arrow_back
விழியோரத்தில்… அத்தியாயம் – 6
விழியோரத்தில்… chevron_right பகுதி 6 / 9

அத்தியாயம் – 6

visibility 556
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் – 6

 

         சுதாவின் கோபம் சர்ரென்று ஏறியது. “தீபா! நீ உன் மனசில் என்ன நினைச்சுகிட்டு இருக்க?” என்று சுதா கோபமாக கேட்க, “நானும் அதை தான் கேட்குறேன்?” என்று தீபா கடுப்பாக்கவே கேட்டாள்.

 

    “இப்ப இந்த சண்டை முக்கியமா?” என்று பானு இடைப்புக, “என்ன பார்த்து தீபா எப்படி அப்படிக் கேட்கலாம்?” என்று சுதா முறுக்கிக் கொண்டு நின்றாள்.

 

   “ஹட் எ வொந்டெர்புல் நைட்ன்னு ஸ்டேட்டஸ் போடுறான்? எப்படி அவனை அவ்வளவு கெட்டவன் இல்லைன்னு நீ சொல்ற?” என்று தீபா கம்மலனா குரலில் கேட்க, “அந்த ஸ்டேட்டஸ் விஷயம் எனக்குத் தெரியாது.” என்று பதறினாள் சுதா.

 

   “எதோ சாதாரணமா போட்டோ… ஸ்டேட்டஸ் தானே போட்டிருந்தாங்க.” என்று சுதா இறங்கிய குரலில் கூறிக்கொண்டு, “சாரி…” என்று வருத்தத்தோடு முடித்தாள்.

 

   “ம்… ச்… விடு சுதா. நானும் எதோ ஒரு டென்ஷன். அத்தான் ஆபிசலையும் ஆக்சிடென்ட். அந்த நினைப்பு… இருக்கிற பிரச்சனை எல்லாம் சேர்ந்து ஒரே நேரத்தில் உன் கிட்ட கத்திட்டேன்.” என்று தீபாவும் வருத்தம் தெரிவித்தாள்.

 “ப்பூ… இவ்வளவு தானா? நானும் எதோ ஒரு பெரிய சண்டை வரும்ன்னு பார்த்தேன்.” என்று பானு உதட்டைச் சுழிக்க, அங்கு நிலவிய கனமான சூழ்நிலை மாறி, மெல்லிய சிரிப்பலை எழுந்தது.

      ஆனால், அவர்கள் மனதில் யாரென்றே கேள்வி குடைந்து கொண்டே இருந்தது.

 

   மூவரும் வேலையில்  மூழ்க, அங்கிருந்தது விலகிச் சென்றது காலடிகள்.

 

   “பிரகாஷ்… அவங்களுக்குள்ள எதோ ஒரு பிரச்சனை.” பிரகாஷின் நண்பன் அலைபேசியில் பிரகாஷிடம் கூற, “ஹா… ஹா… எதிர்பார்த்தேன்.” என்று பிரகாஷ் நக்கலாக சிரித்தான்.

 

          “நீ என்னைக்கு வர?” என்று அவன் நண்பன் விசாரிக்க, “உடம்பு சரி இல்லைன்னு ஊர் நம்புது . ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு வரேன்.” என்று பிரகாஷ் கூற, “ம்…” கொட்டினான் அவன் நண்பன்.

 

   “அவளுக்கு என் மேல ஒரு இது இருக்கு டா. இல்லைனா என்னை தேடி வந்து பார்த்துட்டு, என்னை அறைஞ்சி எனக்கு அறிவுரை எல்லாம் பண்ணுவாளா?” என்று தன் கன்னங்களைத் தடவியபடி பிரகாஷ் கேட்டான்.

 

 “உனக்கு இருக்கா?” என்று நண்பன் கேட்டுக்கொண்டே, அவர்கள் பேசியதை மேலும் கூற, பிரகாஷ் திடுக்கிட்டு நின்றான்.

 

        அவன் புருவங்கள் யோசனையோடு முடிச்சிட்டு கொண்டது.

 

  “ஹலோ…” என்று பிரகாஷின் நண்பனின் குரல் ஒலிக்க, “ம்…” என்று சிந்தனையோடு சத்தம் மட்டுமே வெளி வந்தது.

                     ‘எங்கோ… எதுவோ சரி இல்லை…’ என்று பிரகாஷ் கணக்கிட்டுக் கொண்டிருக்க, அவன் நண்பன் சிறிது நேரம் பேசிவிட்டு அலைபேசி பேச்சை முடித்துவிட்டு அலுவலக பணியைத் தொடர சென்றான்.

      அன்று வேலையை முடித்துக் கொண்டு, அர்ஜுன் வீட்டுக்குச் செல்ல, தீபா அவனுக்காகக் காத்திருந்தாள்.

 

         அர்ஜுன்  களைப்பாக வந்திருந்தான்.ஆனால், சற்று  சீக்கிரமாகவே வந்திருந்தான்.

 

   “குளிச்சிட்டு வரேன் தீப்ஸ்…” அவள் கன்னங்களை தட்டி சென்றான் அர்ஜுன். அத்தனை பிரச்சனைகளுக்கு இடையிலும், அவன் தீண்டலில், செங்கொழுந்தாய் மாறி நின்றாள் தீபா.

 

     தீபா சேலைக்கு மாறி இருக்க, “எங்க கிளம்பி இருக்க? கடைக்கு எங்கயும் போகணுமா?” அர்ஜுன் புருவம் உயர்த்த, “அத்தான்!” அவன் தோள்களில் மாலையாக கைகளைக் கோர்த்துக் கொண்டாள்.

 

   அவன் அவளை இடையோடு சேர்த்துக்கொண்டு, “என்ன வேணும் தீப்ஸ்க்கு?” அவள் நெற்றியை மோதி கேட்டான்.

 

           “டையர்டான மாதிரி இருக்கீங்க…” அவள் இழுக்க, “உனக்கு என்ன வேணும் சொல்லு.” அவன் கண்கள் அன்பை மட்டுமே வெளிப்படுத்தியது.

 

   ‘நான் அத்தான் கிட்ட எல்லாத்தயும் சொல்லிருக்கணுமோ?’ அவள் மனசாட்சி அவளை குடைந்தது. ‘சொல்லலாம்… பிரகாஷ் விஷயத்தை கூட அத்தான் புரிஞ்சிப்பாங்க. ஆனால், இந்த வேலை? அதுவும் இந்த பிரச்சனை இந்த வேலையால் இருந்தா, நிச்சயம் வேண்டாமுன்னு சொல்லுவாங்க.’ எண்ணிக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

 

    “இப்படி பார்த்தா, நாம எங்கையும் போக முடியாது.” அவன் கைகள் எல்லை மீற, “நாம கோவிலுக்கு போய்ட்டு, ஹோட்டல் போயிட்டு வருவோமா? உங்க அம்மா, எங்க அம்மா சாப்பாடு வேண்டாம்.” அவள் சிறு பிள்ளை போல் முகத்தை சுருக்கி கேட்டாள்.  “இதுக்கு தான் இத்தனை பீடிகையா?”அவன் பெருங்குரலில் சிரித்தான்.

        “அர்ஜுன்!” அவள் முறைக்க, இருவரும் கிளம்பினார்.

 

      தீபா அவள் அலைபேசியை அறையில் வைத்துவிட்டே கிளம்ப, “தீபா… போனை எடுக்கலை?” அவன் கேட்க, “வேணாம் அத்தான். நான் எடுத்துட்டு வந்தா, அதையே பார்ப்பேன். உங்களக்கு பிடிக்காது.” அவள் கூறினாள்.

 

 “எனக்கு நீ பார்க்குற வேலை கூட பிடிக்கலை தீபா. இன்னைக்கே வேலைக்கு போகணுமா? கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். காலையில் இருந்து சுத்திட்டு அழுப்பா இருக்கிற? நம்ம குடும்பம் இருக்கிற நிலைமைக்கு நீ வேலைக்கு போகணுமா?” அவன் அக்கறையோடு கேட்டான்.

 

      எவ்வளவு தைரியம் இருந்தாலும், அர்ஜுனின் அன்புக்கு முன் அவள்  குழந்தை தான். ஆனால், வேலை அவள் லட்சியம்.

 

    அவனிடம் எகிறவும் முடியாமல், விட்டுக்கொடுக்கவும் முடியாமல், அவள் அவனைப் பரிதாபமாகப் பார்க்க, அவள் பரிதவிப்பைப் பார்க்கப் பிடிக்காமல், “கிளம்பு… அப்புறம் பேசுவோம்.” என்று கூறி அவன் கிளம்ப, புள்ளி மானாய் அவனை பின் தொடர்ந்தாள் அவள்.

 

    காரில் அவனோடு அவள், ஏறிக்கொள்ள, அர்ஜுன் அவளோடு வளவளத்தபடி வண்டியை செலுத்தினான்.

 

     அர்ஜுனின் பேச்சு சுவாரசியமாக இருந்தாலும், அவன் அருகே பாதுகாப்பாக உணர்ந்தாலும் அவளை இரு கண்கள் தொடர்வது போன்ற உணர்வு அவளை அழுத்தியது. பின்னே திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.

 

                      ‘யாரும் இல்லை… இல்லவே இல்லை.’ அவள் அறிவு வலியுறுத்த, அவள் மனம் மட்டும், ‘தடக்… தடக்…’ என்ற சத்தம் எழுப்பியது.

 

   இருவரும் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து விட்டு, அங்கே அமர்ந்தனர்.

          

    தீபாவின் கண்கள் சுழன்று கொண்டிருக்க, “ஒய்… ஆசை அத்தான் இங்க இருக்கேன். என்ன பார்வை வேற எங்கயோ போகுது?” என்று அர்ஜுன் கேலி பேச, “அத்தான்! உங்க ஆபிசில் ஆக்சிடென்ட் பத்தி விசாரிச்சீங்களா? அது இயல்பா நடந்து தானா?” என்று சந்தேகம் கேட்டாள் தீபா .

 

   “மேடம்… உங்க துப்பறியும் சாம்பு வேலை எல்லாம் என்கிட்டயேவா. நானே ஆபீஸ் பிரச்சனை எல்லாம் மறந்து வந்திருக்கேன்.” அவன் கூற, “ஓகே! அர்ஜுன். நான் பேசலை.” அவளும் பேச்சின் திசையை மாற்றினாள்.

 

     அர்ஜுன் அவன் நவரச பேச்சில் அவளைத் திசை மாற்றினான்.

   

                        இருவரும், ஹோட்டலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினர். ‘யாரோ அவர்களை தொடர்கிறார்களோ?’ என்ற சந்தேகம் அவள் மனதில் எழுந்தாலும், அந்த எண்ணம் அவள் மனதிற்கு அச்சத்தை  கொடுத்தாலும், அவள் அறிவு ‘யாரும் அவர்களை தொடரவில்லை.’ என்று அறிவுறுத்தியது.

 

           வீட்டிற்குள் செல்லவும் தீபாவின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

 

      அவள் அலைபேசியை எடுத்தாள். ‘யாரும் போட்டோவை என் ஐடியிலிருந்து சோசியல் மீடியாவில் போடவில்லை.’அவள் மனம் நிம்மதி கொண்டது.

 

     அவள் அறிவு கணக்கிட ஆரம்பித்தது.  ‘யாரும் என்னை தொடரவில்லை. ஆக, என் மொபைலில் தான் ஏதோவொரு ட்ரக்கர் இருக்கு. அதை வச்சி தான் என்னை கண்காணிக்கிறான்.’ தன் உதட்டைச் சுழித்து யோசித்தாள் தீபா.

 

   “ஹே… என்ன இன்னும் டிரஸ் மாற்றலை.” அர்ஜுன் கேள்வியாக நிறுத்த, தீபா அவனை வெட்கத்தோடு பார்த்தாள்.

 

    அவள் செவிகளில், ‘வி ஹட் எ வொண்டர்புல் நைட்…’ யாரோ அப்லோட் செய்த ஸ்டேட்டஸ் வாசகம் காய்ச்சிய அமிலமாய் இறங்கியது.

 

     தீபாவின் வெட்கம் எங்கோ ஒளிந்து கொண்டு, அச்சம் மேலோங்கி அவள் உடல் மெல்லிய நடுக்கத்தை வெளியிட ஆரம்பித்தது.

 

                ‘இல்லை… அர்ஜூன்க்கு விஷயம் தெரிய கூடாது. தெரியவே கூடாது. நான் இதை யாருக்கும் தெரியாமல் முடித்து வைக்கணும்.’ அவள் மனம் உறுதிமொழி எடுக்க, “என்ன தீபா யோசனை? வி ஷுட் ஹவ் எ வொண்டர்புல் நைட்.” என்று அர்ஜுன் கணவனாகக் கண்சிமிட்டிச் சிரிக்க, தன் கணவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள் தீபா.

   அவள் உலகம் மெல்ல மெல்லத் தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது.

 

   ‘ஜஸ்ட் எ கோய்ன்ஸிடென்ஸ்.’ தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு இயல்புக்குத் திரும்பினாள்.

 

        அர்ஜுன் அவளை ஆசையோடு நெருங்க, அவள் எண்ணமோ எங்கோ விலகிக் கொண்டிருக்க தன்னவளின் மனநிலையைக் கண்டுகொண்ட அவன், “ஆர் யு ஓகே தீப்ஸ்?” என்று கன அக்கறையாகக் கேட்டான்.

 

             “ம்… தூங்குவோமா?” அவள் தன் அலைபேசியில் கவனத்தைச் செலுத்தியபடியே கேட்டாள்.

 

  ‘ட்ரக்கர் மாதிரியே கேமரா வைக்க முடியுமா?’ அவள் சந்தேகம் வலுப்பட்டுக் கொண்டிருந்தது.

 

             “தூங்கு தீபா. ரொம்ப டயர்டா இருக்க.” கூறிக்கொண்டு தன்னவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு அவன் உறங்கினான்.

 

    தூக்கம் அவளை தழுவுவேனா என்றிருக்க, அந்த அலைபேசி அவளை உற்று நோக்குவது போல் இருந்தது.

       அவள் அலைபேசியை கையில் எடுக்க, அதிலிருந்த படக்கருவி அவளை உற்றுப் பார்த்தது.

 

கைகள் நடுங்க தன் அலைபேசியைத் தூர வைத்தாள்.

 

    மணி நள்ளிரவை எட்ட, தீபாவின் கழுத்தை யாரோ அழுத்துவதை உணர்ந்தாள். அவளால் போர்வையிலிருந்து வெளியே வர முடியவில்லை.

 

   “அர்ஜுன்… அர்ஜுன்… அர்ஜுன்…” என்று அலறி, உதவ ஆளின்றி, அலறலுக்கு எந்த பயனுமின்றி மூர்ச்சை ஆனாள் தீபா.

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 7

அத்தியாயம் - 7                     மறுநாள் காலையில், திருதிருவென்று முழித்த படி எழுந்து அமர்ந்தாள் தீபா. அவள் முன் காபி கோப்பையை நீட்டினான் அர்ஜுன். "ஏன் பேய் அடிச்ச மாதிரி இருக்க?" என்று அர்ஜுன் கேட்க, தீபாவுக்கு அவள் கண்ட கனவு நினைவு வந்தது.       …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்