது போன்ற தோற்றம்.

நண்பர்கள் அனைவரும் ஆர்ப்பரிக்க, “ஓகே டன்…” என்று கட்டை விரலை உயர்த்தினான் சத்யன்!

எல்லாரும் ஆர்வமாகப் பவுலிங் பின்னையே பார்த்துக் கொண்டு… வரிசையாக எண்ணுவதற்கு ஆரம்பித்து இருந்தனர். கோரசாக,

ஒன்று,

இரண்டு,

மூன்று,

நான்கு,

ஐந்து,

ஆறு,

ஏழு,

மனம் படபடக்க அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க… அக்ஷிதாவின் நகங்களோ அவளுடைய டென்ஷனுக்குப் பலியாகி கொண்டு இருந்தது. வேர்வை முத்துக்கள் அவளது நெற்றியில் பூத்து கொண்டிருந்தன! இரண்டு கைகளாலும் பால்லை தூக்கி அதன் பின் வலது கைக்கு மாற்றிக் குனிந்து பின் பிரேமிற்கு அனுப்பினான் சத்யன்.

எட்டு,

ஒன்பது,

உச்சகட்ட படபடப்பில் அவளது நகங்கள் அனைத்தும் காணாமல் போய் இருந்தன. சத்யனோ சிறு டென்ஷனும் இல்லாமல் அடுத்தப் பௌலிங் செய்யப் பால்லை எடுத்தான்.

“ஹே அக்ஷி… என்ன உனது சேலஞ்ச் இன்னும் இருக்கிறதா… இல்லையென்று சொன்னால் நான் விலகிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்…” கண்ணைச் சிமிட்டி சிரித்து வேண்டுமென்றே அவளைச் சீண்டினான் சத்யன்!

“ஹலோ… நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி. சொன்னா சொன்னதுதான்…” இருவர் மட்டும் தமிழில் கலாய்க்க,

“அப்புறம் உன் விதி… ரெடியா இரு… ஓகே…” கண்ணடித்து விட்டுப் பௌல் செய்ய… அது பத்து பின்களையும் நாக் செய்துவிட்டு போக,

“ஹெய்ய்ய்யய்ய்ய்யி…” நண்பர்களின் ஆரவாரம் காதைக் கிழித்தது!

சத்யன் கை முஷ்டியை உயர்த்தி உதறி,

“ஹே… அக்ஷி… இப்போ என்ன சொல்ற? ஓகே வா?” என்று கட்டை விரலை உயர்த்திக் குறும்பாகக் கேட்க,

“ஹஹா சத்யா… நானா ஓகே சொல்லமாட்டேன்? ஐ ஆம் ஆல்வேஸ் ஓகே சத்யா…” என்று கண்ணடித்துச் சிரித்தாள் அக்ஷி. அவளது அன்றைய திட்டமே அது தானே!

“ஹேய்ய்ய்… நானா தான் சிக்கிட்டேனா?” அவளிடம் வசமாகச் சிக்கியது அவனுக்கு அப்போதுதான் உரைத்தது. சந்தானத்திடம் சிக்கிய பவர்ஸ்டார் போல ங்கே என்று விழித்தான் சத்யன் மனதுக்குள் அடிப்பாவி என்று திட்டிக் கொண்டே!

வீம்புக்கு போட்டி மாதிரி அவனைத் தூண்டி விட்டு இப்படிக் கவிழ்த்து விட்டாளே ராட்சசி என்று முணுமுணுத்துக் கொண்டு… வெளியே ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிரித்து வைத்தான்.

“என்ன சத்யா? ரெடியா?” சிரித்துக் கொண்டே பக்கத்தில் அவள் வர, நண்பர்களின் ஆரவாரம் அதிகமானது!

“ஹேஏஏஏஏ…”

எப்போதுமே அவனை அக்ஷிதா இதுபோல வம்பிழுப்பது சகஜம் என்றாலும், முத்தம்வரை வந்து நிற்கும் என்று அவன் நினைக்கவில்லை. அவள் விட்டுவிடுவாள் என்றே நினைத்தான். ஆனால் பழிகாரி செயல்படுத்த வேறு செய்வாள் என்று அவன் கனவிலும் நினைக்காத ஒன்று!

“ஹே ப்ளீஸ் அக்ஷி. வேணாம். நான் தோத்துட்டதாவே ஒத்துக்கறேன். ப்ளீஸ்…” அவளது குறும்புத்தனத்தை உணர்ந்து சத்யன் கெஞ்ச ஆரம்பித்தான்!

“ஓ நோ சத்யா… இதுக்காக எவ்ளோ ப்ளான் பண்ணி இருக்கோம். இப்போ என்னன்னா அது வேணாம் இது வேணாம்ன்னு…” நக்கலாகவே அக்ஷிதா கூற அவன் பின்னுக்கு நகர்ந்தான்!

“ஹே அக்ஷி… அவனுக்கு வேணாம்ன்னா எனக்கு டைவர்ட் பண்ணி விடேன்…” நிகில் சப்தமாகக் கேட்க,

“ஓ ஷட் அப் பாய்ஸ். இங்க ஒரு ஆடு செமத்தியா சிக்கிட்டு முழிக்குது. அதைக் கவனிக்க விடுங்க…” அக்ஷியும் சப்தமாக,

“அடிப்பாவி… நான் ஆடா?”

“இல்லையா பின்ன?” கண்ணடித்தாள் அக்ஷிதா!

“ப்ளீஸ் அக்ஷி… என்னோட கற்பு இப்போ உன்னோட கைல தான் இருக்கு. அதை என் கல்யாணம் வரைக்கும் காப்பாத்திக்கறேனே ப்ளீஸ்…”

“டேய்… நான் என்ன உன்னை ரேப்பா பண்ண போறேன்? அழும்பு பண்ணாத… இப்போ நீ பேசற வசனம் எல்லாம் வில்லனைப் பார்த்து ஹீரோயின் பேசறது. ஏன்டா என் மானத்தை வாங்குற?” முதுகில் ஒரு அடி போட அது தான் சாக்கென்று சத்யன் அவளிடம் சிக்காமல் தப்பிக்கப் பார்க்க, அவனைத் துரத்திக் கொண்டு அந்த ப்ளே ஸ்டேஷனில் ஓட, தீடீரெனச் சடன் ப்ரேக் போட்டது போலச் சத்யன் நின்றான்!

எதிரில் சுபர்ணா… புன்னகையுடன்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 3

சுபர்ணாவை சத்யப்ரகாஷ் அங்கு எதிர்பார்கவே இல்லை! “ஹாய் நீ எங்க இங்க?” என்றான் இனிமையான அதிர்வோடு! அவளை இங்குப் பார்ப்போம் என்பதை அவன் நினைக்கவே இல்லை. ஆனால் இதை அவள் முன்னமே எதிர்பார்த்தது போல... மெலிதாகச் சிரித்து, “எல்லாம் ஒரு இன்டியுஷன்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

உங்கள் கருத்தைப் பகிருங்கள்