arrow_back
என்ன தவம் செய்தேன்! அத்தியாயம் 13
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 13 / 85

அத்தியாயம் 13

visibility 553
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

ஏழாவது அழைப்பில், “ஹல்லோ!…” என்று மதுராவின் குரல் தூக்கக் கலக்கத்துடன்  ஒலித்தது.

“ஏய்!…  எந்த  ஹாஸ்பிடலில்  இருக்கே?”  என்றாள் சோனா.

“நான் எந்த ஹாஸ்பிடலிலும் இல்லையே!…” என்றாள் மதுரா தூக்கம் தெளியாமல்.

“ஆங்!… ஹாஸ்பிடலில் இல்லையா!… எந்தப் பங்களாவில், ஹோட்டலில்  இருகேடீ?”  என்றாள்  சோனா,  கடுப்பாக.

“நான்  எந்தப்  பங்களாவிலும், ஹோட்டலிலும் இல்லையே!…” என்றாள் மதுரா, சோனாவின்  ரத்த  அழுத்தத்தைத்,  தான்  ஏற்றிக் கொண்டு இருப்பதை  அறியாமல்.

“ஏய் சனியனே!.. கொன்னுடுவேன். எங்கே  இருக்கே,  சொல்லித்  தொலை.” என்று  ஹை  பிச்சில்,  பைத்தியம்  போலே  கத்தினாள்  சோனா.

“லூசாடீ  நீயி?… நான் என் வீட்டில், ஐ மீன் சுபா வீட்டில் இருக்கேன். சண்டே  அதுவுமா, போன்  செய்து  தூங்கிட்டு இருக்கிறவளை, தூங்க விடாம, பைத்தியம் போல ஏண்டீ என் உயிரை வாங்கறே?… அடசீ!… போனை   வைடி.”  என்றாள்  மதுரா, எரிச்சலோடு.

“அங்!.. என்ன…து… உன் வீட்டில் இருக்கியா?… அடிப்பாவி,  அந்தச் சுமன்  இடம் இருந்து எப்படி  தப்பினே!…” என்று  உளறிக் கொட்டினாள்  சோனா.

‘சுமன்’ என்ற பெயர் தூக்கத்தை விரட்டி விட, வாரிச் சுருட்டி எழுந்து அமர்ந்தாள்  மதுரா.

“என்ன!… என்ன!… சொன்ன… சு… சுமன்… சுமன் என்றா சொன்னே?” என்று  திகைப்புடன்  கேட்டாள்  மதுரா.

“அமாம்டீ…  சுமன்  தான்.  உனக்காகத்  தென்னம் தோப்பில், காரோடு  நிற்கச் சொன்னேனே!… அவன்  கிட்டே  இருந்து  எப்படி தப்பினே?….  கரெக்ட்டா பிளான் போட்டோமே!… எப்படி தப்பினே?… நீ தப்பியது தெரிந்தால், அவன்  என்னைக் கொன்று விடுவானே!….” என்று தன் பாட்டுக்குப்  புலம்பிக்  கொண்டு  இருந்தவள்,  அறியவில்லை  மதுராவின்  நிலையை.

சுமன்  பற்றி  ஆபீஸ்  பேச்சு  உண்டு. அவன்  வரும் போது  எல்லாம், இவளைச் சுபாவோடு  எங்காவது அனுப்பி விடுவான் விஜய்.
அந்தக் கொடூரமானவன், ரோக், வடிகட்டின பொம்பளை பொறுக்கி  எதற்காகக் காத்து இருந்தான் என்கிறாள்  இவள்.

பயபந்து  உருள, அந்த ஏ.சி அறையிலும்  வியர்த்துக் கொட்டியது  மதுராவிற்கு.

“அய்யோ!… எங்கே போனான் தெரியலையே!… என்னைக் கொன்று  விடுவானே!… எங்கே  போய்த்  தேடுவேன். போன்  சுவிட்ச் ஆப்ன்னு  வருதே!…  இவன்  வந்து   விட்டதாகக்  கால்  செய்தவுடன்  தானே, நான் நேற்று கிளம்பினேன்.” என்று புலம்பியவாறு   அழைப்பைத்  துண்டித்து  விட,  உறைந்து   போய்  அமர்ந்து  இருந்தாள்   மதுரா.

‘அந்தக் கேடு  கெட்டவனின் அடுத்தக் குறி நானா?… ஏற்கனவே பல பெண்களின்  வாழ்வை அழித்தவன்  ஆயிற்றே!… இப்போ தானே ஒரு தொழில் அதிபரின்  மனைவி,  இறக்க  காரணம்  இவன்  என்று  கேள்வி பட்டேன்.
பாவி!… பாவி!…  படுபாவி!… ராட்ஷட்சி!… பாதகி!… என்ன பாவமடீ செய்தேன்  உனக்கு  நான்?…. என் மானத்தை அழிக்கவே துணிந்து விட்டாயே!…’  என்று   மனதிற்குள்  அரற்றியவள்,  பிரமை  பிடித்து  எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தாளோ, சுபாவும், பாலாஜியும் வந்து பல முறை  உலுக்கிய   பின்னர்   தான்   அதிர்ந்து  விழித்தாள்.

விஜய், ‘மதுராவிற்கு விஷயம் தெரியக் கூடாது’ என்று பாலாஜி மூலம், மொபைலை அப்புறப்படுத்தும் படி சொல்லவும், சுபாவும், பாலாஜியும் பதறி  அடித்து  மதுரா  அறைக்குள்  வருதற்குள்,  சோனா  மீண்டும் விஷத்தைக் கக்கி இருக்க, உயிரோடு சிலையாகிப் பிரமை பிடித்து அமர்ந்திருந்தாள்  மதுரா.

தன்  தோழியைக்  கண்டதும்,  அவளை  அணைத்து  கதறி  விட்டாள்  மதுரா. அவர்கள்  சொன்ன  எந்த  ஆறுதலும், அவள் காதில் விழவே இல்லை.

‘முடிவே  இல்லாத  கொடூரத்தில்  மாட்டி  இருப்பது  போல,  மீளவே முடியாத பெரும் சூழலில் சிக்கி இருப்பது’ போல, மூச்சு விடவே முடியாமல்  திணறிப்  போனாள்  மதுரா.

எந்த  அழுகையும்  ஒரு  சமயம்  நிற்கும்.  மதுராவின்  கதறலும்  மெல்ல  நிற்க, அவளை அணைத்து  ஆறுதலாகத்  தட்டி  கொடுத்து, பாலாஜி கொண்டு  வந்த   டீயினை   மதுராவிற்கு   குடிக்க   கொடுத்தாள்   சுபா.

டீயில்  ஓவர்  சர்க்கரை,  சேர்க்கப்பட்டு  இருந்ததால்,  முகம்  சுளித்தாள்  மதுரா.

“ம்ம்ம்ம்… குடி. அதிர்ச்சிக்கு இப்படி தான் குடிக்கணும். முழுசா குடி.” என்றான்  பாலாஜி.

“என்னடி…  என்ன….  ஆச்சு?”  என்றாள்   மதுராவை,  தட்டிக்  கொடுத்தப்  படி.

கேவல்களுக்கு  இடையே  திக்கி,  திணறி,  “அவ… அவ… அந்தச் சோனா, என்னை  வெளியே  அனுப்பிட்டு,  அங்கே  அந்தச்  சுமன்… சுமனை காரோடு  காத்திருக்க  வைத்து  இருக்கிறாள்.
அவன்… அவன்… என்னை… எனக்காக… இவ போன் செய்து எந்த ஹாஸ்பிடலில்  இருக்கே,  எந்த  ஹோட்டலில்,  பங்களாவில் இருக்கே என்று  கேட்கிறாடீ! … அவன்…  என்னை….” என்று மேல பேச முடியாமல், முகம்   மூடி  அழ ஆரம்பித்தாள் மதுரா.

அந்த பக்கம், மதுராவின் கதறலை, பாலாஜி போன் வழியே கேட்டுக் கொண்டு  நின்ற  விஜய், நெஞ்சில் ரத்தம் வழிய, கண்கள் கண்ணீரை பொழிய, மதுராவின் அந்தக் கதறலை நிறுத்தும் வழி அறியாதவனாய் துடித்துக்  கொண்டிருந்தான்.

‘சிரிப்பைத்  தவிர வேறு எதையும்  அறியாதவள். இப்படி கதறித் துடிக்க தானும் ஒரு காரணமாகி விட்டோமே!’ என்ற எண்ணமே விஜய்யை கூறு போட்டுக் கொண்டு இருந்தது.

அவன்  கண்கள்,  மதுராவிற்கு  இணையான கண்ணீரைப் பொழிந்து கொண்டு  இருந்தது.

தோழியைக்  கெட்டியாக  அணைத்து,  அவளின்  அழுகை  நிற்கும் வரைத் தட்டி   கொடுத்த  சுபா,  மதுரா  தன்னை   திடப்படுத்திக்  கொண்டதை  அறிந்து,  “கண்ணை  முதலில்  துடை… நீ  பயப்படும்  படி,  எதுவும்  நடக்க போவதில்லை. இது  உனக்குத் தான்  நியூஸ்… நேத்து மாலை முதல் இது  எங்களுக்குத்  தெரியும்.”  என்றாள்  சுபா.

திகைத்தவளாய் தோழியின் முகத்தையும், பாலாஜியின் முகத்தையும் மாறி  மாறிப்  பார்த்தாள் மதுரா.

“சுபா!.. சுபா!… அ… அண்ணா!… இவ, என்ன அண்ணா சொல்றா?” என்று திக்கித்  திணறினாள்.

“மதுரா பதட்டபடாதே!… ரிலாக்ஸ். உனக்கு ஒன்றும் ஆக  விட மாட்டோம்.  முதலில்  இதை  மனதில் பதிய வை. இரண்டாவது  உன்னைக் காக்க,   உன்னைச்  சுற்றி   எவ்வளவு  பேர்  இருக்கோம்  தெரியுமா!…
உனக்கு  எதுவுமில்லை. ரிலாக்ஸ்…. இந்தா  தண்ணீர் குடி. நேத்து நைட் எந்தவித  ஆபத்தும்  இல்லாமல்  வீடு  வந்தாயே,  அதைப் பற்றி மட்டும் நினை. உனக்கு எந்த ஆபத்தும் வர விடமாட்டாங்க. என்ன புரியுதா?” என்றான்   பாலாஜி,  மதுராவின்   கைகளை   பிடித்துக்  கொண்டு.

அவன்  பேச்சால்  பயம்  நீங்கிய  மதுரா,  “அப்போ…  அங்க…  அங்கே  சுமன் வருவான்னு தெரியுமா?… சொல்லி இருந்தா போய் இருக்க மாட்டேனே!” என்றாள்.

“சோனா,  ஏதோ  பிளான்  போடறான்னு  தெரியும்.  அதுக்கு  செலவு   செய்ய  மட்டும்  தானே  தெரியும்.  கணக்கு  வழக்கு எல்லாம், அது  எந்தக் காலத்துல பார்த்து இருக்கு.
ஒரு வருடமாய், இதே வேலையாய் தானே அலையறா… ஆனா, சுமனை இதில்,  இழுத்து  விட்டு  அவ்வளவு  கேவலமா  போவான்னு  நாங்க  யாருமே  எதிர்பார்க்கல.
விஷயமே அங்கு  போன பிறகு  தான் தெரிய வந்து இருக்கு. எப்படியோ ஆபத்து  எதுவும்  நடக்கும் முன், உன்னைக் காப்பாற்றி விட்டோம்.” என்றான்  பாலாஜி.

“நான்  அவளுக்கு  எந்தக் கெடுதலும்  செய்யவில்லையே அண்ணா. நான் அவ தங்கை முறை. என்னை  போய்ச் சுமனிடம் மாட்டி விட்டு, ஐயோ!… கடவுளே!…” என்றாள் மதுரா, உடல்  நடுங்க.

“சும்மா  அந்தச் சனியனை,  ‘அக்கான்னு’ கூப்பிட்டு, உறவு முறைக்கு உண்டான மரியாதையை கெடுத்து விடாதே. அவளின் சொந்த தங்கை பூரணியை,  அவளிடமிருந்து  காப்பாற்ற உன் பெரியப்பா, பெரியம்மா, பாட்டி ஹாஸ்டெலில் சேர்த்து இருக்காங்க.
அவளுக்கே,  அந்த  நிலைமை  என்றால்,  நீ  சித்தப்பா  மகள்  தானேடீ.  புத்தி  கெட்ட,  பைத்தியக்காரிக்கு யாராய்  இருந்தா  என்ன!…” என்றாள் சுபா  வெறுப்போடு.

“அண்ணா!…  உண்மையில்  அங்கே தோப்பில் சுமன் இருந்தானா?” என்றாள்  மதுரா,  நம்ப  முடியாமல்.

“உன்னிடம் ஏன் நான் பொய்  சொல்லப் போகிறேன்?… சுமன் வந்தான். ஒன்றை  நினைவில் வை. ஆயிரம்  சுமன்  வந்தாலும்,  உன்னைக்  காக்க  ஆள் இருக்கு.
இந்த  ஒரு  வருடமாய்,  ‘உன்னை  உனக்கே தெரியாமல்,  காப்பாற்ற  தெரிந்தவருக்கு,  இனியும்  காக்க’  தெரியும். நீ சும்மா  பயப்படாதே!”  என்றான்  பாலாஜி.

“அவன்… அந்தப் பொறுக்கி…. ரத்தன் சிங் மனைவியையே கொன்று விட்டவன் ஆயிற்றே!…  அவர்  எவ்வளவு பெரிய கோடீஸ்வரர். அவராலேயே,  அவர்  மனைவியைக் காக்க  முடியவில்லையே அண்ணா. நான்  எல்லாம், எந்த  மூலை?… சோனா  வேறு  உடன்  இருந்தே,  அவனுக்கு உதவுகிறாளே!…”  என்றாள்  மதுரா,  கண்கள்  கலங்க.

“மதுரா!… ரத்தன் சிங்க்கு, வார்னிங் தர யாரும் இல்லை. கொஞ்சம் அஜாக்கிரதையாக  இருந்து  விட்டார். ஆனால், உன் விஷயம் அப்படி பட்டது இல்லையே!… ஆரம்பம் முதல் உனக்கான ஏற்பாடுகள் பக்காவா செய்து  இருக்கார்.
ஒரு  வருடமாய்  உன்னைச் சுற்றி,  உனக்கே தெரியாமல், பாதுகாப்பு வளையம்  போட்டு இருக்கார். சுமன் ஆபீஸ்  வரும்போது  எல்லாம் கரெக்ட்டா,  நீ   எப்படி   சுபாவோடு   வெளியே  போனாய்?
நீ,  முதலில்  தங்கி  இருந்த  ஹாஸ்டல்  பக்கம்,  அடிக்கடி  சுமன்  வந்துட்டே இருந்தான். அதனால் தான், உன்னை இங்கே, இந்த வீட்டில் எங்களோடு தங்க வைத்து இருக்கார்.
இந்த  ரெண்டு  தெரு முழுவதும், நமக்காக என்றால்  உயிரைக் கொடுக்கவோ,  எடுக்கவோ  தயங்காத,  ‘சபரி  மாதிரி  ஆட்கள்’  உண்டு.  ஒரு  குரல்   கொடுத்தால்  போதும்.
எனக்கே கார்  ஓட்டத் தெரியும் தான். ஆனால், ஒவ்வொரு முறையும் சபரி வந்து, ஏன்  கார்  ஓட்ட  வேண்டும்  என்று யோசித்து இருக்கிறாயா?…
எல்லாம் உன்  பாதுகாப்பிற்காகத் தான்.
சுபா, சபரி, என்னிடம் கூட லைசென்ஸ் பெற்றத் துப்பாக்கி உண்டும்மா.” என்ற  பாலாஜியின்,  பேச்சைக்  கேட்டு,  பேந்த  பேந்த   விழித்தாள்  மதுரா.

“என்  ஹாண்ட் பாகில்  பெப்பர் ஸ்பிரே,  வெளிநாட்டு ஸ்டன் கன், சிறு கத்தி,  மிளகாய் பொடி   இருப்பதை  பார்த்து,  அடிக்கடி கிண்டல் செய்வாயே, ‘உன்னை எல்லாம் எவண்டீ கடத்தப் போறான்’ என்று… நியாபகம் இருக்கா?…. இவற்றை நான் வைத்து இருப்பது, என் பாதுகாப்பிற்காக   இல்லை.  உன்   பாதுகாப்பிற்காக.
உன்னோடு நான் கராத்தே கிளாஸ் சேர்ந்ததும், உன்  பாதுகாப்பிற்காகத் தான்.
நள்ளிரவிலும்,  சபரி  அண்ணனின் நண்பர்கள், கூர்க்காவோடு சேர்ந்து  ரோந்து  செய்வார்கள்… அது   உனக்குத்  தெரியுமா?
நேற்று கூட, உன்னை  ட்ராப் செய்து  விட்டு, சபரி  அண்ணா எங்கேயும் போய்  விடவில்லை. அங்கேயே  தான்  நிற்க  வைக்கப்பட்டு இருந்தார். அந்த  இரவு வேளையில்  சுட, சுட  பைவ்  ஸ்டார்  ஹோட்டல்  சாப்பாடு கூட  வந்ததேடீ….  கவனிக்கவில்லையா!
சுமன்  எல்லாம்,  ஒரு  பொருட்டே  கிடையாது.  நீ  கவலைபடாமல்  இரு. இந்த  அக்ரீமெண்ட், கடன் எல்லாம் கூட உப்பு பெறாத விஷயம்.
உன்னைக் காக்க  இரவு, பகல் பாராமல் பம்பரமாய் சுழல, ஆள்  இருக்கும் போது எதற்கடி  இப்படி  பயப்படுறே!

பாரதியார், பாரதிதாசன்  கவிதைகளை  விரும்பிப்  படிப்பாயே,
‘அச்சமில்லை …
அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே’!…
கொடை வாளினை எடுடா
கொடியோர், செயல் அறவே!….’என்று மறந்து போச்சா?
எழுந்துருடீ… சும்மா அழுகாச்சி சீன் போட்டுட்டு  இருக்கே. உனக்காகத்  தான்,  ‘ஒன் மேன் ஆர்மியே’ இருக்கே!….  குளிக்கப்  போடீ  எருமை.”  என்றாள்  சுபா.

“யார்… யாரை சொல்றே சுபா!… அப்பொழுதிலிருந்து  ரெண்டு பேரும், ‘யாரோ  சொல்வதை,   நீங்கச்  செய்வது  போலவே  ‘பேசிட்டு  இருக்கீங்க.
‘ஒரு  வருடமாய் என்னை, எனக்கே தெரியாமல் காப்பாற்றுகிறார், பம்பரமாய் சுழல்வது, ஒன் மேன் ஆர்மி, விஷயத்தை முன்னரே கண்டு பிடித்தது,  ஹோட்டல்   சாப்பாடு,   நேற்று   நைட்  காப்பாற்றியது’.
யார்  சுபா!…  யார்  செய்தது  இவ்வளவும்!….  எனக்கு,  உங்களைத் தவிர,  இங்கு  வேறு   யாரையும்   தெரியாதே!..” என்றாள் மதுரா யோசனையோடு.

‘தன்னைக்  காக்க,  ஒரு  வருடமாய்  போராடும், அந்த  உயர்ந்தவன்  யார்?… இந்த  ஊரில்,  சோனாவை, சுமனை  எதிர்க்கும்  துணிவு  யாருக்கு  உண்டு?’

“நம்ம கருணா தான்… வேறு  யார்,  உனக்காகப்  போராடுவார்கள்?” என்றான்  பாலாஜி.

பாலாஜி  குரலில்  இருந்தது  என்ன?
அவன்  என்ன  சொல்ல  முயலுகிறான்!

“என்ன…து!… விஜய்யா!… அந்த ரோபோட்டா!” அதிர்ச்சியில் கட்டிலை விட்டு  எழுந்தே  விட்டாள்  மதுரா.

“அடிங்க!… மவளே!…  உன்னைக் காப்பாற்றினா…. நீ அவரைக் கிண்டலா  பண்றே!…  பாரு  பாலு!…  ரோபோட்டம்லே  ரோபோட்.
நைட் ரெண்டு  மணி வரை,  உனக்கு  பாதுகாப்பாகப், பின்னாடியே  வந்த மனுசனுக்கு,  நீ கொடுக்கும் மரியாதை  இது  தானாடீ குரங்கே?…
என்ன நேத்து,  உன்  அக்காக்காரி  உடன்  இருந்ததால்,  அவள் காற்று வீசுதா? உன்  உயிரை,  மானத்தை  காத்தவருக்கு… ச்சே!…” என்று பொரிந்து தள்ளினாள்  சுபா.

இவர்கள் பேசுவதைக் கேட்ட, ‘ரோபோட்,’ விரக்தி புன்முறுவலுடன், தன் அறையில்  உணர்ச்சிகள்  தொலைத்தவாறு   நின்றிருந்தான்.

விழிகள், நீல வானத்தில் தொலைந்து போன, அவன் வாழ்க்கையைத் தேடி கொண்டு  இருந்தது.

‘பைத்தியக்காரி!…  நானா டீ ரோபோட்?…’ என்று ஊமையாய் கதறியது அவன்  மனம்.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 14

"இல்லை… இல்லடீ… அவர் எப்பவுமே என் கிட்டே எரிஞ்சு எரிஞ்சு விழுவாரில்லே!... அதான்… உன் கிட்டேயே பல முறை சொல்லி இருக்கேன்னேடீ!....”  என்றாள்  மதுரா,  இறங்கிப்  போன  குரலில். ‘உன் மேல் எரிஞ்சி விழ வேண்டும் என்று எனக்கு மட்டும் என்ன…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்