arrow_back
என்ன தவம் செய்தேன்! 23
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 23 / 85

23

visibility 29
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

சிவகாமி  பாட்டியுடன்,  மரகதம்  பேசிக்  கொண்டு  இருந்த அதே வேளையில்,  ‘சென்னை அண்ணா நகரில்’ ஹை டெக் பங்களாக்கள்  இருக்கும்  பிரதான  தெருவில்  நுழைந்தது  ஆல்வின் பைக்.

அந்தத்  தெருவையே  அடைத்துக் கம்பீரமாக  எழுந்து நின்றது அந்த மாளிகை.
பங்களாவின் கம்பீரம், பழமை, உச்சக்கட்டப் பாதுகாப்பு சொல்லியது  அந்த  மாளிகையில்  வசிப்பவர்களின்  பின்புலத்தை.

க்ரானைட், ரியல் எஸ்டேட், உணவு பதனிடுதல், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், ஷாப்பிங் மால்கள் என்று அனைத்திலும் கொடிக் கட்டிப் பறக்கும் , ‘ரத்தன் சிங்’ குடும்பத்தின் பிரதான வீடு அது.

ரத்தன் சிங் குடும்பத்தினர்,  ‘ஜெய்ப்பூர்  ராஜ’  வம்சத்தினர். 
‘ரத்தன் சிங்’ என்பது வழி வழியாக  வரும் குடும்ப பெயர். நான்கு தலைமுறைக்கு  முன்பே,  தமிழகத்தில்  குடி  ஏறி  இருந்தனர்.

பல  தொழில்  வல்லுநர்கள், மல்டி மில்லியனர்கள். தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவிலும், பிற நாடுகளிலும் தொழில் செய்பவர்கள்.

அந்தக் குடும்பத்தின்  இன்றைய வாரிசு, ‘சூர்ய  பிரதாப் ரத்தன் சிங்’.

அவனைக் காணத் தான் ஆல்வின் வந்து இருந்தது.
ஆல்வின்,  விஜய், பாலாஜி மூவரும் சூர்யாவிற்கு ஜூனியர்கள். இவர்களிடம்  சூர்யாவிற்கு  நல்ல  நட்பு  உண்டு.

சட்டென்று  பார்க்கத், ‘தெலுங்கு  நடிகர் ராம் சரண்’ போல இருந்தான்.
ஆறடி ரெண்டு அங்குல உயரம், சிக்ஸ்  பேக் உடல் அமைப்பு, செதுக்கிய முகம்,  ராஜாக்களை,  கூர் விழிகள்  என்று  பல பெண்களின்  கனவு நாயகன்.

மனைவி,  ‘ரித்திகா’  இழந்த வேதனையில்  இருந்தாலும்,  அவனின்  ஆளுமை  எந்தவிதத்திலும்   குறைந்து  இருக்கவில்லை.

அந்தப்  பங்களா  பாதுகாவலன், ‘உத்தம் சிங்’ ஆல்வினை சூர்யாவின் மீட்டிங்  ரூமிற்கு  அழைத்துச் சென்றான். போகும் வழியில் ஒரு கணம் தேங்கி  நின்றான்  ஆல்வின்.

படிகளில், ‘புள்ளி மான்  எனத்  துள்ளி  குதித்து’  இறங்கிக்  கொண்டு இருந்தாள்,  சூர்யாவின் சகோதரி, சந்திரகலா தேவி.

“ஹாய் ஆல்வின் அண்ணா!… என்ன ரொம்ப மாசமா ஆளையே பார்க்க முடியவில்லை  இந்தப் பக்கம். எப்படி இருக்கீங்க?…
மிருதுளா அண்ணி, குழந்தை  எல்லாம் நலமா?” என்றாள் சந்திரா ஆல்வினின் கைகளை  பிடித்துக்  கொண்டு.

“இல்லைம்மா… கொஞ்சம் வேலை இருந்தது அதான் வரமுடியலை.” என்றான் ஆல்வின்.

சந்திராவின்  ஆபத்து  அசெஸ்மென்ட்,  ஆல்வினின்  செக்யூரிட்டி கம்பெனி தான் ஏற்று இருந்தது.

‘சந்திராவிற்கு  ஆபத்து!’ என்று முன்னரே  எச்சரிக்கை   அனுப்பியும்   இருந்தான்  ஆல்வின்.
ஆனால்  எவ்வளவு  பாதுகாப்பாக  இருந்தாலும், ‘சந்திராவிற்கு பதில் ரித்திகா’  சிக்கி  உயிர்  இழந்து  இருந்தாள் சந்திராவிற்கு பதில்.
ரித்திகாவைக் கடத்தி  இருந்தான் சுமன்.

“மிருதுளா அண்ணி,  எப்படி  இருகாங்க?…  ஐயோ!…  வந்தவங்களுக்கு சாப்பிடக்  கூட,  எதுவும்  கொடுக்காம  பேசிட்டு  இருக்கேன்   பாருங்க. வாங்க  அண்ணா,  சாப்பிடலாம்.” என்றாள் சந்திரா.

“மிருதுளா நல்ல இருக்காமா. உன்னை ரொம்ப விசாரித்தா…. ஏதோ டாக்டர்கள், கெட்  டு  கெதர் வருதாமே!… அதைப் பத்தி உன்னிடம் பேசணும்  என்று சொல்லிட்டு இருந்தா.  
சாப்பிட்டுட்டு  தான் வந்தேன். நீ  போய்ச் சாப்பிடுமா.  ரத்தன்ஜீ,  வெயிட் செய்துட்டு இருப்பாங்க.” என்றான் ஆல்வின்.

“அடுத்த முறை வரும் போது,  மிருதுளா அண்ணியையும் கூட்டி வாங்க அண்ணா…. பை.”  என்றவள்   சிட்டாகப்   பறந்து  மறைந்தாள்.

கள்ளம்  கபடம்  இல்லாமல், எல்லாரிடமும் சரி சமமாய் பழகும் தேவதை பெண்  சந்திரா.
தொழில்  முறை  டாக்டர்  வேறு.  மருத்துவத்தை சேவையாய் செய்து  கொண்டு  இருப்பவள்.   

சூர்யா அலுவலக அறைக்குச் செல்லும் செல்லும் வழியில், ஆள் உயர ரித்திகாவின்,  ‘ப்ளோ  அப் படம்’ மாலை சாற்றப்பட்டு இருக்க, அதைக் கண்ட  கண்கள்  தானாகக்  கலங்க,  அந்தப்  படத்தின்  முன் நின்று விட்டான்.  

‘மனதளவில்  குழந்தைப்  பெண்ணான,   இவளைச் சிதைக்க  அந்தக் கேடு கெட்டவனுக்கு,  எப்படித்  தான் எண்ணம் தோன்றியதோ!… 
சந்திராவைப் போலத்  தானே ரித்திகாவும்….  ‘அண்ணா!…’ என்று பாசமாய் அழைப்பாங்களே!…
சூர்யாவும்,  ரித்திகாவும்  நடந்து  வந்தால்,  அத்தனை  பாந்தமாய் இருக்குமே!…’ என்று  படத்தைப்  பார்த்துக்  கண்ணீர்  வழிய  நின்ற, ஆல்வின்   தோளில்,   உத்தம்  சிங்   கைப்பதிந்தது.

அவன்  கண்களும்,  கலங்கித்  தான்  இருந்தது.

“ஜி!…..  காத்திட்டு இருப்பார் ஆல்வின்…”  என்றான்  குரல்  தழுத்தழுக்க.      

உத்தம் சிங், ஆல்வினை சூர்யாவின் அறைக்கு அழைத்துச் சென்றான். கதவைத் தட்டி விட்டு, அனுமதி கிடைத்த உடன் உள்ளே நுழைந்தனர் இருவரும்.

அந்தப்  பெரிய ஆபீஸ்  அறையில்,  மிகப்  பெரிய  டீக்  வுட்  மர டேபிள்  பின்  அமர்ந்து  இருந்தான், சூர்யா பிரதாப் ரத்தன் சிங். 

அவனிடம் ஒரு நாட்டை ஆளும் அரசனின் கம்பிரம் இருந்தது.
அவர்கள் இருவரை வரவேற்கும் விதமாகத் தலை அசைத்தான் சூர்யா.

கருப்பு நிற tuxedoவில்,  ஆண்மைக்கு  இலக்கணமாக  அமர்ந்து  இருந்தான்.

“ஏன்  ஆல்வின்,  எங்க  வீட்டிலில் எல்லாம் சாப்பிட மாட்டியா என்ன! சந்திரா,  கூப்பிட்டாப்  போய்ச்  சாப்பிட  வேண்டியது  தானே!…  என் மேல்  ஏன்  பழிப்  போடறே?”  என்றான்  சூர்யா,  ஆல்வின் அமர்ந்ததும்.

உத்தம் சிங், சூர்யாவிற்கு பின்னால் போய் நின்றவன்  கைகளைக் கட்டி  கொண்டு  விறைப்பாக  நின்றான்.

“சார்!… சார்!….” என்று  தந்தி  அடித்தான்  ஆல்வின்.

“சூர்யான்னு கூப்பிடுடா!… என்ன இது பார்மலா சார்… அது இதுன்னு…    ஓகே!… ரிலாக்ஸ் ஆல்வின்.
என்ன, ரொம்ப மாசம் கழிச்சு, ‘என்னை மீட் செய்யணும்’  என்று  உத்தம் கிட்டே, பெர்மிஷன் கேட்டு இருக்கே!….
என்ன  விஷயம்…. நேத்து,  ‘அந்தக் கஜா  பார்ம் ஹவுஸ்’ மேட்டரா!…” என்றான்  சூர்யா வெகு நிதானமாக.

அதிர்ந்து போன ஆல்வின், “சார்!… உங்களுக்கு எப்படிச் சார் தெரியும்?” என்றான்  திகைப்புடன்.

“உன்னை மாற்றவே முடியாதே!… சரி எப்படியோ கூப்பிட்டுக்கோ.
சில்லிக் கொஸ்டின் ஆல்வின். டூ  யூ திங்க்  ஐ ஆம் இடியட்!… ஆல்ரெடி சுமனோடு, சேர்ந்து  ஐந்து  பேர், என்  வாட்ச்  லிஸ்ட்ல  இருகாங்க.  அவங்க தும்பினா கூட,  எனக்கு   நியுஸ்   வந்துடும்.

வாயை  மூடிட்டு  இருந்தா,  ‘கையால் ஆகாதவன்’ என்று நினைத்து விட்டாயா!…. ஏற்கனவே  ரெண்டு  உயிரை  எடுத்தாச்சு.  எடுத்த பிறகு  தான் தெரிந்தது,  ரித்திகா  மரணத்திற்கு அவங்கக் காரணம் இல்லை என்று. எல்லாம்  வெறும் அம்பு.

எய்தவன்  வேறு  யாரோ.  சின்ன க்ளூ  கிடைக்கட்டும். மரணமே மேல் என்று கதற வைக்கிறேன்.” என்றவனை கண்டு  ஆல்வின்,  மிடறு  விழுங்கினான்.

சூர்யா குரலை உயர்த்தவில்லை. சத்தம்  போட்டுக் கத்தவில்லை, நரம்புகள்  புடைக்கக்  கர்ஜிக்கவில்லை. ஆனால்,  இவை  அனைத்தும்  அவன் அமைதியின் பின் இருந்தன.
கண்களில், பல நூறு எரிமலையின் கோபம்   மின்னியது. 
முகம்  கற்பாறையாக  இறுகிப்  போனது.

“சார்!…  சார்!…  அப்போ நேத்து அங்கே!… அங்கே!..” என்றான் ஆல்வின்.

“ஹ்ம்ம்ம்!… உத்தம் அங்கே தான் இருந்தான். சுமனைக் கருணாப் புரட்டி எடுத்தது  எல்லாம்  லைவ்  ஷோவா  பார்த்துட்டேன்.  ‘சுந்தர்பன் சதுப்புநில  காடு’  கான்செப்ட்   நல்லா   தான் இருந்தது.
என்னவொன்னு  மதுராவை,  அவன்  தொட  நினைத்தற்கே  அவனை  விஜய்  கொன்று   இருந்தால்,  இன்னும்  சந்தோஷப்பட்டு  இருப்பேன். 
சுமன் தான்,  ரித்திகா மரணத்திற்கு காரணம் என்று ப்ரூப் கிடைக்கட்டும். சுமன் சாவு என் கையில் தான்.”  என்றவனின் கண்களில் வந்து  போன  கோபம்  கண்டு,  எதற்கும்  அஞ்சாத  ஆல்வினுக்கே,  உள்ளூர  நடுங்கி  போனது.  

“ஆமாம்,  உங்களுக்கு   எல்லாம்  என்  நினைவே  வராதா!…  கருணா  சிஸ்டர்  திருமணம்   அப்போ  நான்  இந்தியாவிலேயே  இல்லை  தான். ஆனா, அதற்காக என்னிடம் ஒரு ஹெல்ப்  கேட்கக் கூட உங்களுக்கு எல்லாம்  தோணலியா!” என்றான்  சூர்யா  கோபமாக.

“இல்லை சார்…. அப்போ எங்களுக்கு நீங்க, ‘ராஜ  குடும்பச் சூர்ய பிரதாப்ஜியா  அறிமுகம்  ஆகலையே!….  உங்கத்  திருமணம்  நடந்தது கூட ஒரு  பிரைவேட்  விழாவாகத்  தானே!….  ரித்திகா மேடம்,  மரணத்திற்கு பிறகுத் தானே!….”  என்று   ஆரம்பித்தவன்   சொல்ல   வந்ததை   சொல்லாமல்,
“அதன்  பிறகு  தான்,  நீங்கத்  தான்  சூர்யா  என்பதே,  எங்களுக்குத்  தெரிய வந்தது.  தொழிலில்,  சமூக வலைத்தளத்தில்  கூட  உங்களைப்  பற்றிய அதிக  விவரம்  தெரியவில்லை  தான்.”  என்றான்  ஆல்வின்  சங்கடத்துடன்.

“உனக்கே  தெரியும் ஆல்வின், எங்க குடும்பத்தில் நடந்த துர் மரணங்கள் பற்றி.  பாதுகாப்புக்  காரணங்களுக்காக  என்னைப்  பற்றிய விவரம், அதிகமாய் வெளியே யாருக்கும் சொன்னது இல்லை தான். 
அது ஒரு விதத்தில்,  விஜய்  வாழ்க்கையைக்  காப்பாற்ற  முடியாமல்  செய்து  விட்டது.      

விஷயமே தெரியாது. இல்லைன்னா  அந்தத் திவாகரை  எப்பொழுதோ தூக்கிட்டு,  ரூபிணிக்கு   திருமணம்  செய்து  வைத்து  இருப்பேன்.

கருணாவும் இப்படி சோனா கிட்டே மாட்டி இருக்க மாட்டான். இப்போ  அந்தப்  பேய், சுமனோடு   சேர்ந்து   ஆடிட்டு   இருக்கு.
விதி!… வேற என்ன சொல்ல…

கல்லூரி நாட்களில் எவ்வளவு ஒன்றாய் இருந்தோம்… இப்போ ஆளுக்கு ஒரு மூலையில் சிதறி போய்…. அந்தக் காலத்திலேயே இருந்திருக்கலாம் இல்லை ஆல்வின்…

எந்தக்  கவலையும் இல்லாமல்,  சிட்டுக்  குருவியாய்  நண்பர்களுடன்  ஒன்றாய்  பழகி, ஊர் சுற்றி…. ஐ  மிஸ்  தோஷ் டேஸ்டா ஆல்வின்… ஐ மிஸ் யு  ஆல்  வெரி  மச்.
      
விஜய் ஏன்டா இப்படி மாறிப் போனான்?… காலேஜ் டேஸ்ல தப்புச் செய்தவர்களைத் தூக்கிப் போட்டு மிதிச்சவனாடா இப்போ இருப்பவன்?    ‘எங்கு இருந்தாலும் வாழ்க,
உன் இதயம் அமைதியில் வாழ்க மஞ்சள் வளத்துடன்  வாழ்க’  என்று  பாடிட்டு, எந்தக்  காலத்துல   இருக்கான்  அவன். 
ஸ்டுபிட்!…  அவனவன்  காதலுக்காக, எது எதையோ  தியாகம்  செஞ்சுட்டு  இருக்காங்க.

இவன்,  ‘தான் காதலித்தப் பெண்ணையே அடுத்தவனுக்கு தியாகம்’ செய்கிறான். அப்படியே சோனவை திருத்தி மறுவாழ்வு  கொடுக்கப் போகிறானா  என்ன!…

மதுரா, எவ்வளவு ப்ரிசீயஸ்  தெரியும் தானே!… இடியட்!…  மத்தவனுக்கு  தாரை  வார்க்கிறானாம்.

“சார்!…  அப்போ மதுரா…”  என்றான்  ஆல்வின்.

“மதுரா!…  இனி  என்  பொறுப்பு  ஆல்வின். என்னைத் தாண்டித்  தான் எந்தவித ஆபத்தும் அவளை நெருங்க முடியும். ஆல்ரெடி அதற்கான வேலைகளை  நான்   ஸ்டார்ட்  செய்து  விட்டேன்.
கருணாவிடம் சொல்லிவிடு. இனி கஜா இண்டஸ்ட்ரிஸ்ல, ‘என் மதுரா’  வேலை   பார்க்க  மாட்டா.
சோனா, சுமனால் அவளுக்கு வரும்  ஆபத்தைத்  தடுக்க   நான்   இருக்கேன்.”  என்றான்  சூர்யா.

“ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன், மதுராவை என்னடா செய்து வைத்தீங்க!…  மதுரா  கேரக்டருக்கு,  அவ இப்படியெல்லாம்,  சோனா போன்ற  ஈனப்  பிறவிக்  கிட்டே  வேலை செய்யறவளே கிடையாதே! 

இந்நேரம்  சோனாவை,  தூக்கிப்  போட்டு,  நாலு மிதி மிதித்து இருப்பாள் என்று எதிர்பார்த்தேன்…. என்ன நடந்தது?” என்றான் சூர்யா லேசர் பார்வையை,  ஆல்வின்   மீது  செலுத்தி.

சூர்யாவின்  அந்தப்   பார்வையை,   தாங்க  முடியாதவனாய்  தன்  இருக்கையில்  நெளிந்தான்  ஆல்வின்.

‘எல்லாம் மாறித் தான் போய் இருக்கிறது. பிரச்சனையை இவனிடம் சொன்னால்,  அதற்கு  ஏதாவது  செய்வான் தான். ஆனால், ‘விஜய் மதுராவைக்  காதலிக்கிறானா!’  என்ற  சந்தேகத்திற்கே,  சுமன்  போன்றவனை வைத்து, மதுராவை டார்கெட் செய்து இருக்கும் சோனா, உண்மை  தெரிந்தால்,   ‘உயிரையே   எடுக்கமாட்டாள்’   என்பது  என்ன  நிச்சயம்.
மதுராவின்  உயிர்  அல்லவா  இங்கே  பணயப் பொருளாய் இருக்கிறது.’ என்று  தனக்குள் விவாதித்து கொண்டு இருந்த ஆல்வின், தன் மௌனமே சூர்யாவின் சந்தேகத்தை, உறுதிச் செய்து கொண்டு இருப்பதை உணரவில்லை.

சூர்யா  போட்டுத்  தான்  வாங்கினான்  என்பதை அறியாத ஆல்வின், தனக்குள்  கடந்தக்  காலத்தை  யோசித்து  கொண்டு  இருக்க,  அவன்  முகத்தில்  வந்து  போன  பாவங்களைக்  கண்ட சூர்யாவும், உத்தமும் பார்வையை   பறிமாறிக்  கொண்டதை   கவனிக்கவில்லை.

“ஒகே ஆல்வின்!… நாளை முதல் மதுரா என் பொறுப்பு. கருணா இனி எதற்கும்,  டென்ஷன்  ஆக  வேண்டாம் என்று சொல்லி விடு. நீ கிளம்பலாம்.” என்ற சூர்யாவைக் கண்டு மிடறு விழுங்கியவனாக எழுந்து நின்றான் ஆல்வின்.

சூர்யாவின், ‘இந்த  அதிரடியை’ ஆல்வின்  சுத்தமாக  எதிர் பார்க்கவில்லை.
‘கிணறு  வெட்டப் பூதம்  கிளம்பியக் கதையாக இருக்கிறதே!’ என்று மண்டையை  பிய்த்துக்  கொண்டான்.

‘சூர்யா நினைத்ததை நடத்தி  பழக்கப்பட்டவன். அவன் செயல்கள் எல்லாமே  அதிரடியாகத் தான்  இருக்கும். எதிராளிச் சிந்திக்க அவகாசமே  கொடுக்க மாட்டான். எதிலும் ஜெயிப்பது,  சூர்யாவாகத் தான்   இருக்கும்.
அவன்  தோல்வியைச் சந்தித்த இரண்டாவது இடம் ரித்திகாவிடம் மரணத்தில்  மட்டுமே!… 
முதல்  தோல்வி மதுராவிடம்.

ஆல்வின்  கிளம்பிய  உடன்,  சூர்யா எதிரே வந்து நின்றான் உத்தம் புன்னகையுடன்.

“அடுத்தத் திருமணம் சீக்கிரம் எதிர்ப் பார்க்கலாமா ஜீ?” என்றான் அவன் ஹிந்தியில்.

“உத்தம்!…”  என்றான்  சூர்யா,  புன்னகையுடன்  ஒரு  விரலை ஆட்டி.

“சிரித்து மழுப்பதே ஜீ!… காலேஜ் டைம்லேயே, நீ மதுரா மேடம் பற்றி  விசாரிக்கச் சொன்னது,  என்னிடம் தான் ஜீ.
எந்தப் பெண்ணையும்   ஏறெடுத்து  பார்க்காத  உன்னை,   இம்ப்ரெஸ்  செய்த  முதல்  பெண்   மதுரா  பெஹன் தான்  என்று  எனக்குத்  தெரியும்.
என்னிடம் ஏன் பொய் சொல்ல ட்ரை பண்றே!…. 
ஒரு தடவை மிஸ் ஆகிட்டாங்க. உனக்கும்  ரித்திகா  மேடம்  கூட,    உங்க  வீட்டுல,  அவசர அவசரமாய்   மேரேஜ்  முடிச்சுட்டாங்க.
நீ கருணா இல்லை ஜீ, ‘தியாகின்னு’ பட்டம் வாங்க.
‘உன்னுடையது உனக்கே’ என்று இருப்பவன்….  இந்தத் தடவை  மிஸ், மிஸ்ஸாக மாட்டாங்க…. மிஸஸ்  ஆவாங்க…
ஐ  நோ  மை  ஜீ.  என்ஜாய்.”  என்றான் உத்தம்  புன்னகையுடன்.

“நீ  நினைப்பது  போல்  மதுராவை  மணப்பது  எல்லாம் அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை உத்தம்.” என்றான் சூர்யா ஏதோ யோசனையாக.

“ஜி!…  போ  ஜி!…  சும்மா  காமெடி  செய்யாதே!….   நீ   மதுராவை  மணக்க  எது  தடையாக  இருக்கப்  போகிறது?….  ரூட்  இல்லையென்றாலும்  கூட,  புது  ரூட்  போடுபவர்  ஜி  நீ…..  இதெல்லாம்   ஜுஜுபி.”  என்றான் உத்தம்.

“எது  இல்லை உத்தம், ‘யார்?’ என்று கேள்.” என்ற சூர்யாவின் குரலில் உத்தம்  புருவம்  சுருங்கியது.

“மதுராவை  நான் மணக்க,  ஹிமாலய  மலை  போல்  நிற்க  போவது  விஜய் தான்   உத்தம்.” என்றான் சூர்யா.

“விஜய்  சார்!…  நோ  சான்ஸ்  ஜி!…..   அவர்  நல்லவர்.”  என்றான்  உத்தம்.

“அவன்  கெட்டவன் என்று  நான்  சொல்லவேயில்லையே  உத்தம். அவன் நல்லவன்  தான், அதே  சமயம்  விஜய்,  மதுராவை காதலிப்பவன்.”  என்றான்  சூர்யா.

“ஜி!…  என்ன  ஜி  சொல்றே!…  விஜய்  சார், மதுராவை லவ் செய்யறாரா!..
இது  என்ன  புது  ட்விஸ்ட்?”  என்றான்  உத்தம்  திகைப்புடன்.

“காலேஜ்  நாட்களில் விஜய்க்கு,  அவன்  இசைக்கு, குரலுக்கு எவ்வளவு விசிறிங்க முக்கியமாய் பெண்கள் இருந்தாங்கன்னு தெரியும் தானே?” என்றான்  சூர்யா.

“ஓஹ்!….  சோனா,  ‘விஜய்யை  லவ்  செய்து  இருக்கலாம் என்ற சந்தேகத்தில்’ கொன்ற ஒரு பெண்ணையும், இப்போ மனநலம் பாதிக்கப்பட்டு  டிரீட்மென்ட்டில்  இருக்கும்  இன்னொரு பெண்ணை பற்றிச் சொல்றியா ஜி!”  என்றான் உத்தம்.

அவர்கள் இருவரின் பேச்சில், விஜ்ஜையின் கடந்த காலம், அலசப்பட்டது.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

24

"யெஸ்...  அவங்களுக்கு  விஜய்  பதறினான் என்பது உண்மை தான். ஆனால்,  தோ  பார்  இந்த  வீடியோ…. நேத்து,  'கஜா  பார்ம்  ஹவுஸ்ஸில்' சுமனை  விஜய்  புரட்டி  எடுப்பது.இங்கே விஜய் கண்களில் இருக்கும் அந்த வெறி, ஒரு காதலனின் வெறி உத்தம்.‘தனக்குச்  சொந்தமான …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்