arrow_back
பரமபதம் அத்தியாயம் 4
பரமபதம் chevron_right பகுதி 4 / 54

அத்தியாயம் 4

visibility 324
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (11 மதிப்பீடுகள்)
பகிர்

நிகில் விஸ்வாவோடு சத்யனையும் சுமந்து கொண்டு கார் லோனாவாலாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

மும்பையின் இருள் வாழ்க்கை வித்தியாசமானது.

மும்பையைப் பொறுத்தவரை இரண்டே இரண்டு வர்க்கங்கள் தான். உழைக்கும் வர்க்கம் இன்னொன்று அதை அனுபவிக்கும் வர்க்கம்!

ஒருவன் ஏடிஎம்க்கு உள்ளே இருப்பவன் இன்னொருவன் ஏடிஎம்க்கு வெளியே இருப்பவன்!

ஓய்வு, உறக்கமின்றி மாடாய் உழைத்தும் அடுத்த வேளை உணவுக்குத் திண்டாட வேண்டியிருக்கிறதே என்ற விரக்தியில் இருக்கும், அடிப்படை கல்வியறிவு இல்லாத கூட்டம் ஒருபுறம் என்றால், உழைப்பென்றால் என்னவென்றே அறியாமல், பிறந்தது முதல் தங்கக்கட்டிலில் புரண்டு, வாரக்கடைசிகளுக்கு மட்டுமே வாழ்கையில் ஏங்கும் மேட்டுக்குடி பிள்ளைகள் மறுபுறம்!

பொய், புரட்டு, பித்தலாட்டம் என எதை வேண்டுமானாலும் மூலதனமாக்கி இந்த மண்ணில் வாழ்ந்துவிட வேண்டும் என்பதைத் தாரக மந்திரமாக்கி வாழ்ந்துவரும் ஒரு கூட்டத்திற்கும், இவர்களைத் தீண்டத் தகாதவர்களாகவும், சமூகத்தின் அழுக்காகவும், சுமையாகவும் பார்க்கும் மேட்டுக்குடி சமூகத்திற்கும் ஏற்படும் உரசல்கள் மும்பையின் ரத்தம் தோய்ந்த வரலாறுகள்!

லோனாவாலாவில் அமைந்து இருந்த அந்தத் தனிப்பட்ட தோட்டத்தின் அமைதியை கிழித்தது டான்ஸ் ப்ளோரிலிருந்து வந்த காதைக் கிழிக்கும் இசை. டான்ஸ் ப்ளோரோடு சேர்ந்து சில் ரூம், ப்ரைவேட் ரூம், ஸ்மோக் ரூம் என்று ரேவ் பார்ட்டிக்கு உண்டான அனைத்து அம்சங்களோடு!

டிஸ்கோ ஜாக்கி பாடல்களை மாற்றி மாற்றி உச்சஸ்தாயில் ஒலிக்கவிட ஜோடிகள் கண்மண் தெரியாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்! எங்கும் புகை மண்டலம். ஆடிக் கொண்டிருந்தவர்களின் கைகளில் மது கோப்பை. கண்களில் எக்ஸ்டசியின் தீவிரமான போதை!

காரிலிருந்து இறங்கிய மூன்று பேரையும் வரவேற்றது மூன்று அழகான இளம் பெண்கள். அவர்களின் உடை அபாயகரமான கவர்ச்சியை அந்தப் பெண்களுக்கு அள்ளித் தெளித்து இருந்தது!

“ஹாய் நிக்கி…” ஒருத்தி நிக்கிலை கட்டி அணைக்க அவனும் அணைத்தவாறே மற்ற இருவரையும் கண்களால் அளந்தான்!

“நிகில்… இதெல்லாம் யாருடா?” சத்யன் பதட்டமாகக் கேட்க,

“ஹே… கூல் மேன்… ரேவ் பேர் தான்டா… காலேஜ் கேர்ல்ஸ்…”

பணத்துக்காகப் பார்ட்டி பேராக ஒப்புகொள்ளும் கல்லூரி பெண்கள் அதிகம். பணத்துக்குப் பணம் மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி என்பது அவர்களது கணக்கீடு. இந்தக் கணக்கில் பல நேரங்களில் பள்ளி பிள்ளைகளும் வருவதுதான் கொடுமை.

சத்யனுக்கு நிகிலின் செய்கையில் ஒப்புதலில்லாவிட்டாலும் அவன் கூறியதற்காகச் சகித்து ஒருத்தியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். காதைக் கிழிக்கும் இசை! ட்ரம்ஸ் சத்தம் உச்சத்தில் அலறிக் கொண்டு ஆடுபவர்களை வெறியேற்றிக் கொண்டிருந்தது.

“நிகில்… இங்கவெல்லாம் வந்தது எங்க அம்மாக்குத் தெரிஞ்சா கஷ்டபடுவாங்கடா. ப்ளீஸ்… நான் வேணும்னா போகட்டா?” கிசுகிசுப்பாகக் கேட்ட சத்யனின் வார்த்தைகளில் கெஞ்சுதல் இருந்ததை உணர்ந்தான் நிகில்! அவனைப் பாவமாகப் பார்த்தனர் நிகிலும் விஸ்வாவும்!

“இல்ல சத்யா… கண்டிப்பா உன்னை இங்க அழைச்சிட்டு வரணும்னு தான் நினைச்சு உன்னைக் கூட்டிகிட்டு வந்தது. நீ தான் இப்போ எங்களுக்கு முக்கியம். ப்ளீஸ் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு…” விஸ்வா கூறவும் சத்யனின் புருவம் முடிச்சிட்டது. என்ன அப்படி முக்கியம் என்று குழம்பினான்.

“ஹாய் நிக்கி… வாட் எ சர்ப்ரைஸ்! நீ இன்று வரமாட்டாயென நினைத்து இருந்தேன் ஹனி!” போதையாக ஒருத்தி கூறி விட்டு அவன்மேல் சாய்ந்தாள்!

அவளை அழைத்து வந்தவனும் போதையில் மிதந்தவாறே, “சாரி நிக்கி… ப்ரீத்திக்கு தலைக்கு மேல் ஏறி விட்டது…” என்று கூறி அவளை இழுத்து சென்று மறுபடியும் ஊற்றிக் கொடுக்க, அதையும் விடாமல் அருந்தினாள் அந்த ப்ரீத்தி!

“ஹே மேன்… ஐ நீட் எக்ஸ்டசி… எக்ஸ்டசி… இம்மீடியட்லி… கம் ஆன்… ஐ நீட் இட்… ஐ நீட் இட் ரைட் நவ்…” போதையில் அவளது ஆண் நண்பனிடம் வலு சண்டையிட்டு கொண்டிருந்தாள். எங்கும் சூழ்ந்த புகைமயமும் போதைமயமும் சத்யப்ரகாஷின் மனதை அழுத்தியது. அருவறுப்பாக இருக்க… அதை முகத்தில் காட்டி கொள்ளாமல் இருக்க அரும்பாடு பட்டான்.

அதுவும் ஆண்களும் பெண்களும் வரைமுறையே இல்லாமல் தத்தமது புற ஆடைகளையும் உலகையும் மறந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க அதைப் பார்த்தவனுக்குக் குமட்டி கொண்டு வந்தது!

சமுதாயத்தில் முக்கியமான நபர்களின் வாரிசுகளோடு நிறைய நடிகர் நடிகைகளும் அடக்கம் அந்தக் கூட்டத்தில். வாழ்கையில் கேளிக்கை தேவைதான் ஆனால் இந்த வரம்பு மீறிய பண்பாட்டைத் தகர்த்து எறியும் மேல்தட்டு கலாச்சார மீறல் சத்யனுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது!

“சத்யா… ஷால் வீ டான்ஸ்?” உடன் வந்த பெண் கேட்க… மனதை காட்டி கொள்ளாமல்… தோளைக் குலுக்கி விட்டு அவளோடு சேர்ந்து மெலிதாக நடனமாட துவங்கினான். அது அவனுக்குப் பழக்கமான ஒன்றென்பதால் கடினமாக இருக்கவில்லை.

காக்டெய்ல் மிக்ஸ்சை அவனிடம் அவள் நீட்ட… நாசுக்காக வாங்கி அருந்துவது போல இரண்டு சிப் சுவைத்தான். இது போன்ற சந்தர்பங்களில் மறுப்பது அநாகரீகம். அதுதான் அங்கிருந்த நாகரீகம்!

டான்ஸ் ப்ளோரில் இசை வெறித்தனமாகக் கூடியது,

இருந்த அனைவரின் முகத்திலும் தன்னிலை மறந்த போதை தெரிய… ப்ளோரின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு நடுவில் நின்ற கூட்டம் ஆரவாரித்தது கேட்டது. என்ன காரணம் என்றுஅறியஒவ்வொருவராக விலக்கி நம்முடைய மூவரும் முன்னேறினர்,

இசையின் வெறித்தனம் இன்னமும் கூட… கூட்டத்தின் ஆரவாரமும் கூடியது. சுற்றிலும் நான்கு வாலிபர்கள் நின்று கொண்டு இரண்டு பெண்களின் உடையை ஒவ்வொன்றாகக் கழட்டி எறிய… ஒவ்வொரு உடைக்கும் கூட்டம் ஆர்பரிக்க… பக்கத்தில் போதை மருந்து கலக்கப்பட்ட இளம் சூடான எண்ணெய் தயாராக இருந்தது.

அதில் ஒருத்தி ப்ரீத்தி,

இன்னொரு பெண்… சத்யன் கண்ணைக் கசக்கி கொண்டு பார்த்தான்.

சுபர்ணா!

ஒரே நேரத்தில் பத்தாயிரம் வால்ட் மின்சாரம் தாக்கிய உணர்வு!

கால்களுக்கு இடையில் பூமி நழுவியது போன்ற தோற்றம்!

சுபர்ணாதானா?

ஆசை கொண்ட மனம் அந்தக் காட்சியை நம்ப முடியாமல் சந்தேகப்பட… திரும்பத் திரும்பக் கண்களைக் கசக்கி கொண்டு பார்த்தான்.

“கடவுளே…” தலை சுற்றிக் கொண்டு வர அவனது தடுமாற்றத்தை உணர்ந்த நிகிலும் விஷ்வாவும் ஆதரவாக அணைத்து கொண்டனர்!

அவனது கைகளின் நடுக்கத்தைப் பார்த்த நிகிலுக்கு அவனது நிலை புரிந்தது. நிகிலாவது இந்த மாதிரி பார்ட்டிகளுக்குப் பார்வையாளராக மட்டுமாவது வருவானே தவிர… சத்யப்ரகாஷ் அவனது பெயருக்கு ஏற்ப இது போன்ற பழக்கங்கள் சிறிதும் இல்லாதவன்.

சாதாரணப் பார்ட்டிகளில் நண்பர்கள் கட்டாயத்திற்காக மதுவை சிறிது அருந்துவான். ஜஸ்ட் எச் சிப் என்பார்களே அதுபோல். சோசியல் டிரிங்கிங்! ஆனால் தனக்கு நிச்சயிக்கப் பட்ட… மாலையில் தன்னுடன் முதல் முறையாக முத்தம் பரிமாறிக்கொண்ட சுபர்ணாவை இங்கே அவன் எதிர்பார்க்கவும் இல்லை. அதைக் காட்டிலும் இந்த நிலையில்,

இசையின் வெறித்தனம் கூடக் கூடச் சுற்றி இருந்தவர்களின் ஆரவாரமும் அதிகரிக்க உடைகள் குறைந்து கொண்டே வந்து ஒன்றும் இல்லாமலாக… இன்னும் இருவர் இளம் சூடான எண்ணையை எடுத்து இருவரின் மேலும் தடவ தொடங்கினர். ஏற்கனவே போதையில் இருந்த இருவருக்கும் எண்ணையில் இருந்த போதை மருந்து உடலில் கலந்து போதை உச்சத்தை எட்ட… அதற்கு மேல் நடக்கத் துவங்கியவைகளைப் பார்க்க சத்யப்ரகாஷின் மனதுக்குத் தெம்பில்லை!

தான் மட்டுமே பார்த்து ரசிக்க வேண்டிய காதலியின் உடலை இத்தகைய நிலையில் நண்பர்கள் முன்னிலையில் அதுவும் ஒரு கூட்டத்தோடு பார்க்க வேண்டிய அவல நிலைக்கு ஆளானதை நினைத்து அவமானமாக இருந்தது சத்யனுக்கு. இதற்கு மேலும் இந்தப் பந்தம் தொடர வேண்டுமா என்று அவன் எண்ணியபோது அவனது பெற்றோர் கண் முன்னர் வந்தனர். பெரும்பாலும் தந்தை தனது நெருக்கடியை அவனிடம் சொன்னதில்லை என்றாலும் அவனாகச் சிறிது அறிந்தே இருந்தான்.

அவரது நெருக்கடியைக் குறைக்கத்தான் சுபர்ணாவோடு திருமணம் என்று இருந்தாலும் நடுவில் சில நாட்களாக அவனது நினைவை அவளிடம் பறிகொடுத்திருந்தவனுக்கு இந்த நிலை அவனை நிலைகுலைய செய்து இருந்தது. தந்தைக்காகச் சுபர்ணாவை திருமணம் செய்வதா அல்லது தன் தன்மானத்திற்காக அவளைத் தூக்கி எறிவதா?

சத்யனின் மனம் குழம்பியது!

சப்தம் இல்லாமல் தலையைப் பிடித்துக் கொண்டு பார்க்கிங்கில் அமர்ந்திருந்த அவனது தோற்றத்தைப் பார்த்த நிகிலுக்கும் விஸ்வாவுக்கும் மனம் சங்கடமாக இருந்தது. அந்த மௌனத்தை நிகில் தான் முதலில் கலைத்தது,

“சத்யா… ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ப். ப்ளீஸ்…”

நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்த சத்யனின் கண்களில் தென்பட்டது என்ன? காதலை இழந்த வலியா? தன்மானம் அடிபட்ட அவமானமா? தாய் தந்தைக்கு என்ன பதில் சொல்வது என்ற பயமா? சுபர்ணாவை இந்த நிலையில் காண நேர்ந்த அருவறுப்பா? எதிர்காலத்தை நினைத்த திகிலா? நிகிலுக்குப் புரியவில்லை. ஆனால் சத்யனை பார்க்கையில் மனம் வலித்தது!

“சத்யா… இன்னொரு விஷயத்தையும் பார்த்துடு…” சொன்னது விஸ்வா! இதற்கு மேலும் பார்க்க என்ன இருக்கிறது என்று கேள்வியாக அவனைப் பார்த்தான் சத்யப்ரகாஷ்!

“கொஞ்ச நாள் அதாவது சில வருஷங்கள் முன்னாடி டெல்லி டிஏவி எம்எம்எஸ் ஸ்காண்டல் வெளியாச்சே… உனக்குத் தெரியுமா?”

நினைவு இல்லை என்பது போல மறுதலித்தான்.

“உன்னோட போன்க்கு ஒரு எம்எம்எஸ் அனுப்பறேன் பாரு…” கல்போல மாறியிருந்தது விஸ்வாவின் முகம்!

போனில் அந்த mmsஐ செலெக்ட் செய்து கைகள் நடுங்க சத்யனின் எண்ணுக்குப் பார்வர்ட் செய்தான்!

இரண்டு பள்ளி மாணவர்களோடு ஒரு மாணவி காமகளியாட்டத்தில் இருந்த mms அது!

“அந்தப் பொண்ணோட முகத்தை ஜூம் பண்ணி பார் சத்யா…” விஸ்வாவின் குரலில் இரும்பை ஒத்த கடினம்!

சிறிது சிறிதாக ஜூம் செய்யப்பட்ட உருவம் தெரிய… சத்யனின் மனம் துண்டு துண்டாகச் சிதறியது! கை தேர்ந்த பாலியல் தொழிலாளியைவிடச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது வேறு யாரும் இல்லை,

சுபர்ணா!

பார்க்கும் போதே குமட்டி கொண்டு வர… கையில் இருந்த போனை கோபத்திலும் அருவறுப்பிலும் தூக்கி எறிந்தான்!

சப்தத்தோடு போய் விழுந்து பாகம் பாகமாக உடைந்தது!

கால்கள் மடிந்து அமர்ந்தவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது! இது போன்ற ஒரு நிலைமையை அவன் நினைத்துப் பார்த்ததும் இல்லை. ஆண்பிள்ளை அழக் கூடாது என்று அவனுக்கு அன்னையால் போதிக்கபட்டதெல்லாம் மறக்க… கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது! முகத்தை மூடிக் கொண்டு சப்தம் இல்லாமல் குலுங்கினான்.

அவன் அழுவதைப் பார்த்த இருவருக்குமே கண்கள் கலங்கியது. அவனைத் தேற்றும் விதமாக,

“ஹே சத்யா… ப்ளீஸ்… ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ப்…” சத்யனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தொடர்ந்து குலுங்கி கொண்டிருக்க,

“சத்யா… இது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சுடுச்சுன்னு சந்தோஷப்படுடா. இதுக்குப் போய் யார்னாச்சும் அழுவாங்களா? சனி விட்டதுன்னு தலை முழுகுடா…” விஸ்வா அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தடுமாற, ஆவேசமாக நிமிர்ந்த சத்யன்,

“எப்படிடா? கொஞ்ச நாள்ன்னாலும் அவளை நான் மனசாரக் காதலிச்சுட்டேனே விஸ்வா? என்னால இந்த அருவறுப்ப ஏத்துக்கவும் முடியலையே… என்ன பண்ணுவேண்டா?” ஆவேசமாக ஆரம்பித்துப் பரிதாபமாக முடித்தவனை எழுப்பிக் கட்டி அணைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான் விஸ்வா!

“டேய் விடுடா… அவ அதுக்கெல்லாம் அருகதையே இல்லாதவ. அந்தத் தரங்கெட்டவள நினைக்காத. சியர் அப் மேன். நீ எவ்வளவு தைர்யமான ஆள்ன்னு நாங்க எல்லாம் நினைச்சுட்டு இருக்கோம். நீ இப்படி உடைஞ்சு போகலாமா…” என்றான் நிகில் கோபமாக!

“ஏன்டா? கண் கூடவா பொய் சொல்லும்? நடிக்கும்? அவ கண்ல நான் காதலை பார்த்தேன்டா… அது கூடவா பொய்? எப்படிடா? இப்படி ஏமாத்த எப்படிடா முடிஞ்சுது?”

மனம் ஆறாமல் புலம்பினான் சத்யப்ரகாஷ்!

புலம்பிக் கொண்டிருந்த அவனைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க விதி அவனது வாழ்வில் விளையாடத் துவங்கி இருந்தது!

விஸ்வா அவனுடைய செல்பேசியில் சத்யனுடைய நம்பரோடு சேர்த்து அவனது தாய் மற்றும் தந்தை என்று ஒரே நம்பரில் சேமித்து இருக்க,

எம்எம்எஸ் அனுப்பும்போது செல்பேசி அனைத்து எண்களுக்குமா என்று கேட்க அந்த நேரத்துப் பதட்டத்தில் அவனையும் அறியாமல் ‘சென்ட் ஆல்’ என்று கொடுக்க,

அந்த எம்எம்எஸ் மற்ற இரண்டு எண்களான பத்மினி, ராஜசேகர் ஆகியோரின் எண்களுக்கும் செவ்வனே சென்றது!

சத்யனின் விதியும் யு டர்ன் எடுத்து மாறதுவங்கியது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 5

சென்னை மியுசிக் அகாடமி எள் விழுந்தால் எண்ணையாகி விடும் போலக் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. தத்தமது பெருமையைப் பறைசாற்ற, “நம்மாத்து மாமா எத்த விட்டாலும் விட்டுடுவார்ஆனா இந்த டிசம்பர் கச்சேரிய மட்டும் மிஸ் பண்ண மாட்டா. தெரியுமோ! கச்சேரிய மிஸ் பண்ணிண்டு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்