arrow_back
விழியோரத்தில்… அத்தியாயம் – 5
விழியோரத்தில்… chevron_right பகுதி 5 / 9

அத்தியாயம் – 5

visibility 562
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் – 5

                     “தீபா… தீபா…” அவள் தலையைக் கோதி கொடுத்தான் அர்ஜுன். அங்குப் பலர் நின்றிருந்தாலும், அவர்களை மறந்து அவன் மார்பில் சாய்ந்து விம்மிக் கொண்டிருந்தாள்.

 

         “தீபா… நீ எவ்வளவு தைரியமான பொண்ணு? இப்ப எதுக்கு அழற?” அவன் கேட்க, “அத்தான்… எவ்வளவு  பெரிய விஷயம் நடந்துருக்கு? நீங்க ஏன், என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை?” என்று தீ பிடித்து சேதமாகிருந்த அலுவலகத்தைப் பார்த்து சோகமாகக் கேட்டாள் தீபா.

 

    ‘தீபா அதற்கு மட்டும் தான் அழுகிறாளா?’ அர்ஜுனின் கண்கள் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தது.  தீபாவின் மனதிலும் அதே கேள்வி.

 

“இதுக்கெல்லாம் அழுவியா தீபா? உயிர் சேதம் எதுவும் இல்லை. பொருள் நஷ்டம் மட்டும் தான். சரியா இன்சூரன்ஸ் பண்ணிருக்கேன். பெரும்பாலான பணம் வந்திரும். பார்த்துக்கலாம் தீப்ஸ்.” அவன் சமாதானம் பேச, “ஏன் என் கிட்ட சொல்லலை?” அவள் அவனிடம் கோபித்துக் கொண்டாள்.

 

   ‘நீ சொல்றியா?’ அவள் மனசாட்சி அவளை கடிந்து கொண்டது. “இப்ப தான் கல்யாணம் முடிஞ்சிது. இதைச் சொல்லி ஏன் வருத்தப்படுத்துவானேன்னு தான். அவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் இல்லை தீபா.” அவன் கூற, “அர்ஜுன்! இது ஜஸ்ட் ஆக்சிடென்ட் தானா?” அவள் சந்தேகத்தோடு கேட்டாள்.

   “உன் ஜர்னலிஸ்ட் புத்தியை இங்கயும் காட்டுறியா?” அவன் கண்சிமிட்டி கேட்க, அவள் தன் கண்களைத் துடைத்துப் புன்னகைத்துக் கொண்டாள்.

    தீபாவின் மனம் ஏதோ கணக்கிட்டுக் கொண்டிருந்தது.

 

    “என்ன இந்த நேரத்தில் என்னைப் பார்க்க வந்திருக்க? எதுவும் பிரச்சனையா?”  கண்களைச் சுருக்கி கேட்டான் அர்ஜுன்.

       ‘தீபா அழுத்தக்காரி.  சட்டென்று அழுபவள் கிடையாது. தீப்பிடித்த இடம் சற்று, அகோரமாகத்தான் காட்சி அளித்தது. இருந்தாலும் தீபா அழுவாளா?’ என்ற எண்ணத்தோடு, அவளைப் பார்த்தான் அர்ஜுன்.

                   அர்ஜுனின் பார்வையில் தன்னை சுதாரித்துக்கொண்டாள் தீபா. தன் பிரச்சனையைச் சொல்லத் தான் வந்தாள். ஆனால், அவன் சூழ்நிலையைக் கருதி தன்னை சரி செய்து கொண்டாள்.

 

           ‘இப்படியா பார்த்ததும், சட்டுனு அழுது தொலைப்ப?’ அவள் தன்னையே கடிந்து கொண்டு, “அத்தானை  பார்க்கணுமுன்னு தோணுச்சு. வந்தேன்… வந்து பார்த்தா தான், அத்தானின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுது. என் கிட்ட இவ்வளவு விஷயத்தை மறச்சிருக்கீங்கன்னு தெரியுது.” அவள் கழுத்தை நொடித்துக் கொண்டே, தன்னை சமன் செய்து கொண்டாள்.

        “சொல்ல கூடாதுன்னு கிடையாது. எதுக்குன்னு தான்…” அவள் முகத்தை ஆழமாக பார்த்துக் கொண்டே அர்ஜுன் சமாதானம் பேசினான்.

   “நீ என்ன இந்த நேரத்தில்?” என்று அவன் குறியாக நிற்க, “ஏன் நம்ம கம்பெனிக்கு நான் வரக்கூடாதா?” என்று கேட்டாள் தீபா.

 

    “உனக்கில்லாத உரிமையா?” என்றான் அவன் சிரித்துக் கொண்டே. “கிளம்புறேன் அத்தான்…” கூறிக்கொண்டு  அவள் சிட்டாக பறக்க எத்தனிக்க, “என்ன கிளம்பிட்ட?” என்று கேட்டான் அர்ஜுன்.

 

   “பார்க்கணும்னு தோணுச்சு வந்தேன். நீங்க ஏற்கனவே வேலையா இருக்கீங்க. நான் உங்களை தொந்தரவு பண்ணலை.” என்று கூறிக்கொண்டு அவள் கிளம்ப எத்தனித்தாள்.

 

     “தீபா… வீட்டில் யாருக்கும் விஷயம் தெரியாது. யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்.” என்று அர்ஜுன் எச்சரிக்க, அவனை ஆழமாகப் பார்த்தாள் தீபா.

 

  “அப்பா ஹார்ட் பேஷண்ட். வருத்தப்பட்டுற கூடாது. இப்ப தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு, வீட்ல நேரம் சரி இல்லைன்னு நினைச்சிருவாங்க.” அவன் கூற, “நீங்க அப்படி நினைக்குறீங்களா அத்தான்.” அவனைக் கண்களால் அளந்த படி கேட்டாள் தீபா.

 

   “லூசு… கிளம்பு! நீ இப்படி எதாவது யோசிப்பன்னு தான் நான் உன்கிட்ட கூட சொல்லலை. இந்த பிரச்னையை ரெண்டு நாளில் நான் சரி பண்ணிடுவேன்.” என்று அவன் கூற, தலை அசைத்துக் கிளம்பினாள் தீபா.

 

       பானு திரும்பி வர, இருவரும் மீண்டும் கிளம்பினர்.

 

    “சொல்லிட்டியா தீபா?” பானு கேட்க, “இல்லை… பானு. ஏற்கனவே அங்க கம்பெனியில் வேற பிரச்சனை இருக்கு.” என்று கூறிக்கொண்டு, அவள் காரை திருப்பினாள்.

 

   “ரொம்ப நாளைக்கு அப்புறம், உன் வண்டியை எடுக்கறேன். ரொம்ப நல்லாருக்கு.” என்று பானு கூற, தீபா சிரித்துக் கொண்டாள்.

 

     “இப்ப என்ன பண்ண போறோம்?” என்று பானு வினவ, “நான் போட்டோ எடுத்தா அப்லோட் ஆகுது. போட்டோ எடுக்கலை. என் ஐடியை பாஸ்வார்டு மாத்திட்டேன். ஆனாலும், ஹேக் பண்ணுவான்.” என்று கூறி நிறுத்தினாள் தீபா.

 

     “நாமளே ஒரு போஸ்ட் போடுவோம். என் ஐடி ஹேக் ஆகியிருக்கு. போடுற ஸ்டேட்டஸ் நான் இல்லை. எந்த எருமை போடுதுன்னு தெரியலைன்னு போடுவோம்.” என்று பானு கோபத்தோடு கூறினாள்.

 

 “போடலாம். ஐடியை கூட அழிச்சிடலாம். ஆனால், அதெல்லாம் நிரந்திர தீர்வு கிடையாது. யாருன்னு கண்டுபிடிக்கணும். ஆனால், நமக்குப் பிரச்சனை குடுக்கணுமுன்னு நினைக்கிறவன் அடுத்த கட்டத்துக்கு போவானோன்னு தோணுது.” யோசனையாகக் கூறிக்கொண்டு, அலுவலகத்திற்குள் வண்டியைச் செலுத்தினாள் தீபா.

 

  ‘நேரம் ஆகிருச்சு…’ எண்ணிக்கொண்டே, இருவரும் வேகமாக ஓட, அப்பொழுது “க்ளிக்…” என்ற சத்தம்!

                       இருவரும் பிரேக் அடித்தார் போல் சரெலெனென்று நின்றனர்.

    அர்ஜுன் தோளில் சாய்ந்து இப்பொழுது அவள் கதறிய காட்சி.

அப்பொழுது  தீபாவின் அலைபேசி ஒலிக்க, தீபா அதை உயிர்பித்தாள். “பிரைவேட் நம்பர் கால்லிங்…” தீபா முணுமுணுப்பாக பானுவிடம் கூற, எடுத்துப் பேசும்படி பானு செய்கை காட்டினாள்.

 

   “ஹா…ஹா…” என்ற சிரிப்பு சத்தம். “என்ன… பெரிய புத்திசாலின்னு நினைப்பா?” ஒரு பெண்ணின் குரல் நக்கலாக ஒலித்தது. தீபா எதுவும் பேசவில்லை.

 

      “என்ன அப்படியே லேடி ஜேம்ஸ்பாண்டுன்னு நினைப்பா?” அந்த குரலில் கேள்வியே தேங்கி நின்றது.

 

   “உன் முறை பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா, சந்தோஷமா வாழலாமுன்னு நினைப்பா? உன்னால முடியாது! உன் வாழ்க்கை, உன் வேலை எல்லாம் ஒண்ணுமில்லாமல் போகும். அர்ஜுன் கிட்ட விஷயத்தை சொன்னாலும் பிரச்சனை… சொல்லனாலும் உனக்கு பிரச்சனை.” என்று அந்த குரல் கேலியாகச் சிரித்தது.

          “உன் ஜர்னலிஸ்ட் புத்தியை இதுல காட்ட வேண்டாம். என் நம்பரை டிராக் பண்ணற மாதிரி சின்ன புள்ள தனமான வேலையை எல்லாம் பண்ணாத. டெக்னாலஜி எங்கயோ வளர்ந்திருச்சு. உன்னால் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.” எதிரில் பெண் குரல் சிரிப்போடு ஒலித்தது.

   

      தீபாவின் மௌனம் தொடர, “பயந்துட்டியா?” கேலி குரல் மீண்டும் ஒலிக்க, “இல்லை யோசிக்கிறேன்.” என்று தீபா கூற, “யாருன்னா? உன்னால் என்னை நெருங்க கூட முடியாது.” எதிர்க் குரல் மிரட்டலாக ஒலித்தது.

 

    “நீ யாருன்னு யோசிக்கலை. நீ இதை விட கொஞ்சம் பெட்டரா பண்ணா நல்லருக்குமுன்னு யோசிச்சேன். சோசியல் மீடியால போஸ்ட் போட்டுட்டா நீ பெரிய ஆளா? அசிங்கமா போஸ்ட் போட்டா, போடுறது நானில்லைன்னு அதே இடத்தில சொல்லுவேன். நான் இருக்கிறது மீடியால்ல, உன்னை எப்படி அசிங்க படுத்தணும்ன்னு எனக்கு தெரியும். அதைவிட, என் அத்தானை எப்படி சமாளிக்கணுமுன்னு எனக்கு தெரியும்.” என்று தீபா பேசிக்கொண்டே இருக்க, எதிர்முனையில் “டொங்…” என்ற சத்தத்துடன் அலைபேசி பேச்சு துண்டிக்கப் பட்டது.

 

         “ஏன் இப்படி பேசின தீபா?” என்று பானு கேட்க, “எத்தனை நாள் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுறது? வரட்டும் ஒரு கை பார்த்திருவோம்.” என்று தீபா தைரியமாக கூறினாள்.

 

   “யாரா இருக்குமுன்னு ஏதாவது க்ளூ கிடைச்சிதா?” பானு கேட்க, “லேடி வாய்ஸ்.” என்று தீபா கூற, “பொண்ணா?” பானு அதிர்ச்சியாகக் கேட்டாள்.

 

  “இருக்கலாம்… இல்லாமலும் போகலாம்.” என்று தீபா கூற, “சிஸ்டம் ரிகார்ட்டட் கன்வெர்ட்டட்  வாய்ஸா கூட இருக்கலாமோ?” என்று பானு யோசனையோடு கேட்கத் தீபா ஆமோதிப்பாகத் தலை அசைத்தாள்.

 

    “இப்ப வரைக்கும் நடந்ததை அச்சு பிசகாம சொல்றா.” அலைபேசியில் தைரியமாகப் பேசிவிட்டாலும், சற்று பதட்டமாகவே இதைக் கூறினாள் தீபா.

 

    “நம்ம பக்கத்துல, நம்மளை சுத்தி தான் இருக்காளோ? இல்லை இருக்கானோ?”  என்று பானு யோசனையாகக் கேட்க, “இருக்கலாம்… இல்லாமலும் போகலாம்…” தீபா கூற, “ஏன் இப்படி குழப்புற?” என்று பரிதாபமாகக் கேட்டாள் பானு.

 

     “இருக்கலாம்… நம்மை தொடரலாம். இல்லைனா, யாரையோ வச்சி நம்மளை கண்காணிக்கலாம். இல்லைனா, என் அலைப்பேசி மூலமா கூட என்னை ட்ராக் பண்ணலாம்.” என்று தீபா கிசுகிசுப்பாக பானுவின் காதில் கூறினாள்.

 

   ‘இப்ப என்ன பண்றது?’ பானு பேசவும் பயந்து கண்களால் கேட்க, தீபா தலை அசைத்துக் கொண்டாள்.

 

  “யோசிப்போம்…” கூறிக்கொண்டு, தீபா அவள் இடத்திற்குச் சென்று அமர்ந்தாள்.

 

    தீபாவின் மனதில் பல குழப்பம், ‘எதிரிக்கு நான் குறியா? இல்லை என் வேலை குறியா? அத்தான் குறியா? இல்லை இந்த கல்யாணம் குறியா?’ குழம்பியபடி அவள் இடத்தில் அமர்ந்தாள்.

 

   “பானு இவ்வளவு நேரம் எங்க போனீங்க? நம்ம மேனேஜர் உன்னை பல தடவை தேடிட்டார்.” அக்கறையோடு கூறினாள் சுதா.

 

   “புது பொண்ணு… இன்னைக்கே ஏன் ஆபீஸ் வந்த?” என்று சுதா கேட்க, ‘அர்ஜூன்க்கு ஆபிசில் பிரச்சனை கிளம்பிட்டான். வீட்டில் இருந்து என்ன பண்ண?’ என்று கிளம்பி வந்துவிட்டாள்.  ஆனால், அதைக் கூற தீபாவுக்கு விருப்பமில்லை. மௌனமாகவே அமர்ந்தாள்.

 

                 “ஹனிமூன் போக வேண்டியது தானே?” என்று சுதா விடாமல் கேலியைத் தொடர, “ஏன் அந்த படத்தையும் யாரவது அப்லோட் பண்ணவா?” என்று தீபா யோசனையோடு கேட்க, “ச்…ச்ச… அப்படி எல்லாம் பண்ணமாட்டாங்க. வில்லனோ, வில்லியோ அவ்வளவு கெட்டவங்களா இருக்க வாய்ப்பில்லை.” சுதா உறுதியாக கூறினாள்.

 

    “உனக்கும், அவங்களுக்கும் அப்படி என்ன சம்பந்தம்? அவ்வளவு உறுதியா சொல்ற?” சுள்ளென்று வந்து விழுந்த தீபாவின் கேள்வியில், சுதா அரண்டு விழித்தாள். அத்தோடு மற்றொரு விழிகளும், அதிர்ச்சியாகப் பார்த்தது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 6

அத்தியாயம் - 6          சுதாவின் கோபம் சர்ரென்று ஏறியது. "தீபா! நீ உன் மனசில் என்ன நினைச்சுகிட்டு இருக்க?" என்று சுதா கோபமாக கேட்க, "நானும் அதை தான் கேட்குறேன்?" என்று தீபா கடுப்பாக்கவே கேட்டாள்.     "இப்ப இந்த சண்டை முக்கியமா?"…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்