arrow_back
என்ன தவம் செய்தேன்! அத்தியாயம் 15
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 15 / 85

அத்தியாயம் 15

visibility 30
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

நினைவுக்கு  வந்தது  அது  மட்டும்  அல்ல,  அது  நாள் வரை மனதிற்குள் அடி  ஆழத்தில்,  அவளை  போட்டு  உறுத்திக் கொண்டு இருந்த வேறு ஒன்றும்  தான்.

ஆறு மாதங்களுக்கு முன்….

‘இந்தர் ஆடையகத்திற்கு’  கவர்மெண்ட்  ஆர்டர்  ஒன்று  கிடைத்து,  எக்ஸ்ட்ரா ஷிப்ட் போட்டு, இரவு பகல் பராமல் வேலை நடந்து கொண்டு இருந்த நேரம்.

விஜய்யும், சேதுவும் ஆபீஸ், குடௌன், பாக்டரி என்று   மாறி,  மாறி  ஓடிக்  கொண்டு இருந்தார்கள்.

எப்போ சாப்பிடுகிறார்கள், தூங்கிறார்கள் என்று கூட மதுராவுக்கு   தெரியவில்லை. பாதி நாள் அங்கேயே தங்கி இருந்தார்கள்.

அன்று,  சேது  ஏதோ  வேலையாக  வெளியே  சென்று  இருக்க,  விஜய் ஆடை உருவாகும் தொழிலகத்திற்கு மேற்பார்வை  இடச் சென்று  இருக்க, மத்திய உணவு வேளை என்பதால், அலுவலக ஆட்கள் உணவு  உண்ணும் அறைக்குச்  சென்று  இருந்தனர்.

வெளியே  செல்வதற்கு  முன்  மதுராவை,  வழக்கம்  போல்  கோபப்பட வைத்து  விட்டே  சென்றான்  விஜய்.

தன்னைக்  கோபப்படுத்திப்  பார்த்து,  பதில்  காரசாரமாகச்  சொல்ல நாக்கு நுனி வரை துடித்தாலும், அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பல்லைக் கடித்துக் கொண்டு நிற்பதை, விஜய் மிகவும் ரசிப்பது போன்ற பிரமை ஏற்படுவதை மதுரா பலமுறை உணர்ந்திருக்கிறாள்.

‘தான் கோபப்பட்டுக் கத்தினால், தன்னை வேலை விட்டுத் தூக்கிடலாம் என்பது  விஜய்  பிளான்.’ என்று  அப்பொழுது  தான்  நினைத்தது  தவறு.

‘எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்…’ என்று மதுராவே நொந்து போகும்,  அளவிற்கு  தான்  விஜய் தன்னைக் கோபப்படுத்தி கொண்டிருந்தான்.

‘வேண்டும் என்றே, தன் கோபத்தை கிளறிப் பார்க்கிறான்…. பதில் சொல்ல முடியாமல், மனதிற்குள் தன் புலம்புவதை ரசிக்கிறான்’ என்று தான் அப்பொழுது  நினைத்துத்  தவறோ!

அவன் ரசனையில் இருந்தது வெற்றி களிப்பு அல்ல, குறும்பு செய்யும் குழந்தையை  ரசிக்கும்  ஒரு  பெற்றோரின்  ரசிப்போ!…

“மிஸ் மதுராக்ஷி சங்கரன்!…” என்று மதுரா, பெயரை  நீட்டி  முழக்கி  வழக்கம்  போல்,  அவன்  கூப்பிட,  வழக்கம்  போல்  மதுராவிற்கு, ‘சுர்’ என்று  ஏறியது   கோபம்.

எல்லோரும்  அவளை, ‘மதுரா!…’ என்று  மட்டுமே  அழைக்க,  ஒரு  வருடமாய் அவனிடம்  வேலை  செய்த  பிறகும், விஜய்யின்,  ‘இந்த  நமக்கரன  அழைப்பு’  மதுராவிற்கு  ஏனோ  வேப்பம்காயாக  கசந்தது.
அதன்  காரணமும்  அவளுக்கு  புரியவில்லை.

மனதிற்குள்  அவன் அழைத்த பிறகு, அர்ச்சனை நடத்திக் கொண்டு  இருந்த  மதுராக்ஷி,  பதில்  சொல்லாமல் போகவே, தன் மொபைல்  மேல்   இருந்த   கவனத்தை,  மதுரா  மேல்  திருப்பினான் விஜய்.

“மிஸ். மதுராக்ஷி சங்கரன்!….  கண்ணைத்  திறந்து  கொண்டே  தூங்க, ஏதாவது  ட்ரைனிங்  எடுக்கறீங்களா  என்ன?”  என்றான்  விஜய்,  நக்கலாக.

பதில்  சொல்லாத  மதுராக்ஷி,  ‘ஈயென்று’ இளித்து வைக்க, “இது ஆடையகம்,  மிஸ் மதுராக்ஷி.  அது  தெரியுமா?”  என்றான்.

இதை எதுக்கு தன்னிடம் சொல்கிறான் என்று குழப்பப் பார்வை மதுரா பார்க்க, “டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு நடிப்பது போல், முப்பத்திரண்டு பல்லையும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை…. நான் பல் டாக்டரும் இல்லை… சோ, மௌத் க்ளோஸ் செய்துட்டு… வேலை பாருங்க. கொட்டேஷன்   கேட்டு   போன்  செய்தால்,  டீடெயில்ஸ்  தெரியும்  தானே!…  நான்  கோடௌன்  போகிறேன்.  அர்ஜென்ட்  என்றால் மட்டும் அழையுங்கள்.  புரியுதா?” என்றவன் கிளம்ப,
“”சார்!”  என்ற  மதுராவின்  அழைப்பில்  தேங்கி  நின்றான்.

“சார்!…  நீங்க  காலையும்  சாப்பிடலை  என்று  கனகா  பெரியம்மா  போன் செய்தார்கள்.  உங்களுக்கு  டிபன் வாங்கி வைத்து இருக்கேன். சாப்பிட்டு…”  என்று  அவள் இழுக்க,  வேகமாய்   திரும்பியவன் கண்களில்,  என்ன   இருந்தது   என்று   மதுராவிற்கு   அன்று   சுத்தமாய்   புரியவில்லை.

விஜய்யின்  பார்வை  வீரியத்தைக்  கண்ட  அந்த  கணம்,  தான்  பேய் விழி விழித்து,
‘என்ன  பார்வை
உந்தன் பார்வை ?’…’ என்று குழம்பி நின்ற தருணம், மதுரா   மனக்கண்ணில்   மிகத்  தெளிவாக  விரிந்தது.

‘டிபன்  சாப்பிடலை  என்று  சொன்னார்களே  என்று  வாங்கி  வைத்தது  ஒரு குத்தமாயா?… எதுக்கு  இந்த  பயப்  புள்ள  இப்படி  லுக்  விடறான்?’  என்று மனம்  குழம்பி  நிற்க,  ‘தான்  கண்டது  கனவோ!…’ என்று நினைக்கும் வண்ணம்,  விஜய்   முகம்   மீண்டும்   மாறி  இருந்தது.

“தேங்க்ஸ்.” என்றவன் மதுரா கொடுத்த டிபன் உடன் வெளியே சென்று விட்டான்.

ஏதோ  பேய்  துரத்துவது  போன்ற  ஓட்டம்.

இதே பார்வையை, இந்த ஒரு வருடத்தில், பலமுறை பார்த்து, ‘எதற்காக இப்படி பார்க்கிறான்’ என்று மதுரா குழம்பி நின்ற தருணங்கள் அநேகம்.

மனதில், ஒரு ஓரத்தில், விஜய்யின் இந்த பார்வை உறுத்திக் கொண்டே இருந்தது  என்னவோ  உண்மை.

வழக்கம்  போல்,  விஜய்  அந்த  பார்வையை  பார்த்து  விட்டுச் செல்ல, தோளை  குலுக்கிக் கொண்டு அலுவலக வேலையை கவனிக்கத் தொடங்கினாள் மதுரா.

சேதுவும், விஜய்யும் வெளியே செல்லும் சமயங்களில், அலுவலகத்தினை நிர்வகிப்பது மதுரா.

விஜய் அலுவலக அறையில் அமர்ந்து மத்திய உணவினை அவசர அவசரமாகச்  சுவைக்  கூட அறியாதவளாய் உணவினை சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

மேலும் இரண்டு  இடங்களிலிருந்து,  கொட்டேஷன், அவர்களின்  போர்ட்போலியோ   கேட்டு  இருந்தார்கள்.

அவர்கள்  கேட்டவற்றை அனுப்பி விட்டே அவள் சாப்பிட அமர்ந்தது. மேலும் விவரங்கள் தேவைபட்டால்  அழைப்பதாகக் கூறி  இருந்தனர். அதனால்,  வேக  வேகமாகச்  சாப்பிட்டு  கொண்டு  இருந்தாள்.

போன், லேப்டாப், உணவு என்று மாற்றி மாற்றிக் கண் வைத்தவாறு, சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, அந்த அறையின் வாயில் கதவு, ‘படாரென்று’ திறந்தது.

கதவு அடித்த வேகத்தில், கதவின் அருகே இருந்த செல்பில் இருந்த பொருட்கள்  எல்லாம் கீழே  விழுந்து  சிதறியது.

கதவுத்  திறந்தச்  சத்தத்தில்  அதிர்ந்து   போய்   எழுந்து   நின்றாள்  மதுரா.
அறை  வாயில்  மேல்  சாய்ந்தவாறு  நின்று இருந்தாள் சோனா.

அவள் நின்று  இருந்த  நிலை, அவள் கோலம் கண்டு, மதுரா ஆடிப் போனாள். திறந்த  வாய்  திறந்த படி, ‘தான் காண்பது கனவா, நினைவா’ என்று புரியாமல்  மதுரா  திகைப்பின்  உச்சத்தில் இருந்தாள்.

தலை முடி கலைந்து பறக்க, கண்கள் சிவந்து இருக்க, அணிந்து இருந்த புடவைத்  தாறுமாறாகக்  கிடக்க, எந்த நொடியிலும் அவிழ்ந்து விடும் நிலையில் இருந்தது.

சரியாக நிற்க முடியாதவளாய் தள்ளாடி கொண்டு இருந்தாள்.

“சோ… சோனா!… உடம்புக்கு ஏதாவது முடியலையா என்ன?… ஆர் யூ ஆல்ரைட்.?” என்று  பதறியவளாய்,  பெரியப்பா  மகளை  தாங்கிப் பிடிக்க  ஓடி  வந்தாள்.

குப்பென்று  எழுந்தது  சோனா  மேல்  இருந்து  குடித்த,  வஸ்துவின்  வாடை.

அவளைத் தன் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்ட சோனா, “எங்கடீ அவன்?”  என்றாள்  குழறலாக.

“யாரை கேட்கிறே சோனா?… புரியவில்லை.” என்றாள் மதுரா அதிர்ச்சி நீங்காதவளாய்.

“ம்ம்ம்!… எவ… என் புருஷன்… மை லவ்… மை லைப். என்னைத் தொட்டுத் தாலி கட்டிய, நோ… நோ… இல்லை… அவன் தான் எனக்கு தாலியே  கட்டலையே!…   விஜய கருணாகரன்!…. எங்கே அவன்?” என்ற சோனா தள்ளாடியவாறு, அங்கு இருந்த சோபாவில் பொத்தென்று விழுந்தாள்.

அவள்   விழுந்த  வேகத்தில், புடவை  அவிழ்ந்து,  தேகத்தை வெட்ட வெளிச்சமாக காட்டியவாறு தொங்கியது. சீ த்ரு வகை மஸ்லின் துணி.

உணவு இடைவேளை  முடிந்து  திரும்பி இருந்த ஆபீஸ் ஆட்கள், மதுராவிற்கு குறையாதத் திகைப்புடன்  பார்த்துக் கொண்டு  இருந்தனர்.

மதுராவிற்கும்  திகைப்புத்  தான்  என்றாலும்,  சட்டென்று  தன்னைச்  சமாளித்து கொண்டாள்.

“இங்கே என்ன வேடிக்கை?… செய்ய  வேலை இல்லையா?… கருணாகரன் சார், வந்தால் சீட்டு கிழிந்து விடும். போங்க. போய் உங்க வேலையைப் பாருங்க.” என்று வெளியே சென்று சத்தம் போட, அனைவரும் கலைந்து சென்றனர்.

அவர்கள்  சென்றவுடன்,  அறை  கதவைச் சாத்தியவள்  உள்ளே சோனா இருந்த  நிலையைக்  கண்டு, கண்  விழி பிதுங்கி நின்றாள்.
உருண்டு, பிரண்டு   மொத்த   புடவையும்  அவிழ்ந்து  தரையில் கிடந்தது.

“ஏய்!… கூப்பிடுடீ அவனை… கருணா உடனே வேண்டும்… அவன் எங்கே? ….கர் டார்லிங்!….  ஐ  வாண்ட் ஹிஸ் கிஸ். ஐ வாண்ட் ஹிஸ் ஹூக். ஐ வாண்ட் ஹிம்  நவ்…. வேணும்.  அவன்  எனக்கு  மட்டும்  வேண்டும்.”  என்று உரக்கக்  கத்திக்  கொண்டு  இருந்தாள்  சோனா.

சோனா, ‘மனைவியாய் காதலோடு வரவில்லை, குடிப் போதையில் வேறு எண்ணங்களோடு’ வந்து இருக்கிறாள் என்பது புரிய, மதுராவின் நிலை சொல்ல  முடியாததாய்  இருந்தது.

மதுரா, அறிந்த பெண்கள், ‘காதலைக் கூட, இலை மறை, காய் மறையாக ஒளித்தே’  காட்டும்  குடும்ப  பெண்கள்.

இப்படி பகலில், பட்டவர்தனமாக, நடு ஆபீஸ் அறையில், ‘காமத்தை முரசு இல்லா குறையாய் அறிவிப்பது’ அவளால்  ஜீரணிக்க  முடியவில்லை.

அங்கு நிற்கவோ, சோனாவின் சென்சார்  உளறல்களைக் கேட்கவோ  மதுராவால் முடியவில்லை.
சட்டென்று, அருகில் இருந்த பாத்ரூமிற்குள் நுழைந்து, கதவின் மேல் சாய்ந்து, தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.
தன்னைச் சமாளித்து கொண்டவள் விஜய்யை செல்லில் அழைத்தாள்.

“விஜய் ஹியர்!…”  என்றது  எதிர்முனை   கம்பீரமாக.
மதுராவிற்கு  குரலே  எழும்பவில்லை.  சோனா  ஏற்படுத்தி இருந்த நிலையில் அவன்,  குரலைக் கேட்கவே  லஜ்ஜையாக இருந்தது அவளுக்கு.
ஒரு ஆணிடம் இந்த விஷயத்தை அவளால் சொல்ல முடியவில்லை.

“ஹலோ!…  விஜய் ஹியர்!…  மே  ஐ  நோ, ஊ  ஹிஸ் காலிங்?” என்றவன் பதில்  வராது  போகவே, காலர்  ID  பார்த்தான்.

“மிஸ். மதுராக்ஷி!… கேன் யூ ஹியர் மீ?…  நான் பேசுவது கேட்குதா?… லைனில் தான் இருக்கீங்களா?” என்றவன் பதில் வராது போகவே,
“மதுராக்ஷி!… மதுரா!… மதுரா!… கேட்குதா?” என்று பல முறை கேட்டு விட்டான்.

அவசரம் என்றால் ஒழிய, ‘மதுரா அழைக்கமாட்டாள்’  என்பதாலும், அழைத்து விட்டு, இப்படி  வெகு நேரம் பேசாமல் இருக்க மாட்டாள் என்பதாலும்  ஏதோ  சரியில்லை  என்பதை உணர்ந்தான் விஜய்.

“மதுரா!…  என்னம்மா  ஆச்சு?… பேசு… என்ன ஆச்சு?” என்றான் தன்மையாக.

விஜய்யின்  குரலில்  என்ன  உணர்ந்தாளோ,  “ச…  சார்!…  சார்!…” என்று தந்தி  அடித்தாள்.

“சொல்லுங்க  மதுரா!…  என்ன  விஷயம்?… எதுவா  இருந்தாலும் தைரியமாகச் சொல்லுங்க. என் கிட்டே என்ன தயக்கம்?… சொல்லுங்க.” என்றான்  விஜய்.

“ச… சார்!… அக்கா!… மேடம்!… சோனா மேடம்!… மேடம்!… இங்கே வந்து இருகாங்க. நீங்க உடனே வாங்க சார்.” ஒருவழியாய் எதையோ உளறிக் கொட்டினாள்  மதுரா  பதட்டத்தோடு.

சற்று நேரம், எதிர் முனையில் மௌனம் நிலவியது. அவனிடமிருந்து பதில் வராது  போகவே,  மதுராவின்  பதட்டம் அதிகமாகியது.

“சார்!… சார்!…  கருணா சார்!… லைனில் இருங்கீங்களா?… சார்!..  சார்!.” என்று  பல  முறை  அழைத்தாள்  மதுரா.

“லைனில்  தான்  இருக்கேன் மதுரா. உன்னை ஏதாவது அவள் சொன்னாளா?… ஏதாவது திட்டினாளா?… சொல்லு மது.” என்றான் பதட்டத்துடன்.

ஒரு  கணம்  மதுரா,  ‘பேச்சு  இழந்து  நின்றாள்’  என்றால்  மிகையல்ல.

அவன் குரலில்  இருந்த  ஏதோ  ஒன்று,  அவளை ஸ்தம்பிக்க வைத்து இருந்தது.

‘கருணா சார்!…  பதட்டப்படுகிறாரா!…  அதுவும் எனக்காகவா?… மனைவியைப் பற்றி  விசாரிக்காமல்,  என்னைப் பற்றி  ஏன் எவ்வளவோ கவலைப்படுகிறார்?’  என்ற  கேள்வியை  எழுப்பியது   அவள்  மூளை.

‘அடியேய்!… மதுரா!… நட் போல்ட் கழண்டு போச்சா உனக்கு?… சோனா அடிக்கும் கூத்தில், லூசு ஆகி விட்டாயா என்ன!… நீ யாரு அவருக்கு?… உனக்காக அவர் ஏன் கவலைப்படப் போகிறார்? மனைவியின் குணம் தெரிந்து  இருப்பதால்,  விசாரித்து  இருப்பார். அதைப்  போய்… லூசு… லூசு.”  என்று  சரியாய்,  தவறாகத்  தாளித்தது மனசாட்சி.

அவள்  தனக்குள்,  வாதத்தில்  இருக்க, அதற்குள் பத்து, இருபது   முறை அவள்  பெயரை  அழைத்து  விட்டான்  விஜய்.

“மதுரா!… மது!…  மது!… என்னம்மா… பேசு… பேசும்ம்மா… மது.”  இந்த முறை அவன் பதட்டம் வித்தியாசமாக மதுராவின் மனசாட்சிக்கே தோன்றியது.

ஆனால்,  அதைப்  பற்றி  மேலும்  ஆராயாமல், “சார்!… சார்!… எனக்கு ஒன்றும்  இல்லை சார். மேடம் எதுவும்  என்னைச் சொல்லலை  சார். சொல்லும்  நிலையிலும்  அவங்க இல்லை சார். சார்!… ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம்   வாங்க   சார்!…ப்ளீஸ்  சார்!..”  என்றாள் மதுரா.

“வரேன்…  எதற்கும்  கவலைப்படாதே மது.  ஐ  ஆம்  ஆன்  தி  வே.”  என்றான்  விஜய்  அவசரத்துடன்

மதுரா  மீண்டும்  திகைத்தாள்.
‘இன்று திகைப்பை, பல  அதிர்ச்சிகளை முழு குத்தகைக்கு எடுத்து இருக்கிறோம்  போல்  இருக்கிறது’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை  அவளால்.

எதற்குமே பதட்டபடாத  விஜய்யின் நிதானம், அந்த  நேரத்தில் மிஸ் ஆவதை உணர்ந்தாள்.

‘மனைவிக்கு என்னவோ, ஏதோ என்று பதறி விட்டான் போல் இருக்கு.’ என்று அன்று தான் நினைத்தது சரியில்லை என்று இன்று தோட்டத்தில்  யோசிக்கும்  போது  புரிந்தது மதுராவிற்கு.

‘அன்று, விஜய் கொண்டப் பதட்டம் தனக்கானது.
அன்று அவன் காட்டிய அக்கறை தனக்கானது.
அவன் பட்ட கவலை அவளுக்கானது.’ என்பது இன்று  புரிய,  உடல் சிலிர்த்தது மதுராவிற்கு.

‘சார்,  வரக் குறைந்தது அரை மணி நேரமாது ஆகும். அதுவரை இவளை எப்படி சமாளிப்பது!… திரும்பவும் சென்சார்  வார்த்தைகளைப் பேசினால்  என்ன செய்வது!..’ என்று  யோசித்தவாறே,  பாத்ரூமிலிருந்து  வெளியே  வந்த  மதுரா  திகைத்தாள்.

சோபாவில் உருண்டு, பிரண்டு கொண்டு இருந்த சோனாவை, அந்த அறையில்  காணோம்.
அவள்   புடவை   மட்டும்   கார்ப்பெட்டில்  கிடந்தது.

‘அப்படியே  வெளியே  போய்  விட்டாளா!… ஏதோ கவர்ச்சி பட நடிகை மாதிரி… அந்த ஜாக்கெட் கூட, அரையும் குறையுமாக சீ த்ரூ வகையாக  தானே இருந்தது.
கைக்குட்டைக்  கூட  இன்னும்  கொஞ்சம்  பெருசாக  இருக்கும்… எவன் அதைத் தைத்தானோ!…. எல்லாமே வெட்ட வெளிச்சமாய் இருந்ததே!…. அப்படியே  வெளியே  போய்   தொலைச்சுட்டாளா!… கடவுளே!…’
ஒரு கணம் மதுராவின் இதய துடிப்பு நின்றே போனது.

அவள் அப்படி  செய்யக்  கூடியவள்  தான் என்பதால், மதுரா விதிர்விதித்து போனாள்.

ஆனால்,  அப்படி  எதுவும்  நடக்காமல், விஜய் மானம் கப்பல் ஏறாமல், கடவுள் தான் காப்பாற்றினார் போல் இருக்கிறது.
சோனா சோபாவில்  விழுந்தவுடன்  கதவைச் சாத்தி  இருந்த மதுரா, லாக் செய்ய மறக்கவில்லை.

‘கதவு  லாக்  ஆகி  தானே இருக்கு. இவ  எங்கே  போய்த்  தொலைஞ்சா!’ என்று  மதுரா  நினைப்பதற்கும், அந்த அறையில் இருந்த விஜய்யின் படுக்கை  அறையிலிருந்து  ஆங்கில  பாடல் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது.

விஜய்யின்  அந்த ஆபீஸ் அறை நான்கு  பகுதிகளாகப் பிரிக்கபட்டு இருக்கும். முன்புறம் மதுராவிற்கான பி.ஏ அறை. அவன்  அறையிலிருந்து  கண்ணாடி தடுப்பால்  பிரிக்கப்பட்டு  இருக்கும். உள்ளே  வந்தால்  விஜய்  ஆபீஸ்  அறை.  மூன்று  அறைகளாகப் பிரிக்கபட்டு இருக்கும்.
ஆபீஸ் அறை,  பாத்ரூம்,  படுக்கை  அறை.

வேலை அதிகம் உள்ள நாட்களில் சேதுவும், விஜய்யும் அங்கேயே உறங்கி விடுவார்கள். இன்று, அந்த அறையில்,  ஆடை  அவிழ்ந்து  கிடப்பதைக்  கூட  உணராமல்,  போதை ஊசியினை  போட்டுக்  கொண்டு  இருந்தாள்  சோனா.

மதுராவிற்கு மீண்டும் ஒரு முறை இதயம் நின்று பின் துடித்தது.
குடி, போதை  மருந்துப் பழக்கம்  சோனாவிற்கு உண்டு என்பதை மதுராவில் ஏற்கவே முடியவில்லை.

அந்த அறை கதவைச் சாத்தியவள், தன்னைச் சமாளித்த  படி  சேரில் வந்து அமர்ந்தாள்.
இரண்டு  கிளாஸ்  தண்ணீர்  குடித்தப்  பிறகே,  அவள்   படபடப்புக்  குறைந்தது.
சோனாவின்  வெளிநாட்டு  கலாச்சாரம்,  உடை, உணவு பழகும் விதம் என்று அனைத்திலும் மிக அதிகமாவே தெரியும் என்றாலும், இன்றைய ஆட்டம்   வரம்பு   மீறிய  ஒன்று.

‘ஒருவேளை நாம தான் திருமண உறவைத் தவறாக நினைக்கிறோமோ!… திருமணம் ஆன பின் பெண்கள், ‘தங்கள் கணவனிடம் இப்படி தான் வெளிப்படையாக’ இருப்பார்களோ!
தனக்குத்  தெரிந்த  எந்தப் பெண்ணும், இது போல நடந்தது இல்லையே!… இப்படி பட்டவர்த்தனமாக யாரும் இல்லறத்தை, மூன்றாம் நபரின் முன் வெளியிட்டதில்லையே!…
குடி, போதை பழக்கம்… இன்னும்  வேறு  என்ன எல்லாம்  பழகி  வைத்து  இருக்கிறாள்!’

முதன்  முறையாகச்  சோனாவின்  முகமூடி விலக, அங்குத் தென்பட்ட  கோரம், விகாரம், மதுராவைத்  திணற வைக்க, தலை வலிப்பது போல  தோன்ற,  இரு  கைகளால்  தலையைப்  பிடித்து  அமர்ந்து விட்டாள்.

அப்படியே  எவ்வளவு  நேரம்  இருந்தாளோ,  கதவுத் தட்டப்படும் சத்தம் கேட்டு  நிமிர்ந்தாள்.

விஜய்  நின்று இருப்பதை  பார்த்துத் திகைத்து  போனாள்.
அரை மணி நேர  பயணத்தைப் பதினைந்து   நிமிடங்களில்   கடந்து   வந்து  இருக்கிறான்.

‘மனைவி  மேல்  அவ்வளவு  அக்கறை,  காதல்  போல் இருக்கு. இப்படியொரு காதலை அடைந்த சோனாவிற்கு வாழத் தெரியவில்லையே!….’ என்று  தான்  அன்று  கவலைப்பட்டது  எல்லாம்  வீண்.

விஜய் அவ்வளவு  வேகமாகக் கார்  ஒட்டி, பதினைந்தே நிமிடங்களில் விரைந்து வந்ததிற்கான காரணம் சோனா அல்ல,  ‘தான்’  என்று, இன்று  தெளிவாகப்  புரிந்தது  மதுராவிற்கு.

மதுரா  கதவை  திறந்தவுடன், அவசரமாக  உள்ளே  வந்தவன்,  கதவை  மூடித் தாழ்  இட்டு, மதுராவின் இரு தோளிலும் கை வைத்து, “மதுரா!… உனக்கு ஏதும் இல்லையே மா!… உன்னை ஏதாவது சொன்னாளா?… எதுவும்  உன்னைச் செய்யலை தானே!… ஆர் யூ ஆல்ரைட்?”  என்றான்  ஒருவிதத்  தவிப்போடு.

இமைக்க  மறந்து  போய், வாய்  திறந்து  திறந்து  மூட,  ‘அவன் கைகளில் தான் சிலையாக நின்ற நிலை’ இன்று மதுராவிற்கு நினைவுக்கு வந்தது.

அவன்  கண்களில்  இருந்தது என்ன!
அவன்   முகத்தில்   தென்பட்ட   பாவம்   தான்   என்ன!…
‘இரும்பு மனிதன்’ என்று தொழில் வட்டத்தில் பெயர் எடுத்து இருந்தவனின்  அந்தக் கலக்கம், தவிப்பு, துடிப்பு அன்று எதற்காக என்று புரியாதவளாய்  ஸ்தம்பித்து  நின்றாள் மதுரா.

அவன் கண்களோ, அவன் கைகளின் தொடுகையோ, அவனிடமிருந்து  வெளிப்பட்ட ஏதோ நூதன உணர்வு, மதுராவின் இதயத் துடிப்பை  ஒரு  கணம்  நிறுத்தி,  பின்  பன்மடங்கு  துடிக்க  வைத்தது.

நெஞ்சாம்   கூடே   காலியான  உணர்வு.

‘பிரபஞ்ச   சுழற்சியே   நின்று  விட்டது’  போன்ற  பிரமை  கூட,  மதுராவிற்கு  ஏற்பட்டது.

இருவரும் அந்த மௌன நிலையில் எவ்வளவு நேரம்  நின்றார்களோ,  அவர்களுக்கே  தெரியாது.

“மது!…” விஜய்யின் அந்த அழைப்பு மதுராவிற்கு புதிது  போலத் தோன்றாததையும்,  தனக்கு  அந்த அழைப்பு பிடித்து இருப்பதையும் ஒருவித அதிர்ச்சியோடு  பார்த்துக் கொண்டு  இருந்தாள்.

அந்த அழைப்பு, குரலில் இருந்த   ஏதோ   ஒன்று,  அவள்  உயிர் வரை  பாய்ந்தது.

முதலில்  தன்னை மீட்டவள் மதுரா தான்.

பெண்மையின் உள் உணர்வு, ஏதோ  சூழலில் சிக்குவதைப்  போல  உணர  வைக்க, விஜய்யின்  செய்கையின்  காரணத்தை  ஆராய்வதை  மேற்கொள்ளவே  இல்லை.

அதைச் செய்து  இருந்தால், ‘சோனாவின் குறியாகத், தான் ஏன் ஆனோம்’ என்று புரிந்து இருக்கும்.

ஆனால், வழக்கம் போல தேவையானதை விட்டு,  விட்டுத்  தேவை  அற்ற  ஆராய்ச்சியில்  இறங்கினாள்  மதுரா.

தவம் தொடரும்…

PLEASE RATE AND REVIEW.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 16

'சார், எப்படி இவ்வளவு வேகமா வந்தார்!’ என்ற பிரமிப்பு மட்டுமே அது என்று  அந்தப் பேதை மனம் சொல்லி இருந்தது. இது  நாள் வரை  நம்பிய பொய்,  இன்று தோட்டத்தில்  யோசிக்கும் போது  பொய்த்து  போனது. ‘அன்று சோனாவிற்காக விஜய் துடிக்கவில்லை…. …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்