அத்தியாயம் 20
ஆதிரையின் பெற்றோரை மதியும் கதிரும் ஒருவழியாகத் தேற்றி அமர வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு வெளியே நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது.
ஆதிராவும் விக்ரமும் நிலவறையிலிருந்து மீட்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அந்தச் செய்தி ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவியது. “புதுக்கோட்டை அருகே இரண்டாயிரம் ஆண்டு காலப் பழமையான சேரர் கோட்டை கண்டுபிடிப்பு” எனத் தலைப்புச் செய்திகள் அலறின. சமூக வலைத்தளங்களில் அந்த நிலவறையின் புகைப்படங்களும், ஆதிராவும் விக்ரமும் கண்டெடுத்த அந்தத் தனித்துவமான வாளின் படமும் வைரலாயின.
வரலாற்று ஆய்வாளர்கள் இதனை மினி கீழடி என்று அழைக்கத் தொடங்கினர். கீழடிக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தின் வரலாற்றைத் திருப்பிப் போடப்போகும் ஒரு கண்டுபிடிப்பாக இது பார்க்கப்பட்டது. தேசிய அளவில் தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) இந்த இடத்தை நோக்கித் தன் பார்வையைத் திருப்பியது.
மருத்துவமனை வாசலில் செய்தியாளர்கள் கூட்டம் அலைமோதியது. விக்ரம் மெல்ல வெளியே வந்தான். அவனது தோற்றத்தில் இப்போது ஒரு மிடுக்கு இருந்தது. மதியும் கதிரும் அவனை வியப்புடன் பார்த்தனர்.
செய்தியாளர் ஒருவர் மைக்கை நீட்டி, “சார், அந்த நிலவறைக்குள்ள என்ன இருந்துச்சு?” என்று கேட்டார்.
விக்ரம் கேமராக்களைத் தீர்க்கமாகப் பார்த்து, ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு பேசினான். “நிச்சயமா! அது ஒரு வரலாற்றுப் புதையல், மர்மமான சாம்ராஜ்யத்தோட மிச்சங்கள். அங்க கிடைச்ச ஆதாரங்கள் தமிழ் தொல்லியல் எல்லையை இன்னும் விரிவுபடுத்தும். இனிமேல் அந்த இடத்தை முழுசா அரசாங்கத்தோட பாதுகாப்புக்குக் கொண்டு வரப்போறோம். ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கும்.” என்று கச்சிதமாக, அதே சமயம் ஒருவித அதிகாரத்துடன் பதிலளித்தான்.
அவனது நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த மதிக்கும் கதிருக்கும் வித்தியாசமாக தெரிந்தது. அவன் இப்படிப்பட்டவன் இல்லையே, ஒரு சாதாரண அட்டண்டரிடம் கூட தோளில் கைப்போட்டபடி பேசுபவனின் தோரணை ஒரே நாளில் மாறிப் போகுமா?
அவர்களால் நம்ப முடியவில்லை!


அழகு
thanks ma
Interesting...
thanks ma
Super
thanks ma
Nice intresting ud sis ❤️
அவன் விக்ரம் இல்லை தோழர்களே..!
அவன்தான் வற்பனைசேரல்😀