arrow_back
பரமபதம் அத்தியாயம் 22
பரமபதம் chevron_right பகுதி 22 / 54

அத்தியாயம் 22

visibility 781
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (8 மதிப்பீடுகள்)
பகிர்

நடந்து முடிந்த துக்கங்களில் வீழ்ந்து விடாமல் செய்ய வேண்டிய கடமைகள் இருக்க அந்தக் கடமைகளின் நடுவில் பற்றுக் கொடியாக அமிர்தா சத்யனின் மனதில் தென்றலாக வீசினாள். மெச்சூரான டெப்பாசிட்சை திருப்பித் தருவதற்குப் பணத்தை ஏற்பாடு செய்து விட்டதில் சந்தோஷமாக இருக்க உற்சாகமாக அவளிடம் காபி கலக்க சொல்லி விட்டுக் குளிக்கச் சென்றான்,

அவனது உற்சாகத்திற்கு இன்னொரு காரணம் ராகவன் இருவரையும் பார்த்து மேட் பார் ஈச் அதர் என்று கூறியதுதான் என்று விளக்கவும் வேண்டுமோ? ஆனால் அவனது அமிர்தா என்ன உணர்கிறாள் என்பது அவனுக்கு உறுதி இல்லாததில் மனம் சிறிது சுணங்கியது. அவள் பாசத்தையும் பரிதாபத்தையும் காட்ட அதை நாம் காதலாக்கி கொள்கிறோமா என்றும் மனம் கேள்வி எழுப்பியது! ஆனாலும் இப்போதைக்கும் அவளிடம் இதைப் பற்றிப் பேசுவதில்லை என்று முன்னமே எடுத்திருந்த முடிவிலிருந்து சிறிதும் அவன் மாறவில்லை. அவனுக்கு இருக்கிற பிரச்சனைகள் முடிய வேண்டும். அவளைத் தன்னவளாக்கிக்கொள்ளும்போது இந்தப் பிரச்சனைகளின் சாயல் கூடத் தன்னுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடாது என்று நினைத்தான்.

குளித்து விட்டு நைட் பேண்ட்டோடு வெளியே வந்து உடைமாற்ற செல்பை திறக்கப் போனவன் அறைக்குள் இன்னொருவர் இருப்பதையும் உணர்ந்து சட்டென்று திரும்பிப் பார்த்தான். அதிர்ச்சியில் அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“சுபர்ணா…” என்றான் குரலில் அதிர!

இவள் இங்கு எப்படி வந்தாள்? கீழே அமிர்தா என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று கோபத்தீ பற்றிக் கொண்டது!

“எங்க இங்க வந்தீங்க?” விட்டால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடும் ஆத்திரத்தில் இருந்தான். ஆனாலும் பெண் என்ற ஒரே காரணம் அவனை அவ்வாறு செயல்படவிடாமல் தடுத்தது.

“நான் உங்களைப் பார்க்கக் குடோனுக்கு வந்தேன். அங்க இருந்து தப்பிச்சு போற மாதிரி ஒடீட்டீங்க பிரகாஷ். அதான் நம்ம வீட்டுக்கு வந்தேன்.” மிகவும் இயல்பாக அவள் கூற அவனுக்கோ நெருப்பின் மேல் நிற்கும் உணர்வு!

“சரி கீழ போங்க… நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்…”

“நோ பிரகாஷ்… எனக்கு இப்போ ஒரு முடிவு தெரிஞ்சாகனும்…”

“என்ன முடிவு?” எரிச்சலாகக் கேட்டான்.

“நம்ம கல்யாணம்…”

“வாட் நம்ம கல்யாணமா? உங்களுக்குக் கல்யாணம் கூட அவசியமா சுபர்ணா மேடம்?”

அவன் இப்படிக் கேள்வி எழுப்பியது அவளது ரௌத்திரத்தை தட்டி எழுப்பியது. எத்தனையோ பேர் தன் காலடியில் காத்திருக்க இவனது இந்த அலட்சியத்தையும் மீறித் தான் அவனைத் தொடர்வது எதற்க்காக என்று அவளிடம் கேள்வி கேட்டது அவளது மனம். இந்த அலட்சியம் தானே அவனிடம் பிடித்ததே.

இப்போது தானும் எகிறினால் வேலைக்காகது என்பதை உணர்ந்து, “நான் உங்களை முதன்முதல்ல பார்த்தது எங்கன்னு தெரியுமா பிரகாஷ் உங்களுக்கு?” மென்மையாகக் கேட்டாள்!

“இந்தப் பேச்சை எல்லாம் கீழே போய்ப் பேசிக்கலாங்க. ப்ளீஸ் கீழே போங்க சுபர்ணா…” தனியாக இந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது ஆபத்து என்று அவனது மூளை பலமாக எச்சரித்தது!

“இல்ல பிரகாஷ்… இன்னைக்கு உங்க கிட்ட பேசியே ஆகணும். நீங்கச் சொல்லுங்க.” என்றவள் சிறிது இடைவெளி விட்டு.

“தெரியலைங்க… சொல்லுங்க…” அவனது பொறுமைக்குச் சோதனை வைத்துகொண்டிருந்தாள்!

“லாஸ் ஏஞ்சல்ஸ்ல பிரகாஷ். என்னோட ப்ரென்ட் லீமாவோட இந்தியன் கம்யுனிட்டி பங்க்ஷன்ல. ஒவ்வொருத்தரும் எந்த வகையிலாவது என்னைக் கவரனும்ன்னு நினைச்சாங்க. ஆனா நீங்கத் திரும்பிக் கூடப் பார்க்கலை…” ஏக்கமான குரலில் அவள் கூற,

“சோ அதான் உங்க ப்ராப்ளம்… நான் திரும்பிப் பார்க்காதது…”

“இல்லை பிரகாஷ்… என்னைத் திரும்பத் திரும்பப் பார்க்க வெச்சீங்க. அப்போதுல இருந்து நீங்க இங்க இருக்கீங்க…” தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு அவள் கூற,

“ஜோக் பண்ணாதீங்க சுபர்ணா. இங்க இருக்கேன் அங்க இருக்கேன்னு… உங்க ஏக்ட்டிவிடீஸ் என்னன்னு நானும் பார்த்து இருக்கேன்…” எதையும் வெளிப்படையாகக் கூறாமல் வெறுப்பாகக் கூறினான்.

“நீங்க எதை மீன் பண்றீங்கன்னு சொல்லுங்க பிரகாஷ்…”

“ரேவ் பார்ட்டில அவுத்து போட்டுட்டு ஆடறவளுக்கு எல்லாம் வாழ்க்கை கொடுக்க நான் தியாகி இல்ல சுபர்ணா…” கோபத்தின் எல்லையில் கொதித்தான் சத்யா.

“ரேவ் பார்ட்டி பண்றது தப்பா பிரகாஷ்? அது ஒன் ஆப் தி சோசியல் ஆக்டிவிட்டி. இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?” அவளுக்குத் திருமண வாழ்க்கையின் அடிப்படையே போதிக்கப்படவில்லை என்பதைச் சத்யன் உணர்ந்தான்! ஆனாலும் அவனுக்கு அது தேவை இல்லாத விஷயமாகப் பட்டது.

“வேற எதுக்கும் எதுக்கும் தான் சம்பந்தம் சுபர்ணா? எனக்கு என்னோட மனைவி, எனக்கு மட்டும் தான் மனைவியா இருக்கணும். எல்லாரோடையும் பங்கு போட்டுக்க நான் ஒன்னும் இனா வாயனில்ல. புரிஞ்சுக்கோங்க…”

அவனிடம் மென்மையாகப் பேசி வேலைக்காகாது என்பதை உணர்ந்தாள் சுபர்ணா.

“அப்படீன்னா எதுக்கும் மசிய மாட்டீங்க… ரைட்டா?” குரலில் தீவிரம் வந்திருந்தது.

“புரிஞ்சுகிட்டு வெளிய போனா சரி…” கடுப்பாக அவன் கூற ஒன்றும் பேசாமல் அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி, மேல் டாப்ஸை கழட்டினாள். வெறும் ஜீன் பேன்ட் உள்ளடையோடு நிற்க… அவளது பக்கத்தில் நெருங்கி வந்தவன். குரலைத் தாழ்த்தி,

“உன்னையெல்லாம் ஒண்ணுமே இல்லாமையே பார்த்துட்டேன். நான் மட்டுமில்ல அங்க இருந்த எல்லோரும் பார்த்து இருக்காங்க. என்னென்னமோ பண்ணியும் இருக்காங்க. இப்படி எல்லாம் பீகேவ் பண்ணி என்னை மடக்கிடலாம்ன்னு நினைக்காத. என் மனசுல என் அம்முவ தவிர வேற யாரும் இல்ல. உன்னைத் தொட்டு கழுத்தை பிடிச்சு வெளிய தள்றதுக்குக் கூட எனக்கு அருவருப்பா இருக்கு. ஜஸ்ட் கெட் அவுட்…” அடிக்குரலில் உறுமி விட்டு வெளியே செல்ல எத்தனிக்க,

“எவ்வளவு நேரம் தான் சத்தி குளிப்ப…” என்றபடி காபியோடு உள்ளே நுழைந்தாள் அமிர்தா.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 23

தோட்டத்தில் போடபட்டிருந்த அந்தப் பெஞ்சில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள் அமிர்தா. அவளது உடல் இன்னமும் நடுங்கி கொண்டிருக்க... ஆழமான மூச்சை இழுத்து விட்டபடி தன்னைச் சமநிலை படுத்த முயன்றாள். ஏனென்றால் அவள் கண்ட காட்சி அப்படி! எப்படி என்று புரியவில்லை!…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

  1. Idiot17பொதுக் கருத்துIdiot17

    Twistu twistu.. twisto twistu

    I love the rollercoaster of Emotions

    But I think it's gonna be good for Sathya.. let's see

உங்கள் கருத்தைப் பகிருங்கள்