arrow_back
விழியோரத்தில்… அத்தியாயம் – 7
விழியோரத்தில்… chevron_right பகுதி 7 / 9

அத்தியாயம் – 7

visibility 552
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் – 7           

 

         மறுநாள் காலையில், திருதிருவென்று முழித்த படி எழுந்து அமர்ந்தாள் தீபா. அவள் முன் காபி கோப்பையை நீட்டினான் அர்ஜுன்.

 

“ஏன் பேய் அடிச்ச மாதிரி இருக்க?” என்று அர்ஜுன் கேட்க, தீபாவுக்கு அவள் கண்ட கனவு நினைவு வந்தது. 

       ‘கனவு கூறுவது என்ன? நான் பயம் கொண்டு அர்ஜுனை சந்தேகிக்கிறேனா? இல்லை நான் செய்த தவறை அர்ஜுன் மன்னிக்க மாட்டானோ?’ என்ற கேள்வி தீபாவிற்குள் எழ,  “நான் எதாவது தப்பு பண்ணினா என்னை மன்னிப்பியா அர்ஜுன்?” அவள் கண்கள் கலக்கத்தோடு கேட்டது.

 

       ‘இவ்வளவு யோசிக்கறதுக்கு விஷயத்தை சொல்லலாம்?’ அவள் அறிவு அவளுக்கு எடுத்துரைக்க, மனமோ, ‘முட்டாள் மாதிரி எதையாவது பண்ணி தொலைக்காத… இது சின்ன விஷயம். நீயே சமாளிக்கலாம்.’ என்று எடுத்துரைக்க, “அப்படி என்ன தப்பு பண்ணின தீபா?” அவன் கண்களைச் சுருக்கி கேட்டான்.

 

         தீபா பதில் கூறாமல் அமர்ந்திருக்க, “இன்னைக்கு காலையில் எனக்குக் காபி கொடுக்காததெல்லாம், அவ்வளவு பெரிய தப்பில்லை.” என்று அவன் அவளைச் சீண்டும் விதமாக சமாதானம் செய்தான்.

 மறுப்பாகத் தலை அசைத்துக்கொண்டு தீபா குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

    ‘அர்ஜுனுக்கு என் மேல் ஏதோவொரு சந்தேகம் தட்டிருக்குமோ?’ எண்ணிக்கொண்டே அவள் குளியலைத் தொடர, அர்ஜுன் மூடியிருந்த கதவை வெறித்துப் பார்த்தான்.

 

                           இருவரும் அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றனர்.  அர்ஜுன் அவன் வேலையில் மூழ்க, தீபா அவள் வேலையில் மூழ்கினாள். பானு, சுதா இருவரையும் வேறு வேலைகள் இழுத்துக்கொள்ள, மாலை வரை அவர்களுக்காகக் காத்திருந்து தீபா ஒரு முடிவோடு கிளம்பினாள்.

 

பிரகாஷை அழைத்து அவனிடம் பேச ஆரம்பித்தாள் தீபா. அது ஒரு பொது இடமே. காபி ஷாப், பூங்கா போன்ற இடத்திற்கு அழைத்து அவனிடம் பேச அவளுக்கு விருப்பமில்லை.

 

     “சொல்லு தீபா.” பிரகாஷின் முகத்தில் ஓர் மெல்லிய புன்னகை. அதை எல்லாம் தாண்டி ஓர் சந்தோசம்.

 

    “உன் மனசில் நீ என்ன நினைச்க்கிட்டு இருக்க?” தீபா நேரடியாகக் கேட்டாள்.

 

   “உன்னை தான் தீபா.” அவன் பதில் தெளிவாக வந்தது. “பிரகாஷ்…” அவள் பற்களை நறநறக்க, “கல்யாணமான நீ என்னை நினைக்குறது தான் தப்பு. நான் உன்னை நினைக்கிறதில் என்ன தப்பு இருக்கு?” என்று பிரகாஷ் சட்டம் பேச, அவனைக் கடுப்பாகப் பார்த்தாள்.

 

        “நான் உன்னிடம் காதல் சொன்னேன். நீ ஏத்துக்களை. தட்’ஸ் இட்! உனக்கும் எனக்குமான சம்பந்தம் முடிஞ்சி போச்சு. அப்படி தான் நான் நினச்சேன்.” பிரகாஷின் முகத்தில் ஓர் ஏளன புன்னகை.

 

      ‘இவன் என்ன உளறுகிறான்?’ என்று தீபா அவனை மௌனமாக பார்க்க, “அபப்டி இல்லைன்னு  நீ தான் எனக்கு புரிய வச்ச.” அவன் உல்லாசமாகக் கூறினான்.

 

   “நான் தற்கொலை முயற்சி பண்ணதும், மருத்துவமனை வரை பதறி ஓடி வந்தது நீ. அப்ப, உனக்கு என் மேல் உள்ள அன்பை நீ புரிய வச்சிட்ட.” அவன் நிறுத்த, ‘லூசா நீ?’ என்பது போல் அவனைப் பார்த்தாள் தீபா.

 

   “வீடு வரை வந்து எனக்கே அட்வைஸ் பண்ணப்ப, உன் தைரியம், உன் அன்பு, உன் நிமிர்வு எல்லாம் ரொம்ப பிடிச்சி போச்சு.” பிரகாஷ் கூற, ‘இவன் நேத்து தான் படையப்பா பார்த்திருப்பானோ?’ என்று சலிப்பாக உணர்ந்தாள்.

 

       “இப்பவும் நான் உன்னை தொந்திரவு பண்ணலை. பட் ஐ லவ்…” என்று பிரகாஷ் பேசிக் கொண்டே போக, “ஷட் அப்…” என்று அவள் கூற, பிரகாஷ் அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தான்.

 

                     “எனக்கு என்ன பிரச்சனைன்னு உனக்கு தெரியும். அதை நீ தான் பண்றன்னு எனக்கு தெரியும்.” அவள் பற்களை நறநறக்க, “உனக்கு ஏதோவொரு பிரச்சனைன்னு எனக்கு தெரியும். ஆனால், என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. உன் கணவன் கிட்ட கூட சொல்லலைன்னு எனக்கு தெரியும். உங்களுக்குள்ள ஏதோவொரு இடைவெளின்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்.” பிரகாஷ் புத்திசாலித்தனமாக கூறுவது போல் கூறினான்.

 

   ” தெரியாத மாதிரி நடிக்காத. நீ தான் அதை பண்ற….” என்று ப்ரகாஷிடம் அவள் எகிறினாள்.

 

   ‘நான் இல்லை…’  என்று அவன் மறுக்குமுன், வேகமாக வந்த வாகனம் பிரகாஷை இடித்துச் சென்றது.

 

       கண்முன் கண்ட காட்சியில் தீபா விதிர் விதிர்த்துப் போனாள். தீபா அருகே இருந்த மரம் மீது சாய, அங்கு கூட்டம் கூடியது.  அங்கு ஆம்புலன்ஸ் வர, பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான்.

   யாரோ அவளைக் காண்பது போன்ற உணர்வு எழ, அவள் வண்டியை நோக்கி ஓடினாள்.

          பதட்டத்தில் அவள் கிலேச், கியர் இரண்டையும் மாற்ற அவள் காரை கிளப்ப முடியாமல் திணறினாள்.

 

     தீபாவின் முகம் முழுவதும் வியர்வை துளிகள்.  ‘ஒன்று… இரெண்டு…மூன்று…’ எண்ணிக்கொண்டு தன்னை தானே நிதானப்படுத்திக் கொண்டு, காரை உயிர்ப்பித்தாள் தீபா.

 

    காரின் வேகத்தை கூட்டினாள். கார் டிராபிக் நிறைந்த சாலைக்குள் சென்றவுடன் அவள் அலைபேசியை எடுக்க, அது ‘சுவிட்ச் ஆப்…’ என்றது.

 

     ‘மொபைல் மூலமா தான் என்னை டிராக் பண்றாங்கன்னு, பழைய மொபைலுக்கு மாறினேன். அது இப்ப கழுத்தை அறுக்குதே…’ தன்னை தானே நொந்து கொண்டு, தீபா காரை செலுத்தினாள்.

 

   ‘போலீஸ் கிட்ட சொல்லியே ஆகணும். இல்லை அதுக்கு முன்னாடி அத்தான் கிட்ட சொல்லணும். ‘ எண்ணிக்கொண்டே காரை வேகமாக செலுத்தினாள்.

  

    “பிம்… பிம்… பிம்….” என்று இரு சக்கர வாகனத்தின் ஹாரன் சத்தம் அவள் செவிகளை அடைத்தது. அவளை நேர் பாதையில்  செல்ல விடாமல் அவளை துரத்தியது.

 

   அவளால் காரை அங்குமிங்கும் அசைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் இவள் வழியைத் தீர்மானித்து விடுவது போல் இவளை நெருக்கினர்.

 

    ஒரு கையால், ஸ்டியரிங்கை சரி செய்து கொண்டு, மறுகையால் அலைபேசியோடு போராடினாள். அந்த பழைய அலைபேசி, அவளுக்குத் துணை நிற்கவில்லை.

 

   ‘பயந்து ஓடுவது, இப்பொழுது கோழைத்தனம். இவர்கள் செலுத்தும் பாதைக்கு நான் சென்றுவிடக் கூடாது. இத்தனை ஜனங்கள் இருக்கும் இடத்தில்  காருக்குள் இவர்கள் என்னை என்ன செய்து விடமுடியும்?’ ஒரு நொடியின் சிந்தித்து, தன் பிரேக்கை அழுத்தினாள்.

 

இருசக்கர வாகனத்தில் வந்த அவர்களுக்கு சற்று நெருக்கடி ஏற்பட,  அவர்கள் தொடர முடியாமல் சற்று முன்னே சென்றனர்.

 

        மெதுவாக வண்டியைச் செலுத்தினாள் தீபா. அதன் பின் வேகம் எடுத்து, அவள் வீட்டை நோக்கிச் சென்றாள்.

 

    ‘அவர்கள் நோக்கம் என்னைத் தொடர்வது இல்லை. என்னை அச்சப்படுத்துவது மட்டுமே!’ என்று கணித்துக் கொண்டாள் தீபா.

 

   வீட்டிற்குள் செல்லுகையில், அவள் மனம் பலவற்றைக் கணித்துக்கொண்டது.

 

    ‘பிரகாஷ் எதுவும் செய்யவில்லை.’ அவள் கணக்கு பிரகாஷ் அடிபட்டு விழுந்த காட்சியிலும், அவன் கடைசியாகக் காட்டிய முகபாவனையிலும் கணித்துக்கொண்டது.

 

           ‘ஆனால், அவன் முட்டாள் தனத்தால் அவனே சிக்கிக் கொண்டிருக்கிறான். அதை அவர்கள் கண்டுபிடித்து பிரகாஷை துருப்பு சீட்டாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.’ தீபாவின் சிந்தனை வேகமாக ஓடியது.

 

   ‘அவர்கள் யார்?’அந்த கேள்வி அவள் முன் பூதாகரமாக எழுந்து நின்றது.

 

                 ‘பிரகாஷுக்கு ஒன்னும் ஆக கூடாது. அத்தனை பெரிய காயம் போல் தெரியவில்லை. இதை பானு, சுதாவிடம் கூறி அவனைப் பார்க்கச் சொல்ல வேண்டும்.’ தன் சிந்தனையில் உழன்று கொண்டு, அறைக்குள் சென்ற தீபா, குடும்பத்தினர் இவளை அழைத்ததைக் கவனிக்கவில்லை.

 

    அறைக்கு சென்று எப்பொழுதும் அவள் உபயோகிக்கும் அலைபேசியை உயிர்ப்பிக்க, “க்ளிக்… க்ளிக்… க்ளிக்…” என்று சத்தம்.

 

   அவளும், பிரகாஷும், சேர்ந்து இருப்பது போல் பல புகைப்படங்கள் அவள் சோசியல் மீடியா ஐடியில், அனைத்தையும் அழித்துவிட்டாள் தீபா.

 

       அப்பொழுது அவள் அலைபேசிக்கு, பிரைவேட் நம்பர் காலிங் வர, “என்னை பத்தி உனக்கு இப்ப தெரிஞ்சிருக்கமுன்னு நினைக்குறேன். போட்டோஸ் அப்லாட் பண்ணதெல்லாம் ஜஸ்ட் எ கேம்…  ஐ எம் வாட்சிங் யு அண்ட்…. ” இப்பொழுது ஆண் குரல் வாக்கியத்தை முடிக்காமல் “ஹா…ஹா…” என்று சிரித்தது.

 

   அலைபேசி பேச்சு துண்டிக்கப்பட்ட, ‘அத்தான்…’ அவள் மனம் அலறியது.

 

   “அத்தான்… அத்தான்…” முனங்கிக் கொண்டே அவள் அவனுக்கு அழைக்க, அவன் கூறிய செய்தியில் அவள் மனம் உச்சக்கட்ட குழப்பத்தை அடைந்தது.

 

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 8

அத்தியாயம் - 8                     தீபா அழைத்ததும், அவன் தன் அலைபேசியை உடனே எடுத்தான். "அத்தான்..." அந்த அழைப்பில், அவள் காதல், அவள் தேடல் அவன் உயிர் வரை தொட்டு மீண்டது.       "தீப்ஸ்... ஏதும் பெரிய பிரச்சனையா?" என்று அவன் கேட்க, அவளால்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்