arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 4
வற்பனை சேரல் chevron_right பகுதி 4 / 28

அத்தியாயம் 4

visibility 751
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.9/5 (23 மதிப்பீடுகள்)
பகிர்

ஒரு வாரம்… ஆதிராவிற்கு அந்த ஏழு நாட்களும் ஏழு யுகங்களாகக் கழிந்தன. விக்ரம் சொன்னது போலத் துறை ரீதியான அனுமதிகளைப் பெற்று, ஜிபிஆர் கருவியுடன் வர ஒரு வாரமாகியிருந்தது.

வழக்கமான வேலையாட்கள் தவிர, ஜிபிஆர் ஆபரேட்டர்கள் இருவரும், விக்ரமின் உதவியாளர் கணேஷும் உதவிப் பொறியாளர் ஒருவரும் வந்திருந்தனர். ஜிபிஆர் சர்வே செய்வதற்கு அதிக ஆட்கள் தேவையில்லை என்றாலும், அந்த இடத்தை முறைப்படி தயார் செய்ய சிறு குழு தேவைப்பட்டது.

கணேஷ் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்தான், விக்ரம் வரும் முன் அந்த இடத்தை தயார்படுத்தி அவனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமே!

“கதிர், அந்த இடத்துல இருக்கிற புல்லு, சின்னச் சின்னக் கல்லு எல்லாத்தையும் முதல்ல அப்புறப்படுத்த சொல்லுங்க. தரை பிளேன்னா இருந்தாதான் ஆன்டெனா சிக்னல் சீரா இருக்கும்…” என்று ஆதிரா கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள்.

வேலையாட்கள் கவனமாக அந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். கதிரும் மதியும் அந்தச் சதுர வடிவப் பகுதியை கயிறு கட்டி வரம்புகளைப் பிரித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன மதி, அக்கா ஏதோ பெரிய புதையலை எடுக்கப்போற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துட்டு இருக்காங்க? அடியில வெறும் பாறை இருந்தா விக்ரம் ப்ரோ சும்மா விடமாட்டாரே!” என்று கதிர் ரகசியமாகக் கேட்டான்.

மதி சிரித்துக்கொண்டே, “உனக்கு ஆதிரா பத்தித் தெரியாதா? அந்தப் பானை ஓட்டுல இருக்கிற முத்திரையை வச்சு பெரிய தீஸிஸே ரெடி பண்ணிட்டாங்க. ஆனா எனக்கென்னவோ அடியில ஏதோ வாய்டு இருக்கும்னு தான் தோணுது. அவங்க சொன்னா அதுல லாஜிக் இருக்கும்…” என்றாள்.

“என்னவோ போ. அப்படி மட்டும் இருந்துட்டா நாம தான் டாக் ஆப் தி டவுனா மாறிடுவோம்…” சிரித்தான் கதிர்.

“அப்புறம் அய்யா எல்லா யூடியூப் சேனலுக்கும் பேட்டி குடுப்பீங்க…” மதி அவனை கிண்டலடித்தாள்.

“அட ஆமால்ல. செமையா இருக்கும்…” கதிர் சிறுபிள்ளைத்தனமாக சந்தோசபட்டதை பார்க்கையில் மதிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

விட்டால் செய்து விடுவான் போல என்று எண்ணிக் கொண்டாள்.

புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்து நின்றது விக்ரமின் புல்லட். பின்னால் கருவிகளுடன் கூடிய தொல்லியல் துறையின் பொலிரோ வாகனம்.

விக்ரம் வண்டியிலிருந்து இறங்கிய தோரணையில் அவன் இன்று முழு அதிகாரியாக வந்திருக்கிறான் என்பது புரிந்தது. விளையாட்டுத்தனங்கள் ஏதுமில்லை. அவனது இந்த தீவிர முகபாவத்தை பார்க்கும் போதே அனைவரும் அதே பாவத்துக்கு வந்துவிடுவார்கள். இது அங்கே இருக்கும் பழக்கம் தான்.

“ரெடியா ஆதிரா? தரை சுத்தமா இருக்கா?” என்று கேட்டபடி ஜீப்பில் இருந்து இறங்கிய அந்தத் தள்ளுவண்டி போன்ற ஜிபிஆர் கருவியை நோக்கினான்.

“எல்லாம் ரெடி விக்ரம். நாம பன்னிரெண்டாவது கிரிட்லருந்து ஆரம்பிக்கலாம்…” என்றாள் ஆதிரா.

“ஆதிரா, ஒரு நிமிஷம். மெஷினை ஆன் பண்றதுக்கு முன்னாடி ஒன்னு புரிஞ்சுக்க. இந்த ஜிபிஆர் மின்காந்த அலைகளை உள்ள அனுப்பி, அடியில இருக்கிற டென்சிட்டி மாற்றத்தைத்தான் காட்டும். அது ஒரு வெற்றிடமா இருக்கலாம், இல்ல பெரிய பாறையா இருக்கலாம், ஏன்… வெறும் ஈரமான மண்ணாகக் கூட இருக்கலாம். எதுவா இருந்தாலும் அதை ஸ்டரக்சர்ன்னு உடனே லேபிள் குத்தக்கூடாது. இப்போதைக்கு அது ஒரு அனாமலி (Anomaly)… அவ்வளவுதான்…” என்றான் விக்ரம் கறாரான குரலில்!

“எனக்குத் தெரியும் விக்ரம். ஆனா அனாமலி இருந்தா அதையும் நீங்க ஒப்புக்கணும்…” ஒப்புக் கொண்டாலும் இக்கிட்டாள்.

விக்ரம் பதில் சொல்லாமல் ஆபரேட்டரிடம் சைகை காட்டினான். சுமார் இருபது கிலோ எடையுள்ள அந்த ஆன்டெனா கருவி மெதுவாகத் தரையில் நகர்த்தப்பட்டது. அவன் தனது டேப்லட்டை பார்த்தபடி பின்னால் நடந்தான். ஆதிரா, மதி, கதிர் என அனைவரும் அவன் பின்னால் திரையை வெறித்தபடி நடந்தனர்.

“இப்போதைக்கு ஒன்னும் இல்ல… வெறும் சாண்டி சாயில் (Sandy soil) தான் காட்டுது…” திரையை பார்த்தபடியே சிறு குரலில் விக்ரம் சொல்லச் சொல்ல ஆதிராவின் முகம் வாடியது.

சுமார் அரை மணி நேரம் அந்தச் சதுரப் பரப்பை அங்கும் இங்குமாக வலம் வந்தனர். வியர்வை வழிந்தாலும் ஆதிரா கண்ணிமைக்காமல் திரையைப் பார்த்தாள்.

திடீரென, திரையில் இருந்த அலைவரிசைகள் சீரற்று மாறின. தலைகீழ் யு வடிவிலான பிம்பங்கள் வரிசையாகத் தோன்றின.

“வெயிட்! இங்கே நிறுத்துங்க!” விக்ரம் குரலை உயர்த்தினான். “பேக்ல போங்க… இன்னும் ஒரு அடி பின்னாடி.”

ஆன்டெனா நகர்த்தப்பட்டது. லேப்டாப் திரையில் 1.5 மீட்டர் ஆழத்தில் தெளிவான கருப்பு நிழல் தெரிந்தது. அது மேலேயுள்ள மண்ணிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அடர்த்தியான பகுதியைச் சுட்டிக்காட்டியது.

“விக்ரம்! அதைப் பாருங்க! அது ஒரு வெற்றிடம். கச்சிதமான சதுர வடிவம் தெரியுது பாருங்க!” ஆதிரா உற்சாகத்தில் கத்தினாள்.

விக்ரம் அந்தத் தரவுகளை ஆராய்ந்தான். “ம்ம்ம்… 1.5 மீட்டர்ல ஒரு டென்சிட்டி ட்ராப் (Density drop) இருக்கு. ஆனா ஆதிரா, இது பழைய கிணற்றின் மேல்பகுதியா இருக்கலாம். இல்லன்னா ஏதோ பாறை இடுக்கா இருக்கலாம்… ரஷ் பண்ணாத…”

“விக்ரம், கிணறுன்னா அதோட விளிம்புகள் இவ்வளவு ஷார்ப்பா இருக்காது. இதைப் பாருங்க, நான்கு பக்கமும் செதுக்கப்பட்டது போல ஒரு கட்டமைப்பு தெரியுது. இது மேன்மேட் தான். அதுவும் அரிக்கமேடுல இருக்கிற அந்த ஸ்டோரேஜ் ரூம்ஸ்ஸோட டைமென்ஷன்ல இது இருக்கு!”

ஆதிராவின் மூளை இப்போது தரவுகளை ஒப்பிடத் தொடங்கியது.

“ஓவர் கான்பிடன்ஸ். அடியில இருக்கிறது வெறும் வாய்டு மட்டும்தான். அதுக்குள்ள என்ன இருக்குன்னு தோண்டிப் பார்த்தாதான் தெரியும்…” என்றான் விக்ரம், ஆனால் அவனது கண்களிலும் ஒருவித வியப்பு இருப்பதை ஆதிரா கவனித்தாள்.

கதிர் மெதுவாகப் பக்கத்தில் வந்து, “ப்ரோ, அப்படின்னா இப்ப தோண்ட ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டான்.

“இல்ல கதிர்…” விக்ரம் இடைமறித்தான். “இது ஒரு சென்சிட்டிவ் ஏரியா. ஜிபிஆர்ல ஒரு அனாமலி கிடைச்சதுமே மண்வெட்டியை எடுக்கக்கூடாது. முதல்ல இந்த டேட்டாவை நான் ரிப்போர்ட்டா சப்மிட் பண்ணனும். அதுக்கப்புறம் மேனுவல் டிரில்லிங் பண்ணி உள்ளே கேமரா அனுப்பிப் பார்க்கணும். அதுக்கு அப்புறம்தான் அகழாய்வு”

“விக்ரம், இன்னும் எத்தனை நாள் சடங்கு பண்ணப்போறீங்க?” ஆதிரா எரிச்சலானாள்.

“ஆதிரா, இதுதான் ப்ரோசீஜர். நீங்க பி.எச்.டி பண்றீங்க… அவசரம் கூடாது. இப்போதைக்கு இதை Potential Archaeological Voidனு மட்டும் நோட் பண்ணுங்க. மேற்கொண்டு வேலையை நாளைக்குச் செய்வோம்…” கறாரான குரலில் கூறினான்.

வெயில் தணிந்திருந்தாலும், ஆதிராவுக்குள் நெருப்பு எரியத் தொடங்கியது. அந்த 1.5 மீட்டர் ஆழத்தில் என்ன இருக்கிறது? அது வெறும் வெற்றிடமா? பெரும் வரலாறா?

விக்ரம் தனது ஐபேடைத் தட்டி அந்த ஜிபிஆர் பிம்பங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். அவனது நிதானம் ஆதிராவை இன்னும் எரிச்சலூட்டியது.

“பாருங்க விக்ரம், அந்த ஹைப்பர்போலா சிக்னல்ஸ் ரொம்ப கச்சிதமா இருக்கு. இது ஒரு மேன்மேட் ஸ்ட்ரக்சர் தான். அதை உங்க ரிப்போர்ட்ல மென்ஷன் பண்றதுல என்ன இருக்கு?” என்றாள் ஆதிரா.

விக்ரம் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். பின் நிதானமாக, “ஆதிரா, நீங்க உதவி தொல்பொருள் ஆய்வாளர். நான் இந்தத் திட்டத்தோட அசிஸ்டெண்ட் சூப்பர்இன்டன்டிங் ஆர்க்கியாலாஜிஸ்ட். உங்களோட ஹையர் அத்தாரிட்டி. என் ரிப்போர்ட்ல என்ன எழுதணும்னு எனக்குத் தெரியும். இப்போதைக்கு இது வெறும் Subsurface anomaly and Potential Archaeological Void தான். நாம தோண்டிப் பார்த்து, அதுக்குள்ள ஒரு செங்கல் கிடைச்சா கூட, அது முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த செப்டிக் டேங்க்கா கூட இருக்கலாம். புரியுதா?”

“விக்ரம்! அந்தப் பானை ஓட்டை மறந்துட்டீங்களா? அந்த ராயல் சீல்… அது செப்டிக் டேங்க்லயா இருக்கும்?” ஆதிரா அவளது குரல் உயர்ந்தது.

மதி குறுக்கிட்டு, “ப்ரோ, ஆதிரா சொல்றதுல ஒரு லாஜிக் இருக்குல்ல?” என்று மென்மையாகக் கேட்டாள்.

விக்ரம் மதியை ஏறிட்டுப் பார்த்தான். “லாஜிக் இருக்கலாம் மதி. ஆனா, ஆர்க்கியாலஜில அனுமானம் ஆபத்தானது. ஒவ்வொருத்தரும் அனுமானம் பண்ணினதுக்கெல்லாம் டிப்பார்ட்மென்ட் வளைஞ்சு கொடுக்க முடியாது. ரூல் இஸ் எ ரூல்…” அவனது இறுக்கமான குரல் மதியின் வாயை மூட வைக்க, ஆதிரா,

“ஆப்சென்ஸ் ஆஃப் எவிடென்ஸ் இஸ் நாட் எவிடென்ஸ் ஆஃப் ஆப்சென்ஸ் விக்ரம்…” அவனை விட இறுக்கமாகக் கூறினாள்.

(Absence of evidence is not evidence of absence vikram)

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 5

பன்னிரெண்டாவது கிரிட் பகுதியைச் சுற்றி ஒரு சிறிய முகாமைப் போலவே டென்ட்கள் முளைத்திருந்தன. ஜிபிஆர் காட்டிய அந்த மர்மத்தை நோக்கித் தோண்டத் தொடங்கி அன்றுடன் மூன்று நாட்களாகின்றன. மூன்று நாட்களும் விக்ரம், ஆதிரா, கதிர், மதி என நால்வருமே அந்த இடத்திலேயே…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 8

  1. Jeyalakshmigomathiபொதுக் கருத்துJeyalakshmigomathi

    அட பொறுமை பொறுமை ஆதி குட்டி...

  2. Thaniபொதுக் கருத்துThani

    நிஜமா சூப்பரா இருக்கு ஆத்தர் ஜி❤️

  3. Swathiபொதுக் கருத்துSwathi

    Absence of evidence is not evidence of Absence

    Just wowww..... statement .... interesting to read....

  4. Girijapriyaபொதுக் கருத்துGirijapriya

    Vikram ....romba thaan strict officer ah irrukinga😏adhira porumai....porumai.... Nice intresting ud sis ❤️

உங்கள் கருத்தைப் பகிருங்கள்