arrow_back
பரமபதம் அத்தியாயம் 35
பரமபதம் chevron_right பகுதி 35 / 54

அத்தியாயம் 35

visibility 217
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.6/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

தலைக்குக் கைகளை முட்டு கொடுத்து அந்த டேபிளில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார் சீதாராமன்… தனது உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்த பன்னீர் அவரைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துவிட்டார்… அவர் யாரை கொண்டு மிரட்டினாலும் பன்னீர் அவருக்குப் பணிய தயாராக இல்லை… ஏனெனில் அந்த மூன்று பேரின் வாக்குமூலம் வலுவாக அமைந்து விட்டது ஒரு காரணம்… எதிரணியில் அமிர்தாவின் பிடிவாதம் இன்னொரு காரணம்… சீதாராமனை அப்படியே தப்ப விட அவள் தயாராக இல்லை… அவர் கொடுத்துக் கொண்டிருக்கும் குடைச்சல்கள் அவளை அந்த அளவிற்கு எரிச்சல் படுத்தியிருந்தது! அதே எரிச்சல் சத்யனுக்கும் இருந்தாலும் சட்டபூர்வ நடவடிக்கைகளில் அவனுக்கு ஆர்வம் இல்லை… எப்படி இருந்தாலும் தப்பிக்க ஆயிரம் ஓட்டைகள் என்ற எண்ணம் அவனுக்கு!

“அவரை என்ன பண்ண முடியும்ன்னு நினைக்கிற?” நக்கலாக அவன் கேட்டபோது அவனைச் சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள் அமிர்தா!

“படிச்ச நீயே இப்படி நம்பிக்கையில்லாம பேசுறது நல்லா இல்ல சத்தி… அவங்களுக்கு ஆயிரம் ஓட்டை தெரியும்னா நல்ல திறமையான வக்கீலுக்கு அந்த ஓட்டையை அடைக்கற வித்தை தெரியும்…” தீவிரமான குரலில் அவள் கூற அவன் முகத்தில் முறுவல் மலர்ந்தது!

“அந்த நல்ல… திறமையான வக்கீல் யாரு அம்மு?” நக்கலாக அவன் கேட்க அவனை ஒரு விரல் நீட்டிப் பத்திரம் என்று கூற,

“இப்போவும் சொல்றேன் அம்மு… இந்தக் கேஸ் நிக்காது… இவங்களுக்கு லீகலா போறது வேஸ்ட்…” குறும்புத்தனத்தைக் கைவிட்டுவிட்டு அவன் கூற,

“அப்போ இல்லீகலா என்ன வேணும்னாலும் செய்வ… அதான் பார்த்தேனே… ஆவடி குடோன் மேட்டர்ல… ஐயோ சாமி… அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் உன்னை நம்புவேன்னா நினைக்கற? நோ வே…” தீர்மானமாக அவள் கூறினாள்!

வெறுமையான பார்வையோடு அமர்ந்திருந்த சீதாராமனை பார்த்தனர் இருவரும்… அவர் கைதாகி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபின் முதன்முதலாக அப்போதுதான் பார்ப்பது!

தலையைச் சற்று உயர்த்திச் சத்யனை பார்த்தார் சீதாராம்… அவரது பார்வையில் எல்லை கடந்த வெறுப்பும் துயரமும் மண்டிக்கிடந்தது! இருவருக்குமே அந்த அளவு வெறுப்பு விநோதமாக இருக்க… காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராயத் துவங்கினர்!

அன்று காலையில் அவரது மகள் இருந்த நிலை அவரை வாழ்க்கையின் ஓரத்திற்குத் தள்ளிக் கொண்டு போனது… இந்த வாழ்க்கை எதற்காக என்று வெறுத்து போக வைத்தது… எத்தனையோ நாட்கள் பணத்தைத் துரத்திக் கொண்டு… அந்தஸ்த்தை துரத்திக் கொண்டு போனதெல்லாம் தனது ஒரே வாரிசான சுபர்ணாவிற்காக… அவரது ஆசை மகளுக்காக! ஆனால் கிழிந்த நாராக மருத்துவமனை கட்டிலில் படுத்து இருந்தவளை பார்க்கும் போதே மனம் ரத்த கண்ணீர் வடிக்கத் துவங்கியது!

காலை உணவைச் சீதாராமன் தட்டில் எடுத்து அவளுக்கு ஊட்டப் போகக் கண்களில் வெறுமையோடு எந்தச் சிந்தனையும் இல்லாமல் அவரைப் பார்த்ததற்கு உண்டான மாற்றமே இல்லாமல் சூனியத்தை வெறித்து அமர்ந்திருந்தாள் அந்தக் கட்டிலில்,

“சுபி… சாப்பாட்டை வாங்கிக்கடா…” கலங்கிய கண்களோடு ஊட்ட… வாயில் எச்சில் வழிவதை கூட அறியாமல் வாய் திறந்தாள்… கையில் இருந்த துண்டால் அவளது வாயைத் துடைத்தவர் அப்போதுதான் பார்த்தார் படுக்கையை… ரத்த திட்டுக்கள்… பதறிப் போனார்!

இண்டர்காமில் உடனே நர்சை அழைக்க… வந்த அந்தப் பெண்ணோ பதற்றமே இல்லாமல்“இது மன்த்லி பீரியட்ஸ் ஸ்டைன் தான் சார்… கூட லேடி அட்டெண்டர் இல்லையா?” அவளுக்குப் பேட் வைத்து உடையை மாற்றி… விரிப்பை மாற்றி வெந்த புண்ணில் வேலையும்பாய்ச்சி விட்டுச் சென்றாள்! பெருமூச்சோடு தொப்பென்று அங்கிருந்த சோபாவில் விழுந்தார் சீதாராமன்! கண்களில் நீர் பெருகியது,

ஊசியின் தாக்கத்தில் மறுபடியும் உறங்க ஆரம்பித்தாள் சுபர்ணா… உறக்கம் உறக்கம் உறக்கம் எப்போதும் உறக்கமென்றானது!

“ஏன் கௌதம் அவளைச் செடேஷன்லையே வெச்சு இருக்கீங்க? கொஞ்சம் க்ளியரா இருந்தா என்ன?” சீதாராமன் மருத்துவரிடம் வினவியபோது தான் அந்த உண்மை வெளிப்பட்டது,

“ரெண்டு நாள் முன்ன நீங்க மும்பை போயிருந்தபோது மெடிசின்ஸ் ஸ்டாப் பண்ணினோமே… தெரியுமா சீதாராம்?”

“ஆமா…”

“அப்போ ரொம்ப வயலன்ட்டா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க சுபர்ணா… ஒருத்தரையும் விடல… ஐ மீன்… ஆண்களை மட்டும்… ஆண்களைப் பார்த்தாலே அவ்வளவு வெறுப்பு… ரொம்ப மோசமான வார்த்தைகளைச் சொல்லித் திட்டி… காட்… அவங்களை ஸ்விட்ச் ஆ பண்றதுக்குள்ள எங்களுக்கு ரொம்பக் கஷ்டமா போய்டுச்சு சீதா… அதான் மறுபடியும் செடேஷன்லையே வெச்சிருக்கோம்…”

“பீரியட்ஸ் வர்றது கூடத் தெரியலையே கௌதம்…” குரல் கம்ம கண்களில் நீர் வழிய துவங்கியது! சீதாராமனின் முதுகில் ஆதரவாகத் தட்டி கொடுத்த கௌதமன் லேசாக அணைத்துக் கொண்டார்!

“கொஞ்ச நாள் இப்படித்தான் இருப்பாங்க சீதா… இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா டாக்சின்ஸ் வெளிய வந்துட்டு இருக்கு… அடுத்த ஸ்டெப் அவங்க டிப்ரேஷனுக்கு ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிரலாம்…”

“ஆனா இந்த அளவு ஏன்? என்னால டைஜெஸ்ட் பண்ணவே முடியல…” வலித்தது அவருக்கு!

“ட்ரக் அடிக்ஷன் சீதா… முதல் ரீசன்… செகன்ட் ஏதோ ஹெவி ஷாக்… சுபர்ணா ரொம்பச் செல்லமா வளர்க்கப்பட்ட பொண்ணு… சின்ன விஷயத்துக்குக் கூடப் பெருசா ரியாக்ட் பண்றவங்களா இருக்கணும்… ஏதோ ஷாக்கோட அடிக்ஷனும் சேர முழுசா அவங்களைச் சாய்ச்சிடுச்சு… அந்த ஷாக் என்னன்னு தெரிஞ்சாத்தான் அடுத்த ட்ரீட்மென்ட் சக்சஸ் ஆகும் சீதா…” உண்மைநிலையை மறைக்காமல் கௌதமன் கூற,

“காரணம் வேற என்ன கௌதம்… அந்தச் சத்யப்ரகாஷ் தான்… நிச்சயமான கல்யாணத்தை நிறுத்திட்டான்…” கோபத்தில் கண்கள் சிவந்தது!

“என்ன காரணம்?”

காரணம் என்னவென்று கூறுவார்… எதுவும் கூறாமல் மெளனமாக இருக்க… தோளைக் குலுக்கி கொண்டு எழுந்த கௌதம் தாஸை சுபர்ணாவின் தீனமான குரல் நிறுத்தியது!

“பி… பிர… பிரகாஷ்… பிரகாஷ்…” உறக்கம் லேசாகக் கலைந்து விழிக்க ஆரம்பித்தவள் சத்யனின் பெயரைக் கூறிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்!

“சுபி… சுபிம்மா…” அவளது குரலைப் பல நாள் கழித்து அவர் கேட்கப் பதறிக்கொண்டு அவளை நோக்கி விரைந்தார்!

அவள் இன்னமும் அதிகமாக அழ… கௌதமன் அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து அமர வைத்துச் சோதிக்க ஆரம்பித்தார்! கண்களைத் திறக்க வைத்துக் கண்மணிகளைச் சோதித்தவர்… கைகளைப் பிடித்து நரம்புகளின் வலிமையைச் சோதிக்கக் கைகள் துவண்டு விழுந்தது… இரு கைகளையும் சேர்த்து பிடித்து,

“சுபர்ணா… இங்க பாருங்க… சுபர்ணா…” அழைக்கக் கண்களை லேசாகத் திறந்து அவரைப் பார்த்தாள்… கண்களில் வழிந்த நீரும் நிற்காமல்… உடல் நடுக்கத்தில் தூக்கி போட்டது,

“சுபர்ணா… நல்லா பாருங்கம்மா… யூ ஆர் இன் சேப் ஹேண்ட்ஸ்… டிஅடிக்ஷன் ட்ரீட்மென்ட் தான்ம்மா… கொஞ்சம் கோ ஆப்பரேட் பண்ணுங்க…” அவளது கைகளை விடாமல் அவளிடம் பேச… கண்கள் சோர்வாக மூடத் துவங்கியது,

அவளது ஜெபம் மட்டும் அவனது பெயரானது!

சோர்வாகப் படுத்தவளை பின்னால் சாய்த்து விட்டு நிமிர்ந்தவர்… கண்களில் நீரோடு நின்ற சீதாராமனை பார்த்து,

“சீதா… நோ வே… அந்தப் பிரகாஷ் வந்தேயாகனும்…” தீர்மானமாக அவர் கூற தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்,

“எப்படிக் கௌதம் அவனை வந்து பாருன்னு சொல்வேன்? என் பொண்ணைசாக்கடைன்னு அத்தனை பேர் முன்னாலையும் சொன்னவன் அவன்… அவ்வளவு கேவலமா வேற யாரும் பேசினதே இல்லை… என் பொண்ணு கிட்ட தப்பு கிடையாதுன்னு நான் சொல்லவே இல்லையே… ஆனா அப்படிப் பேச யார் அவனுக்கு உரிமை கொடுத்தது? அவனைப் போய் இன்னொரு முறை எப்படிக் கூப்பிடுவேன் கௌதம்? என் பொண்ணுக்கு வேற யாருமா கிடைக்கல? அவனை ஏன் பார்த்தா கௌதம்? அவனை ஏன் பார்த்தா?” கதறியவரை என்ன சொல்லித் தேற்ற? மகனோ மகளோ பாதை மாறிப் போவது அறியாமல் பணத்தைத் துரத்தி விட்டு இப்போது அழுது என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டார்… ஆனால் இதை அவரிடம் வெளிப்படையாகக் கூற முடியாது!

ஒரு நீண்ட பெருமூச்சோடு எழுந்து சென்றார் கௌதமன்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 36

“ஏன்டா என் பொண்ணு உன்னைப் பார்த்துத் தொலைச்சா? எதுக்காகப் பார்க்கணும்?” அதுவரை வாய்த் திறவாமல் இருந்த சீதாராமன் சத்யனை கண்டவுடன் கோபத்தோடு அவனது சட்டையைப் பிடிக்க அவர் பேசட்டும் என்று அவன் மெளனமாக நின்றான்! அவரது ஒய்ந்த தோற்றமும் கண்களில் கலக்கமும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்