arrow_back
பரமபதம் அத்தியாயம் 7
பரமபதம் chevron_right பகுதி 7 / 54

அத்தியாயம் 7

visibility 274
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (8 மதிப்பீடுகள்)
பகிர்

“மாமா… மாமா…” காரை நிறுத்தி விட்டு ராஜசேகரை உலுக்கினாள் அமிர்தா!

கண்கள் செல்பேசியை வெறித்தவாறு அமர்ந்திருந்த அவரிடம் சில நிமிடங்கள் ஸ்மரணையே இல்லாமல் இருந்தது அவளுள் கிலியை பரவச்செய்தது.

“இங்க பாருங்க மாமா! என்னாச்சு? ஏன் போனை வெச்சுட்டு இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?”

கொஞ்சம் வேகமாக உலுக்கவும் சட்டெனச் சுய உணர்வு அடையபெற்றவர், “ஒன்னும் இல்லடா கண்ணா… நத்திங்…” என்று அவசரமாகக் கூறினார்.

“அப்புறம் ஏன் இப்படி உட்கார்ந்து இருந்தீங்க?” அவளது கண்களில் தவிப்பு!

“நல்ல வேளையா சத்தி தப்பிச்சான்… சத்தி தப்பிச்சுட்டான்…” மந்திரம்போலச் சொல்லிக் கொண்டிருந்தவரை விநோதமாகப் பார்த்தாள் அமிர்தா!

“என்ன மாமா சொல்றீங்க? வாட் ஹேப்பன்ட் டூ யு?”

“இந்தக் கல்யாணம் சத்திக்கு வேணாம்டா. என் தலையே போறதுனா கூட வேண்டாம். வேண்டவே வேண்டாம்!” முகத்தில் விடுபட்ட உணர்வோடு கூறி பெருமூச்சை விட்டார்!

“மாமா புரியல…” பரிதாபமாகக் கேட்க,

“இல்லடா… மனசே ரொம்ப அழுத்தமா இருந்துச்சு. சத்திக்குத் தப்பு பண்றோமோன்னு… இப்போ ப்ரீயா இருக்கு. அந்தச் சுபர்ணா வேணாம். அந்தப் பொண்ணு தப்பான பொண்ணு. நிறையப் பேர் என்கிட்டே சொல்லும்போது கூடத் தெரியல. ஆனா இப்படிப்பட்ட பொண்ணு நமக்கு வேணாம்டா!”

“என்ன திடீர்ன்னு?” குழம்பினாள்… அவளிடம் எம்எம்எஸ் சை பற்றி ஒன்றும் சொல்லாமல் அவர் இப்படிப் பேசிக் கொண்டிருந்ததால் அவளுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தது! அவளைக் குழந்தையாகவே பாவித்து வந்தவருக்கு அவளிடம் சொல்லக் கூடியது அல்ல என்றும் தோன்றியிருக்கலாமோ? மாமனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று ஒரு மார்கமாகப் பார்த்து வைக்க, அவளது பார்வையைப் புரிந்து கொண்டவர், விடுதலை உணர்வோடு சிரித்தார்!

“ஏய் வாலு!” என்று அவளது காதைப் பிடித்துத் திருக, “விஷயத்தைச் சொல்லாம இப்படி உளறுனா… பின்ன என்ன மாமா நினைக்க முடியும்?” சிரித்தாள்!

“அம்முகுட்டி! நீ சின்னப் பொண்ணு. இதெல்லாம் தெரிஞ்சுக்கக் கூடாது. ஒழுங்கா காரை எடு. போய் ஆஞ்சநேயருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வந்துடலாம்…”

“யாரு? நானா சின்னப் பொண்ணு?” கேலியாக அவரைப் பார்த்துக் கேட்டாள் அமிர்தா,

“ஆமான்டா குட்டி. இவ்ளோ ஹைட் இருந்தா மட்டும் நீ பெரிய பொண்ணுன்னு நினைப்பா? எங்க எல்லாருக்குமே நீ குட்டி பாப்பாதான்டா…”

பழைய ராஜசேகர் வெளியே வருவதைப் பார்த்தபோது அமிர்தாவிற்கு ஒரு வகையில் நிம்மதியாக இருந்தாலும் இன்னொரு வகையில் திருமணம் வேண்டாம் என்கிறாரே?!

பேசி முடிந்த திருமணம் நின்றால் எவ்வளவு அவமானம் அந்தப் பெண்ணிற்கும் சரி… சத்திக்கும் கூட! இவர் ஏன் இப்படிப் பிதற்றுகிறார் என்று அவளுக்கு இன்னமும் புரியவில்லை.

“ஹலோ மாம்ஸ்… நான் ஒரு லாயர்! அதுவும் இல்லாம எனக்கு இப்போ இருபத்தியஞ்சு வயசாகுது. என்னைப் பார்த்து என்ன வார்த்தை! வேதனை… அவமானம்… வெட்கம்…” முத்து பட மீனா பாணியில் வசனம் பேச, அதைக் கேட்டுச் சிரித்தார் ராஜசேகர்!

“நல்லா வசனம் பேசு…” சிரித்துக் கொண்டே தலையில் கொட்டினார்!

“மாமா வளர்ற பிள்ளைய கொட்டாதீங்க…” சிணுங்கினாள் மருமகள்!

“அடிக்கழுதை… நீ வளர்ந்ததே போதும்மா தாயே! இன்னும் நீ வளர்ந்தா என்ன ஆகுறது? மாப்பிள்ளைய எங்க பிடிக்கறது? அப்புறம் அவனே நிமிர்ந்து பார்த்துத் தான் பேசணும் உன்ட்ட…” கேலியில் இறங்கினார்!

“மாம்ஸ்! அதை நாங்க கரெக்ட் பண்ணிக்குவோம். யு டோன்ட் ஒர்ரி…” கண்ணைச் சிமிட்டி பதிலுக்கு வாரினாள்!

“நாங்கன்னா…” ராகமாக இழுக்க,

“அதான் மாம்ஸ்! நானும் என்னைக் கட்டிக்கபோறவங்களும்!” நக்கலாக அவள் சொல்ல,

“திருட்டு கழுதை! எங்களுக்குத் தெரியாம இது வேற நடக்குதா? சாப்பாடாச்சும் போடுவியா இல்ல அப்படியே ஆசீர்வாதம் பண்ணிட்டு போங்கன்னு சொல்லிடுவியா? எதையும் சொல்லிட்டு செய் தாயி”

“ஹா ஹா பாக்கலாம்… அது என்னோட மூடை பொருத்தது. மூட் நல்லா இருந்துச்சுன்னா உங்களை எல்லாம் கூப்பிடலாம், இல்லைன்னா நோ சான்ஸ்…” அவருடைய போக்கிலேயே அவளும் பதில் கொடுக்க,

“அப்படீன்னா மாப்பிள்ளை ரெடின்னு சொல்ற. ஏன் செல்லக்குட்டி… அப்போ சத்திக்கு முன்னாடியே உனக்கு நாள் பார்த்துடலாம். ஓகே வா?” பெரிதாகக் குரலெடுத்து சிரித்தார்! தலைக்கு மேலே கையைத் தூக்கி வணங்கியவாறே,

“மாமா… வேணாம் இந்த விபரீத ஆசை. உங்களுக்கேன் இந்தக் கொலவெறி? சும்மா கலாய்ச்சுட்டு இருந்தா, இப்படியா என்னைச் சிக்க வைக்கப் பார்ப்பீங்க. யு ஆர் வெரி டேஞ்சுரஸ்…” வேண்டுமென்றே பல்லைக் கடித்துக் கொண்டு வார்த்தைகளை மென்று துப்பினாள்! அதைக் கேட்ட ராஜசேகரால் சிரிப்பை அடக்க இயலவில்லை!

“அறுந்த வாலு…” சொல்லிக் கொண்டிருக்கும் போதே செல்பேசி அழைக்க அதைக் காதிற்குக் கொடுத்தார்! பத்மினிதான் அழைத்து இருந்தது!

“சொல்லும்மா…”

“சார்! இந்த நம்பர்ல இருக்கவங்க உங்களுக்கு வொய்ஃபா?” யாரோ ஒருவர் கேட்க,

“ஆமாங்க… அவங்க எங்கங்க? உங்க கிட்ட அவங்க செல் எப்படிக் கிடைச்சுது?” சிரிப்பு உறைந்து, நெற்றி சுருங்க, வார்த்தைகளில் வேகமும் பதட்டமும் வந்து சேர்ந்தது!

“சார்… பதட்டபடாதீங்க உடனே பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயில் வாங்க…”

“ஏன்? என்னாச்சு? அவங்க செல்லை தொலைச்சுட்டாங்களா?”

“இல்ல சார்… ஆக்சிடென்ட் ஆகிடுச்சு அவங்களுக்கு. இந்த ஏரியா சப் இன்ஸ்பெக்டர் சார் நான். சிம் கார்ட எடுத்து என் போன்ல போட்டுத்தான் பேசறேன். சீக்கிரம் வந்தா நல்லது சார்…” அந்த முனையில் ஆரம்பித்ததுதான் ராஜசேகர் அறிந்தது! கையில் இருந்த செல்பேசி கீழே நழுவ அதிர்ச்சி தாளாமல் வார்த்தைகள் வர மறுத்தன.

“மாமா… மாமா… என்னாச்சு?” அவரை உலுக்கியவாறே… கீழே குனிந்து செல்பேசியை எடுத்து அவளது காதிற்குக் கொடுத்தாள்!

“சார் யாருங்க பேசினது?”

“மேடம் நான் பெசன்ட் நகர் ஏரியா சப் இன்ஸ்பெக்டர்… நீங்க யாருங்க…” வார்த்தைகள் கொஞ்சம் பதட்டமாக வேகமாக வந்தது!

“சார்! நான் லாயர் அமிர்தவர்ஷினி… இவங்க என் மாமா… என்ன விஷயம் சொல்லுங்க?”

“மேடம்! அவரோட ஒய்ப்க்கு ஆக்சிடென்ட்… பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயில் கிட்ட… கொஞ்சம் சீக்கிரம் வாங்க…”

“வாட்…” அதிர்ச்சி அடைந்த அமிர்தா உடனே சுதாரித்து,

“சார் ப்ளீஸ் உடனே பக்கத்துல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணுங்க… நான் வந்து பார்மாலிட்டிஸ் முடிச்சு தர்றேன்…”

“இல்ல மேடம்… நீங்க உடனே ஸ்பாட்டுக்கு வாங்க… ஆம்புலன்ஸுக்கு இன்பார்ம் பண்ணியாச்சு… நீங்க வந்தா தான் பார்மாலிட்டிஸ் முடிக்க முடியும்…”

“சார்… வாட் டூ யூ மீன்?” குரல் உள்ளே சென்று திகிலடைந்தது!

“எஸ் மேடம்… நோ மோர்…”

“…”

“கோயில் ஆப்போசிட்ல… சீக்கிரம் வாங்க…” மனம் அதிர தனது தாய்மாமனை பார்த்தவள் தானும் பதட்டபட்டால் இந்த நேரத்தில் ஒன்றுமே செய்ய முடியாது என்று சட்டென்று முடிவிற்கு வந்தாள்!

“சார்… ஐ ஆம் ஆன் தி வே… இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள அங்க இருப்போம் சார்… ப்ளீஸ் டே கேர்…” கனத்த குரலில் கூற,

“சூர் மேடம்… சீக்கிரம் வந்துடுங்க…” வலுக்கட்டாயமாகப் புன்னகையை முகத்தில் ஏந்தியவள்,

“மாமா… அத்தைக்கு ஒன்னுமில்லையாம்… லேசா அடிபட்டிருக்காம்… அந்த இன்ஸ்பெக்டர் பர்ஸ்ட் ஐட் கொடுத்துட்டாராம்… இதுக்குப் போய் இப்படியா மாமா ஷாக்கடிச்ச மாதிரி உட்கார்ந்து இருப்பாங்க…”

அந்த இடத்தை அடையும் வரை அவரை லெகுவாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவளின் வார்த்தைகள் கவனமாக வெளி வந்தன! பதறிய காரியம் சிதறும். இப்போது தானும் பதறினால் ஏற்கனவே உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கும் மாமனை தேற்றுவது கடினம் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்தாள் அமிர்தா!

ராஜசேகரின் முகம் சற்றே தெளிய,

“நிஜமாவா குட்டி? அத்தைக்கு ஒண்ணுமில்ல தானே…” உதடுகள் துடிக்கக் கேவ ஆரம்பித்து இருந்தார்!

“மாமா! என்னது இது சின்னப் பிள்ளை மாதிரி? அத்தைக்கு ஒண்ணுமே இல்ல. ஷி இஸ் நார்மல்…”

“அவளுக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது கண்ணா. சின்ன ஊசிக்குக் கூடப் பயந்துக்குவா. இப்போ கூடப் பெரிய அடி எல்லாம் பட்டிருக்காது தானே?” கேவல் அழுகையாக மாறி இருக்க, அந்த ஆறடி உயர குழந்தையை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது தெரியாமல் அவளுக்கும் கண்ணோரம் கரிக்கப் பார்த்தது! உடனே சுதாரித்து மாமனை அதட்டினாள் பெண்!

“மாமா… வாட் இஸ் திஸ்? இதுக்குப் போய் அழுதுட்டு… அதெல்லாம் அத்தைக்கு ஒன்னும் ஆகலை. இன்னும் பத்து நிமிஷத்துல அங்க போய்டலாம். கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க மாமா. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்…”

காரை அந்த வாகன நெருக்கடியிலும் அசுர வேகத்தில் செலுத்தி கொண்டே மாமனை சமாதானப்படுத்தினாள்! அவர் ஒரு பக்கம் புலம்ப ஆரம்பித்து இருக்கத் தனது செல்பேசியை எடுத்துச் சத்யனை அழைத்தாள்! அவன் இங்கே இருப்பது மிக மிக அவசியமாயிற்றே!

‘the number you are calling is either switched off or not reachable at the moment’

திரும்பத் திரும்ப முயன்றாலும் அதே பதிலே திரும்பவும் வர… பொறுமை இழந்து செல்பேசியைத் தூக்கி டேஷ்போர்டில் போட்டாள்!

“இடியட்… பொறுப்பே இல்லாத இடியட்… ஷிட்…”

கோபத்தை ஆக்சிலரேட்டரில் காட்ட பேய் வேகத்தில் கார் பறந்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 8

“எல்லாரும் தள்ளுங்க. தள்ளுங்க... இடத்தைக் காலி பண்ணுய்யா...” சுற்றிலும் நின்றிருந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தனர் போலீசார். மிக வேகத்துடன் வந்து நின்ற காரைப் பார்த்தவுடன் புரிந்தது அந்தச் சப் இன்ஸ்பெக்டருக்கு! “ஒரு நிமிஷம் மாமா. அத்தை எங்க இருக்காங்கன்னு விசாரிச்சுட்டு வந்துர்றேன். நீங்க…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

உங்கள் கருத்தைப் பகிருங்கள்