arrow_back
பரமபதம் அத்தியாயம் 25
பரமபதம் chevron_right பகுதி 25 / 54

அத்தியாயம் 25

visibility 235
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

மறுநாள் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. ஒருவருக்கும் நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர். காலை முதலே பணப் பட்டுவாடா நேரடியாக நடந்து கொண்டிருக்க, தஸ்தாவேஜுகளைச் சரிபார்த்து அனுப்புவது அமிர்தாவின் வேலையானது. டெப்பாசிட் செய்திருந்த அனைவருக்கும் அன்று வரும்படி அறிவுரை வழங்கியிருந்தபடியால் காலை முதலே கூட்டம் அலைமோதியது.

கூட்டத்தைச் சரியாக வழிநடத்தி ஒருவர் பின் ஒருவராகப் போக ஆட்களைப் போதுமான அளவிற்கு இறக்கியிருந்த படியால் குழப்பம் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. அவ்வப்போது நடக்கும் சிறுசிறு பூசல்களைச் சரி செய்து பிரச்சனைகளைச் சுமூகமாகக் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். எங்காவது சிறிது பிரச்சனை வந்தாலும் அது பூதாகரமாக்கப்படக்கூடிய சாத்தியத்தை அறிந்திருந்த அனைவரும் எவ்வளவு விரைவாக முடியுமோ அந்த அளவு விரைந்து முடித்துக் கொண்டிருந்தனர்!

ஒரு வழியாகப் பைனான்ஸ் பிரச்னையை முடித்தபோது இரவு பத்துமணியாகி அமிர்தாவும் சத்யனும் பரமேஸ்வரனோடு சேர்ந்து அமர்ந்து கணக்கைத் தணிக்கை செய்து கொண்டிருக்க, பரமேஸ்வரன் வெகு இயல்பாக ஒரு லெட்டரை மேஜையில் வைத்தார்! என்னவென்று சத்யன் எடுத்துப் பார்க்க,

நோட்டீஸ்!

சட்டரீதியாகச் சீதாராமனால் தொடுக்கபட்டிருந்த டிபெஞ்சர் சூட்க்கான நோட்டீஸ்!

அதை வாங்கிப் பார்த்த அமிர்தாவின் முகம் இருண்டது!

கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து விட்டபின், இனி எதை வைத்து இந்தப் பணத்தைத் திருப்புவது? புரியாமல் சத்யனை பார்த்தாள்! அவனது முகம் யோசனையில் இருந்தது. பரமேஸ்வரன் ஒன்றும் சொல்லாமல் மௌனம் காத்தார். அவருக்கும் தெரிந்திருந்தது. இனி கடனாக வாங்க கூட மிச்சம் ஏதுமில்லை என்று!

இந்தச் சிறு பிள்ளைகள் எப்படி இதைச் சமாளிப்பார்கள் என்று பெருமூச்சு விட்டார்!

“கடவுளே… கஷ்டம்ன்னு வந்தா இப்படி மொத்தமாத்தான் வரணுமா?” மனதிற்குள் புலம்பியது என்று நினைத்தது வாய் விட்டுக் கூறிக் கொண்டிருக்கச் சத்யன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்!

“ஏன்டா? ரொம்பக் கஷ்டமா இருக்கா?” அமிர்தாவை பார்த்துக் கேட்க,

“இல்ல சத்தி… கஷ்டம் கிடையாது… ஆனா அடுத்து என்ன செய்யறதுன்னு புரியல… அதான்…”

“அதை ஏன் இந்தக் குட்டி மண்டைல போட்டுக் குழப்பிக்கற?” சூழ்நிலைக்கும் அவனது கேலி பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்க அவனைப் பார்த்து முறைத்தாள் அமிர்தா!

“குழப்பாம? என்ன சத்தி? இப்படிக் கேசுவலா பேசிட்டு இருக்க?” அவளது குரலில் டன் டன்னாகக் கவலை வழிந்தது.

“அங்கிள்… இப்போ கவலைப்பட்டா இந்தப் பிரச்சனை சால்வ் ஆகிடுமா? அப்படி எதாச்சும் ஸ்பெஷல் ரூட் இருக்கா?” அவரிடம் கேட்பது போல அமிர்தாவை பார்த்துச் சிரிக்க,

“ஜஸ்ட் ஸ்டாப் லாபிங் இடியட். எனக்கு வர்ற கோபத்துக்கு…” கடுப்பின் எல்லைகளைத் தொட்டு இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன். பெரிதாகப் புன்னகைத்து,

“அம்முக்குட்டி… மாமன் எதுக்கு இருக்கேன்? நான் பார்த்துகறேன். நீ கிளம்பு. உன்னை வீட்ல விட்டுட்டு போகணும். வேலை இருக்கு.” என்று அவளிடம் கூறிவிட்டுப் பரமேஸ்வரனிடம் திரும்பியவன்,

“அங்கிள்… நீங்க வீட்டுக்குப் போங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்.”

மாமனா என்று முறைத்து பார்த்தவளை கண்டு கொள்வதில்லையென்ற கொள்கை முடிவை எடுத்திருந்தான் சத்யன்!

“இல்ல… நான் அப்புறமா போய்க்கறேன். இப்போ எனக்கு இந்தப் பிரச்சனைக்கு என்ன பண்றதுன்னு புரிஞ்சாகனும்.” கறாராகக் கூறியவளை பார்த்து முறைத்தான்.

“இன்னும் எப்போ போவ? மணி இப்போவே பத்து. இதுக்கு மேல உன்னைக் கொண்டு போய் விட்டு அத்தைகிட்ட பாட்டு வாங்கவா? ஆளை விடு தாயே. ஒழுங்கா எழுந்திரு.” அவளது கையைப் பிடித்து எழுப்ப அவனைத் தட்டிவிட்டவள்,

“இப்போ எதுக்கு என்னைத் துரத்துற? அம்மாகிட்ட தானே சொல்லணும்? நான் சொல்லிக்கிறேன்…”

போனை எடுத்து சாவித்ரிவிற்கு அழைத்தாள்!

“மா… இங்க கொஞ்சம் லேட் ஆகும் போல இருக்கு. வேலை இன்னும் முடியலம்மா. நீ படுத்துத் தூங்கு. என்கிட்டே சாவி இருக்கு. நான் வந்துக்கறேன்.”

“சரிடா ரொம்ப லேட் பண்ணிடாத. சத்தி எங்க?”

“ம்ம்ம் கூட இருக்கான்ம்மா. பரமேஸ்வரன் அங்கிளும் இருக்காங்க. நீ கவலைப்படாம வீட்டைப் பூட்டிகிட்டு தூங்கு. லதா சேச்சி இருக்காங்கல்ல.”

“ஆமா அம்மு. லதா இருக்கு. நீ பார்த்துப் பத்திரமா வா.” கூறிவிட்டு போன்காலை துண்டித்தாள்! நிமிர்ந்து சத்யனையும் பரமேஸ்வரனையும் பார்த்து,

“இப்போ ஓகே தானே. இப்போ பேசு.” பிடிவாதமாக அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணைக் கண்டபோது பெருமையாக உணர்ந்தார் பரமேஸ்வரன். ராஜசேகர் தூக்கி வளர்த்துக் கொண்டாடிய பெண்பின் வேறு எப்படி இருப்பாள்?

சத்யன் தலையில் அடித்துக் கொண்டான்,

“உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுடி. நான் தான் பார்த்துக்கறேன்னு சொல்றேன்ல.”

“வீட்டுக்குப் போனா என்னால தூங்க கூட முடியாது சத்தி. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.” பரிதாபமாகக் கூறியவளை என்ன செய்வது?

“ஓகே… வா நடந்து போயிட்டே பேசலாம்.” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு பரமேஸ்வரனோடு நடக்க,

“இப்போ மத்த கடன் எல்லாமே ஓரளவு செட்டில் ஆகிடுச்சு இல்லையா…”

“ஆமாம்…” அமிர்தா கூற, பரமேஸ்வரன் உன்னிப்பாகக் கவனித்தார்!

“பைனான்ஸ் பார்ட்டிஸுக்கு இடமும் அந்தப் பில்டிங்கும் எழுதிக் கொடுத்தாச்சு. டெப்பாசிட்க்கு மொத்தம் இருபது கோடி சோர்ஸ் பண்ணியிருக்கோம். ஆனா அதுக்கு வட்டி மட்டும் மாசம் முப்பது லட்சத்துக்குப் பக்கமா வருது. அது ரொம்ப டேஞ்சர்…” அவள் நிறுத்த,

“அதுக்குதான் பேங்கர்ஸ் மீட்ல நம்மோட ரிகுர்மென்ட் சொல்லியிருக்கமே. பாசிடிவா ரிசல்ட் வந்துரும் அமிர்தா.” பரமேஸ்வரன் நினைவு படுத்தினார்.

“இப்போ மீதம் இருக்கறது டிபெஞ்சர் ஷேர் அமௌன்ட் தானே? அதை முடிச்சா நாம ப்ரீ தானே? அதைத்தானே அந்தச் சீதாராமன் கேட்டு இருக்கார்? அதுக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகர?” சத்யன் அமிர்தாவை கேட்க,

“அதுக்குத் தான் என்ன செய்யப் போறோம்?”

“அதை நான் பார்த்துக்கறேன். அதான் ஒரு மாசடைம் இருக்குல்ல. நாளைக்கே கட்டியாகனும்ன்னு கிடையாதே.”

“வேணும்னா கோர்ட்ல கொஞ்சம் இழுத்தடிக்கலாம் சத்தி. பட் முழுசா தப்பிக்கறது கஷ்டம். அதான் இப்போ எனக்குக் கவலையா இருக்கு?”

“ஹேய் அம்முகுட்டி! இப்போ தான் கொஞ்சூண்டு பழைய வக்கீலம்மாவா பேசுற! என்னாச்சு உனக்கு? இவ்ளோ நெகடிவா யோசிச்சுட்டு இருக்க?”

“சோர்ஸ் இருக்கும்போது பாசிடிவா யோசிக்க முடியும் சத்தி. இப்போ என்னால முடியல.” அத்தனை துயரத்தையும் வலியையும் சேர்த்து வைத்திருந்தது அவளது குரல்!

கார் நிறுத்துமிடத்திற்குப் பேசிக்கொண்டே வந்தனர் மூவரும். கிளம்புவதாகக் கூறிவிட்டு பரமேஸ்வரன் அவரது காரில் ஏறிக் கிளம்ப, சத்யன் தன் காரில் ஏறிக் கொண்டே கூறினான்.

“ஒரு நிமிஷத்துல கூட என்னவேணும்னாலும் எப்படி வேணும்னாலும் மாறும் அம்மு. இப்படித்தான் நடக்கும்ன்னு எதையுமே நாம கேரன்ட்டி பண்ண முடியாது. விட்டதைப் பிடிக்கனும்ன்னு ஆகிடுச்சு. பிடிச்சுதானே ஆகணும். இப்படிப் பாசிடிவா யோசி. ஓகே வா?!”

அவள் மௌனமாகவே வர, கார் ராமவிலாசத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து இருந்தது. அவளுடைய முகம் குழப்பத்தை எக்கச்சக்கமாகத் தத்தெடுத்து இருக்க, சத்யன் பொறுமையாக அவளுக்கு விளக்க ஆரம்பித்தான்!

“நம்ம ஷேர்ஸ் விலை முதல்ல விடக் குறைஞ்சு இருக்க இந்தச் சமயத்துல இந்த நோட்டிஸ் கொடுத்து இருக்கார். அவருக்கு நமக்குத் தொந்தரவு கொடுக்கறதுதான் முக்கியமான குறிக்கோளா இருந்தாலும், நமக்கு இந்த நோட்டிஸ் சாதகம் தான். ஏன்னா இப்போ அவர் கிட்ட இருக்க இருபது பர்சென்ட் ஷேரோட வால்யு கிட்டத்தட்ட பத்து கோடிக்குள்ள தான் வரும். இது நமக்கு நல்லதுதானே? இதை முடிச்சுட்டா முழுசா ப்ரீ ஆகிடலாம்…” பொறுமையாக எடுத்துச் சொன்னவனைப் பார்த்து,

“நீ சொல்றது எல்லாமே புரியுது. ஆனா அந்தப் பத்து கோடிக்கு என்ன பண்ண? இதைதான் நான் அப்போ இருந்து கேட்டுட்டு இருக்கேன்?”

“அதைப் பத்தி நீ கவலைப்படாதே செல்லகுட்டி. போய் நல்லா தூங்கு. ட்ரீம் வரும். அந்த ட்ரீம்லையாவது இந்தக் கவலையெல்லாம் விட்டுட்டு என்னோட ரொமான்ஸ் பண்ணு.” என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்ட அவனைப் பார்த்து முறைத்தாள்!

“சரி ஒன்னு மட்டும் சொல்றேன். இதுவரைக்கும் ஆடினது டிபென்ஸ்(defence) இனிமே ஆடப் போறது அபென்ஸ்(offence). வெயிட் அன்ட் வாட்ச்!”

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 26

தென்றல் இதமாகத் தீண்டிச் செல்ல, அருவி சலசலவென ஓசையுடன் தவழ்ந்தது. சுற்றிலும் மனித நடமாட்டம் கண்ணில் படாத இளம் மாலை பொழுது. வண்டுகள் ரீங்காரமிட காட்டுபூக்களின் வாசனை மனதை மயக்கியது. மாலை சூரியன் இன்னும் சில நிமிடங்களில் என் வீடு சென்று…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்