arrow_back
என்ன தவம் செய்தேன்! 28
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 28 / 85

28

visibility 30
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

மதுரா,  அங்கே  கண்ணை மூடி,   உறங்க   ஆரம்பித்த  அதே  சமயம்,  நகரின்  வேறு  ஒரு  மூலையிருந்த  ஒரு இடத்தில், தன் மயக்கத்திலிருந்து கண்  விழித்தாள்  சோனா.

கண்ணைத்  திறந்தவளுக்கு,   ‘தான் எங்கு  இருக்கிறோம்’ என்று புரியவே ரொம்ப நேரம் ஆனது. 

கை,  கால், வாய்  கட்டப்பட்ட  நிலையில், ஒரு பழைய  சேரில்  தான்  அமர வைக்கபட்டு இருப்பதையும், மாமிச மலை போல ஒரு பெண் பௌன்சர், சற்று தொலைவில் அமர்ந்து போனில், ‘ஆங்கிரி  பேர்ட்ஸ்’  விளையாடிக் கொண்டு இருந்தாள்.

அதாவது இவளை கொஞ்சம் கூட மதிக்கவில்லை. சோனா, தன்னை விடுவிக்க முயல, அது முடியாமல், வாய் கட்டையும் மீறி கத்த முயன்று கொண்டு  இருந்தாள் .

‘தான்  எப்படி  இங்கு  வந்தோம்?… இது யாரின் வேலை….’ என்று யோசித்தவள், தான்  கடைசியாக  ஒரு  பப்பில், ஆடிக் கொண்டு இருந்த சமயம்,  இதே  பெண்  தன்னைச்,  ‘சுமன்  அழைக்கிறான்…’  என்று  கூறி,  கார் பார்க்கிங்க்கு  அழைத்து  சென்றதையும்,  காரின்  உள்  எட்டிப் பார்த்தத் தன்னை,  உள் இருந்தவன் இழுக்கவும், வெளியே  இருந்து  இவள்  தள்ளவும், உள்ளே விழுந்தத் தனக்கு, ‘choloroform’ கொடுக்கபட்டத்தையும் நினைவு படுத்தியவள் ,
‘யார்  இந்த  வேலையை  செய்தது?…’  என்ற  கேள்விக்கான  பதில்,   பலமணி  நேரத்திற்கு  அவளுக்கு  கிடைக்கவே  இல்லை .

‘சுமன்,  ஒரு  வேளை  மதுராவை கை நழுவ விட்ட கோபத்தில்,  இப்படி செய்து இருக்கிறானா?… சும்மாவே அவன், டார்ச்சர்  செய்து ரசிப்பான்.
இப்போ  ஒரு  பெண்ணிடம்,  தோற்று போய் இருக்கிறான்.  அவ மேல் உள்ள கோபத்தில், என்னைக்  கொல்ல  போகிறானா?…’ 
பயபந்து,  வயிற்றில்   உருள,   முகம்  வெளிறி  அமர்ந்து  இருந்தாள்.

நீண்ட, நெடிய மணி நேரத்திற்கு பிறகு, அந்த அறையின் வாயில் கதவுத் திறக்க,  அது வரை அமர்ந்து,  போனில்  விளையாடிக்  கொண்டு  இருந்த அந்த பௌன்சர் பெண், விறைப்பாக எழுந்து அட்டென்ஷன் போஸில்  நின்றாள்.

கதவுத் திறக்கப் பாடிகார்ட் முதலில் உள்ளே நுழைய, பின்னால் வந்த சூர்யாவைக்  கண்டு  பேய்  அடித்தது  போல்  ஆனாள்  சோனா.
Ram Charan to wrap up 'Game Changer' shoot in next 10 days
‘சுமனே,  டார்ச்சர்   செய்வதில்,  இரக்கம்  காட்டுவான்.  இவனுக்கு  எதிராளி  ஆனவன் மரணமே மேல்’ என்று நினைப்பானாம்… அந்த அளவுத் தன் எதிராளிக்கு,  இவன்  கொடூரன்  என்று  கேள்விப்பட்டு, இருந்த சோனா, ‘எதற்கு  இவன்  தன்னைத் தூக்கி இருக்கிறான்?’ என்று புரியாமல், வாழ்க்கையில் முதல் முறையாக, மரணப் பயத்தை, அனுபவித்து கொண்டு இருந்தாள் .

அவள்  எதிரே  இருந்த,  சோபாவில்  கால்  மேல் கால் போட்டு, ஒரு அரசனின் கம்பீரத்தோடு அமர்ந்த சூர்யா, கண் காட்ட, அந்த பௌன்சர் பெண்  சோனாவின்  வாய்  கட்டை  மட்டும், அவிழ்த்து விட்டு, சோனாவின் பின்  புறமே  நின்று  கொண்டாள்.

“லுக்!… ஐ டோன்ட் வாண்ட் டு வேஸ்ட் மை ப்ரேஸியஸ் டைம்… .understand?” என்ற சூர்யா,  மீண்டும்  கண்  காட்ட  ஒரு  பெரிய  சூட்கேசை, சோனாவின்  அருகே,  அவனின்  பாடிகார்ட்  இழுத்து  நிறுத்தினான் .

“இதில்  நான்கு  கோடி இருக்கு. எடுத்துட்டு  இந்த அக்ரீமெண்ட், சைன் போட்டுட்டுப் போயிட்டே இரு…” என்றவன், அவள் முன் சில அக்ரீமெண்ட்களை,  உடன்  வந்த  லாயர், ஒருவர் சோனாவின் முன் வைத்தார் .

படித்து  பார்த்த  சோனாவிற்குக்  கண்ணை  இருட்டியது. மதுராவிற்காக சூர்யா,  நாலு  கோடி  பணம்  தருகிறான்  என்றதும்,   ‘இது  என்ன புதுக் கதை!’  என்று   சோனாவின்  இதயம்  அதிர்ந்தது.

‘தனக்கு  இதயம்  ஒன்று என்பதே’ இருக்கும், அதுவும் அதிரும் படி சம்பவங்கள்  நடக்கும்  என்று சோனாவே, நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்  என்று  தான்  சொல்ல  வேண்டும்.

“நீ ஏன், அந்த  நாய் மதுராவிற்கு, நாலு கோடி தாரே?… உனக்கும் அவளுக்கும்  என்ன  affair?” என்றாள்  சோனா.

எதையும் பேசாத சூர்யா, அந்தப் பெண்ணை, ஒரு பார்வை பார்க்க, அந்த பௌன்சர்  பெண்ணின்  கரம்  இடியாய்,  சோனாவின்  கன்னத்தைப் பல முறை  பதம் பார்த்தது .

சோனாவைத்  துவைத்து  காய  வைத்தாள் அந்த பெண்.

“வாய்  இருக்குன்னு,  எதை  வேண்டும் என்றாலும் பேசக் கூடாது. மைண்ட் இட்… உனக்கு எல்லாம் மதுரா பற்றி, பேசக் கூடத்  தகுதி இல்லை.
அவ முன்னாடி,  நீ  பிக் லூசர்!…. எ ஸிரோ!
பச்சையா, ‘affair’ என்று எங்களுக்குள் இருக்கும் பந்தத்தை ஏன் அழைக்கிற?… மதுரா, ஒரு வார்த்தை சொன்னால், என் ஒட்டுமொத்தச் சாம்ராஜ்யத்திற்கும்,  என்  வீட்டுக்கும்,  என்  இதயத்திற்கும்  கூட,  அவ  தான்  ராணி . 

ஐ  வில்  பி  ஹாப்பி,  டு  மேக்  ஹர்  மை குயின். இட்ஸ் மை பூன்.
மதுரா போன்றத் தேவதைப் பெண் மனைவியாக அமைவதெல்லாம், மிகப்பெரிய வரம்.
சோ, அவளைப்  பத்தி,  இனி  ஒரு  வார்த்தை தப்பா,  நீ  எங்கே  பேசினாலும்,  உன் வாய்  உடைக்கப்படும். எங்கேயும்,  எல்லார் முன்னாடியும், இதே டிரீட்மென்ட் தான் கிடைக்கும்.
சோ, உடம்புப்  புண்ணாகக்  கூடாது என்றால்,  கிளோஸ்  யுவர்  டர்ட்டி  மௌத். .  சைன்  தி  பேப்பர்ஸ் …”  என்று உறுமினான் சூர்யா.

“இது,  எனக்கும்  அவளுக்கும்  சொந்த  விஷயம்…  நீ  எதுக்கு,  இன்வோல்வ் ஆகுறே?…” என்றாள் சோனா, விடாமல் .

“எதுடீ… சொந்த விஷயம்!…. ஒரு பெண்ணோட மானத்தோடு விளையாடுறதா!… நீ செய்யும் டர்ட்டி ஒர்க் தெரியாதுன்னு, நினைக்காதே! சுமனை,  மதுரா  பின்னாடி  அனுப்பின போதே, உன்னை வெட்டி இருப்பேன்.  மனசுக்குள்ளே  உனக்கும்,  அவனுக்கும்  என்ன, ‘கடவுள்’ என்று  நினைப்போ!…

மதுராவைக் காப்பாற்ற, அவளை சுற்றி எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியாம  விளையாடாதே!…  ஒழுங்கு  மரியாதையா, உடம்பு  புண்  ஆகும் முன்,  சைன்  போட்டுட்டுக்  கிளம்பு.

உன்னைப் பார்க்கப் பார்க்க, உன்னைக் கழுத்தை நெறித்து அப்படியே கொல்லணும்  என்று  வெறியா  வருது. ஆனா, உன்னை மாதிரிச் சாக்கடையை எல்லாம், என் கையால் தொடக் கூட அருவெறுப்பாய் இருக்கு.

‘மதுரா  என்ற  தேவதைப்  பெண்ணிற்காகத்  தான்’ உன்னை எல்லாம் கூப்பிட்டு  வச்சிப் பேசிட்டு இருக்கேன்… இல்லையென்றால், ஒரு கிலோ மீட்டர்  தூரத்திற்க்காவது  உனக்கும்,  எனக்கும்  இடைவெளி  இருக்கும்…  நீ இருக்கும்  பக்கம்  பார்ப்பதோ,  உன்  கூடப்  பேசுவது  கூடப் பாவம் தான்.”   என்றான்  சூர்யா.

“முடியாது… எவ்வளவு  பிளான்  போட்டு,  அவளை, இந்த நிலைக்குக் கொண்டு  வந்து  இருக்கேன். சுலபமா  எஸ்கேப்  ஆக  விட்டுடுவேனா?  நோ.  ஐ   ஒண்ட்  சைன் …”  என்றாள்  சோனா, திமிர் அடங்காமல் .

“சாகர நிலையில் இருப்பவங்கக் கடைசி நொடியில், ஏதாவது நல்லது செய்யணும்னு நினைப்பாங்க… உன் மொத்தத் திமிர், கர்வம், ஆணவம் எல்லாத்துக்கும், ‘அந்தக் கடவுளே ஆப்பு வைச்ச பிறகும்’ அடங்க மாட்டேங்குறீயே  சோனா!
என்ன  பார்க்கிறாய்!…  உனக்கு ஸ்டேஜ் 4 பிளட் கான்சர்ன்னு தெரியும். நீ ஆடுன ஆட்டத்துக்கு, உனக்குக் கடவுள் கொடுத்து இருக்கும் டைம் 2-3 மன்த்ஸ் அதிகபட்சம். அதற்குள் மதுரவையும், கருணாவையும் எவ்வளவு முடியுமோ  அவ்வளவு,   torture   செய்யணும்.  அதானே  உன்  பிளான்!

கருணா,  தன்  காலேஜ்  டைம்மில்,  ஒரு  பெண்ணை,  ‘உயிர்க்கு  உயிராய்  லவ்  செய்த  விஷயம்’  உனக்குத்  தெரிய  வந்து  இருக்கு… காசு கொடுத்து உன்  மரணத்தைத்  தள்ளிப்  போடக் கடவுள் ஒன்றும், உன் வீட்டு வேலைக்காரன்  இல்லையே!…
ரொம்ப நியாயவாதி!
நீ  அதி விரைவில்  சாகப்  போற  நியூஸ், முதல் அதிர்ச்சி.

உன்னை,  ‘உயிர்  உள்ள விலங்காய்  கூட  மதிக்காத’,  கருணாவின்  வாழ்கையில்,  ‘உனக்கு  முன்னே ஒரு  பெண்,  அவன்  மனதைக்  கவர்ந்து  விட்டாள், அவள்  நினைவோடுத்  தான்  அவன்  வாழ்கிறான்’  என்ற இன்னொரு நியூஸ், ரெண்டாவது   அதிர்ச்சி.

அதனால்  தான்,  அவன்  தங்கை  ரூபிணி வாழ்வில்,   நீ  கத்தியை  வைத்து, அவனை  மணந்தப்  பிறகும்,  உன்னை  விட்டுத்  தள்ளி நிற்கிறான் என்ற கடுப்பு, வயித்து எரிச்சல்.
அதான், ‘அவன் காதலித்தப் பெண் யார்’ என்று சரியாக   தெரியாமல்,   மூன்று   பெண்களை   ஷார்ட்லிஸ்ட்  செய்தே!

அதில்  ஒருத்தி  செத்தே  போய்ட்டா. ‘accident’  என்று  கேஸ்  கிளோஸ் ஆகி இருக்கு.  இன்னொருத்தி மெண்டல் ஹாஸ்பிடலில் இருக்கா… மூன்றாவது  மதுரா.
அவளுக்கு  சுமன்   மூலம்  முடிவுக்  கட்ட  நினைக்கிறே!

சாக  போற  சமயத்துல  கூட,  இப்படி  வெறித்தனமா ஒரு பெண்ணின் மானத்தோடு விளையாட,  பிளான்  போடுறேனா…. நீ,   எந்த  அளவு   சைக்கோவா இருக்கணும்!

உன்  பிளான்  மதுரா, விசயத்துல  ஜெயிக்காது… ஜெயிக்கவும் விட மாட்டோம்.
உனக்குப்  பணம்,  எதுக்குத்  தர  முயன்றேன்  என்று  நினைக்கிறாய்!.  சும்மா விளையாடிப் பார்த்தேன். அது empty பாக்.
உள்ளே,  உன்னை போல ஒன்றுமே இல்லை.

சுஷ்மிதா!.. இந்த அக்ரீமெண்ட்டில், இவ சைன் போட ஒத்துக்கொள்ளும் வரை விடாதே!… வெளிக் காயம் எதுவும் இருக்கக் கூடாது. இவ சைன் செய்துட்டா,  பேப்பர்  கொடுத்து அனுப்பு….” என்ற சூர்யா, கிளம்பி விட, சுஷ்மிதா என்று அழைக்கபட்ட பௌன்சர், சோனாவை மீண்டும் மீண்டும் புரட்டி  எடுத்தாள்.

ஒரு  கட்டத்திற்கு மேல் அடி தாங்க முடியாத, அந்தச் சொகுசு உடம்பு சோனா, “போடறேன்… போடறேன்…. நான் சைன் போடறேன்…” என்று நீட்டிய இடத்தில், எல்லாம்  சைன்  போட்டுக்  கொடுத்தாள்.

சோனா,  சைன் போட்டுக் கொடுத்ததும், சோனாவின் கண்கள், மீண்டும் கட்டப்பட்டு, காரில் ஏற்றிச் சென்று நடு இரவில், நடு வழியில் இறக்கி விட்டுச் சென்றனர்.

மதுராவை, எப்படி நடு இரவில், தனியே நடக்க வைத்தாளோ, அதே  போல  ஏறக்குறைய நடு தோப்பில்,
எந்த ஊர், எந்த  இடம்  என்று புரியாமல், உடல் வலி உயிரை எடுக்க, நடந்தே பழக்கம் இல்லாதவள், பல மணி நேரம் கால் ஓய நடந்தாள்.

நடந்தவள்  தன் கைப்பையில், இருந்த போதை மருந்தினை அடிக்கடி எடுத்துக் கொண்டாள் .

அவளின்  கெட்ட நேரம்,  ‘patrol  சுற்றிய  போலீஸ்’  கண்ணில் அவள்  பட்டது.

அதுவும் இரவு ரோந்தில் இருந்த, ‘A.C.P. ராஜேஸ்வரி’ கண்ணில் பட்டது.

மிகவும்  நேர்மையான  பெண்  ஆஃபீசர். என்கவுண்டர்  specialist .
பணக்காரத் திமிரில் ஆடுபவர்களுக்கு பெண் சிங்கம் .
அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு, பணபலம், ஆட்சி, அதிகார  பலம் எதற்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான அதிகாரி.

காக்கிச் சட்டைக்கு என்று ஒரு கண்ணியம், புனிதம் இருக்கிறது என்றால், அது இவரை போன்ற அதிகாரிகளால் தான்.

சோனா  மரியாதையுடன்  உதவிக்  கேட்டு  இருந்தால்,  செய்து இருப்பார்.

‘குடி, சூர்யாவின் பேச்சு, பௌன்சர்  கொடுத்த  அடி,  மதுராவிடம் தோல்வி, போதை  மருந்தின்  வீரியம்’  என்று  கோபத்தில், வெறியில்  இருந்த  சோனா,  அவரிடமும்  வாயை  விட,   நாலு  காட்டு  காட்டியவர், சோனாவை  தூக்கி  லாக்அப்பில்  வைத்தார்.

அவள்  பர்சில்  இருந்த  போனை  மட்டும் எடுத்து இருந்த, சூர்யாவின் ஆட்கள், அதில் மீதம் இருந்த எந்தப் பொருட்களையும் எடுக்கவில்லை.

மொத்தக் கைப்பையும் கொடுக்காமல் விட்டு இருந்தார்கள் என்றால் கூடத் தப்பித்து  இருப்பாள்.

ஆனால், அவள்   கைப்பையில், ‘ஒரு  கிலோ  போதை மருந்து, ‘எக்ஸ்டஸி/ecstasy,  MDMA  ,G H B’  போன்றத்  தடைச்  செய்யப்பட்ட, போதை  மருந்துகளும்  அவள்  பையில்  அளவுக்கு மிக அதிகமாகவே  இருக்க,  Narcotic  Drugs  and  Psychotropic  Substances  Act, 2014,  படி FIR   பதிவுச் செய்யபட்டு,  உள்ளே  தள்ளப்பட்டாள்  சோனா .

non bailable–பெயில் எடுக்க முடியாத,  சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு ஆனது.  இந்தத்,  ‘தடைச் செய்யப்பட்டப் போதை பொருட்கள்’ வைத்து இருந்தால், ‘ குறைந்தது பத்து  வருடக் கடுங்காவல் தண்டனை உண்டு.
ஒன்றிலிருந்து ரெண்டு லட்சம் வரை,  அபராதம் விதிக்கபடும்.
வாங்கி விற்பதாக  வழக்கு பதிவு செய்யபட்டால், மேலும் முப்பது வருட சிறைத் தண்டனை  வழங்க  முடியும். 

ராஜேஸ்வரி,  சோனாவைப்  பார்த்தது  முதல்  லாக்  அப்பில்  அடைக்கும்  வரை, அவள் பாக் சோதனை செய்யும் வரை, அனைத்தையும் பக்காவாக வீடியோ  ஆதாரத்துடன்   செய்து கொண்டு இருந்தார்.

அவர் காரில் இருந்த  கேமரா, போலீஸ் ஸ்டேஷனில்  இருந்த  கேமரா  என அனைத்திலும்  ஆதாரம்  பதிவு ஆனது .

‘வீட்டுக்கு  அழைக்க  வேண்டும்’ என்ற  நினைப்புக்  கூட எழாமல், மயக்கத்தில்  இருந்தாள்  சோனா.

பெண் கான்ஸ்டபெல் ஒருவர் ராஜேஸ்வரியிடம், “மேடம்!… அந்தப் பொண்ணை,   பார்த்தா   பெரிய  இடத்து  பெண் போல  இருக்கு…  ஏதாவது   மினிஸ்டர்   பொண்ணா   இருக்கப்   போகுது…”  என்றார்.

ராஜேஸ்வரிக்கும்,  அந்தச்  சந்தேகம்  இருந்தது.  ஆடை  என்ற  பெயரில்  ஒரு   துண்டுத்  துணியை  அவள்  அணிந்து  இருந்தாலும்,  அதன்  விலை  சில  பல  லட்சங்கள்   என்பது  புரிந்தது.

மயக்கத்தில்  இருந்தவளைக்  கவனிக்க, ஒரு பெண் டாக்டரை வரவழைத்தவர், சோனாவின் போட்டோவை  எடுத்து  விசாரிக்கச்  சொல்லி, பல  போலீஸ்  ஸ்டேஷனுக்கு   அனுப்பி  வைத்தார்.

டாக்டர்  வந்து  சோதித்து விட்டு,  “மேடம்!… ஹெவி டோஸேஜ் போதை மருந்து  எடுத்துட்டு  இருக்காங்க ….  ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விடுவது நல்லது… ரிஸ்க் எடுக்க வேண்டாம்…” என்று சொல்லி விட, காவலுடன்,   சோனா, மருத்துவமனையில்  அட்மிட்   செய்யப்பட்டாள்.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

29

அந்த  இரவில்,  நகரின்  மற்றொரு  இடத்திலிருந்த,   பார்  ஒன்றில்  அமர்ந்து,  அவன்  மூச்சு  முட்டக்  குடித்து  கொண்டு  இருந்தான். அவன் திவாகர்.விஜய்   தங்கை,   ரூபிணியை  காதலித்து,  ரூபிணி  கழுத்தில்  கத்தி  வைக்காதக்  குறையாய்,  விஜய்க்கு  சோனாவுடன்    திருமணம்  நடக்க காரணமாய்  இருந்தவன். திவாகர்  சட்டென்று …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்