arrow_back
விழியோரத்தில்… அத்தியாயம் – 3
விழியோரத்தில்… chevron_right பகுதி 3 / 9

அத்தியாயம் – 3

visibility 571
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் – 3

 

                         இருவரும் ஒரு நொடி சுவரோடு சாய்ந்து நின்று தங்களை நிதானப்படுத்திக் கொண்டனர்.

              “உன் புருஷன் இங்க என்ன டீ பன்றார்?” சுதா, தீபாவின் காதை கடிக்க, “தெரியலை சுதா. அர்ஜுன், நான் கிளம்பும் பொழுது வீட்டில் தான் இருந்தான். இப்ப இங்க எதுக்கு வந்தான்னு தெரியலியே!” தீபா யோசனையோடு கூறினாள்.

 

      “சுதா… நான் இங்க நிக்குறேன். நீ உள்ள போய், பிரகாஷுக்கு என்ன ஆச்சுன்னு பாரு?” தீபா கூற, “ஏன்?  நம்மளை கண்காணிக்குற பேய் இப்ப, என்னை மட்டும் கண்காணிக்கட்டுமுன்னு பாக்கறியா?” என்று சுதா மறுப்பாகத் தலை அசைத்தாள்.

 

                     “ஏய்! பிரகாஷ் செத்திருந்தா தான் பேயா வர முடியும்? அதைத் தான் உன்னைப் போய், பார்த்திட்டு வர சொல்றேன். அவன் இருக்கானா? இல்லை…” என்று தீபா பேசி கொண்டிருக்க, “என்னால் தனியா போக முடியாது.” என்று தீபாவை குறுக்கிட்டு மறுப்பு தெரிவித்தாள் சுதா.

 

    “இதுக்கு தான் நான் பானுக்கு கால் பண்ணேன். அவ, எடுக்கலை. வேற வழி இல்லாமல் உன்னை கூட்டிட்டு வந்தேன் பாரு.” என்று தீபா முணங்க, “ஏன், என்னை போக சொல்ற? நீ போ.” என்று சுதா, கோபமாக தன் தலையைச் சிலுப்பிக்கொண்டாள்.

 

       “நான் போனா, அர்ஜுன் கிட்ட மாட்டுவேன். நீ ஏன் இங்க வந்தன்னு கேட்டா, நான் என்ன சொல்லுவேன்?” என்று தீபா சிடுசிடுக்க, “நீ திரும்ப, அதே கேள்வியை, உன் புருஷன் கிட்ட கேளு.” என்று சுதா எளிதாக வழி கண்டுபிடித்த தைரியத்தில் தோள்களைக் குலுக்கினாள்.

 

                                      “லூசு…. அர்ஜுன் கிட்ட நியாயமான காரணம் இருக்கும்.” என்று தீபா கூற, “புருஷன் மேல நம்பிக்கை.” என்று சுதா கண்சிமிட்டினாள்.

 

 அப்பொழுது பானு அழைக்க, “இன்னைக்கு, எனக்கு  ஏன் கால் பண்ண?” பானுவின் குரலில் கேலி வழிந்து ஓடியது.

 

    “நீ ஹாஸ்பிடல்க்கு வா…” என்று தீபா கூற, “நேத்து தானே கல்யாணம் ஆச்சு? அதுக்குள்ள, இன்னைக்கு குழந்தையா?” என்று அவள் கேள்வி கேலியாக ஒலித்தது.

 

     “ஆமா! பையனா? பொண்ணான்னு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிரும்.” என்று கடுப்பாகக் கூறிவிட்டு தீபா அலைப்பேசி பேச்சை முடித்தாள்.

 

    “உன் புருஷன், இவ்வளவு நேரமும் ஹாஸ்ப்பிட்டல்ல என்ன பன்றாரு?” என்று சுதா, “நானும் உன் கூட தானே இருக்கேன். எனக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கேட்டுக்கொண்டே  தீபா அவளை முறைத்தாள்.

 

    பானு, வரவும் அவளிடம்  தீபா அனைத்து விஷயங்களையும் சுருக்கமாகக் கூறினாள்.

 

         தீபா உள்ளே செல்லவில்லை. பானுவும், சுதாவும் உள்ளே சென்று பிரகாஷை பற்றி விசாரித்து விட்டு வந்தனர்.

 

                                      மூவரும் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தனர்.

 

     “பிரகாஷ் மத்தியானம் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிருக்கான்.” என்று பானு கண்களைச் சுருக்கி கூற, “ஒன்னும்… பிரச்சனை இல்லை. உயிரோட தான் இருக்கான்.” என்று சுதா பெருமூச்சு விட்டாள்.

 

   

           “காலையில் அனுப்பினது பிரகாஷா இருந்தா, மத்தியானம் அனுப்ப வாய்ப்பில்லை. ஸோ… இந்த வேலையை பிரகாஷ் செஞ்சிருக்க மாட்டான்.”  சுதா உறுதியாக கூற, “அவன் எதாவது ப்ரோக்ராம் பண்ணி வச்சிருந்தா?” தீபா சந்தேகமாகக் கேட்டாள்.

 

      “அவனுக்கு அந்த அளவுக்கெல்லாம் அறிவு கிடையாது.” என்று பானு முகத்தைச் சுழித்தாள்.

 

   “கரெக்ட்… இல்லைனா உன்னை லவ் பண்ணி… நீ கிடைக்கலன்னு சூசைட் வரைக்கும் வருவானா?” என்று சுதா கூற, தீபா சுதாவை முறைத்தாள்.

 

பானு பக்கென்று சிரித்தாள்.

 

   அவர்கள் கவனத்தை திசை திருப்பும் விதமாக  அப்பொழுது, “க்ளிக்…” என்ற சத்தம் மீண்டும் ஒலித்தது.

 

    மூவரும் அவள் அலைபேசியை பார்க்க, இவர்கள் மூவரும் இருப்பது போன்ற புகைப்படம் அப்லோட் செய்யப்பட, மூவருக்கும் உடல் நடுங்கியது.

 

   “தீபா… சம்திங் சீரியஸ்.” பானு சற்று கவலை தோய்ந்த குரலில் கூறினான்.

 

   “எல்லா பாஸ் வார்டையும் மாத்து.” சுதா கூற, “வேஸ்ட் சுதா… அவனோ, அவளோ நம்மளை கண்காணிக்குறாங்க. தீபா, மொபைலை ஹேக் பண்ணிட்டாங்க.  தீபா மொபைலை மாத்தணும். அப்புறம் பாஸ்வர்ட் மாத்தணும். அப்பவும் திரும்ப எல்லாத்தயும் ஹேக் பண்ணிட்டா?” என்று பானு கேள்வியாக நிறுத்தினாள்.

 

    “எஸ்… நானும் இதே தான் நினச்சேன். என்ன நடக்குதுன்னு பார்த்திருவோம். யாருன்னு கண்டுபிடிக்கணும்? அப்ப தான் இந்த விஷயம் முடிவுக்கு வரும்.” என்று தீபா உறுதியாகக் கூறினாள்.

 

“யாரா இருக்கும்?” என்று சுதா யோசனையாகக் கேட்க, “யார் வீட்டுக்காவது போய் பேசணும்.” என்று கூறிக்கொண்டு தீபா எழுந்தாள்.

 

       அனைவரும் அருகே இருந்த பானு வீட்டிற்குச் சென்றனர்.

 

                    “மொபைல் சர்வீஸ்க்கு குடுத்தியா?” என்று பானு கேட்க, “கொடுத்தேன் பானு.” என்று தீபா பேச ஆரம்பிக்க, “அவனோடவும் சண்டை. நிறைய பில் போட்டுட்டான்னு. இவங்க வீட்டுல இருக்கிற காசுக்கு, இவ வேலைக்கே வர வேண்டாம். இதுல, அவன் பில்லுக்கு சண்டை போட்டா.” சுதா எடுத்துக் கொடுத்தாள்.

 

   “இத பார்… ஜாப் என் ஆசை. கனவு! காசு இருக்குனு ஒருத்தன் கிட்ட ஏமாற சொல்றியா? அதுக்கெல்லாம் இப்படி பண்ணா, அவனை இப்பவே சைபர் கிரைம்ல மாட்டி விட்டிருவேன்.” என்று தீபா உறுதியாகக் கூறினாள்.

 

   “ம்… போன் போடு உன் மாப்பிள்ளைக்கு. விஷயத்தைச் சொல்லுவோம்.” என்று சுதா கூற, மறுப்பாகத் தலை அசைத்தாள் தீபா.

 

   “எதுமே நான் சொல்றதை கேக்கிறது கிடையாது. நீயும், பானுவும் எல்லா ரிஸ்க் கேஸையும் எடுத்து அது பின்னாடி அலைய வேண்டியது. இதுல ஊரெல்லாம் சண்டை. இப்ப யார் பிரச்சனைன்னு கூட தெரியலை. இந்த பிரகாஷா, அந்த கடைக்காரானா, இல்லை வேற ஒருத்தனா?” என்று சுதா புலம்ப, அவள் புலம்பலில் உள்ள நியாயத்தில் பானுவும், தீபாவும் மௌனம் காத்தனர்.

 

        “அர்ஜுன் கிட்ட சொன்னா, வீட்டுக்கு தெரிஞ்சிரும். இந்த வேலை வேண்டாமுன்னு சொல்லிருவாங்க.” தீபாவின் குரலில் கலக்கம்.

 

  “இல்லை தீபா. நீ உன் மொபைலில் போட்டோ எடுக்காத. வெளியில் உன்னை எடுக்குற போட்டோவை தானே போடா முடியும். நாம பார்த்து டெலிட்  பண்ணிடலாம்.” சுதா அக்கறையோடு கூறினாள்.

 

    “இன்னைக்கு நம்ம மூணு பேரை ஏன் போட்டோ எடுக்கணும்? குறி, நீயா? இல்லை நம்ம மூணு பேருமா?” என்று பானு கேட்டாள்.

 

      “பிரகாஷ் சம்பந்தப்பட்ட யாரோ, நாம அங்க வந்தது விரும்பாம அப்படி பண்ணிருப்பாங்களோ?” என்று தீபா கேட்க, “அவன் குடும்பம் மட்டும் தான் அங்க இருந்தாங்க. பிரகாஷுக்கு நினைவு தப்பிருந்தது.” என்று பானு கூற, மற்ற இருவரும் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

 

         தீபா வீட்டிலிருந்து அழைப்பு வர, தீபாவும், சுதாவும் கிளம்பினார்.

 

      அவர்கள் காரை நெருங்கி, எதோ வண்டி வருவது போல் தோன்ற, “தீபா…” என்று சுதாவின் குரலில் நடுக்கம்.

 

   “ம்… நானும் கவனித்தேன் சுதா.” என்று கூறிக்கொண்டு சுதாவின் வீட்டை நோக்கி காரை செலுத்தினாள் தீபா.

 

     சுதாவின் வீட்டில் முன் அவள் காரை நிறுத்த, சுதா இறங்கவில்லை. “என்ன ஆச்சு சுதா?” என்று தீபா கேட்க,  “இல்லை நீ தனியா போகணுமே?” அவள் அக்கறையோடு கேட்டாள்.

 

    “அதெல்லாம் போய்டுவேன்… டிராபிக் நிறைஞ்ச பாதையில் தான் போறேன். என்னை என்ன பண்ண முடியும்.” என்று கூறிக்கொண்டு கிளம்பினாள் தீபா.

 

     அவள் சாலையில் வண்டியை செலுத்த, அவள் காருக்கு, குறுக்கும் நெடுக்குமாக பைக் வேண்டுமென்றே செல்வது போல் அவளுக்குத் தோன்றியது.

 

     மெதுவாக, நிதானமாக வண்டியைச் செலுத்தினாள் தீபா.

 

    வீட்டிற்கு வந்து, அவள் அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தாள். யாரோ அவளைப் பார்ப்பது போன்ற குறுகுறுப்பு அவளுள் மெல்ல எழ ஆரம்பித்தது.

 

       “அர்ஜுன் எங்க?” கேட்டுக்கொண்டே ஹாலில் அமர்ந்தாள்.

 

    “நீ வீட்டில் இருந்திருந்தா, அவனும் இருந்திருப்பான். நீ ஏதோ வேலைன்னு போய்ட்ட, அவனும் போய்ட்டான்.” பாட்டி கழுத்தை நொடித்துக்கொண்டார்.

 

     மேலும் அவளைக் குற்றம் சாட்டும் விதமாகப் பேச்சு வளர, அங்கு இருக்க பிடிக்காமல் அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

      அலைபேசியைக் கையில் எடுத்தாள். ஏதேதோ தேடினாள். அவள் தேடல் முழுவதும், இன்று போல் நடக்க வாய்ப்பிருக்கிறதா என்பது போலவே அமைந்தது.

 

   முதலில் மெல்லிய பயம், பின் அவளுள் மற்ற சந்தேகம் எழுந்தது. ‘நான், இப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பதைக் கூட அவன் கண்காணிப்பானோ? அவனா? அவளா?’ அவள் கைகள் நடுங்கியது.

 

    அலைபேசியை தூக்கி எறிந்தாள்.  ‘அப்படி பார்த்திருந்தால், என் பயம் அவனக்கு தெரிந்திருக்குமே!’ “கூடாது… கூடாது… பயம் கூடவே கூடாது.  அதுவும் அது வெளிய தெரிய கூடாது.” அவள் தனக்கு தானே கூறிக்கொண்டு ஜன்னல் வழியாகப் பார்த்தபடி நின்றாள்.

 

   பார்வை மட்டுமே ஜன்னல் வழியாக தெரிந்த தோட்டத்தில் நின்றது. அவள் நினைவுகள் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது.

 

  அறையில் இருள் சூழ்ந்திருந்தது. “டக்… டக்… டக்…” என்ற காலடி ஓசை மட்டும்.  அந்த இருளில், அந்த கழுத்தை நெருங்கிய அந்த தீண்டலில் மூச்சே நின்றது போன்ற உணர்வு அவளுள். அவள் இறுக, அவளை தன் பக்கம் திருப்பி, அவளை இறுக அணைத்தான் அவன்.

 

     முதலில் பயந்த அவள் மனம்,  தன்னவன் தான் என்றதில் நெகிழ தொடங்கியது. அர்ஜுனின் புருவங்கள் வளைந்தது. அவன் முகத்தில் மெல்லிய புன்னகை.

 

     “அர்ஜுன்…” அவன் தீண்டலில் அவள் கூற, “கோபமா? இப்படி லைட் கூட போடாம நிக்குற?” என்று அவன் கேட்டான்.

 

   ‘நான் லைட் கூட போடலியா?’ அவள் தனக்கு தானே கேட்டுக்கொண்டே, “இவ்வளவு நேரம் எங்க போன?” அவனுக்காகக் காத்திருந்தவள் போல் கேட்டு வைத்தாள் தீபா.

 

     “ஆஃபீஸ்ல் ஆக்சிடென்ட்…” மேலும் பேச ஆரம்பித்து, “அதை விடு. நான் பார்த்துக்கறேன்.” என்று கூறி, “குளிச்சிட்டு வரேன்.” என்று சென்றான் அர்ஜுன்.

 

       “ஆக்சிடென்ட்?” தனக்கு தானே கூறிக்கொண்டாள் தீபா.

 

       ‘நான், இன்னைக்கு கூப்பிட்டிருந்தாலும், அர்ஜுன் வந்திருக்க முடியாது.’  அவள் மனம் கணக்கிட்டுக் கொண்டிருக்க, அருகிலிருந்த அவள் அலைபேசியில் “க்ளிக்…” என்ற சத்தம் ஒலித்தது.

 

         அந்த ஏ.சி குளிரிலும் தீபாவின் நெற்றியில் இரு வியர்வை துளிகள்.

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 4

அத்தியாயம் - 4                   "க்ளிக்..." என்ற சத்தத்தில் தீபாவின் இதயம் நின்று துடிக்க, சுதா அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.    'ச்... ச்ச... இந்த சத்தத்தை கேட்டாலே பதறுது. முதலில் இந்த சத்தத்தை மாற்றனும்.' அவள் மனம் சலிப்பாக எண்ண, "இல்லை...…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்