arrow_back
என்ன தவம் செய்தேன்! 24
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 24 / 85

24

visibility 27
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

“யெஸ்…  அவங்களுக்கு  விஜய்  பதறினான் என்பது உண்மை தான். ஆனால்,  தோ  பார்  இந்த  வீடியோ…. நேத்து,  ‘கஜா  பார்ம்  ஹவுஸ்ஸில்’ சுமனை  விஜய்  புரட்டி  எடுப்பது.
இங்கே விஜய் கண்களில் இருக்கும் அந்த வெறி, ஒரு காதலனின் வெறி உத்தம்.
‘தனக்குச்  சொந்தமான  ஒரு  பெண்ணை,  இன்னொருத்தன் தொட  நினைக்கிறான்  என்பது தெரியும் போது, எல்லோர்க்கும் வரும் தார்மீக  கோபம்’…  
மதுரா,  யாரோ  ஒருத்தியாய்  இருந்தால், விஜய் கண்களில்  இந்த  நெருப்பு  எரிந்து இருக்காது.

‘காதலிக்கும்  பெண்ணுக்கு’  ஒன்று  என்றால் தான்,  இந்த அளவு கோபம் வரும்…. எப்படி தெரியும் என்று கேட்காதே!….

விஜய்க்கு எந்த அளவிற்கு கோபம்  இருக்கிறதோ, அதே  அளவு  கோபம்,  வெறி  எனக்கும்  இருக்கிறது. ஏனென்றால், நானும் மதுராவை காதலிப்பவன் தானே!… இனத்தை  இனம்  அறியும் உத்தம்.” என்றான்  சூர்யா, விஜய்  சுமனை புரட்டி  எடுக்கும்  வீடியோவை  பார்த்தவாறு.

சூர்யா  மனம்,  நிலை  இல்லாமல்  தவித்துக்  கொண்டு  இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். மதுரா என்ற தேவதை பெண்ணின் கரம் பற்ற, ‘அவன்  தவம்  இருக்கிறான்’  தான்.

ஆனால்,  மதுராவிற்கும்  அவனுக்கும் நடுவே எப்பொழுதும் இருக்கும், ‘விஜய் என்ற அகழியைக்’  கடப்பது  என்பது  அன்று வரை அவனால் இயலாத ஒன்றாகவே இருக்கிறது என்பது புரிய, அவனிடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சு  வெளிவந்தது.                  
                                    
“எல்லா  ஏற்பாடும்  செய்து விட்டாயா உத்தம்?”  என்றான்  சூர்யா.

“ஈவினிங் கிளம்பிடலாம் ஜீ!…. சோனாவை  பாலோ  செய்து, சுஷ்மிதா  போய் இருக்கா. எங்கே இருந்தாலும் சோனாவை   பேக் செய்து நம்ம இடத்திற்குத்   தூக்கி   வந்துடுவாங்க.”  என்றான்  உத்தம்.

உத்தம்   போனவுடன்,  தன்  சேப்டி  லாக்கரை  திறந்த  சூர்யா, அதில் இருந்த பென்டிரைவ்   ஒன்றை   வெளியே எடுத்து, லேப்டாப் உடன் இணைத்தான்.

ஒரு  வீடியோ  ஓட  ஆரம்பித்தது. அதில் மேடையில் பாடிக் கொண்டு இருந்தது  மதுரக்ஷியே  தான். அந்த வீடியோவை ஓட விட்டவன் அதை ரசிக்க  ஆரம்பித்தான்.

பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்?
நாளை இந்த வேளை பார்த்து
ஓடி வா நிலா!
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா!
தென்றலே என் தனிமை
கண்டு நின்று போய் விடு… ஆ….
வண்ண விழியின் வாசலில்
என் தேவன் தோன்றினான்!
எண்ணம் என்னும் மேடையில்
பொன் மாலை சூடினான்!
கன்னி அழகை பாடவோ!..
அவன் கவிஞன் ஆகினான்?…’
என்று  மதுரா, பாடிக் கொண்டு  இருந்ததை,  திரும்பத்  திரும்ப  ஓட  விட்டு ரசித்துக் கொண்டு  இருந்தான்.

“உன்னை  ஒரு  தடவை  மிஸ்  பண்ணிட்டேன்  மதுரா!….  இந்தத் தடவை  மிஸ் ஆக மாட்டே!…  ஐ வில் மேக் யூ மைன் டியர்.” என்றான் கண்களில்  காதலோடு.

சூர்யா  கருத்துப்படி  விஜய்,  மதுராவை   லவ்  செய்து  இருக்கிறான். 
உத்தம் பேசியதை பார்த்தால், ‘சூர்யாவும் இம்ப்ரெஸ் ஆகி மதுராவைப்  பற்றி விசாரிக்கச்  சொல்லி’  இருக்கிறான்.

விஜய்,  சூர்யா   மதுராவிடம்  தங்கள்  காதலைச்  சொன்னார்களா?
ப்ரொபோஸ் செய்தார்கள் என்றால், ‘சூர்யா ஏன் ரித்திகாவை மணக்க வேண்டும்?….
விஜய்  சோனாவிடம்  ஏன்  மாட்ட வேண்டும்?’

விஜய்  கூடத்,  ‘தங்கைக்காகக்  காதலை  தியாகம்’  செய்தான் என்று எடுத்துக் கொண்டாலும் சூர்யா, இது போன்றத் தளைகளுக்குக் கட்டுப் படாதவன் ஆயிற்றே!…

அவனும் தன் காதலை, மதுராவிடம் சொன்னது போலத் தெரியவில்லை!

யாராவது ப்ரொபோஸ் செய்து இருந்தால், இந்நேரம் இவர்கள் இருவரில், ஒருவருக்கு  மனைவியாகி இருக்க வேண்டியவள், சோனாவிடம் ஏன் மாட்டித்  தவிக்கிறாள்?

எங்கு  விதி, விளையாடி  இவர்களின்  பாதைகளைச்  சேர  விடாமல் செய்தது!

விடையைத்,  தனக்குள்  வைத்துக்  கொண்டு  காலம்,  இவர்களைப்  பார்த்துச் சிரித்து கொண்டு இருந்தது.

அதே சமயம்,  சென்னை  நுங்கம்பாக்கத்தில்  சிவகாமி,  தன்  வீட்டில்  ஆழ்ந்த  சிந்தனையில்  இருந்தார்.

நுங்கம்பாக்கத்தில்  இருந்தது,  ‘வெற்றி  இல்லம்.’
முன்  பரந்து  விரிந்த  தோட்டம். 
அதன்  நடுவே  செயற்கை  நீரூற்று.  அந்த நீர்  ஊற்றின்  நடுவே,  பளிங்கு  கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதியவாறு நின்று இருந்தார்.

மூன்று அடுக்கு மாளிகையில், கீழ் தளத்தில் அமைந்து இருந்தது சிவகாமி பாட்டியின் அலுவலகம்.
மரகத்திடம் பேசிய பின்  அவர் உள்ளம்   உலைக்களமாகக்   கொதித்து  கொண்டு  இருந்தது.

ஒரு நாட்டினை ஆளும் ராணியின் கம்பீரத்தோடு இருந்த அவர் யோசனையில்  இருந்தார்.
கை  எடுத்துக் கும்பிட  தோன்றும் தெய்வீக அழகு.

ஏதேதோ  மனக்கணக்கு போட்டவர் இண்டர்காம் எடுத்து, “வெற்றி! ருத்ராவை,  கூட்டிட்டு  ஆபீஸ்  ரூமுக்கு  வா.” என்றார்.

ஐந்தே  நிமிடங்களில்  பேரனும், மகனும் உள்ளே நுழைய அவரின் கண்களில்   இருவரையும்   கண்டு,  கர்வம் தோன்றியது.

“சொல்லுங்கம்மா.” என்றார் வெற்றி, தாயின் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்த படி

ருத்ரா பாட்டியின் நாற்காலி கைப்பிடியில்  மேல் அமர்ந்து கொண்டு, பாட்டியின்   தலை   மேல்,  தன்  தலையை  வைத்துக் கொண்டான்.

வெற்றி பார்ப்பதற்கு அந்தக் கால, ‘நடிகர் பிரபு’ போலவும், அவர் மகன், ‘ருத்ரா, நடிகர் சூர்யா’  போலவும்  அசப்பில்  இருந்தனர்.

“அக்கா!…   போன்   செய்து   இருந்தாங்க.”  என்றார் உணர்ச்சி அற்றக் குரலில்.

ருத்ராவின்  கைப்பாட்டியின்  தோளில்  அழுத்தமாகப் பதிய, வெற்றியின் முகம்  கோபத்தால்  சிவந்தது.

“இந்தத்   தடவை  என்ன  செய்து  வைத்தான்  அந்த  ஆளு?” என்றார்  வெற்றி  நரம்புகள்  புடைக்க.

“இந்தத்   தடவை,  அந்த   ஆள்  கிடையாது…  சோனா!…” என்றார்  சிவகாமி.

“அந்த ஆளும், அவர் பொண்ணும் வளர்த்த விஷப்பாம்பு அது. ஏதாவது செய்யலைன்னா தான் புதுசு. வேறு வேலை வெட்டி எதுவும் இல்லாமல், மத்தவங்க  வாழ்கையை  அழிப்பதே  குறிக்கோள்  என்றும் அலையும்  பிசாசுக்  கூட்டம்  வேறு  என்ன  தான் செய்யும்?” என்றார் வெற்றி ஏளனமாக.

“யார்,  பாட்டி  சோனாவிடம்  மாட்டியது  மதுரா  தானே!…  விடியற்காலை கருணா  போன் செய்து இருந்தான். ரகு, மதுரா பிரதர் நம்முடைய பெங்களூரு  சாப்ட்வேர் கம்பெனியில் தானே வேலை செய்யறான். அவனைச் சென்னைப்  ப்ராஞ்சுக்கு, மாற்றச் சொன்னான். மாற்றிட்டேன்.”  என்றான் ருத்ரா.

“மதுரா!…  சேதுவின்  தம்பி, சங்கரனின் மகளும் கூட…. ஒரு வகையில் எனக்குத்   துணை   நின்றது   மதுராவின்  தாத்தா, பவானியின் அப்பா  தான்.  உங்களிடம்   தான்   சொல்லியிருக்கேன்  இல்லை.” என்றார்  சிவகாமி.

“கருணாவின் உறவு என்று தெரியாது. தொழில் முறை மீட்டிங்கில் அவனுடன்  பார்த்து  இருக்கிறேன்…. க்ளவர் கேர்ள். கடின உழைப்பாளி. விளையாட்டுப்  பெண்  போல்  தோன்றினாலும்,  விஜய்க்கு  அடுத்து,  இந்தர் இண்டஸ்ட்ரீஸ் பற்றி முழுதும் தெரிந்தவள் மதுரா தான்.
நிறைய சாரிடி (charity)   நிகழ்ச்சிகளில்   பார்த்து   இருக்கேன்.”  என்றான் ருத்ரா.

“அவளைத்  தான்   சுமனோடு  சேர்ந்து  நாசம்  செய்ய,  முதல்   அட்டெம்ப்ட் நேத்து  ட்ரை  செய்து இருக்கா.” என்றவர் மரகதம்,  தன்னிடம்  கூறியவற்றை  அவர்களிடம்  கூறினார்.

“ப்ளடி பிட்ச்!…  பெண்ணா இவ!…  கருணா ஏன், இன்னும் இரண்டு பேரையும்  உயிரோடு  விட்டு  வச்சு இருக்கான்!… அவனை அங்கேயே பொலிப்  போடுவதை  விட்டு,  இடியட்!…  இடியட்!…  டாம் இடியட்!…”  என்று  ஹை பிட்சில்  கத்தினான்  ருத்ரா.

தன்  பாட்டிக்குக்  கஜாவால்  நடந்த  கொடுமைகளுக்குப் பிறகு,  பெண்களிடம் யாராவது தவறாக நடந்தால் ருத்ராவின் கோபம் எல்லை  மீறி  விடும்.

“ருத்ரா!…   காம்  டவுன்  மைப் பாய். கொலைத்  தான்,  எல்லாவற்றிக்கும்  தீர்வு என்றால்,   நாட்டில் மிஞ்சுபவர்கள்  வெகு சிலர்  மட்டுமே. அதுக்குன்னு புத்தர்,  இயேசு பிரான்  ரேஞ்சுக்கு  கருணைக் காட்டச் சொல்லலை.

நாம  அடிப்பது ஒரே ஒரு அடியா இருக்கணும். ஆனா, எதிராளி என்னைக்குமே  திரும்ப  எழக் கூடாது ருத்ரா.

இப்போதைக்கு சுமன் அவுட்  ஆப்  தி  பிச்சர்.  அவன்  திரும்ப  வந்தா  பார்த்துக்கலாம்.
நாளைக் காலைக்குள்,  நாலு கோடி ரெடி செஞ்சு, அதை  அந்தச் சோனாவின்  முகத்தில்  விட்டு  எறிஞ்சுட்டு, மதுராவை நம்ம ஆபீஸ்க்கு கூட்டி   வந்துடு.” என்றார் சிவகாமி.

“சரிங்க  பாட்டி.”  என்றான்  ருத்ரா  பணிவாக.

“அப்புறம்,  அந்தக்  கஜா இண்டஸ்ட்ரீஸ்,  ‘சீனா டீல்’  எந்த  நிலைமையில் இருக்காம்?” என்றார் சிவகாமி.

“கிட்டத்தட்டப் பல நூறு   கோடி ரூபாய்  ப்ராஜெக்ட்மா. எல்லாம்  ஹை எண்டு, ஹை காஸ்ட் உடைகள். கருணாவை ஒதுக்கிட்டு,  இந்தத் தடவை  அந்த  ஆளே,  நேரிடையாகக் களத்தில்  இறங்குவான் போல இருக்கு.

எல்லாம்  கருணாவின் டிசைன்,  உழைப்பு.  அதன்  மீது,  இந்த ஆள் இதுவரை வெகு சொகுசாக  வாழ்ந்து விட்டான்.  இப்போ கருணாவை, அவன்  படைப்பைத்  திருடி, அதன்  மூலம்  இழந்தப்  பணத்தை  எல்லாம்  மீட்க ட்ரை  செய்யறான்….
அந்த ஆளுக்கா, முதுகில் குத்த சொல்லித் தரணும்!    

ஏற்கனவே  மத்த  எல்லா  தொழிலும்  கடனில்  தான்  இருக்கு…. ‘மூல பொருள், சம்பளம், புது  மெஷின்  என்று  அறுபது,  எழுபது  கோடிக்கு  கடன்   வாங்குவான்’  என்று கருணா சொன்னான்.

ரெண்டிலிருந்து  ஐந்து கோடிக்கும்  மேலயே  ப்ராபிட்  எதிர்பார்க்கிறான். கோடிகளில் தான் அந்த அரக்கனின் கோட்டை, ‘கஜா போர்ட்’    அந்த  ஆளின்  ரிசார்ட், பிலேட்ஜ்  செய்வான்  போல  இருக்கு.” என்ற வெற்றி,  சிவகாமியிடம்  ஒரு  பைலை  கொடுத்தார்.

“கடன்  தொகைக்கு, இது போதாது. கஜா இண்டஸ்ட்ரீஸ் தொழில் பங்குகளை   நிச்சயம்   விற்பான்.”  என்றார்  பைலை  புரட்டியவாறு.

“நிச்சயமா…. சில பல கோடிகள் இல்லாமல், அந்த அளவுக்கு மாசிவ் ப்ரஜெக்ட் எல்லாம் செய்ய முடியாது தானே!…  கடன் பலரிடம் கேட்டு இருக்கான்.   நாம   சொல்லியதால்   யாரும்   தரத்  தயாராக இல்லை.
ஆடும் வரை ஆடி விட்டான். இப்போ உதவின்னு கேட்டா அவனவன் செய்து  விட்டுத்  தான்  மறுவேலை பார்ப்பார்கள்.” என்றான் ருத்ரா ஏளனமாக.

“நம்மிடையே  உள்ள,  ‘இந்தேர்  இண்டஸ்ட்ரீஸ் சேர்ஸ்’ எவ்வளவு?” என்றார் சிவகாமி.

“இருபத்தி ஐந்து%” என்றார் வெற்றி.

“நோ வெற்றி!… ஐம்பத்து ஐந்து% சேர்ஸ் நம்முடையது.” என்றார் சிவகாமி புன்னகையுடன்.

“எப்படி பாட்டி?… நாம எதுவும் வாங்கலையே!….” என்றான் ருத்ரா குழப்பத்துடன்.

“நமக்காக,  அந்த ஆளே கொடுத்து இருக்கான்…. மரகதம்,  கனகா,  பூரணி சேர்களை  மறந்து  விட்பீர்களா!…. மூன்று பேரின் பங்கு  30%.
நம்முடையது இருபத்தி ஐந்து.
சோ ஐம்பத்தி ஐந்து.
இப்போ லாயர்   காசிலிங்கம்   எங்கே   இருக்கான்?”  என்றார் சிவகாமி.

“நீங்கச் சொன்னது  போல  சிங்கப்பூர்க்கு குடும்பத்துடன் அனுப்பிட்டோம்….  அங்கே  கன்சல்டிங் ஆபீஸ் வைத்துக் கொடுத்துட்டோம். 
சொந்த   வீடு,  பேங்க்   பாலன்ஸ்  எல்லாம்  சொன்னது போலவே  பக்கவாய்  செய்து கொடுத்துட்டோம்.

உயிர்க்கு  எதுவும்  ஆபத்து வரக் கூடாதுன்னு  செக்யூரிட்டி  கூட, ஏற்பாடு செய்து இருக்கோம்.” என்றான் ருத்ரா.

“இனி  அந்த ஆள் சேர் விற்றால், வேறு யார் வாங்கினாலும் அது நம்மிடையே வந்து சேர வேண்டும். அதற்கான  ஏற்பாடுகளைச் செய்து  விடுங்க.” என்றார் சிவகாமி.

“டேக்   ஓவர்,  செய்யப்  போறீங்களா  பாட்டி!”  என்றான்  ருத்ரா ஆர்வமாக.

“நோ ருத்ரா!… இந்தர்  இண்டஸ்ட்ரியை   மண்ணோடு  மண்  ஆக்கப் போறேன்.  அந்த  ஆளோட  பெயர், பதவி, பிரெஸ்டிஜ்  எல்லாம்  போய்,  நடு  ரோட்டில்,  நான்  நின்றது  போல,  அந்த ஆளும் நிற்கணும். நான் கேட்ட டாக்ஸ் ரிப்போர்ட் வந்துடுச்சா?” என்றார் சிவகாமி, கண்களில் எரிமலை மின்ன.

“கருணா  அனுப்பி  இருக்கான்….  பத்து  வருடமாய்  மற்ற  கம்பெனிகளில், வரி  ஏய்ப்பு  நிறைய  நடந்து இருக்கு.  ‘கம்பெனி லாஸ்’ என்று காரணம் காட்டி   இருக்கார்.  முக்கால்வாசி  சொத்து   பினாமி  பேரில் இருக்கு.

வீட்டில்  உள்ள நகை, பணம் எதற்குமே சௌர்ஸ் கிடையாது. அந்த ஆளோட, ‘பீச் ரிசார்ட் பலவற்றில் ட்ரக்ஸ் சேல்ஸ், சூதாட்டம், மாபியா, பெண்கள்  கடத்தல்,  பாலியல்  தொழில்  எல்லாம்’  நடக்குது.

பணம் வந்தால்  போதும்,  என்று  இந்த  ஆளும்  எதையும் கண்டுப்பதில்லை.
அந்த ஆள் புத்தி தான் தெரியுமே!….  பணத்தை  மட்டும் வாங்கிட்டு எது நடந்தாலும், யார் செத்தாலும் கண்டு கொள்வதே இல்லையாம்.

சூர்யா பிரதாப் தெரியும் தானே!…
அவர் மனைவி கூட,  இப்படியொரு  ரிசார்ட்டிலிருந்து  மீட்டு  இருக்கிறான் கருணா.  கருணாவும், ஆல்வினும் தான் அவங்க  உயிரைக் காக்க ட்ரை செய்து இருகாங்க…. ஆனா, காப்பாற்ற முடியவில்லை. பாவம் அந்தப் பொண்ணு  உயிர்  போய்டுச்சு.”   என்றான் ருத்ரா.

“ரித்திகா ஆக்ஸிடெண்டில்  இறந்ததாகத் தானே  ருத்ரா,  டிவியில் சொன்னார்கள்!…. நீ வேறு ஏதோ சொல்றே!” என்றார் சிவகாமி அதிர்ச்சியுடன்.

“இந்த  உண்மை  சிலருக்கு  தான் தெரியும் பாட்டி. சூர்யா தங்கை சந்திராவை, கடத்தத் தான் முயன்று இருக்கிறார்கள். ஆனா, சந்திராவிற்கு பதில்,  அன்று   அவர்களிடம்   மாட்டியது   ரித்திகா.
சந்திராவை ஏன்,  எதற்குக்  கடத்த  முயன்றார்கள்  என்பது தான் சூர்யாவிற்குத்  தெரியலை.”  என்றான் ருத்ரா.

“ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால்  செய்வதாகச் சூர்யாவுக்கு,  சொல்லிடு ருத்ரா. அந்த ரிசார்ட் அது போல், அந்த ஆளு செய்யும் இல்லீகல் வேலை பற்றி  எல்லாம்  அக்குவேறு  ஆணிவேராக  அலசச்  சொல்லு.

ஒரு  சின்ன  சந்தேகம்  வந்தாலும், அதைத்  தோண்டி  துருவச்  சொல்லு  நம் ஆட்களிடம்.
கிடைக்கும் எல்லாம் தகவலும், உடனுக்கு உடன் கருணாவிற்கும்,  சூர்யாவிற்கும்  சரிப்  பார்த்து  அனுப்பி  விடு.   

இந்த, டாக்ஸ்  பைலை நான்  சொல்லும் போது,  ‘சி.பி.ஐ, சென்ட்ரல் இன்காம்  டாக்ஸ்  டிபார்ட்மென்ட், விஜிலென்ஸ் கமிசின், அந்த ரிசார்ட் பற்றி  மினிஸ்ட்ரி  ஆப் வுமன்,  நார்க்கோடிக்ஸ்  எல்லாத்துக்கும்  போட்டோ வீடியோ   ஆதாரத்துடன்   அனுப்பிவிடு.

அந்தக்  காபி,  அப்படியே எல்லா நியூஸ் சேனல், சமூக வலைத்தளம், ஹியூமன்  ரைட்ஸ் கமிஷன் என்று எல்லாத்துக்கும் ஆதாரத்துடன் போகணும் ருத்ரா. 

ஆல் இந்திய காவேரஜ் கிடைக்கணும். நான் சொல்லும் போது,  இதைச் செய். நாளைக்கு முதலில் மதுராவை மீட்போம்.” என்றார் சிவகாமி.

சிவகாமித்  திட்டங்களின்  சாதகப்,  பாதகங்களைச் பல மணி நேரம் மகனுடனும்,  பேரனுடனும்  விவாதித்தார்.

பேசி  முடித்ததும், பாட்டியை அணைத்து அழுந்த முத்தமிட்ட ருத்ரா, “சிவகாமி!…   சும்மா  அசத்துற  போ  நீயி.  கிடைக்கிற கேப்பில், எல்லாம் ஆப்பு அடிக்கறியே சிவகாமி!….” என்று சிவாஜி பட, விவேக் டயலாக் சொன்னவன் புன்னகைத்தான்.

“என்னடா இப்படி என்னை ஓட்டுறே!” என்றார் பேரனின் காதைத் திருகியவாறே.

“அய்யோ!… சிவகாமி!…. உன்னை ஓட்டலை. உன்னைப் புகழ்ந்துட்டு இருக்கேன்.’
ஆக்டர்  சூர்யா,   ‘வேல்’  படத்தில்  கலாபவன்  மணிக்கு,  இப்படித்தான்  ஆல்  பக்கம்   செக்மேட்  வைப்பார்.  அதை  விடச்  செமையா  இருக்கு பாட்டி  உங்க   பிளான்.”  என்றான்  ருத்ரா,  அவரை  அணைத்தபடி.

சிவகாமியின் முகத்தில் தோன்றிய புன்னகை, கஜாவை அழிக்க அவர் காய்களைப் பல வருடமாய் நகர்த்தி வருகிறார் என்ற உண்மையைச் சொல்லாமல்  சொல்லியது. 

இப்படி  மதுராவை  சுமன்,  சோனாவிடமிருந்து  காக்க  மூன்று தனி குழுக்கள்  போராடிக்  கொண்டு  இருக்க,  இது எதுவும் தெரியாத மதுரா, ‘அந்தக்  கால  பிளாக்  அண்ட்  வைட்  திரைப்பட நடிகை மாதிரி’ தோட்டத்தில்,  சோகமாய்  அமர்ந்து,  ‘தன்னைச்  சுற்றி  என்ன நடக்கிறது’ என்று  புரியாதவளாய்  குழம்பிக்  கொண்டு  இருக்க,  அவள்  தோள் மேல் ஆண் கரம் ஒன்று பதிந்தது. 

தவம் தொடரும்… 

அடுத்த அத்தியாயம்

25

'விஜய், சோனா, சுமன் வாழ்வில் தான் வந்தது எப்படி?...’ என்று அதே யோசனையில் இருந்த மதுரா, தன் தோளின் மீது ஆண் கரம் விழவும்    திகைத்துப்  போய்த்  துள்ளிக்  குதிக்காதக்  குறையாய்  திரும்பினாள்.அங்கு   ரௌத்திரத்துடன்   நின்று   இருந்தான்   மதுராவின்   அண்ணன்  ரகு.“ரகு!...…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்