arrow_back
பரமபதம் அத்தியாயம் 21
பரமபதம் chevron_right பகுதி 21 / 54

அத்தியாயம் 21

visibility 247
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (8 மதிப்பீடுகள்)
பகிர்

பார்ட்டியை முடித்து விட்டு நேரத்திலேயே கிளம்பி விட்டனர் இருவரும். அமிர்தாவுக்குப் பத்மவிலாசத்தில் வேலை இருந்தது. சமையலறையில் பொருட்களை ஒதுக்கி, சுத்தபடுத்தி விட்டால் வேலை செய்பவர்களுக்குச் சுளுவாக இருக்குமென்பதனால் அவனையும் மிரட்டி இருத்தி கொண்டாள். அதை முடித்து விட்டு வேலை முடிந்தபின் தன் வீட்டிற்குச் செல்ல ப்ளான் செய்திருந்தாள்!

“நீ இங்க வேலைய பாரு அம்மு. நான் குளிச்சுட்டு வர்றேன். ஒரு டென் மினிட்ஸ் கழிச்சு ஒரு காப்பி மட்டும்…” சத்யன் அவசரமாக மாடிக்கு அவனது அறைக்குச் சென்றான். காலை ராகவன் இருவரையும் மேட் பார் ஈச் அதர் என்று கூறியதில் இருந்தே இருவருக்குமே பேசச் சங்கடமாக இருக்க… பேச்சுவார்த்தை குறைந்திருந்தது!

அவள் சமயலறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தாள் சுபர்ணா, ஒரு முடிவோடு! நேராக மாடிக்குச் சென்றவள், சத்யனின் அறை கதவில் கையை வைக்க, அது திறந்து கொண்டது!

12

சுபர்ணா சென்னை வந்து இரண்டு நாட்களாகி இருந்தது. போர்ட் மீட்டிங் முடிந்தவுடன் மும்பை போனவள் அங்கிருக்க முடியாமல் திண்டாடினாள். சத்யன் அவளுக்கு மிகப் பெரிய சவாலாக… எந்த வழியாக முயற்சி செய்தாலும் அணுக முடியாதவனாகவே இருந்தான். ஓரிரு சமயங்களில் தன் தந்தை கேட்கும் கேள்வி அவ்வபோது அவளது மனதில் வந்து போனது.

“இவன் என்ன பெரிய மன்மதனா? அவனேதான் வேணும்ன்னு அடம் செய்ற? அவன் வேணாம். இப்போ அவன் சீரோ சுபி…”

அவளது இயல்பை அறிந்த அவளது தந்தைக்குச் சுபர்ணாவின் இந்தப் பிடிவாதம் புதிதாக இருந்தது. திருமணத்தைப் பற்றி முதன்முதலில் அவளிடம் பேசிய அந்த நாளை அவரது வாழ்நாள் முழுமைக்கும் மறக்கவியலாதவாறு செய்திருந்தாள் சுபர்ணா.

“சுபி… உனக்குக் கல்யாணம் செய்யலாம்ன்னு நினைக்கிறேன்…”

“ஹா… கல்யாணமா? எனக்கா?” அலட்சியம் தொனித்தது அவளது பேச்சில்!

“ஆமா… வயசு இருபத்தியாறு ஆகுது… வேற எப்போ செய்றது சுபி?”

“டேடி… நான் சொல்றதை கேட்டு ஷாக்காதீங்க…” பீடிகையோடு அவள் ஆரம்பிக்க, இனிமேதான் ஷாக் ஆகணுமா என்று நினைத்துக் கொண்டார் அவளது முழு வரலாற்றின் பார்வையாளரான சீதாராமன்.

“சொல்லும்மா…”

“டேடி… நோபடி கேன் ஹான்டில் மீ இன் சிங்கிள்…”

வெகு இயல்பாக அவள் கூற அதன் தாக்கத்தை அவர் உணர வெகுநேரம் பிடித்தது. தான் எத்தகைய தவறுகள் செய்தாலும், மனைவியை இழந்த பின் தனியாக வாழ நேர்ந்தபின் எத்தனையோ பெண்கள் வந்து போயிருந்தாலும் தன் மகளின் திருவாயிலிருந்து இத்தகைய சொற்களை அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அவள் அப்படித்தான் என்பதை அறிந்திருந்த அவருக்கு அவரது வேலை பளுவில், டெல்லி மும்பை வாழ்க்கை முறையில், இது மேல்வர்க்க குழந்தைகளின் சகஜமான வாழ்க்கைமுறைதான் என்று எடுத்துக் கொள்ளப் பழகியிருந்தார். ஆனால் தன்னிடமே என்னை ஒருவனால் ஹேண்டில் செய்ய இயலாது என்று கூறும் வரை அவளைக் கவனிக்காமல் விட்டிருக்கிறோமே என்று அவர் மனம் நொந்ததில் நெஞ்சு வலியால் படுக்கையில் விழுந்ததுதான் மிச்சமானது. அதன் பின்னரே அவளுக்கான திருமண வாழ்க்கையைப் பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்.

அவரைப் பொறுத்தவரை தனது மகள் சிரமப்படக் கூடாது. அவளை அனுசரித்துப் போகும் நல்லவனொருவன் வேண்டும். தீவிரமாகத் தேடி கொண்டு வந்தவர்களையெல்லாம் வேண்டாம் என்று மறுத்து ஒதுக்கினாள் சுபர்ணா.

வெளிநாட்டிற்குத் தனது தோழியைப் பார்க்கப் போனவள், சத்யன் தான் தனது கணவனாக வேண்டும் என்ற வேண்டுகோளோடு திரும்பி வந்தாள். எங்கேயோ பார்த்துப் பிடித்துப் போய்.

சீதாராமனும் சாம பேத தான தண்ட முறைகளை உபயோகித்துத் தான் ராஜசேகரிடம் சத்யனை விலை பேசினார். ஆனால் ஒரு நாளில் அனைத்தும் தலைகீழாக மாறியது. ஏன் என்று அவருக்குத் தெரியாத நிலையில் சத்யனின் வார்த்தைகள் அவரைக் கோபத்தின் எல்லைக்குக் கொண்டு சென்றது. ஆனாலும் அந்தப் பந்தம் தொடர்ந்தே ஆக வேண்டும் என்று சுபர்ணா பிடிவாதம் பிடிப்பதன் காரணம் தான் அவருக்குப் புரியவில்லை!

“இல்ல டேடி… எனக்குக் கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா அது பிரகாஷ் கூடத்தான்…”

அப்படியென்றால் நீ உன் பழைய பழக்கங்களைத் திருமண நிச்சயத்திற்குப் பிறகாவது ஒதுக்கி வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அவரால் இதை அவளிடம் நேரடியாகச் சொல்லிவிட முடியாது. அதற்கு அவள் கொடுக்கும் கவுண்ட்டர் மெசேஜ் அவருக்கு இன்னொரு முறை நெஞ்சு வலியை வரவழைத்து விடலாம். என்னவோ செய்யட்டும் என்று அவர் ஒதுங்கிக் கொண்டது அப்போதுதான்.

“டேடி… நம்ம சென்னை வீட்ல கொஞ்ச நாள் இருக்கலாம்ன்னு நினைக்கறேன்…”

“ஏன் சுபி?”

“எப்படியாவது பிரகாஷை என் வழிக்குக் கொண்டு வர நான் அங்க இருக்க வேண்டியது அவசியம் டேடி…”

அவர் ஏன் மறுதலிக்கப் போகிறார்? சுபர்ணா சென்னை வந்த கதை இதுதான்!

சென்னை வந்த அடுத்த நாள் சத்யனை அவள் பார்த்தாள்! பொக்லைன்கள் நிறுத்தி வைத்துதிருந்த குடோனுக்குத் தனது டிரைவர் அழைத்துச் சென்றபோது, அந்தச் சூழ்நிலை அவளுக்கு அவ்வளவு பிடித்தமானதாக இல்லை. ஒரு பொக்லைனில் எதையோ கழட்டி பூட்டி கொண்டிருந்ததை மேர்பார்வையிட்டுக் கொண்டு தீவிரமாக உடன் வேலை செய்து கொண்டிருந்த சத்யனை பார்க்கும்போது உள்ளுக்குள் பூ மலர்ந்தது!

“ஹாய் பிரகாஷ்…” அழைத்தபோது திடுக்கிட்டுத் திரும்பினான்.

“நீ… இங்க… எங்க? எ… எப்படி வந்த?” அவளது திடீர் பிரசன்னத்தில் அதிர்ந்து போனவன், ஒரு வழியாகக் கேள்வியை முடித்தான்!

“பிரகாஷ்… நீங்க எங்க இருந்தாலும் எனக்கு வரத் தெரியாதா?”

கேள்வியல்லாம் நன்றாகத்தான் இருந்தத்து ஆனால் அதில் தொனித்த திமிரில் சத்யன் கடுப்பானான்.

“எங்க வேணாலும் போலாம்… எப்படி வேணும்னாலும் இருக்கலாம்ன்னு நினைக்கறது நல்ல மனுஷங்களோட இயல்பு கிடையாது சுபர்ணா மேடம். உங்களுக்கு இங்க எதுவும் வேலை இல்லையே. நீங்கக் கிளம்பலாம்.”

சிறிது கூட நேரம் கொடுக்காமல் விரட்டியவனை அந்தக் கோலத்தில் பார்க்கும்போது அவளுக்குச் சூடேறியது! வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் சட்டையைக் கழட்டி வைத்து விட்டு வெறும் கருப்பு பனியன் அணிந்து இருந்தவனின் அந்தக் கோலம் அவளது கண்களைப் பிடித்து இழுத்து வைத்திருந்தது!

“நான் கிளம்பறதை நான் தான் முடிவு செய்யணும் பிரகாஷ்.” வார்த்தைகளில் அவளது மயக்கம் கலந்திருப்பதை அவனால் உணர முடிந்தது,

“அப்படீன்னா… இங்க இருக்கறதை நான் தானே முடிவு செய்யனும்?” என்று கூறி நிறுத்தியவன்.

“மைக்கேல்… இந்த வேலைய முடிச்சுட்டு எனக்குப் போன் பண்ணு. நான் வந்துடறேன்.” என்று கூறிவிட்டு சட்டையை எடுத்து அணிந்தவன் விடுவிடுவென்று வெளியேறினான்.

வேறு வழி இல்லாமல் அவன் பின்னால் அவள் விரைந்தபோது அவளது தன்மானம் வெகுவாக அடிபட்டு இருந்தது. அவளது தன்மானம் அடிபட அடிபட உள்ளுக்குள் அவளது வெறியும் கூடிகொண்டே சென்றது.

வெளியில் நிறுத்தபட்டிருந்த அவனது அப்பாச்சியில் ஏறப் போக,

“பிரகாஷ்… உங்களுக்கேன் இவ்வளவு கஷ்டம்? எப்படியெல்லாமோ இருந்த உங்களுக்கு இந்தப் பைக் ரைட் தேவையா? என்னோட ஆடிய எடுத்துட்டு போங்க ப்ளீஸ்…”

“சுபர்ணா மேடம்… இப்போ என்னால கார்ல போக முடியலைன்னு நான் உங்க கிட்ட வந்து கேட்டேனா? என்னோட இப்போதைய வேலைக்குப் பைக் தான் வசதி. அதோட இது உங்களுக்குத் தேவையில்லாதது. உங்க வேலைய மட்டும் பாருங்க.” சூடாகச் சொல்ல,

“வர்ற ஸ்ரீதேவிய வேணாம்ன்னு சொல்ற ஒரே ஆள் நீங்களாத்தான் இருப்பீங்க பிரகாஷ்…” திமிர் மாறாத தொனியில் அவள் கூற,

“வர்றது ஸ்ரீதேவி இல்ல, மூதேவின்னா வேணாம்ன்னு தான் சொல்ல முடியும் சுபர்ணா மேடம்…”

இதைக் கூறியவன் அவளைத் திரும்பியும் பார்க்காமல் பைக்கை உதைத்தான். இதற்கு மேல் அவளுக்கு அந்த இடத்தில் வேலை இல்லையென்று சொல்லாமல் சொல்லிவிட்டுக் கிளம்பினான்,

ஜிவுஜிவென்று முகம் சிவக்க அவன் போன திசையைப் பார்த்தவாறே நின்றிருந்தாள்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 22

நடந்து முடிந்த துக்கங்களில் வீழ்ந்து விடாமல் செய்ய வேண்டிய கடமைகள் இருக்க அந்தக் கடமைகளின் நடுவில் பற்றுக் கொடியாக அமிர்தா சத்யனின் மனதில் தென்றலாக வீசினாள். மெச்சூரான டெப்பாசிட்சை திருப்பித் தருவதற்குப் பணத்தை ஏற்பாடு செய்து விட்டதில் சந்தோஷமாக இருக்க உற்சாகமாக…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்