arrow_back
பரமபதம் அத்தியாயம் 23
பரமபதம் chevron_right பகுதி 23 / 54

அத்தியாயம் 23

visibility 245
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (8 மதிப்பீடுகள்)
பகிர்

தோட்டத்தில் போடபட்டிருந்த அந்தப் பெஞ்சில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள் அமிர்தா. அவளது உடல் இன்னமும் நடுங்கி கொண்டிருக்க… ஆழமான மூச்சை இழுத்து விட்டபடி தன்னைச் சமநிலை படுத்த முயன்றாள். ஏனென்றால் அவள் கண்ட காட்சி அப்படி! எப்படி என்று புரியவில்லை!

காபி கேட்டுவிட்டுக் குளிக்கச் சென்றவனை இன்னமும் காணோமே என்று மாடிக்கு அவளே சென்றாள். மற்ற வேலைகள் அனைத்தும் முடிந்திருக்க, காபியை குடித்து விட்டு அவனோடு கிளம்பினால், நேரத்தோடு வீடு சென்று விடலாம் இல்லையென்றால் அதற்கும் தன் தாயிடம் பாட்டு வாங்க வேண்டிருக்குமே என்ற கவலை அவளுக்கு!

“இவன் குளிக்கறானா இல்லைன்னா நீந்திக்கிட்டு இருக்கானா? லூசு மாக்கான் இவ்ளோ லேட் பண்ணிட்டு இருக்கான்…” புலம்பியபடியே கதவைத் தட்டி விட்டு,

“எவ்ளோ நேரம் சத்தி குளிப்ப?” என்றபடி உள்ளே நுழைந்து நிமிர,

வெறும் நைட் பேண்ட்டோடு சத்யன். வெகுநெருக்கமாக மேல் டாப்ஸ் இல்லாமல் சுபர்ணா!

அதிர்ந்து காபி கோப்பையைத் தவற விட்டவள், பேய் அடித்தார் போலப் பயந்து கீழே ஓடினாள்! அவளது இருபத்தைந்து வருட வாழ்க்கையில் இப்படியொரு அதிர்வை அனுபவித்தது இல்லை.

சத்யனா இப்படி? அய்யோவென்றது மனது! உடலும் மனமும் நடுங்கியது. இருக்காதே கண்டிப்பாகச் சத்தி இப்படி நடந்து கொள்ளக்கூடியவன் கிடையாதே. என்னவாயிற்று? தவித்தாள் அந்தப் பேதை!

மெளனமாக அருகில் வந்து அமர்ந்தான் சத்யன். தள்ளி அமர்ந்தாள் அமிர்தா! அந்தக் காட்சியைக் கண்டபிறகு அருகில் அமர அவளுக்குக் கூசியது. அவனுக்கோ மனம் வலித்தது. தள்ளி அமர்வதைக் கண்டு!

எத்தனை நாட்கள் மடியில் படுத்து உறங்கியிருக்கிறேன். தோளில் சாய்த்து கொண்டிருக்கிறாள். இப்போதோ தள்ளி அமர்வதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் அவளது உணர்வை அவன் உணர்ந்தான்!

“அம்மு…” அவன் அழைக்கத் திரும்பப் பதில் இல்லை.

“என்ட்ட பேசுடா…” அவளது கையைப் பிடிக்க அவளது நடுக்கம் இன்னமும் அதிகமானது.

“சத்தி… விடு… ப்ளீஸ்…” குரலிலும் அந்த நடுக்கம் தெரிய,

“இல்லடா… நடந்ததை நீ தெரிஞ்சுக்கணும்…”

“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் சத்தி. அது உங்க ரெண்டு பேரோட பெர்சனல். சொல்லியிருந்தா இன்டீசன்ட்டா உள்ள வந்திருக்க மாட்டேன்.” வலியோடு வெளிவந்தன வார்த்தைகள்!

“என்னது? பெர்சனலா? அவளுக்கும் எனக்கும் என்னடி பெர்சனல் வேண்டிக் கிடக்கு?” கோபத்தில் வார்த்தைகளை மென்று துப்பினான்,

“நீ சொல்றது புரியல சத்தி. இந்த அளவு போனதுக்கு அப்புறமும் நீ எப்படி இப்படிச் சொல்றன்னு புரியல.” வெளிப்படையாகப் பேசவே தயங்கி கொண்டிருந்த அவனது ஆசை அத்தை மகளை என்ன சொல்லித் தெளிய வைப்பது என்று புரியாமல் திணறினான்! அவனுக்குமே அவளிடம் இந்த விஷயத்தைப் பேசத் தயக்கமாக இருந்தது.

“அம்மு… ஒரு நிமிஷம் இப்படித் திரும்பி உட்கார்…” அவளைத் தோளைப் பிடித்துத் திருப்ப, அவன் கைகளைத் தட்டி விட்டு அவன் புறம் திரும்பினாள். நிமிர்ந்து அவனைப் பார்க்கத் தயங்கி நிலம் நோக்கியவளை,

“என்னைப் பாரு அம்மு…” கண்டிப்போடு சத்யன் கூற,

“பரவால்ல சொல்லு சத்தி…” தயங்கி கொண்டு அவள் கூற,

“பார்த்தாதான் சொல்ல முடியும்…”

“சரி சொல்லு…” நிமிர்ந்து பார்க்க, அவனும் அவளது கண்களைப் பார்த்தான். தவறுபவனால் கண்களைப் பார்த்துப் பேச இயலுமா? சிந்தித்தாள்!

“என்னைப் பார்த்தா தப்பு பண்றவன் மாதிரி தெரியுதா?”

“ஆனா…”

“அந்த மாதிரி இன்டஷன்ல இருக்கவன், கீழ உன்னை வெச்சுகிட்டு தான் அப்படிப் பண்ணுவேனா?”

அவன் சொல்வதும் நியாயம் தானே? வீட்டில் அவள் இருக்கிறாள் எனும்போது அப்படிச் செய்யத் துணிவானா? மனம் அவளைக் கேள்வி கேட்டது. ஆனாலும் பார்த்த காட்சியின் தாக்கம் அவளுக்குள் குறைந்தபாடில்லை.

“சரி… நீ அதை நம்புறியா?” நேரடியாகக் கேட்டான் சத்யன்! வேறு எந்த விளக்கமும் கொடுக்க முயலவில்லை. முதலில் என்னை நம்புகிறாயா அதைச் சொல் என்றது அவனது தொனி!

“கண்டிப்பா நீ தப்புச் செய்ய மாட்டச் சத்தி. அது எனக்கு நல்லா தெரியும். ஆனா சுபர்ணா உனக்கு நிச்சயம் பண்ண பொண்ணு. அதனால… என்னமோ எதையோ நினைச்சுகிட்டேன் சத்தி…” பரிதாபமாக அவள் கூற, அவளை இழுத்து அணைத்துக் கொள்ளக் கைகள் பரபரத்தது. அவளது கைகளைப் பற்றிக் கொண்டு நெஞ்சில் கோர்த்துக் கொண்டான்!

“தேங்க்ஸ் டா… இது மட்டும் போதும்… வேற ஒண்ணுமே வேண்டாம்…” உணர்ச்சிவசபட்டவனை வித்தியாமாகப் பார்த்தாள் அமிர்தா!

“என்ன நடந்துதுன்னு கேளு அம்மு… ப்ளீஸ்…” அவன் வேண்ட அமிர்தாவோ மெளனமாக இருந்தாள்.

“நான் குளிச்சுட்டு வந்தப்பவே அவ ரூம்ல இருந்தா. எப்படின்னு தெரியல…”

“நான் கிச்சன்ல இருந்தேன். அதனால அவங்க வந்தது எனக்குத் தெரியல…”

“எனக்குப் பயங்கர ஷாக். வெளிய போகச் சொன்னதுக்கு, கல்யாணத்தைப் பத்தி சொன்னாதான் வெளிய போவேன்னு அடம் பிடிச்சா. அதுக்கப்புறம் கண்டபடி என்னவோ பேசினா. கடைசில… அப்படிப் பிஹேவ் பண்ணிட்டா. வேற ஒண்ணுமில்ல அம்மு…” கடகடவென்று ஒப்புவித்தவன் கடைசியில் என்று வந்தபோது மிகவும் தயங்கி ஒரு வழியாக முடித்தான்.

“சரி… இந்த அளவு உன் மேல பைத்தியமா இருக்கான்னா, நீ அவளைக் கட்டிக்கறதுல என்ன தப்பு சத்தி?” அப்பாவியாகக் கேள்வி கேட்டவளை என்ன செய்வது? அவனுக்குப் புரியவில்லை?

“ம்ம்ம்… இதுவரைக்கும் நீ கேட்டது எல்லாம் சரிதான். ஆனா இது மாதிரியான ஒரு கேவலமான கேள்வி உலகத்துலயே இல்ல.” கடுப்படித்தான் சத்யன்!

“என்ன கேவலம்? லூசா நீ? தான் விரும்புறவங்களை விடத் தன்னை விரும்பறவங்களைக் கல்யாணம் பண்ணிகிட்டா தான் நாம சந்தோஷமா இருக்க முடியுமாம்.”

“உன்னோட பிலாசபிய கொண்டு போய் உடைப்புல போடு. அவ தான் வேணாம்ன்னு நான் சொல்றேனே… மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா?” கோபம் குறையாமல் கடித்தான்!

“அதான் ஏன்னு கேக்கறேன்ல?” பிடிவாதமாகக் கேட்டாள்.

என்ன சொல்வது இவளுக்கு? காரணத்தைச் சொல்ல முடியவில்லை. சங்கடமாக இருந்தது.

“நிறையக் காரணமிருக்கு அம்மு…” சமாளிக்கப் பார்த்தான்.

“சரி… ஒரு காரணத்தைச் சொல்லேன்…” விடுவேனா என்று அவள் கேட்க, அவனால் உண்மைகளைக் கூற முடியவில்லை. அந்த வேகத்தில், அவனையும் அறியாமல், தன்னுடைய மனதை திறந்தான்.

“ஏன்னா… நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்…” எங்கோ பார்த்தபடி அவன் கூற அவளோ வயிற்றைப் பிடித்தபடி சிரிக்க ஆரம்பித்தாள்!

“ஹஹஹா… ஹஹஹஹா…” என்று வாய்விட்டுச் சிரித்த அவளது தலையில் நங்கென்று கொட்டியவன்,

“ஏன்டி இப்படி மோகினி பிசாசாட்டம் சிரிக்கற? நான் என்ன ஜோக்கா சொன்னேன்?” இப்படித் தன்னைக் காமெடியன் ஆக்குகிறாளே என்ற கடுப்பு!

“நீ? இன்னொரு பொண்ணை? போடா லூசு. உன்னோட ஒவ்வொரு அசைவும் கூட எனக்கு அத்துபடி. எனக்குத் தெரியாம நீ இன்னொரு பொண்ணை லவ் பண்றியா? ஹஹஹா… முடில…” விடாமல் அவனைக் கிண்டலடித்துச் சிரித்துக் கொண்டே இருக்க, பக்கத்தில் நெருங்கி அமர்ந்தவன், அவள் புறம் குனிந்து,

“உனக்குத் தெரியாது அம்முக்குட்டி. நான் லவ் பண்றது உனக்குத் தெரியவே தெரியாது.” கிசுகிசுப்பாகக் கூற, பின் கழுத்தை தீண்டிய மூச்சு காற்று… குரலில் இருந்த போதை… அதிர்ந்தாள் அமிர்தா!

இவன் என்ன கூறுகிறான்?

எதோ… வேறு எதோ… நடுக்கத்தோடு அவனைப் பார்க்க அவன் கண்களில் வழிந்த கரைகாணாத காதலை கண்டு திகைத்தாள்.

எதையோ நினைத்துக் கொண்டு கண்களை மூடித் திறந்தவன் ஒரே நொடியில் தன் உணர்வை மறைத்து, எதையும் காட்டிக்கொள்ளாமல், அடுத்து பேச விருப்பபடாமல், எழுந்தான்!

“ஏய் லூசு… என்ன இன்னும் வீட்டுக்குப் போக மனசில்லையா? சீக்கிரம் வா. உன்னை விட்டுட்டு வந்து தான் நான் தூங்க போகணும். காலைல எவ்ளோ வேலை இருக்குன்னு உனக்குத் தெரியாதா? வீட்டை லாக் பண்ணிட்டு வா. நான் காரை எடுக்கறேன். சீக்கிரம் கிளம்பு… கிளம்பு…”

அவசரபடுத்தியவன், அவள் முகத்தைக் கூடப் பாராமல் காரை நோக்கிச் சென்றான்.

அமிர்தா குழம்பி நின்றாள். அவனது கண்களில் பார்த்த காதல் நிஜம். அதில் தான் அதிர்ந்ததும் நிஜம். ஆனால் அடுத்த நொடியே அதைத் துடைத்தெறிந்த அவனது முகம், அவளால் ஒரு முடிவிற்கு வர இயலவில்லை. அவனை அந்த நோக்கத்தில் நினைத்துக் கூடப் பார்த்திராத அமிர்தாவிற்கு அடுத்து என்ன செய்வது என்று விளங்கவில்லை. தன்னுடைய வாதத்தால் எல்லார் வாயையும் மூடச் செய்த அந்த மங்கையர் குல மாணிக்கம் வாயடைத்து போய் நின்றது!

மெளனமாக அவனைத் தொடர்ந்தாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 24

மெளனமாக அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்ப்பதாகப் பேர் செய்தாலும் அமிர்தாவின் மனம் உலைகளனாகக் கொதித்தது. அவளைப் பொறுத்தவரை, காதல் ஒரு பாவச்செயல்! திருமணம் ஒரு பெருங்குற்றம்! திருமணத்தை நினைத்துக் கூடப் பார்க்க விரும்பாமல் அவர்களுடைய ஆதரவற்றோர்களுக்கான இல்லமான சரணாலயத்தைச் சுணங்காமல் கொண்டு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. Ada oru twistum illaya.. Na ennano Subarnava Nilambari rangeku buildup panni vechurken..

    Sari ennamo athu kedakattum.. namakku thevai Amirthamayi manasula oru kolappam.. adhu vanthuruchu.. All thanks to Nilambari

உங்கள் கருத்தைப் பகிருங்கள்