arrow_back
பரமபதம் அத்தியாயம் 38
பரமபதம் chevron_right பகுதி 38 / 54

அத்தியாயம் 38

visibility 199
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.8/5 (6 மதிப்பீடுகள்)
பகிர்

நடந்து முடிந்த சம்பவத்திற்குப் பின் இருவருக்குமான பேச்சுவார்த்தை மிகவும் குறைந்தது… இருவருமே எதையும் பேச முயற்சிக்கவில்லை… தங்களுக்கிடையே எதையும் சரி செய்யவும் முயலவில்லை… அமிர்தாவின் நடன நிகழ்ச்சிகளும் கோர்ட் வேலைகளும் அவளை முழுவதுமாக ஆக்ரமிக்கச் சத்யனோ வெறியோடு அவனுடைய வேலைகளில் தொலைந்து போக ஆரம்பித்தான்,

. தினமும் சுபர்ணாவை பார்த்து விட்டு ஒரு பெண்ணாக அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு வருவதைத் தினசரி வேலையாவே வைத்திருந்தாள்… அவள் வருவதையோ கடமைகளைப் பகிர்ந்து கொள்வதையோ மறுக்காமல் ஏற்றுகொண்டார் சீதாராமன்… ஏனென்றால் அவருடைய நிலை அவரைப் பேசவிடவில்லை… தான் அவளுக்குத் தந்தையாக இருந்தாலும் இந்த மாதிரியான நேரங்களில் தாயின் அருகாமை… அதாவது ஒரு பெண்ணின் அருகாமை தன் பெண்ணின் முக்கியத்தேவை என்பதைப் புரியாதவரல்ல… தினசரி அவர் பார்க்கும் அமிர்தாவின் காருண்யமான முகமும் அவளது செயல்களும் தான் குழந்தை வளர்ப்பில் சறுக்கிய காலங்களை அவருக்கு அறிவித்தன!

“ஹாய் சுபி…” புன்னகையோடு அறைக்குள் வந்தவளை சிறு கீற்றான புன்னகையோடு வரவேற்றாள் சுபர்ணா,

“ஹாய் அமிர்தா…”

“என்னப்பா எப்படி இருக்க இன்னைக்கு… ஹவ் வாஸ் யுவர் டே…” சுபர்ணாவின் டி அடிக்ஷன் ட்ரீட்மென்ட் இன்னமும் நடந்து கொண்டிருக்க அவளது முந்தைய நிலை முற்றிலும் மாறியிருந்தது… நரம்புகள் வலிமை பெற நடுக்கமும் மன அழுத்தமும் வெகுவாகக் குறைந்து இருந்தது… அவளாக அனைத்து வேலைகளையும் செய்யுமளவு முன்னேறி இருந்தாள்,

“வெரி பைன் அமிர்தா… நீ நேத்துக் கொண்டு வந்து கொடுத்த புக்ஸ முடிச்சுட்டேன்… வேற புக்ஸ் வேணுமே ப்ளீஸ்…” அவளது வாசிப்பு வேகத்தைப் பார்த்து ஆச்சரியபட்டாள் அமிர்தா… கிட்டத்தட்ட ஐந்து புத்தகங்கள்… ஒரே நாளிலா?

“உண்மைய சொல்லு சுபி… நீ படிக்கிறாயா இல்ல பேஜஸ் ஸ்கிப் பண்ணிட்டு ஓடறயா?” சிரிப்போடு அவள் கேட்க அதைக் கேட்ட சுபர்ணாவும் சிரித்தாள்… இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்தது… அப்போது பார்த்த சுபர்ணாவிற்கும் இவளுக்கு ஆறு வித்யாசம் இல்லை… இல்லை… அறுநூறு வித்தியாசங்கள் இருந்தன… முக்கியமாக அப்போது இருந்தவள் கண்டிப்பாக மனிதர்களை மதிக்கக் கூடியவள் இல்லை… கோபம்… வஞ்சம் என அனைத்தும் ஒருங்கே அமைந்த அந்தச் சுபர்ணாவிற்கும் அமைதியாக எதிர்கொள்ளும் இந்தச் சுபர்ணாவிற்கும் எவ்வளவு வித்தியாசம்… மனதிற்குள் அசைபோட்டாள் அமிர்தா,

“என்ன அமிர்தா… எப்படி இவ இப்படி ஆகிட்டான்னு யோசிக்கறையா?” சரியாகப் புள்ளியைப் பிடித்தவளை ஆச்சரியமாகப் பார்த்தாள்! அமிர்தா மெளனமாகச் சிரித்து வைக்க அவளே தொடர்ந்தாள்,

“வாழ்க்கைல வாங்கற அடி நிறையப் பேர மேல தூக்கி விடும் அமிர்தா… நான் வாங்கின அடி என்னை அதளப் பாதாளத்துல தள்ளி விட்டுடுச்சு…”

“ஒரு கல்யாணம் நின்னு போனதுக்காக இவ்வளவு நீ பீல் பண்ண தேவை இல்ல சுபி… இன்னும் எவ்வளவோ இருக்கு…” என்று கூறியவளை அமைதியாக ஆனால் கூர்மையாகப் பார்த்தாள் சுபர்ணா!

“வாழ்க்கைய வாழத் தெரியாம வாழ்ந்த எனக்கெல்லாம் சத்யன் கேக்குதா அமிர்தா?” அமைதியாகக் கேட்டவளை கேள்வியாகப் பார்த்தாள்,

“சுபி… இன்னமும் நீ அவனைத் தான் நினைச்சுட்டு இருக்கியா?” மனதில் வலி பரவ அமிர்தா கேட்க… அதற்குக் கசப்பாகப் புன்னகைத்தாள் சுபர்ணா,

“அமிர்தா… இதுதான் வாழ்க்கை… இப்படித்தான் வாழணும்ன்னு சொல்லிக் கொடுத்தது சத்யன்… என்ன அவர் சொன்ன மெத்தட் வேணும்னா என்னால டைஜஸ்ட் பண்ண முடியாம இருக்கலாம்… ஆனா சொன்ன விஷயம் உண்மை… நூற்றுக்கு நூறு உண்மை தானே…” மனதை மறைக்காமல் கூறியவளை பார்த்து நிம்மதியடைந்தாலும் ஏனென்றே தெரியாமல் மனதில் வலி சூழ்ந்தது… எதுவும் பதில் கூறாமல் அவளையே பார்க்க… சுபர்ணா தொடர்ந்தாள்,

“என்கிட்ட நிறையக் குறைகள் இருக்கு அமிர்தா… சத்யன் சொன்னாரா?” என்று அவள் கேட்டபோது இல்லையென்று அவள் தலையசைக்கச் சுபர்ணா ஒரு கணம் திகைத்தாள்… எதையுமே சத்யன் கூறவில்லையா?

“தெரிஞ்சா இங்க வரவே மாட்ட அமிர்தா…” குரலில் வலியைத் தேக்கி வைத்து அவள் கூற அவசரமாக மறுத்தாள்,

“கிடையாது சுபி… நீ எப்படி இருந்தாலும் நான் வருவேன்… உன்னைப் பார்ப்பேன்… சத்யாவுக்காக…” மனதார உணர்ந்து அமிர்தா கூறினாலும் கசப்பான புன்னகை படர்ந்தது சுபர்ணாவின் முகத்தில்,

“நீ இங்க வர்றதுக்குச் சத்யாவுக்கு முதல்ல ஒப்புதலா… சொல்லு?”

“ஏன் கேக்கற சுபி… அப்படி எல்லாம் கிடையாதே…” வாய் அப்படிக் கூறினாலும் சத்யனின் எதிர்ப்பை உணராதவள் இல்லையே,

“ஹாஹ்… சத்யாவை பத்தி எனக்கு நல்லா தெரியும் அமிர்தா…” அவள் இந்த வார்த்தைகளைக் கூறியபோது லட்சம் முறை இறந்து மீண்டும் பிறந்தாள் அமிர்தா… அவளுடைய சத்யனை இன்னொரு பெண் உணர்ந்து இருக்கிறாள் என்பதை அவளது மென்மையான மனம் ஏற்காமல் உடைந்தது… இனியும் இந்தப் பேச்சை வளர விட்டால் சரியல்ல என்று தான் கொண்டு வந்திருந்த குடும்ப ஆல்பத்தை அவளோடு அமர்ந்து பார்க்க ஆரம்பித்தாள்… அதில் பழைய காலப் புகைப்படங்கள் முதற்கொண்டு இருக்க ஒவ்வொன்றாகக் காட்டி விளக்கமளிக்க ஆரம்பித்தாள்… ஒவ்வொன்றாகக் கூறிகொண்டிருக்க… அந்தப் புகைப்படம் வந்தபோது சுபர்ணா கிட்டத்தட்ட துள்ளினாள்,

“அமிர்தா… இது யாரு?” புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி கேட்க,

“ஹே… இது தாத்தா சத்யானந்தர்…”

“இவர் இப்போ எங்கே இருக்கார்…” என்று கேட்டவளை குழப்பமாகப் பார்த்தாள் அமிர்தா,

“தாத்தா சன்யாசம் வாங்கிட்டு போய்ட்டார் சுபர்ணா… அவர் சமாதியாகி கிட்டத்தட்ட முப்பத்தி அஞ்சுவருஷமாகுது…” அமிர்தா இயல்பாகக் கூறியபோது முகத்தில் அறை வாங்கியது போல அதிர்ந்தாள் சுபர்ணா,

“என்ன அமிர்தா… சொல்ற? அவர் சமாதியாகிட்டாரா? எப்படி? ஹவ் இஸ் இட் பாசிபிள்? எனக்கு ட்ரீட்மென்ட் பண்ணிட்டு இருக்கப்ப அவரை நான் பார்த்தேன்… அது எப்படிப் பாசிபிள்?” அவள் அதிர்ந்து கூறியபோது அவளை விடவும் அதிர்ந்தாள் அமிர்தா,

“நோ சான்ஸ் சுபி… எப்படி அது சாத்தியமாகும்?”

“இல்லை அமிர்தா… சியூர்… இந்த ஸ்நாப்ல இருக்கவர நான் பார்த்து இருக்கேன்… என் கண்லயே இருக்கார்… ஆனா அப்போ நான் கொஞ்சம் ஸ்டேபிலா இல்ல…”

“மே பி ஹாலுசினேஷனா இருக்கும்… இந்த மாதிரி ட்ரீட்மென்ட்ல சாத்தியம் சுபி…”

“அமிர்தா… நீ சொல்ல வர்றது புரியுது… மனசோட அழுத்தத்துல எனக்குகற்பனையா தென்பட்ட உருவம் எப்படி அப்படியே தாத்தா மாதிரி? உப்ப்ப்…” சிலிர்த்துக் கொண்டு அவள் கூற… அவள் சொல்வது உண்மையா கற்பனையா என்பது புரியாமல் விழித்தாள் அமிர்தா… ஆனாலும் அவளை நோகடிக்க வேண்டாம் என்று எண்ணி கொண்டு,

“எப்போ எப்படின்னு சொல்லு அமிர்தா… ஏதாவது சொன்னாரா?”

“ம்ம்ம்ம்… டாக்டர் ட்ரீட் பண்ணும்போது பக்கத்துல வந்து நின்னு என்னைப் பார்த்துட்டு இருந்தது போல இருந்தது… அப்புறம் என் நெற்றில கை வெச்சுத் தடவி கொடுத்தார்… அமிர்தா… கேன் யூ கெட் மி… நான் சும்மா சொல்லலை… அவர் அப்படிச் செய்ததற்கு அப்புறம் தான் என்கிட்ட நிறையச் சேஞ்சஸ் என்னால உணர முடியுது அமிர்தா… ஐ ஆம் சியூர்…” குரலில் தீவிரத்தோடு சுபர்ணா கூற… அமிர்தா அவளைப் பரிதாப பார்வை பார்த்தாள்,

“சுபி…” தயக்கமாக,

“மூளை கலங்கி போய் நான் உளறலை அமிர்தா… நிஜம்… சத்தியமா நிஜம்… அது யாருன்னு தெரியாம இருந்திருக்கேன்… யாரோன்னு நினைச்சுட்டு இருந்தேன்… ஆனா ஸ்நாப்ஸ் பார்க்கும்போது…”

அமிர்தாவினால் எந்தவொரு கருத்தையும் கூற முடியவில்லை!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 39

எத்தனை நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தது... இதற்காகத்தான் அல்லவா... சீதாராமன் அமிர்தாவின் உடல்நிலையால் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டவில்லை என்றாலும் சத்யனுடைய மனதின் ஓரத்தில் இதற்க்கான தவிப்பு இருந்து கொண்டே இருந்தது... அதுவும் முதன்முதலில் தான் எடுத்த அரசாங்க டெண்டர் கட்டிடத்தை வெற்றிகரமாக…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

உங்கள் கருத்தைப் பகிருங்கள்