arrow_back
விழியோரத்தில்… அத்தியாயம் – 4
விழியோரத்தில்… chevron_right பகுதி 4 / 9

அத்தியாயம் – 4

visibility 563
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் – 4

 

                  “க்ளிக்…” என்ற சத்தத்தில் தீபாவின் இதயம் நின்று துடிக்க, சுதா அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.

 

   ‘ச்… ச்ச… இந்த சத்தத்தை கேட்டாலே பதறுது. முதலில் இந்த சத்தத்தை மாற்றனும்.’ அவள் மனம் சலிப்பாக எண்ண, “இல்லை… இந்த பிரச்சனையை முடிக்க வேண்டும்.” அறிவு கூறியதை முணுமுணுத்துக் கொண்டாள்.

 

             “எந்த பிரச்சனையை?” என்று கேட்டுக்கொண்டே அவளை நெருங்கினான் அர்ஜுன்.

 

  “ம்… உங்க பிரச்சனையை தான்.” தீபா சமாளிப்பாகச் கூறிக்கொண்டே, சுதாவின் குறுஞ்செய்தியைப் படித்தாள்.

 

    ‘உடனே, நானும் பானுவும் உன்னிடம் பேச வேண்டும்.’ குறுஞ்செய்தியை யோசனையாகப் பார்த்தாள் தீபா.

 

    “நான் உனக்கு பிரச்சனையா?”அவளை பின்னோடு அணைத்துக் கொண்டே கேட்டான் அர்ஜுன்.

 

           குளித்து முடித்திருந்த அவன் மனம், அவன் ஸ்பரிசம் அவளை மயக்க, அவள் மனமோ குழப்பத்தில் தவிக்க, ‘பிரச்சனை தான்!’ என்று தவித்தது.

 

    “ம்… சொல்லு தீப்ஸ்…” அவன் கிறக்கமாக கேட்க, ‘எதை சொல்ல… பிரகாஷை பற்றியா?’ என்ற கேள்வி எழத் திரும்பி அவன் கை அணைப்பில் அவனை அண்ணாந்து பார்த்தாள்.

 

    அர்ஜுனின் கண்களில் அன்பு, அதைத் தாண்டி கணவனுக்கே உண்டான கிறக்கம். ‘நான் சொன்னால், அர்ஜுன் கோபப்படுவானோ?’ அவள் மனதில் சந்தேகம்.

 

   ‘பிரச்சனையை தீர்த்து விடுவான்.’ அவள் மனதில் நம்பிக்கை எழுந்தாலும், ‘ஆயிரம் கேள்வி வரும். என்னாலேயே, சமாளித்து விட முடியாதா?’ அவள் இறுமாப்பாக எண்ணிக்கொண்டாள்.

 

        “என்ன யோசனை? கட்டின புருஷனை முன்னால் வச்சிக்கிட்டு?” அவள் தலையில் அவன் “நங்…” என்று கொட்டினான்.

 

    “அத்தான்…” அவள் சினுங்க, “இதை தான் எதிர்பார்த்தேன்…” அவன் கண்கள் கேலி பேச, “நான் கோபமா போறேன்.” அவள் விலகி நடந்தாள்.

 

   தீபாவின் கைகளை பிடித்து நிறுத்தினான் அர்ஜுன். “வேலையில் எதுவும் பெரிய பிரச்சனையா?” என்று அவள் கண்களைப் பார்த்து ஆழமாகக் கேட்டான் அர்ஜுன்.

 

   “அதெல்லாம் இல்லை அத்தான். அப்படி இருந்தாலும், நான் சமாளிப்பேன்.” அவள் கண் சிமிட்டினாள்.

 

    “அப்படி ரிஸ்க் எடுத்து இந்த வேலை உனக்கு தேவையா?” அவன் கேட்க, ‘ஐயோ… இவன் கிட்ட விஷயத்தைச் சொன்னோம்… அவ்வளவு தான்…’ எண்ணிக் கொண்டே, “ஈ…” என்று சிரித்தாள் தீபா.

 

      “எனக்கு பிடிச்சிருக்கு அத்தான்.” அவள் உறுதியாகக் கூற, “உனக்கு பிடிச்சிருந்தா… எனக்கு சம்மதம்.” அவன் ஆத்மார்த்தமான குரலில் கூறினான்.

 

                    “ஏன் ரூமில் இருக்க? கீழ எல்லார் கூடையும் பேசிட்டு தானே இருப்ப?” அர்ஜுன் கேள்வி எழுப்ப, “வந்ததும் பெருசுங்க போட்டு குடுத்திருச்சா?” அவள் கடுப்பாகக் கேட்டாள்.

 

   “ஹா… ஹா…” என்ற அர்ஜுனின் சிரிப்பில், “எனக்கு அம்மாவும் சரி இல்லை. பாட்டியும் சரி இல்லை. மாமியார், மாமனார் யாரும் சரி இல்லை.” முணுமுணுத்துக்கொண்டே  அவள் அறையை விட்டு வெளியேற, சிரித்தபடியே அவளை பின் தொடர்ந்தான் அர்ஜுன்.

 

   அனைவரும் பேசிக்கொண்டிருக்க, தீபாவின் அலைபேசி ஒலித்தது.

       “எப்ப பாரு போன்…” அனைவரின் முணுமுணுப்பைத் தாண்டி அந்த பெரிய வீட்டில் ஓரமாக ஒதுங்கினாள்.

 

     “உனக்கு கொஞ்சாமவது அறிவு இருக்கா?” சுதா கோபமாகக் கேட்க, “இருக்கிற பிரச்சனை பத்தாதா?” பானு கோபமாக வெடித்தாள்.

 

      தீபா, சுதா, பானு மூவரும் கான்பிரென்ஸ் காலில் இருந்தனர்.

 

         “நான் என்ன பண்ணேன்?” தீபா பரிதாபமாகக் கேட்க, “ஹப்பி பேக் டு ஹோம்! பீலிங் லவ்லி… இப்படி ஒரு ஸ்டேட்டஸ் இருக்கிற நிலைமைக்கு தேவையா?” சுதா நக்கலான குரலில் கேட்டாள்.

 

      “நான் போடலை சுதா… நான் அர்ஜுன் வந்த அப்புறம் உன் மெசேஜ் மட்டும் தான் பார்த்தேன். அப்புறம் கவனிக்கலை.” என்று அவசரமாக அவள் அலைபேசியை பார்த்தாள் தீபா.

 

                “போட்டோ மட்டும் இல்லை. உனக்காக ஸ்டேட்டஸ் கூட போடுவானோ?” என்று பானு யோசனையாகக் கேட்க, “…” அங்கு மௌனம் மட்டுமே நிலவியது.

 

    “தீபா….” என்று அர்ஜுன் அழைக்க, “இன்னொரு விஷயம்…” என்று இடை மறித்தாள் பானு.

 

   “பிரகாஷ் இஸ் ஆல்ரைட். வீட்டுக்கு திரும்பிட்டான்.” என்று கூறினாள் பானு.

 

    “அவன் தான் எல்லாத்துக்கும் காரணம். நாளைக்கு அவனுக்கு வைக்குறேன் வெட்டு.” என்று கூறிக்கொண்டு கோபமாக தொலைப்பேசி பேச்சை முடித்தாள் தீபா.

 

   மறுநாள் காலையில்,

 

                  “தீபா… ஆபிசில் கொஞ்சம் பிரச்சனை. நாம நெக்ஸ்ட் வீக் ஹனிமூன் போவோம். இன்னைக்கு நான் ஆபிஸ் போகணும்.” அவன் அவளிடம் சமாதானம் பேச, “அர்ஜுன்… இப்படி எல்லாம் என்கிட்டே பேச வேண்டாம். முன்னாடி மாதிரியே… அதெல்லாம் முடியாதுன்னு சிடுசிடுன்னு சொன்னால் கூட கேட்டுப்பேன்.” தீபா அவனை நக்கல் அடித்தாள்.

 

    அவள் காதுகளை திருகிய படி, “ஏதோ… புது பொண்ணு… பாவம் பயந்து போயிருப்பான்னு கொஞ்சம் அக்கறை காட்டுனா… உடனே…” அவன் மிரட்ட, “நேரம் ஆச்சு. கிளப்புங்க அத்தான். நானும் வேலைக்கு போகணும்.” என்று அவள் கூற, “நான் ட்ரோப் பண்ணட்டுமா?” என்று அக்கறையாகக் கேட்டான் அர்ஜுன்.

 

   ‘பிரகாஷை பார்க்க போகணும். கிழிஞ்சிது கிருஷ்ணகிரி…’ எண்ணிக்கொண்டே, “எனக்கு என் வண்டி வேணும் அத்தான்.” என்று அவனுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டாள் தீபா.

 

  அர்ஜுன் அலுவலகத்துக்கு கிளம்ப, தீபா, பானுவோடு பிரகாஷ் வீட்டிற்குச் சென்றாள்.

 

அலுவலக தோழிகள் என்று கூறிக் கொண்டு அவர்கள் செல்ல, இருவரும் பிரகாஷ் இருக்கும் அறைக்குச் சென்றனர். பிரகாஷின் தாயார், அவர்களுடன் பேசிவிட்டு, தண்ணீர் எடுக்க உள்ளே சென்றார்.

 

     பிரகாஷின் கன்னத்தில், “பளார்…” என்று அறைந்தாள் தீபா. பானு இதை எதிர்பார்க்கவில்லை.

 

  “தீபா… பொறுமை… இவன் தானான்னு நமக்கு நிச்சயமா தெரியாது.” பானு தீபாவின் காதில் கிசுகிசுக்க, தீபா பிரகாஷைக் கோபமாக முறைத்தாள்.

 

   “என்னை மன்னிச்சிடு தீபா…. நான் இப்படி பண்ணிருக்க கூடாது. நான் பண்ணதெல்லாம் தப்பு தான்.” பிரகாஷ் வருத்தத்தோடு கூற, இருவரும் அவனை சரேலென்று நிமிர்ந்து பார்த்தனர்.

 

    “நான் உன்னை லவ் பண்ணேன். நீ பிடிக்கலைன்னு சொல்லிட்டா. அதை கொஞ்சம் பொறுமையா சொல்லிருக்கலாம். கொஞ்சம் தடாலடியா சொல்லிட்ட. அது தானே உன் குணம். அது தானே எனக்கு உன்னை பிடிச்சிருந்தது. நீ வேண்டாமுன்னு சொன்னதும், நான் சூசைட் பண்ணதெல்லாம் ரொம்ப ஓவர். எனக்கு எதாவது ஆகிருந்தா உனக்கும் கெட்ட பெயர் வந்திருக்கும்.” என்று அவன் சோகமாகக் கூற, ‘ப்பூ… இவ்வளவு தானா?’ என்று இருவரும் பெருமூச்சு விட்டனர்.

 

   “எனக்கெல்லாம் ஒரு கெட்ட பெயரும் வராது. இனி இப்படி பண்ணாத..” என்று அவனை மிரட்டி விட்டு, அங்கிருந்து கிளம்பினர்.

 

      “சுதா சொன்னது சரி தான்… இவனுக்கு அறிவும் இல்லை. கொஞ்சம் லூசும் போல…” என்று பானு கூற, “எனக்கு எங்கயோ இடிக்குது பானு.” அவள் யோசனையோடு கூறினாள்.

 

    “நாம கேள்வி கேட்குறதுக்கு முன்னாடியே ஏதோ கேட்டகப் போறோம்ன்னு தெரிஞ்ச மாதிரி இவன் ஏன் சரண்டர் ஆகணும். அதுவும், நான் அடித்தும் அவனுக்கு கோபம் வரலை.” என்று தன் புருவத்தை உயர்த்தினாள் தீபா தன் கவனத்தை சாலையில் பதித்தபடி.

 

   ‘இவன் நாம வருவோமுன்னு எதிர் பார்த்த மாதிரி இருந்தது.’ தீபா கூற, பானுவின் கண்கள் சுருங்கியது.

 

       “ஹேக்கிங்ல பிரகாஷுக்கு அவ்வளவு அறிவு இருக்கா?” என்று பானு யோசனையோடு கேட்க, “யாரவது அவனுக்கு உதவி பண்ணலாம்.” தோள்களைக் குலுக்கினாள் தீபா.

 

      தீபா காரை கிளப்ப, அப்பொழுது, “க்ளிக்…” என்ற சத்தம். “என்னனு பாரு பானு…” என்று தீபா கூற, பானு அவள் அலைபேசியைப் பார்த்தாள்.

 

    பானுவின் கைகளில் மெல்லிய நடுக்கம். அவள் தீபாவை தயக்கமாக பார்த்தாள். “என்ன ஆச்சு?” தீபா சற்று பதட்டமாகக் கேட்க, பானு மறுப்பாகத் தலை அசைத்தாள்.

 

  “ஹட் எ வொந்டெர்புல் நைட்… இப்படி ஸ்டேட்டஸ் அப்லோட் ஆகியிருக்கு உன் ஐடியில் இருந்து.” என்று பானு சங்கடமாகக் கூற, தீபா வண்டியை ஓரமாக நிறுத்தினாள்.

 

   அந்த ஸ்டேட்டஸை அழித்துவிட்டு மீண்டும் வண்டியைச் செலுத்தினாள்.

 

         “இதை பிரகாஷ் செய்யலை. நாம இந்த நேரத்தில் அங்க தான் இருந்தோம். அவன் நம்ம கூட பேசிட்டு இருந்தான். அந்த நேரம் தான் இந்த ஸ்டேட்டஸ் அப்லோட் ஆகியிருக்கு.” என்று பானு யோசனையோடு கூறினாள்.

  

   “டெக்னிகலி சரி தான். ஆனால், பிரகாஷின் செய்கை எங்கோ இடிக்குது.” என்று தீபா கூற, பானு ஆமோதிப்பாகத் தலை அசைத்தாள்.

 

    தீபா காரை செலுத்த, “எங்க போறோம்?” என்று பானு கேட்டாள்.

 

   “அர்ஜுன் கிட்ட விஷயத்தை சொல்லிரலாம்.” என்று தீபா கூற, “நானும் அது தான் சரின்னு நினைக்குறேன்.” பானு கூற இருவரும் அலுவலகம் சென்றனர்.

    “தீபா, நீ போயிட்டு வா. நான் பக்கத்தில் சில வேலைகளை முடிச்சிட்டு வரேன். உன் காரை எடுத்துக்குறேன்.” பானு கூற, தீபா சம்மதமாகத் தலை அசைத்தாள்.

       அலுவலகம் சென்ற தீபா, அர்ஜுன் மேல் சாய்ந்து கதறினாள்.  அதே நேரத்தில், பிரகாஷ் அவள் அறைந்த இடத்தை தடவிக் கொண்டு  மெலிதாக புன்னகைத்தான்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 5

அத்தியாயம் – 5                     "தீபா… தீபா..." அவள் தலையைக் கோதி கொடுத்தான் அர்ஜுன். அங்குப் பலர் நின்றிருந்தாலும், அவர்களை மறந்து அவன் மார்பில் சாய்ந்து விம்மிக் கொண்டிருந்தாள்.          "தீபா... நீ எவ்வளவு தைரியமான பொண்ணு? இப்ப எதுக்கு அழற?" அவன் கேட்க,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்