arrow_back
என்ன தவம் செய்தேன்! அத்தியாயம் 18
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 18 / 85

அத்தியாயம் 18

visibility 30
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

கை,  தன்  வேலையை  செய்யப்  பவானியின்  மனமோ,  நிம்மதியாக இல்லை.

எப்பவுமே விடுப்பு  எடுக்காத மகள், மொத்தமாகக் கிளம்பி வந்து இருப்பதை,  அந்தத்  தாய்  முதலிலேயே  பார்த்து  விட்டார்.

ஆல் அம்மா, யூனிபோர்ம்  போடாத  போலீஸ்  ஆயிற்றே!… அதுவும் வயதிற்கு வந்த, வேலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளின் அம்மா முன்பு, உலக  ராணுவமே  தோற்று  விடுமே!

அடுத்த நொடி, சுபாவிற்கு அழைப்பு போனது. நல  விசாரணைகளுக்குப் பிறகு,  பவானி  நேராக விஷயத்திற்கு வந்தார்.

“சுபா!… மதுரா இங்கே பெட்டி படுக்கையுடன் கிளம்பி வந்து இருக்கா. நேத்து  பேசும் போது கூட இப்படி  வருவதாகச்  சொல்லவில்லையே!… என்ன ஆச்சு?… ஆஃபிஸில் ஏதாவது பிரச்சனையா?” என்றார் பவானி கடுமையான குரலில்.

அவருக்கு, ‘விஜய்  மீது  எள்  அளவும்  சந்தேகம்’  இல்லை. அவன் தங்கமானவன் ஆனால் அவனை சுற்றியுள்ளவர்கள் அந்த ரகம் இல்லையே!…  ஆனால்,  சோனா,  சொர்ணா, கஜா விஷயம் வேறு ஆச்சே!…

கணவனுக்கும், மகளுக்கும்,  ‘பாசம்  என்பது கண்ணை’ மறைக்கலாம். ஆனால்,  பவானி  சோனாவின்  நீலிக்  கண்ணீரை நம்பவில்லை.

“அம்மா!….அந்த பிசாசு  சோனா,  இங்கே  ஆபீஸ்க்கு வந்துச்சுமா…. கிட்டத்தட்ட ரெண்டு  மணி நேரம்  விஜய் சார், அறையில்  தான்  இருந்தா. உள்ளே  என்ன  நடந்தது  என்று  தெரியாது.  ஆனா,  நம்ம மதுரா, வேலை ரிசைன் செய்துட்டு கிளம்பிட்டா அம்மா. நீங்க அவ கிட்டேயே கேட்டுக்கோங்க. சாரி மா.” என்றாள் சுபா.

வேலையை  மகள்  ரிசைன்  செய்தது,  அவருக்குச்  சந்தோசம்  தான். ஆனால், ரிசைன் செய்யும், ‘அவசியம், காரணம் என்ன?…’ என்ற கேள்வி அவரை நிம்மதியாக  இருக்க விடவில்லை.

விடையை,  மகளிடமிருந்து  பெரும் வரை அவருக்கு நிம்மதி இல்லை. சமையல் வேலை  முடித்துத் தன் யோசனையிலே எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தாரோ,  ரகு அவரை உலுக்கும் வரை, அதே  நிலையில்  தான் இருந்தார்.

“என்ன  கண்ணா?”  என்றார்  பவானி.

“என்னது!… என்ன  கண்ணாவா!…  மா!…  என்னமா  ஆச்சு?.. கூப்பிடக் கூப்பிட, ஏதோ யோசனையில் இருக்கீங்க?” என்றான் ரகு வியப்புடன்.

“ஒன்றும் இல்லை கண்ணா!… நம்ம குட்டியை பற்றித் தான் யோசித்து கொண்டு இருந்தேன். வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்து இருக்கா.” என்றார் பவானி.

“ஹே!… வாலு வந்துடுச்சா!… இப்போ தான் மூளைன்னு ஒண்ணு வேலை செஞ்சு,  நல்ல  முடிவா எடுத்து இருக்கா. அவ வேலைக்குப் போய்த் தான்  ஆக வேண்டும் என்றால், என் ஆபீஸ் இல்லையென்றால், கார்த்திக் ஆபீஸ்லேயே வேலை வாங்கித் தரப் போகிறோம். அதுக்கு ஏன் அம்மா இவ்வளவு யோசனை?” என்றான்  ரகு,  அவர்  அருகே  அமர்ந்தவாறு.

“அவ செஞ்சது நல்ல வேலை தான். ஆனா, அது அவளா செய்யலையே!… அந்தப்  பிசாசு சோனா, ஆபீஸ்க்கு வந்து இருக்கு. ரெண்டு மணி நேரம் அங்கே தான் இருந்து இருக்கு. என்ன நடந்தது என்று தெரியலை. இவ வேலையை ரிசைன் செய்து இருக்கா. அதான் என்ன என்று யோசித்து கொண்டு  இருந்தேன்.”  என்றார்   பவானி.

“சுபா  கிட்டே,  கேட்க  வேண்டியது  தானே!…  உங்க, ‘ஒற்றர் படைத் தலைவி’  அவ  தானே!…” என்றான்  ரகு  புன்னகையுடன்.

“போடா… போக்கிரி!…  உனக்குத் திருமணம் முடிஞ்சு, ஒரு பெண்ணைப் பெத்து, வளர்த்து, தொலைத் தூரத்திற்கு வேலைக்கு அனுப்பினால், அப்போ தெரியும்  ஒரு   பெற்றோராய்   என்  தவிப்பு….
எத்தனையோ வேதனையான   சம்பவங்களைத்   தினமும்  கேள்விப்படுகிறோம்!
மதுரா வயசில், எத்தனையோ பெண்கள் உயிர் இழக்கிறார்கள். அந்தப் பெற்றோர்களுக்கு,  தங்கள் மகளைச் சுற்றி நடப்பதைப் பற்றி முன் எச்சரிக்கையாகக்  கூற  யாரும்  இல்லை.
ஏன்,  ‘ஒற்று அறிதல்’ என்கிறாய்!… என்  மகளின்  பாதுகாப்பிற்கான  ஏற்பாடு.
என்  மகளின்  மேல் நம்பிக்கை  இல்லாமல் சுபாவிடம் விசாரிக்கவில்லை.
என் மகளை, எந்த ஆபத்தும் நெருங்கக் கூடாது என்று யோசிக்கிறேன்.” என்றார் பவானி.

“ஓகே!…  ஓகே!… நான் சரண்டர். நீங்க உங்க மக பாதுகாப்பிற்கு, ஒட்டுமொத்த இந்திய ராணுவதையே அனுப்புங்க, யார் வேண்டாம் என்றது?” என்றான் ரகு புன்னகையுடன்.

“சும்மா கிண்டல் செய்யாதே ரகு. சுபா கிட்டே கேட்டா மதுரவையே கேட்டுக்கோங்கோ என்று தயக்கமா சொல்றா!… என்ன என்று நான் நினைப்பது!… என்  கவலை  எனக்குத்  தான்  தெரியும்.  அதை  விடு. சாப்பாடு எடுத்து வைக்கவா?… சாப்பிடுறீயா?…” என்றார் பவானி.

“அம்மா!… மதுரா கிட்டே கேட்டுக்கலாம். அதுக்கு ஏன் எவ்வளவு யோசிக்கறீங்கன்னு தான் கேட்டேன். எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம். அவ வரட்டும்.” என்றான் ரகு.

தாய்க்கு ஆறுதல் சொல்லிவிட்டானே தவிர, ஒரு அண்ணானாய் அவன் மனமும் துடித்துக் கொண்டு தான் இருந்தது.
இவன் வேறு மாநிலத்தில் வேலையில் இருந்தாலும், அவன் நண்பர்கள் மதுராவை தங்கள் சொந்தத் தங்கை  போலப்  பார்த்துக்  கொண்டு  தான்  இருந்தார்கள்.

அவர்கள்  மூலம்  சோனா,  சொர்ணா,  கஜாவை  பற்றி அவன் கேள்விப்பட்ட எந்தத் தகவலும், அவன் மனதிற்கு உகந்ததாய் இல்லை என்பதே  நிஜம்.

தாயிடம்  சொன்னால், பதறி விடுவாரே என்று ரகு அதுவரை  எதையும்  சொல்லியிருக்கவில்லை.

தந்தை,  இவன்  சொல்ல  வருவதை  காது  கொடுத்து  கேட்கக்  கூடத்   தயாராய்  இல்லை.

தகவல் சொன்ன நண்பர்கள் ஒருவர் விடாமல் கேட்ட கேள்வி, ‘உனக்கு வேறு நல்ல இடமே உன் தங்கையை வேலைக்கு அனுப்ப கிடைக்கவில்லையா?’ என்பது  தான்.

“ஏன், அந்த  கம்பெனி  M.D  கருணாகரன்  சார்,  பற்றி  வெளியே நல்ல பெயர் இருக்கே!…. பெண்களுக்கு அத்தனை மரியாதையை தருவதாய் சொன்னார்களே!….
அவர் எங்க உறவு தான். அவர் மணந்து இருப்பது, எங்க  பெரியப்பா  மக சோனாவை  தான்.”  என்றான் ரகுத் தன் நண்பர்களிடம்.

“கருணா சார், பத்தி  தவறாச்  சொன்னா  வாய்  அழுகிடும்  ரகு. சச் எ ஜெம் ஆப் எ பர்சன் அவர். ஆனால், வினையே, உங்க  பெரியப்பா  மக  சோனா, அவளின் தாத்தா கஜேந்திரன், அவரின் மூத்த மகள் சொர்ணா தான்.

கருணா  சார்  மேற்பார்வையில்  இருக்கும்   வரை   உன்  தங்கைக்கு,  எதுவும்  நடக்காது.
ஆனால்,  சார்  பக்கத்தில்,  எதற்கு  அழகான உன் தங்கையைக் கொண்டு  அந்த சோனா வைத்திருக்கிறாள்?
அவ  பொறாமை  பிடிச்சவ. அவ கிட்டே,  உன்  தங்கை  வேலை செய்வது நல்லதிற்கு இல்லவே இல்லை ரகு.”  என்று  மாற்றி  மாற்றி,  அவன்  நண்பர்கள்  சொன்னதன்  சாராம்சம் இது  தான்.

‘என்ன நடந்திருக்கும்!… தங்கை ஏன் ஒட்டுமொத்தமாய் கிளம்பி வந்திருக்கிறாள்!….’
அன்னைக்கு இருந்த கவலை, கலக்கம், இப்பொழுது அண்ணனாய்  ரகுவிற்கு,  வந்து  விட்டது.

“சரிப்பா….  இரு  உனக்கு டீ தரேன்.” என்றவர் மகனைக் கவனிக்க சென்றார்.

தாய்,  சகோதரனின்  கவலை,  பயம், கலக்கம்   பற்றி அறியாதவளாய், மதியம்  ஒரு  மணிவரை  நன்கு  தூங்கி  எழுந்தவள்,  தன்னை தூய்மை செய்து  கொண்டு  ஹாலுக்கு வந்தாள்.

வந்தவளின்  கண்ணில்,  அவளின்  முதல் அடிமை  கண்ணில்  தென்பட்டான்.

ரகு   ஹாலில், டீவி பார்த்துக் கொண்டு இருந்தான். மெல்ல பூனை போல் அடிமேல் அடி எடுத்து வைத்து, அவன் அருகே சென்றவள், தீடீர் என்று, ‘பே!…’ என்று அவன் காது அருகே கத்த, சோபாவிலிருந்து  அலறிய  படி கீழ்  விழுந்தான்  அந்த  அப்பாவி  அண்ணன்.

மதுரா வால் இல்லா குரங்கு.
இந்தப், ‘பொறுப்ப்ஸ், பருப்ப்ஸ்’  எல்லாம் அலுவலகத்தில்   அதுவும்  விஜய்   இருக்கும்  வரை  தான்.  ஒட்டு மொத்த அலுவலகமும், மதுராவின்  வால்தனத்தில்  சிக்கித் திணறித் தவித்துக்  கொண்டிருந்தது

இவள்  அடிக்கும்  லூட்டி,  எல்லாம்  விஜய்க்கு  தெரியாது  என்று  மனப்பால் குடித்து  கொண்டு  இருந்தாள்  மதுரா.

இவள்  செய்யும்  எல்லா  வால்த்தனமும், விஜய்  அறிவான்  என்று  ஏனோ  அவளுக்குத்  தெரியவில்லை.
இவன் இல்லாத சமயமாய் பார்த்து அவள் அடிக்கும் லூட்டி எல்லாவற்றையும், அலுவலக கண்காணிப்பு கேமரா வழியாக விஜய் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் என்பதோ, ‘அவனை அது தான் உயிர்ப்போடு   வைத்திருக்கிறது’   என்பதை  ஏனோ  மதுரா  அறியவில்லை.

வீட்டில்  மாட்டுவது  ரகுவும்,  கார்த்திக்கும்.
இவர்களை   வச்சி  செய்வதில்  இவளுக்கு  நிகர்  இவளே!…

அதுவும்  மற்ற மூவரை விட, இவளிடம் மாட்டி, திக்கி, திணறி, நொந்து,  அவல்  ஆவது கார்த்திக்  மட்டுமே!…
அவ்வளவு கோபம் அவன் மேல்.

காரணம்,  மதுரா,  அம்மா வயிற்றில் இருக்கும் போதே, ‘பெண்  குழந்தைப் பிறந்தால், அது கார்த்திக்க்குக்கு’ என்று இரு வீட்டு பெரியவர்களும் அவர்களாகவே  முடிவு  செய்து விட்டனராம்.

இவளை,  இந்த பெரிய மனுஷியை  ஒரு  வார்த்தை  கேட்கலையாம்.  அதுவும்,  தாய்  வயிற்றிலிருந்து இன்னும்  கூடப்  பிறக்காத  பெரிய  மனுஷியை!…

பெரியவங்க  ஏற்பாட்டுக்குப்   பலிக்   கடா  கார்த்திக்.

“டேய்!…  ஜிராஃபீ!….  எவளோ  தைரியம்டா  உனக்கு!…  என்னைக் கேட்காம, ஓகே வா  சொல்றே  நீயி?…  யாரை கேட்டுடா, நீ ஓகே சொன்னே?… என் லெவல் என்ன!….
ஒரு ரன்பிர் கபூர், ஹிருத்திக் ரோஷன், மகேஷ் பாபு, பிரபாஸ்னாக் கூட ஏதோ  கன்சிடர்  செய்து இருப்பேன்.
புதர்  மாதிரி ஒரு தலை.
பழம் மாதிரி ஒரு முகம். கொத்தவரங்காய்க்கு,   பாண்ட் ஷர்ட் போட்ட மாதிரி ஒரு உருவம்.
உனக்குக், ‘குன்னூர் இளவரசி’ தேவைப்படுதா!…
மேரேஜ் அது, இதுன்னு  தட்டைத் தூக்கிட்டு அங்கிள், ஆன்ட்டி  கூட, வந்தே  அணுகுண்டை  உன் மேல தூக்கிப் போட்டுடுவேன்டா.  பல்லி வாயா!…” என்று பொரிந்து தள்ளுவாள்.

அவ வாய் குன்னூர் தாண்டியும் நீளும் என்பதை அறிந்தாலும், அவளை  வெறுப்பு ஏற்றவில்லை என்றால் கார்திக்குக்கு பொழுது போகாது.

“என்ன!…  பப்பும்மா!…. சொல்லவேயில்லை.” என்றான் மிகவும் பொறுமையாக.

‘எதற்கு இந்த எலி இப்படி பம்முது!’ என்று நினைத்தவாறே, “எதைடா சொல்லலை, கழுவலை என்கிறே?” என்றாள் மதுரா அவன் வைக்கப் போகும்  ஆப்பு  தெரியாதவளாய்.

“ஏண்டீ!… ப்ரபாஸ்க்கு வயசு நாற்பது. மகேஷ் பாபுவுக்கு நாற்பத்தி ரெண்டோ,  ஐந்தோ, ரன்பிர் கபூருக்கு கூட முப்பத்தி ஐந்தோ என்னவோ. பட்…  என்ன பண்றது!
கிழவிக்குத் தானே, அவ வயசு ஆட்கள் மேல் கிரேஸ் வரும். உன்னை மாதிரிக் கிழவிக்கு, என்னை  மாதிரி  யூத்  கேட்குதோடீ  காட்ஜில்லா!..
இதுல, ‘குன்னூர் இளவரசின்னு’ பில்ட் அப் வேற.  உன்னை எல்லாம் உள்ளூர், கிழவியாகக்  கூட  ஏற்க  முடியாது.

இந்த மாமன், ரேஞ்சு தெரியுமாடீ உனக்கு!… ஆஸ்திரேலியா ஆபீஸ் வந்து பாருடீ….  என் பெண் விசிறிங்க கிளப்பை. உன்னை மாதிரி சப்ப கிடையாது.  ஒவ்வொருத்தியும்  சும்மா கும்முன்னு இருப்பாளுங்க.” என்றவன், தன் போனில் இருந்த புகைப்படம், விடியோவைக் காட்ட ஆரம்பித்தான்.

‘காட்டினான்…
காட்டினான்…
காட்டி கொண்டே இருந்தான்….’ என்று சொல்ல  வேண்டுமோ!

‘சொந்த  செலவில்  சூனியம்  வைத்துக்  கொள்வது  என்பதும்,  தவளைத்   தன் வாயால் கெடும் என்பதும்’  இது  தான்  என்பதை  அறியாதவனாய்  கார்த்திக்,  மதுராவிற்குள்  உறங்கிக்  கொண்டு இருந்த, ‘சந்திரமுகியை’ எழுப்பி விட்டு, தனக்குத் தானே, ‘ஸெல்ப் ஆப்’ அடித்து கொண்டான்.
விளையாட்டு  வினையாகிப்  போனது.

அவளைக் கிண்டல் அடிக்க, பொறாமையைக்  கிளப்ப, ‘தான்  யாரு என்று காட்டி விடத் தான்’ அவன் போட்டோக்களையும், விடீயோக்களையும்   காட்டியது.

அவன்  கிருஷ்ணன்  மாதிரி,  நடுவில்  நிற்க,  அவனைச்  சுற்றிக்  கோபிகைகள்  போல்  பெண்கள்  கூட்டம்.

சில பெண்கள், பெவிகால் இல்லாதக் குறையாய் அவனை அணைத்து இருந்தனர்.
சிலர்  கட்டிப்  பிடித்துக்,  கன்னத்தில்  முத்தம்  வைத்துக்  கொண்டு  இருந்தனர்.
கையில்  பீர்,  வாயில்  சிகரெட்  என்று,  ‘நான்  தான் மாஸ்’  என்று ஷோ,  காட்டும்  போட்டோஸ்.

வீடியோக்களில், நைட் கிளப்பில் பெண்களுடன்  ஆடிக் கொண்டு  இருந்தான்.

மதுரா,  ‘தன்னை விட்டு  விலகக் கூடாது’  என்று  ஒரு பொசெசிவ்நெஸ், என்னை  விடச்  சினிமா  ஸ்டார்ஸ் உனக்கு முக்கியமா!’ என்ற பொறாமையில்  தான்,  அவன்   போட்டோக்களைக்  காட்டியது.

ஆனால், அதுவே மதுராவை மனதளவில்  அவனிடமிருந்து  பிரித்து விட, அந்த  நொடி முதல், உண்மையிலே  கார்த்திக்கிடமிருந்து  விலக ஆரம்பித்தாள்.

ஒவ்வொரு  பெண்ணிற்கும், தனக்கு வரும்  கணவனைப் பற்றி, ஏதாவது ஒன்று, இரண்டு எதிர்பார்ப்புகள் இருக்கும்.
மதுராவும் விதிவிலக்கு அல்ல.

அவள் பாட்டி, சங்கரனின் தாயார், ‘ஞானவல்லி’ தீவிர ஸ்ரீராம பக்தர். ராமனின்  புகழைப்  பற்றிச்  சிறு  வயது முதலே,  பேத்திக்குத் தினமும்  சொல்லிக்  கொடுத்து வந்தார்.

ஸ்ரீராமனின், ‘ஒரு வில், ஒரு சொல், ஓர் இல் (மனைவி)’ கொள்கை, மதுராவை மிகவும் கவர்ந்த ஒன்று.

மனதாலும்,  இன்னொரு  மாதைத்  தீண்டேன்’  என்ற வைராக்கியம் அவளுக்கு உயிர்.

அந்த,  ‘ஸ்ரீராமனின்  குணநலத்தோடு  கணவன்  வேண்டும்’  என்று,  மார்கழி மாதத்தில்,  ‘கண்ணனுக்காகத் தவம் இருந்த ஆண்டாள்’ போல, மதுரா,  தன்னுடைய, ‘ஸ்ரீராமன்  போன்ற  கணவனுக்காக’  நினைவு தெரிந்த  நாளாய்,  விரதம்  இருக்கிறாள்.
அது  கார்த்திக்கும்  தெரியும்.

‘மாமன்,  நான்  தான்,  உன் ஸ்ரீ ராமன் இருக்கேனே!…  நமக்கு  ரூட் கிளீயர். பின்,  எதற்காக இந்த விரதம் எல்லாம்?’ என்று கார்த்திக் கிண்டல் அடிப்பதும் உண்டு.

ஆனால், மதுரா, மார்கழி மாத விரதத்தை நிறுத்தியது இல்லை. தனக்கு வருபவன்,  ‘மற்ற  பெண்களின்   நிழலை  கூடத்  தொடவோ,  மற்ற  பெண்கள்,  தன்னை  நெருங்கக் கூட அனுமதிக்க  கூடாது’  என்பதில்  மிகவும் வைராக்கியமாக  இருந்தாள்.

அவள்  தந்தை, அண்ணன்   சிகரேட்,  குடி  என்று  எந்தப் பழக்கமும் இல்லாதவர்கள். தொழில்  துறை  பார்ட்டிக்கு  போகும் போது  கூட, ‘ஜஸ்ட் ஒரு சிப்’ என்பதைக்  கூடக்  கடை  பிடிக்காதவர்கள்.

பவானிக்கு, தன்  கணவன், மகனைப் பற்றி  அதில் மகா பெருமை.
மகளிடம்  சொல்லிச்  சொல்லி  பூரித்து  போவார்.
சோ, மதுராவின், ‘ஸ்ரீ ராமன்’ கேரக்டரோடு, சங்கரன், ரகுவின்  இந்தக் கோட்பாடுகளையும்  சேர்த்து விட்டாள்  மதுரா.

மொத்தத்தில், ‘கலியுக ஸ்ரீ ராமன்’. மனதாலும், இன்னொரு பெண்ணை ஆசையாக  கூடப்  பார்க்காத,  ‘ஏக  பத்தினி  விரதன்.’

அவளின்   ஒட்டுமொத்த  எதிரிபார்ப்பு  கார்த்திக்கின்  விளையாட்டால்,  தவிடுப் பொடி ஆகி, ‘பெரும் அகழியை ஏற்படுத்தி விட்டோம்’ என்பதை உணராமல்,  அவளை  வெறுப்பு  ஏற்றுவதிலேயே, குறியாக இருந்தான்.

ரொம்ப  நேரமாய்   மதுராவிடமிருந்து  சத்தம்  வராது போகவே, அவளைப் பார்த்தவன், அவள் கண்களில் தென்பட்ட வெறுப்பில்  ஆடித் தான்  போனான்.

அவளைப் பற்றி முழுதும் அறிந்த பிறகும், இவ்வளவு வருடங்களாக, அவளுடன் வளர்ந்தப் பிறகும், அவளின் எதிர்பார்ப்புத் தெரிந்த பின்னும் அவளிடம்   அந்தப் போட்டோக்களை, வீடியோக்களைக்  காட்டிய,  தன்  அடி முட்டாள் தனத்தைக் கோடி முறையாவது, இத்தனை வருடங்களில் நொந்து  கொள்வதைத்  தவிர  அவனுக்கு  வேறு  வழி  இருக்கவில்லை.

கார்த்திக்,  காரணம்  இல்லாமல்,  அதைச்  செய்யவில்லை  என்றாலும்,  எந்தக்  காரணத்திற்காக  அதைச்  செய்தானோ,  அது முற்றிலும்  அடிப் பட்டு போனது,  என்னவோ உண்மை.

தலையைச் சுற்றி மூக்கை தொடுவதற்கு பதில்,  நேரிடையாகவே  கார்த்திக்  விஷயத்தை  சொல்லி இருக்கலாம்.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 19

“பப்பு!... பப்பும்மா!.... ஏய்!.... நான்… சும்மா… சும்மா உன்னை வெறுப்பேற்ற, கிண்டல்  செய்யத் தான்….. இது  உண்மை இல்லடீ.  இவங்க எல்லாம்  உடன்  வேலை  செய்பவர்கள்…. அவ்வளவு தான். இவர்களுக்கும், எனக்கும் எதுவும் இல்லடீ. ப்ரோமிஸ்.” என்றவனை கை  நீட்டித் தடுத்த  மதுரா,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்