arrow_back
என்ன தவம் செய்தேன்! 26
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 26 / 85

26

visibility 24
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

கோபத்துடன் அங்கிருந்து கிளம்ப, திரும்பிய மதுரா, அதுவரை அங்கே தங்கள் பேசுவதைக் கேட்டவாறு நின்றிருந்த பவானி, கார்த்திக், சுபா, பாலாஜியைக்  கண்டு  ஒரு  கணம்  நிதானித்தாள்.

பவானி   கண்   கலங்கி   நின்று இருந்தார்.

“சாரிமா… என் பக்க  நியாயத்தைச் சொன்னேன். உங்களைக் குறை   சொல்லணும்   என்று  இல்லை… சாரி.

பெண் என்பவள் உடல் மட்டும் இல்லைம்மா…  அதையும் தாண்டிய உன்னதம். உடல் களங்கப்படுத்தப் படலாம், பெண்ணின் சம்மதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்…
உடல்  காயத்திற்கு  மருந்து இட்டால் போதும்.

இதைக் கூட என் கூடப் பிறந்தவனாய் இருந்துட்டு புரிஞ்சுக்காம…

அப்படி  பாதிக்கப்படும்  பெண்களுக்குத்  தேவை  ஒரு அன்பான தோள், ‘நான்  இருக்கிறேன்’  என்ற  நம்பிக்கை ஒன்று தான். இங்குத்  தன் வக்கிரம், வெறி நிறைவேற, ஒரு பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் தொடுபவன் தான்மா தலை குனிய வேண்டும். அவனால் பாதிக்கப்படும் பெண் மீண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று தானே, இவன் பேசி இருக்க வேண்டும்.

‘உனக்கு  எது  நடந்தாலும்,  நான் இருக்கேன் பக்கபலமாய்’ என்று சொல்வான் என்று நினைத்தால், இவன் ஏன் இப்படி எல்லாம் பேசறான்?…”         என்றாள்  தாயை  அணைத்து.

“தவறு   உன் மேல்   இல்லைம்மா. பெண்ணாய் இருந்து நானும், ரகு யோசித்தது போலவே தானேம்மா யோசித்தேன். இதற்கும் நான் ஒரு டீச்சர்.
இப்படி  பாதிக்கப்படும் பெண்களுக்கு வழிகாட்டக் வேண்டிய உன்னத  தொழிலிலிருந்து  கொண்டே,  நானும் உன்மேல் கோபத்தில் தானே  இருந்தேன்!…

பெண்மையை  மதிக்க  வேண்டும்’ என்று  ரகுவிற்கு  கத்து  கொடுத்தேன். எந்தப் பெண்ணிலும் உன்  தாய்,  தங்கையைப்  பாரு…  அப்போ,  இன்னொரு வீட்டுப் பெண்ணைக் காமத்துடன் நோக்கும் எண்ணம் வராது.
இன்று  ஒரு  பெண்ணை,  நீ  காம  கண்  கொண்டு நோக்கினால், நாளை உன் வீட்டு பெண்களின் மானதுடன், இன்னொருவன் விளையாடிப் பார்ப்பான்’  என்று சொல்லி கொடுத்த நான், அப்படி சொல்லிக் கொடுக்காமல் வளர்க்கும் பெற்றோரால் மிருகமாய் அலைபவனை தூக்கிப் போட்டு    மிதிக்க,  சொல்லிக்  கொடுக்க மறந்து விட்டேன்.

ஆண்மை  என்பது  பெண்மையை  காப்பது,  அதற்கு  எத்தனை கஷ்டம் வந்தாலும்,   துணை   நிற்பது’  என்று  சொல்லிக் கொடுக்க மறந்து விட்டேன்.        
உடல் வலிமையை பயன்படுத்தி, ஒரு பெண்ணை வேட்டையாடும் மிருகம் தானே அழிய வேண்டும்!…

மன்னிச்சுடு மதுரா….  
உங்க  அப்பா,   ‘என்னைப்  புரிஞ்சுக்கலை’  என்ற கோபத்தில்,  உன்  வாழ்வு  பற்றி  நான்  யோசிக்கவே  இல்லை!… 
புருஷன் கூட  வாழாத,  அந்தப் பிசாசு  எல்லாம், என்  இல்லறத்தை  நாசம்  செய்து விட்டாளே  என்ற  கோபம்… 
சாரி மதுரா!…  மன்னிச்சுடுமா…
அம்மா… உன்   பக்கம்  நிற்கலை.

விஷயம்  கேள்விபட்டதிலிருந்து   உன்  மேல்  கோபமாய் இருந்தேனே  தவிர, உன்  பக்கம்  நியாயம்  இருக்கும்  என்று  நினைக்கவே  இல்லை. 

சாரி!… நாங்க  எல்லோரும்  சேர்ந்து  தான்,  உன்னை  இந்தச் சிக்கலில், புதைக்குழியில்  மாட்டி விட்டு   இருக்கோம்.”  என்றார்  பவானி,  மதுராவை  அணைத்து.

இரவு  உணவு உண்ணும் வரை ரகு, பவானியின் புலம்பல் நிற்கவே இல்லை. அவர்களைச் சமாதானபடுத்தி  உறங்கச் செல்வதற்குள்   மதுராவிற்கு  மூச்சு  மூட்டி  விட்டது.

ரகுவும்,  கார்திக்க்கும்  மேல்  மாடியில்  தங்கிக்  கொள்ள,  பவானி  கீழ்  கெஸ்ட்  ரூமில்   தங்கிக்  கொண்டார்.
ருத்ரா விஷயத்தைச் சொல்லி, ரகுவை கிளம்பச் சொல்ல, ரகு, பவானியை வரவழைத்து விட்டான்.

‘என்ன நடந்தது’ என்று புரியாமல், பவானி, கலவரக் குரலில் மகனிடம் பேசுவதை  அதிர்ந்து  போய்ப் பார்ப்பதைத்  தவிர,  சங்கரனால்  வேறு  எதுவும்  கேட்க  முடியவில்லை.

பவானியும், ‘சென்னை போகிறேன்’ என்று ஒரு துண்டு சீட்டில் எழுதி  விட்டுக் கிளம்பி விட்டார், ‘எதற்காகப் போகிறேன்’  என்று கூடச் சொல்லவில்லை.

‘என்னவோ  நடக்கக் கூடாதது நடந்து கொண்டிருக்கிறது’ என்று அந்தத் தந்தை  மனம்,  பதை பதைத்தாலும், யாரிடம் அவர் தகவலைப் பெறுவார்!

இத்தனை மாதத்தில், பவானியின் நிமிர்வு, அவரை அசைத்துப் பார்த்து இருந்தது. 

விஷயம்  கேள்விப்பட்டு  கோபத்துடன்  வந்து  இறங்கிய ரகு, பவானி இந்தப் பிரச்சனைக்கு, ‘மூல காரணமே தாங்கள் மட்டும் தான்’ என்ற உண்மையை மதுரா, அசராமல் விளக்கிச் சொல்ல, இடிந்து போனார்கள் என்று   சொன்னால்  கூட   மிகையல்ல.

‘சுமனால் ஏதாவது நடந்து இருந்தால்…’ என்ற எண்ணமே அவர்களை நிலைகுலைய  வைத்திருக்க, தங்கள் பெண்ணைக் காபந்து செய்யும் எண்ணம் இருந்ததே ஒழிய, சுமனை தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும் என்பதெல்லாம்  மூளைக்கு  உரைக்கவேயில்லை.

அப்படி  நடக்கும்  பெண்ணிற்கு தேவை, குடும்பத்தினர் கொடுக்கும்  தைரியம்,  அன்பு,  நம்பிக்கை  மட்டும்  தான்  என்பதோ  தூக்கு கயிறும், விஷ பாட்டிலும் அல்ல.
‘தீராத வயிற்றுவலி’என்ற பொய் கதைகள் அல்ல என்பது  ஏனோ  அவர்கள்  நினைவிற்கு வரவேயில்லை.

உடலில் ஏற்படும் காயத்திற்கு மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியும்… கையில்,  காலில்  ஏற்படுவது  போன்று இதுவும் வெறும் காயம் மட்டும் தான். 
அந்தக் காயத்தை ஏற்படுத்தியவன், பெண்மையை மதிக்காதவன் தான், தலைகுனிய  வேண்டும்,  கூனிக்  குறுக வேண்டும்… ‘ என்று மதுராத் தெளிவாகச்  சொல்ல, அவளின்  இந்தத்  தெளிவுத்  தங்களுக்கு ஏன் இல்லாமல்  போனது  என்று  தங்களைத் தாங்களே  நொந்து  கொண்டார்கள்.

பெண்மையை  மதிக்க  வேண்டும்,  சமமாய்  பார்க்க  வேண்டும்’  என்று  ஆண் பிள்ளைகளுக்குப் பவானி மாதிரி நிறைய தாய்மார்கள் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில்லை.

பெண்ணைப் போகப்பொருளாக மட்டுமே சித்தரிக்கும் டிவிதொடர்கள் , திரைப்படங்கள், கதைகள் இவர்களிடம் தவறானப் பிம்பத்தை உருவாக்கியிருந்தாலும், அதை நீக்கப் பல பெற்றோர் விரலைக் கூட அசைப்பதில்லை.

பாலியல்  கல்வி  எல்லாம்,  இல்லத்தில்  இன்னும் குழந்தைகளுடன் விவாதிக்க முடியாத ஒரு பொருளாகத் தான் இருக்கிறது என்னும்போது,

பாரதியாரின்
‘ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ?
நாணற்ற வார்த்தை அன்றோ?
வீட்டைச் சுட்டால்,
நலமான கூரையும் தான்எரிந் திடாதோ?’
‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.’   என்ற வரிகளைப் படித்து இருந்தாலும்,  நிஜ  வாழ்க்கைக்கு  இவையெல்லாம், ‘ஏட்டு சுரைக்காய் கறிக்கு  உதவாது’ என்பது  போலானது.
                   
பவானிக்கு, ‘இத்தனை வருட தாம்பத்யம் கேள்விக்குறியான’ கவலை. கணவனுடன்,  ‘மௌன யுத்தம்’ ஆரம்பித்து இருந்த அவர், அங்குப், ‘பகடையாக  இருப்பது,   தான்   பெற்ற   மகளின்  வாழ்வு’   என்பதை  மறந்து  போனார். 

கணவன்,  மனைவி’  சண்டை  போடலாம்… ஆனால், ‘அன்னை, தந்தை’ போடும்   சண்டை   விடிவது   என்னவோ,  பிள்ளைகளின்  தலையில்  தான்.

ரகுவிற்கு,  ‘அப்பா, அம்மா  இத்தனை  வருடம்  கழித்து  பிரிந்து  இருக்கிறார்களே!…’ என்ற வேதனை. அவர்கள் இருவரையும் என்றுமே எதிர்த்துக்  கூடப் பேசாத அவன், மதுரா நிலையிலிருந்து பேசவே இல்லை.  

இன்று, ‘அவர்களின்  குற்றங்களை,  நடக்க  இருந்த  பேராபத்தில் அவர்களின் பங்கை’ மதுரா விளக்கிச் சொல்ல, அவர்கள் மனம் அவர்களையே குற்றவாளியாக்க,  அந்த  நீதி  தேவனின் முன்  கூனிக்  குறுகி போனார்கள். 

மனம்,  சாட்டை  வைத்து  அவர்களை விலாச, மதுராவின் எந்தச் சமாதானமும்   அவர்களை அமைதிபடுத்தவில்லை.     

அதைக் கேட்டுக் கொண்டிருந்த, ‘மதுரா மீட்புக் குழு ஒன்றும், இரண்டும் கூட சபாஷ் போட மறக்கவில்லை.

அவளின் அந்த தெளிவு, மன தைரியம், தன்னம்பிக்கை, தீயாய் ஒளிரும் பெண்மை, விஜய் முகத்தில் பெருமிதத்தை  வர வைத்தது. 

அனைவரும்  உறங்கியவுடன், தூக்கம் வராத மதுரா, தன் லேப்டாப் உடன் மொட்டை  மாடிக்குச்  சென்றாள்.

மெல்லிய ராகங்களை இசைக்க விட்டவள், அங்கு  இருந்த  சாய்வு  நாற்காலியில்  அமர்ந்து  வானத்தை ரசிக்க  ஆரம்பித்து விட்டாள்.

மெல்லிய காற்று, மனதை வருடும் இசை, பால் நிலா, யாரும் இல்லா ஏகாந்தம்,  அவளுக்கு  மிகவும் பிடிக்கும்.

என்னதான்  நடக்கும்  நடக்கட்டுமே!
இருட்டினில் நீதி மறையட்டுமே!
தன்னாலே வெளி வரும் தயங்காதே!
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு!
முன்னாலே இருப்பது அவன் வீடு!
நடுவினிலே நீ விளையாடு!
நல்லதை நினைத்தே போராடு!

உலகத்தில், திருடர்கள் சரி பாதி!
ஊமைகள், குருடர்கள் அதில் பாதி!
கலகத்தில், பிறப்பது தான் நீதி
கலங்காதே!.. மதி மயங்காதே!..

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு!
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு!…’ என்ற வரிகள் அவளுக்காகவே எழுதப்பட்டது போல் ஒலித்துக் கொண்டிருந்தது.

அந்த வரிகளில் உள்ள  ‘உண்மையில்,  ஆழத்தில்’  தன்னைத்  தொலைத்து  கொண்டிருந்தாள்  மதுரா.

‘தெய்வ  கவிஞ்சர்  என்றால்  சும்மாவா!… 
‘வாழ்க்கையின்  தத்துவத்தை’ எவ்வளவு அழகாய் கொடுத்திருக்கிறார்.’  என்று கண்ணதாசன் அய்யாவின் வரிகளைப்,  பாடலாய்  கேக்கும்  போதெல்லாம்  தோன்றும்  பிரமிப்பு, அப்பொழுதும்  மதுராவிற்கு எழாமல் இல்லை.

‘வாழ்க்கையில்  எந்தக்   கட்டமாய்  இருந்தாலும்,  கண்ணதாசன் வரிகள் அங்கு  வந்து  நிற்கும்…
அவரை  மாதிரி  இனி  ஒருவர்  எழுதவோ, படைக்கவோ  முடியாது. லெஜெண்ட் .’ என்று  நினைத்தவள்  முகத்தில்,  ஒரு சாந்தம்  நிலவி  கொண்டிருந்தது.  

பாடலைக் கேட்டுக் கண் மூடி அமர்ந்திருந்தவள், அருகில் ஏதோ சப்தம் கேட்கக் கண்களைத் திறந்தாள்.

அங்கிருந்து  வெகுவேகமாக  விலகிச் சென்று கொண்டு இருந்தான் கார்த்திக்.

 

“தூங்கலையா கார்த்திக்?” என்றாள் மதுரா, சாய்வு நாற்காலியை விட்டு எழுந்து.

வேகமாக  திரும்பிச்  சென்று  கொண்டு  இருந்தவன்,  அவள் குரலில் தேங்கி நின்றான்.

“தூக்கம் வரலை…”  என்றான்  திரும்பாமலே.

“படுத்தவுடன்,  ‘கும்பகரணன்  கசின் பிரதர்’ மாதிரி தூங்கிடுவே!… இன்னைக்கு  என்ன  ஆச்சு?…”  என்றாள்  மதுரா.

எதுவும்  பேசாதவன்  சட்டென்று  மதுராவை,  இழுத்து  அணைத்தான்.

“சாரி டீ!…  பப்பு,  ரொம்ப சாரி.  உன்னை  ரொம்பப் படுத்திட்டேனா!… சாரி… சாரி, என்னாலத் தானே, உனக்கு இந்த நிலைமை!… அந்தப் போட்டோ, வீடியோ காட்டாம இருந்து இருந்தா, இந்நேரம்  அந்தப் பொறுக்கி   எல்லாம்,   உன்   மேல்   கை  வைக்க   முயல்வானா!
சாரி பப்பு!… அடுத்த முகூர்த்தத்தில் நம்ம திருமணம் நடத்தச் சொல்லப் போறேன். எதையும்  மறுத்துப் பேசாதே!” என்று அவளை அணைத்தவாறு பேசியவனின்,  உடல்   மௌன  அழுகையில்  குலுங்கியது.

எதையும்  பேசாத  மதுரா, அவன்  முதுகைத்  தட்டி கொடுத்தாள்.

சிறிது  நேரத்தில்  தன்னைச்  சமாளித்து கொண்டவன்,
“காலையில் ரெடியா இரு… வடபழனி முருகர் கோயிலில் மேரேஜ் முடிச்சிடலாம். நான் அங்கிள், என் ப்ரெண்ட்ஸ் வரச் சொல்லிடறேன் .” என்றவன்   விலகிச்   செல்ல மதுராவின்,  குரல்  அவனைத்   தடை செய்தது.

“சார்!…  உங்க  ஊரில்  எல்லாம்  தங்கையைத்  தான்  திருமணம் செய்வீர்களா?…  இது  மேரேஜ்  சட்டம்,  நம்ம  கலாச்சாரம், பண்பாடு அதற்கு ஒத்துக்காதே!…” என்றாள் தன் கைகளைக் கட்டி, அங்கு இருந்த சுவரில் சாய்ந்து.

‘மதுராவை  மணக்கப் போவது யாரோ!… காத்திருங்கள்!…’  என்று  ஹெட்லைன் போடும்  அளவிற்கு  விஜய்,  சூர்யா, கார்த்திக் என்று லிஸ்ட் நீளமாக இருக்க,  இந்த  ரேஸில்  கார்த்திக்,  முதலில்   இருந்தே   இருந்திருக்கவில்லை. 

அது   தெரிந்து  மதுரா  கமுக்கமாக  இருந்திருக்கிறாள்.       
“என்ன உளறிட்டு இருக்கே?…” என்றான் கார்த்திக், திகைப்புடன்.

“சும்மா சலம்பாதே கார்த்திக்…. ஆல் டீடெயில்ஸ் ஐ நோ. நான் 12th  படிக்கும்போது,  உன் பாரெண்ட்ஸ், உனக்கும், எனக்கும் திருமணம்  செய்யப் பேச வந்த போது,  அதை நிறுத்த, ‘நீ உன் கையை உடைத்து கொண்டு வந்தக் கதையை’ உன் உளறு வாய் நண்பன் ரவி சொல்லிட்டான்.

நானும்  கொஞ்சம்  மிளகாய்  பொடி  காபி,  பேதி  மாத்திரை  கலந்த  ஜூஸ் என்று  பயமுறுத்தி  விஷயத்தைக்  கறந்துட்டேன்.
நீ,  ‘எப்படி தங்கை மாதிரி  நினைப்பவளை,  மேரேஜ்  செய்வது?’ என்று கண்ணு வேர்த்து, டயலாக்   விட்டது,  எல்லாம்  எனக்குத் தெரியும்  மகனே!…

அதான்,  ரெண்டாவது  தடவை, உன் பாரெண்ட்ஸ் பேச  வந்த போது,  ‘இல்லாத மைனா என்ற தோழியை உருவாக்கி, அவளைப் படிக்க  விடாம,  மேரேஜ்ன்னு தொல்லை தராங்க’ என்று அழுது ட்ராமா செய்து, ‘போலீஸ்க்கு போவேன்’ என்று மறைமுக எச்சரிக்கை விட்டு, உன்னை   எஸ்கேப்   பண்ணி  விட்டு,  நான்  ரெண்டு  வாரம்,  ஆந்திராவுக்கு  எக்ஸ்கர்சன்  போனேன்.

நீயா வந்து பேசுவேன்னு பார்த்தா… என்னவோ ஓவர் பில்ட் அப் கொடுத்துட்டு, சுத்திட்டு இருந்தே!.. ‘கத்திரிக்காய் முத்தினா, கடைத் தெருக்கு  வரத்தானே  போகுதுன்னு’ நானும் அமைதியா இருந்தேன்.

உனக்கே தெரியாம மூன்றாவது தடவை, ‘சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன்  வேதாளம்  பிடிக்கப்  போனக்  கதையாய்’,  உன்  பாரெண்ட்ஸ்  பேச வந்துட்டாங்க.

அப்பவாவது  பேசுவேன்னு  பார்த்தா,  போட்டோ, வீடியோ  காட்டி வெறுப்பு  ஏத்துறீங்களோ!…

‘மொசப்  பிடிக்கற  டாக்’ முகம் பார்த்தா தெரியாது?… வாயைத்  திறந்து  உண்மையை,  என்  கிட்டே  சொல்ற அளவுக்குக்  கூட,  என்னை  நீ  தோழியா  நினைக்கலை!…’ என்ற கோபத்தில் தான்  பெருசுங்க  கிட்டே  உன்னை   போட்டுக்  கொடுத்தேன்.

இது,  ‘அனுமார் வால்  மாதிரி  நீண்டுட்டே’  போகக்  கூடாதில்லை.  அங்கிள், ஆன்டித்  தட்டைத்  தூக்கிட்டு,  இனி  படியேறக்  கூடாதில்லை. அவங்க  உனக்கு,   அடிக்கும் வேப்பிலையில் நீயாக வாயைத் திறந்து, ‘மதுரா எனக்குத் தங்கை போன்றவள். அவளைத் திருமணம் எல்லாம் செய்ய முடியாது.’ என்று கொஞ்சமாவது தைரியம் வந்து, ரெண்டு வீட்டு பெருசுகளிடமும்   நீ   சொல்லணும்   இல்லையா!…      

அதான்  சங்கு  அப்பா, மூலம்  சங்கு ஊதிட்டேன். இப்போ  சொல்லு, ‘என்னை மேரேஜ்  செய்யப் போறியா?… இது தெரியாம நெறைய பேர் உனக்கும், எனக்கும் ஜோடி சேர்த்தே தீருவது’ என்று சபதம் போடாதக் குறையாய்,  குழு எல்லாம் உருவாக்கினாங்க.” என்றாள் மதுரா, நக்கலாக.

இது மட்டும் விஜய்க்கு தெரிஞ்சுது நிச்சயம் ஹார்ட் அட்டாக் அவனுக்கு வந்துடும்.
இனி விஜய் என்ன செய்வான்?

விஜய்,  பிளான் போட்டு, மாட மாளிகை  எல்லாம்  கட்டியிருந்தான்.  இதுங்க ரெண்டும் சேர்ந்து அடித்தளத்தையே  தகர்த்து  விட்டார்கள், ‘பாச  மலர்’ படம் ஒட்டிக் காண்பித்து.

அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல், பேந்தப் பேந்த முழித்தான் கார்த்திக்.

“அடி பாவி!… எல்லாம்  தெரிஞ்சுட்டு  வழக்கம் போல்,  அமைதியா இருந்துட்டு, உன்  வேலையைக் காட்டிட்டே இல்லை… எருமை மாடே!… ஆறு மாசம்,  அந்தப் பெருசுங்க  அடிச்ச வேப்பிலையால்,  எனக்குப் பைத்தியமே  பிடிக்காதக்  குறை.

அதுவும்,  உங்க  அப்பா  இருக்காரே!.. கடவுளே!… சத்தியமா சொல்றேன், பவானி  பாவம்… வாயைத்  திறந்து  சொல்லி  இருக்க  வேண்டியது தானேடீ! அந்தப்  போட்டோவை, வீடீயோவை காட்டிட்டு, நான் பட்ட வருத்தம்  எனக்குத் தாண்டீ  தெரியும்.

ஒரு  வேலை,  ‘நீ  என்னை  லவ்  செய்துட்டு இருந்து, உன் விருப்பம் தெரியும்… அது நான் இல்லை என்று உனக்கு உணர்த்தத் தான் அப்படி…” என்றான்  கார்த்திக்,  அவள் தோளில் தலை வைத்து.

“தெரியும்டா உன் குள்ளநரித்தனம்…  நீ  என்னை வம்பு இழுத்த போதே, நான் உஷார் ஆகிட்டேன்,  ‘பயபுள்ள ஏதோ பிளான் போடுதுன்னு’. அப்பாவது  வாயைத்  திறந்து  உண்மை சொல்வேன்னு, சான்ஸ் கொடுத்தேன்.
பெரிய  இவனாட்டம்  ஆடுனாய். 

என்னைக்காவது  உன்னை லவ் செய்றேன் சொல்லி இருக்கேனா?… இல்லை அப்படி தான் நடந்து இருக்கேனா?….
பிசாசு!… பிரண்ட், பிரண்ட்ன்னு சொல்லிட்டு நம்பாதக் கூமுட்டை!… வேணும்டா  உனக்கு.”  என்றாள் மதுரா.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

27

"ஓகே...  ஓகே...  சாரி டா...  லூசு  மாதிரி   பீஹேவ்  பண்ணிட்டேன்  இல்லை!  சாரி...  ரொம்ப சாரி…” என்றான் கார்த்திக்.“சரி,   சரி  போனா போகுதுன்னு  விடறேன்... பொழச்சி போ... இன்னும் வச்சு, செய்யலாம்னு  தான்  நினைச்சேன். மணமேடை வரை கொண்டு  போலாம்னு  நெனச்சேன்.விளக்கெண்ணெய் …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்