arrow_back
பரமபதம் அத்தியாயம் 46
பரமபதம் chevron_right பகுதி 46 / 54

அத்தியாயம் 46

visibility 204
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

போலீஸ் விசாரணை ஒரு புறம் நடக்க… மறுபுறத்தில் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் சுபர்ணாவை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தன… எத்தனை பேர் இருந்தாலும் விசாரணை என்னவோ ஆரம்பித்த புள்ளியைத் தாண்டி ஒரு படி கூட மேலே நகரவில்லை,

காணமல் போன அன்றும் அதற்கு அடுத்த நாட்களிலும் விமானத்தில் பயணித்த அத்தனை பயணிகளின் விபரங்களும் சேகரித்துச் சரி பார்த்தனர்… எங்கேயும் அவளது அடையாளம் கிடைக்கவில்லை… அதற்கு அடுத்ததாக ரயிலில் பயணம் செய்தவர்களையும் விட்டு வைக்காமல் சரி பார்த்தனர்… அங்கும் சுபர்ணா பற்றிய தகவல் கிடைக்காததால் மனம் சோர்ந்து போயினர்,

அமிர்தா அவ்வப்போது தேற்ற முயன்றாலும் சுபர்ணாவை பார்க்கும் வரையில் சீதாராமனால் நிம்மதியாகக் கண்களை மூடித் தூங்கவும் முடியாது என்பது அவளுக்குத் தெளிவு! ஆனால் எங்கே தேடுவது… சிறு நூலைக் கூட விட்டு வைக்காமல்… வாய்ப்புத் தராமல் காணாமல் போயிருந்தாள் சுபர்ணா,

போலீசாருக்கு அவள் கடத்தபட்டிருப்பாளோ என்று கூடச் சந்தேகம் வந்தது… ஆனால் கடத்தபட்டிருந்தால் கடத்தியவன் இத்தனை நாட்களுக்குள் பணய தொகை கேட்டு அழைத்திருப்பானே… ஆனால் இங்கு எதுவுமே அப்படி நடக்கவில்லையே!

எங்கு ஆரம்பிப்பது எங்குக் கொண்டு செல்வது என்று புரியாமலேயே விசாரணைநடந்து கொண்டிருந்தது… நாளுக்கு நாள் சீதாராமனின் உடல்நிலை கெட்டுப் போனது… ஒரு ஹார்ட் அட்டக்கை கடந்து விட்ட அவரது உடலும் மனமும் இந்த அதிர்ச்சிக்குத் தன்னைத் தயார்படுத்த முயலவில்லை… சுபர்ணா காணாமல் போன பத்தாவது நாளில் அடுத்த ஹார்ட் அட்டாக் வந்தது சீதாராமனுக்கு… மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்!

அவருடைய வாழ்கையே சுபர்ணா மட்டும் தான் என்ற நம்பிக்கை சூழ்நிலையின் தாக்கத்தால் உடைய ஆரம்பித்து இருப்பதை அந்தத் தந்தை மனம் ஏற்கவில்லை… மிக மோசமான நண்பன் இருக்க முடியும்… மிகவும் மோசமான ஆசிரியனோ இல்லை ஏனைய மற்றவரோ இருக்க முடியும் ஆனால் மோசமான தாயோ தந்தையோ இருக்க முடியாது என்பது அமிர்தாவின்ஆழ்ந்த நம்பிக்கை,

சீதாராமன் மற்றவர்களுக்கு எப்படியோ… தன் மகளுக்கு அவள் எப்படியொரு நிலையில் இருந்திருந்தாலும் அவர் என்றைக்கும் சிறந்த தந்தையாகவே இருக்க விருப்பப்பட்டார்… ஆனால் கண்மூடித்தனமாகப் பாசம் வைப்பதற்கும் கண்டித்து வளர்ப்பதற்குமான வேறுபாட்டை அவர் அறியாததுதான் அவரது தவறு… அதன் கூலியை இப்போது அனுபவிக்கும் அவரைப் பரிதாப பார்வை பார்த்தாள் அமிர்தா!

“அமிர்தா… என் பொண்ணைக் கண்ணாலையாவது பார்ப்பேனா? என்னால முடியலம்மா… சுபி கிடைக்கற வரைக்கும் என் உடம்பு தாக்குபிடிக்குமா?” கேள்வி மாற்றிக் கேள்வியை அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தவரைத் தன்னால் முடிந்த அளவு தேற்றினாள்… மருத்துவமனைக்கு வந்த சாவித்ரிவும் அவருக்குப் பலமளிக்கக்கூடிய வார்த்தைகளைக் கூறித் தேற்றினார்… சரணாலயத்தில் பிரார்த்தனைகள் நடைபெற்றன… உடல் தேறி வந்தார்… வியாபாரங்கள் அத்தனையும் கை விட்டு வெறுத்து அறையில் முடங்கினார்… யாருக்காக உழைக்க வேண்டும் என்கிற நிஜம் முகத்தில் அறைந்தது! ஒரே பற்றுகோடான தன் மகளைதொலைத்தது அவரது உயிரை உருக்கிக் கொண்டிருந்தது,

காலம் எதற்காகவும் யாருக்காகவும் நிற்பதில்லை… அதன் கடமை ஓடுவது… ஓடிக்கொண்டே இருந்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 47

மிகப் பிரம்மாண்டமாக நின்ற அந்த ஹோட்டலை நின்று ஒருமுறை நிதானமாக ரசித்தான் சத்யப்ரகாஷ்! அவனது உழைப்பு... இரவு பகல் பாராமல் பசி தூக்கம் நோக்காமல் அவன் ஒரே வருடத்தில் முடித்துக் கொடுத்த அவனது குழந்தை! ஒவ்வொரு துளியிலும் பிரம்மாண்டம்... ஒவ்வொரு அடியிலும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்