arrow_back
பரமபதம் அத்தியாயம் 47
பரமபதம் chevron_right பகுதி 47 / 54

அத்தியாயம் 47

visibility 228
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

மிகப் பிரம்மாண்டமாக நின்ற அந்த ஹோட்டலை நின்று ஒருமுறை நிதானமாக ரசித்தான் சத்யப்ரகாஷ்! அவனது உழைப்பு… இரவு பகல் பாராமல் பசி தூக்கம் நோக்காமல் அவன் ஒரே வருடத்தில் முடித்துக் கொடுத்த அவனது குழந்தை! ஒவ்வொரு துளியிலும் பிரம்மாண்டம்… ஒவ்வொரு அடியிலும் பணத்தின் செழுமை… பல்வேறு போட்டிகளிடையே அவனது திறமைக்காக அவனைத் தேடி வந்த ஒப்பந்தம்… இந்த இரண்டு வருடங்களில் தமிழகத்தின் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்… பெரிய கட்டுமானங்களின் மிக முக்கியத் தேவையாகி போனான் சத்யன்… ராஜசேகர் உருவாக்கி எதிலெதிலோ கால் பதித்து வெற்றிப் பெறாமல் போனவற்றை எல்லாம் சத்யன் ஒருங்கிணைத்து வெற்றிப் பெற்றான்… அதற்கு அவன் இழந்ததும் மிக அதிகம் பெற்றதும் மிக அதிகம்,

இழப்பென்று பார்த்தால்… முதலில் பெற்றோர்… அதன் பின் அமிர்தா! என்று சுபர்ணா காணாமல் போனாளோ அதைச் சத்யன் ஏளனப்படுத்தினானோ… அந்தச் சம்பவம் அவளது மனதை மிகவும் காயப்படுத்தியது… அவளது மறுபக்கம் அவளுக்குத் தெரிந்திருந்தாலும் அவளைக் குறித்த அமிர்தாவின் மதிப்பீடு மாறவே இல்லை… ஆரம்பத்தில் சுபர்ணாவே அமிர்தாவை அவமானப்படுத்தியிருந்தும் கூடத் தற்போது அவளது கண்களில் அமிர்தா கண்ட உண்மை என்கிற வஸ்து அமிர்தாவை சற்றும் திரும்பவிடவில்லை… அவள் வீட்டை விட்டுப் போனதற்கு சத்யன் தான் காரணம் என்று மிகத்தீர்மானமாக இருந்தாள்… அவள் வந்தால் மட்டுமே சத்யனுடன் திருமணம் என்கிற பிடிவாதத்திலிருந்து சற்றும் இறங்கவில்லை,

“நீ என்ன தான் சொல்ல வர அம்மு?” திருமணத்தைப் பற்றிப் பேச்சு வந்த பிறிதொரு நாளில் சத்யன் கேட்க,

“சுபி வராம என்னால கல்யாணத்தை நினைச்சு கூடப் பார்க்க முடியாது சத்யா… சாரி…”

“உனக்கே நீ பேசுறது சரியா இருக்கா… அவ காணாம போனதுக்கும் நம்ம கல்யாணத்தை நீ வேணாம்ன்னு சொல்றதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல… லூசுத்தனமா பேசாத…” அவனது அத்தையை ஹாலில் அமர விட்டு இருவர் மட்டுமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருக்க… இதை ஏதும் அறியாமல்… ராமஜெயம் எழுதிக்கொண்டிருந்தார் சாவித்ரி… தன் மகளின் வாழ்வுக்காக வேண்டி… அவளே தடையாக இருப்பதை அறியாமல்,

“சம்பந்தா சம்பந்தம் இல்லாம சிலர் நடந்துக்கும்போது இது மட்டும் என்ன சம்பந்தம் இல்லாம தெரியுது?” நிதானமாக அவள் கேட்க… அதே நிதானத்தோடுஅவளை பார்த்தவன்… குரலை உயர்த்தாமல்,

“கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்ன்னு நான் சொன்னா உன்னால என்ன பண்ண முடியும் அமிர்தா?”

“ஒன்னும் பண்ண முடியாது சத்யா…” அவளும் அதே பாணியில் பதிலளிக்க,

“என்னோட குடும்பம் நடத்தித்தான் ஆகணும்ன்னு சொன்னா உன்னால என்ன பண்ண முடியும் அமிர்தா?”

“ஒன்னும் பண்ண முடியாது சத்யா…”

“நான் பார்க்கறதுஉனக்காக… உன்னோட ஒபினியனுக்கு மதிப்பு கொடுக்கறதால என்னை இளிச்சவாயனா நினைச்சுக்காத… எப்போவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்…” குரலை உயர்த்தாமல் அதே சமயத்தில் கத்தியைச் சொறுகுவது போன்ற அவனது வார்த்தைகள் தைக்க… அமிர்தாவோ சற்றும் சளைக்காமல்,

“நான் பார்க்கறதும் உனக்காகத்தான் சத்யா… அவளைக் கொலை பண்ணியிருந்தா கூட ஒரே நாள்ல அவ உயிர் போயிருக்கும்… கல்யாணம் கட்டிக்கப் போற பொண்ணு… மோசமான சூழ்நிலைல பார்த்தேன்… உணர்ச்சி வசப்பட்டுக் கொலை பண்ணிட்டேன்னு நீ சொன்னா கூட அதை ஏத்துக்க முடியும்… அதுக்குச் சட்டபடியான தண்டனையும் இருக்கு… ஆனா மனசு வருந்தித் திருந்தி வாழணும்ன்னு நினைச்ச அந்தப் பொண்ணோட மனசை கொலை செய்து அவளை ஓட ஓட விரட்டி இருக்கியே… கொஞ்சம் கொஞ்சமா சீதாராமனை கொன்னுட்டு இருக்கியே… இதுக்கு என்ன தண்டனை சத்யா?” வரிசையாக அமிர்தா கேட்ட கேள்விகள் அவனது மனதை துளைத்தன! அவளே தொடர்ந்தாள்,

“எந்தப் பீனல் கோட்ல உன்னோட கொலையை வகைப்படுத்த முடியும்? நீ கட்டாயபடுத்தி என்ன வேணும்னாலும் எனக்குச் செய்யலாம்… ஆனா அப்படி நீ பண்றதெல்லாம் அந்தப் பொண்ணோட மனசுக்கு நீ எழுப்புன சமாதி மேலதான்னு எப்போ நீ உணர போற? நீ எப்போவும் ஒரே மாதிரி இருக்க மாட்டத்தான்… ஆனா நான் எப்போவும் ஒரே மாதிரி தான் இருப்பேன்…” உறுதியாக முடித்தவளை கூர்மையாகப் பார்த்தவன்,

“என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு இருக்கறது நீ மட்டும் தான்… ஆனா உனக்கு நான் அப்படி இல்ல… எப்போ உனக்கு நான் மட்டும் உலகமா தெரியறேனோ… அப்போ என் கிட்ட வா அமிர்தா… அதுவரைக்கும் வேணாம்… கண்டிப்பா வருவ… நீ மட்டும் எனக்குப் போதும்ன்னு வருவ…” கூறிவிட்டு திரும்பியும் பாராமல் சென்றான்,

அவன் போன திசையை வெறுமையான கண்களோடு கண்ணீர் வழிய பார்த்துக்கொண்டிருந்தாள் அமிர்தா!

அதன் பின்னர் அவளிடம் திருமணம்பற்றிப் பேசுவதையே விட்டுவிட்டான்… சாவித்ரி புலம்பும்போது அவனுக்குச் சங்கடமாக இருந்தாலும் அவனால் அதற்கு மேல் அவளைக் கட்டாயப்படுத்த பிரியமில்லை… பிரியமில்லை என்பதை விட முடியவில்லை,

எப்படியும் மாறி விடுவாள் என்கிற நம்பிக்கையும் சில நாட்களாக மங்கி கொண்டிருந்தது… இந்த வெறி அனைத்தையும் தொழிலில் காட்டினான் சத்யன்… ஒன்றுக்குப் பத்தாக நூறாகக் கிடைக்க… அதில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான்… ஆனால் மறுபுறம் மன நிம்மதியை இழந்து கொண்டிருந்தான்… யாருமற்ற வீட்டிற்குள் நுழையும்போது தனிமை அவனைத் தாக்கும்… மனம் ஓய்வுக்காக அவள் மடி தேடும்… கட்டுபடுத்திக் கொண்டான்… கல்லாக இறுகினான்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 48

அன்று வருடாந்திர பங்குதாரர்கள்சந்திப்புநடைபெற்றுக் கொண்டிருந்தது... ஆடிட்டர் பரமேஸ்வரன் முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்வினைபெருமையோடுபார்த்துகொண்டிருந்தார்... ஜி எம் புருஷோத்தமன் அறிமுக நிகழ்வினை செய்து விட்டு சத்யன் அருகில் மேடையில்அமர்ந்திருக்க... கம்பெனிசெக்ரட்டரி வாசுதேவன் நாயர் சத்யப்ரகாஷ் பேச வேண்டியதன் தொகுப்பைக் கையில் வைத்துக் கொண்டு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்