72
ஒரு கணம் விழித்த மதுரா, அவன் யார் என்று புரிந்து விட அங்கு இருந்த தலையணையை எடுத்து, “பிராட்!…. 420!…. லயர்!…. சீட்டெர்!… பொய் சொல்லி ஏமாத்திட்டே இல்லை!…
பாவி, பாவி ஜெய்ப்பூர் இளவரசனா நீ!
மவனே, ‘அடுத்த வேலை சோறு இல்லைன்னு’ என் டிபன் பாக்ஸ் மொத்தத்தையும், எத்தனை தடவை காலி செய்து இருக்கே!
‘சினிமாவிற்கு போகக் காசு இல்லை, வண்டி ரிப்பேர்’ என்று சொல்லும் போது எல்லாம், என் பாக்கெட் மணியைத் தூக்கி கொடுத்தேனே!
பொய்யாடா சொன்னே!…” என்று அவனைப் புரட்டி எடுத்தாள் .
“ஹே!… சாரி, சாரி… டிராகன்… சாரிமா… சாரி!… என் செல்லம் இல்லை… ப்ளீஸ்!… ப்ளீஸ்!…
நீயா தாண்டீ, ‘நான் ஏழை’ என்று முடிவு செய்துட்டே!
நான் எத்தனையோ தடவை, ‘நான் யார்’ என்று சொல்ல வந்தேன்… நீ தான் சொல்லவே விடலை….” என்றான் சூர்யா .
“போடா டேய்!… ஏன் உத்தம் அண்ணா!… நீங்கக் கூட, இந்த எருமைக்குச் சப்போர்ட் அப்படி தானே!…
‘பெஹன், பெஹன்’ என்பது எல்லாம் சும்மா அப்படித் தானே!..
இவர் அப்படியே, ‘அத்தாரின்திகி தாரேடி’ பட, பவன் கல்யாண்.
அப்படியே, ‘ஏழைன்னு பில்ட் அப்’ செய்ய நீங்களும், துணை அப்படி தானே!
இருங்க இவர், ‘bmw’ காரிலிருந்து இறங்க, பத்து பேர் இவருக்குச் சேவகம் செய்ய, பின்னாடி பாக்கிரௌண்டில் இவருக்குத்,
‘ தேவ தேவம் பஜே திவ்யப்ரபாவம்
ராவணாஸுரவைரி ரணபும்கவம்
ராஜவரகரம் ரவிகுலஸுதாகரம்
ஆஜானுபாஹு னீலாப்ரகாயம்
ராஜாரி கோதம்ட ராஜ தீக்ஷாகுரும்
ராஜீவலோசனம் ராமசம்த்ரம்.’ என்று பாடல் போடச் சொல்றேன்.
பிராடுங்க!… என்னை வச்சு அந்த படம், ‘பார்ட் டூ’ ஓட விட்டு இருக்கீங்க.
ரெண்டு பேர் கூடவும் பேசமாட்டேன். கெட் லாஸ்ட்…” என்றவள் அறை கதவைத் திறக்கப் போக, அவள் கையை பிடித்துக் கொண்டான் சூர்யா .
“சாரி டீ… நான் எப்பவுமே, ‘உனக்குச் சின்னத் தம்பிப் பிரபு’ தாண்டீ. அப்படி இருக்கத் தான் விரும்பறேன்.
இத்தனை வருடம், ‘உன் பிரபுவாய்’ இருந்த நாட்கள் தான், என்னை உயிர்ப்போடு இருக்க வைத்து இருக்கிறது…
ப்ளீஸ்!… உன்னை ஒரு முறை இழந்துட்டு, நான் தவித்தது போதும்.
மீண்டும் என்னை விட்டுப் போய் விடாதே!… சாரி டிராகன்.” என்றவனை சில நொடி பார்த்தவள் அழுது கொண்டே அவன் மார்பில், சாய்ந்து கொண்டாள்.
“அப்போ, எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரணும்… என் கிட்டேப் பிடுங்கிச் சாப்பிட்டதற்கு எல்லாம் திரும்ப வாங்கித் தரணும்… தருவியா?” என்றாள் மதுரா புன்னகையுடன்.
“வாங்கித் தரேன். ஆனா, பில் நீ தான் கட்டணும் டிராகன். நான் ரொம்ப ஏழை தெரியுமா?” என்றான் சூர்யா, அப்பாவி முகத்துடன்.
வாய் விட்டு நகைத்தாள் மதுரா.
வாய் சிரித்து கொண்டு இருக்க, கண்கள் கண்ணீரை பொழிந்து கொண்டு இருந்த அருமையான நட்பின் தருணம் அது.
“உன்னை எவ்வளவு மிஸ் செய்தேன் தெரியுமா!… சொல்லாம போய்ட்டிங்க. யாரை விசாரித்தாலும், யாருக்கும் எதுவும் தெரியலை.
உங்க ரெண்டு பேருக்கும், ‘என்னவோ ஏதோ’ என்று பயந்து போனேன். நீங்கக் காணாம போன முன் வாரம் தானே, என்னை ஒரு பொறுக்கி கிட்டே இருந்து காப்பாற்றினீங்க.
‘அவன் ஏதாவது செய்து விட்டானா?’ என்று எப்படி துடிச்சேன் தெரியுமா?… போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கத் தான் நினைத்தேன். ஆனா, ஹிட்லர் தான் விடலை… ச்சே!… போடா… ஏண்டா சொல்லாம போனீங்க ரெண்டு பேரும்?” என்றாள் மதுரா, சூர்யாவின் சட்டையைப் பிடித்து.
“சாரி டிராகன்… அப்பாவைக் கொல்ல ட்ரை செய்து இருந்தாங்க. அப்பா ரொம்பவே கிரிட்டிகல். மொத்தக் குடும்பத்தையும் டார்கெட் செய்துட்டாங்க.” என்றான் பெரு மூச்சு விட்டபடி.
“டேய்!… என்னடா சொல்றே!… உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகலையே!… அப்பா, அம்மா, சந்திரா சேப் தானே?…” என்றாள் மதுரா பயத்துடன்.
மதுராவின் கண்கள், சூர்யாவையும், உத்தமையும் மாறி மாறிப் பார்த்து, அவர்களுக்கு ஒன்றும் இல்லை என்பதை புரிந்து கொள்ள, மதுராவிடமிருந்து நிம்மதி பெருமூச்சு எழுந்தது.
“அது வேற கதைமா… ஜெய்ப்பூர் ராஜ குடும்பத்தை, எவனோ டார்கெட் செய்துட்டு இருக்கான். எங்களுக்கும், அந்த ராஜ குடும்பத்திற்கும், ரத்த சம்பந்தம் மட்டும் தான்.
ஐந்து தலைமுறைக்கு முன்பே, எங்க வம்சத்தினர் தமிழ்நாட்டில் குடியேறிட்டோம்.
‘அரண்மனைகள் சுவர்களால் கட்டப்பட்டது இல்லை, ரகசியங்களால் கட்டப்பட்டவை, துரோகங்கள் நிறைந்தவை’ என்று கேள்விப்பட்டது இல்லையா!…
அதே தான்.
அதை வேற ஒருத்தன், ஹாண்டில் செய்துட்டு இருக்கான். சோ, உடனடியா, ‘என்னைச் சேப்டி செய்தே’ ஆக வேண்டிய கட்டாயம்.
எனக்காக இல்லை என்றாலும், எங்களை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்காக, அவங்க குடும்பத்திற்காக.
சோ, போலியான ஒரு ஆக்ஸிடெண்டில், ஜெய்ப்பூர் ராஜ வம்ச கிளையைச் சேர்ந்த, ‘இந்த இளவரசன்’ இறந்து விட்டதாக வெளி உலகத்தை நம்ப வைக்க வேண்டி இருந்தது.
இது எல்லாம் கருப்பு பக்கம், நரகம்.. உன்னை மாதிரி angel இன்வோல்வ் ஆக்க முடியாது.. அதான்.
ஆனா, உன்னை மறக்கவேயில்லை!… அந்த ஆபத்தில், என்னைப் பல முறை புன்னகைக்க வைத்தது உன் நட்பு தான்டீ.
‘நான் யார்’ என்று தெரியாமலேயே என்னைச் சமமாய் நடத்திய, உன் நட்பை இழக்க விரும்பலை. ஒருவேளை உண்மை தெரிந்தால், அதன் பிறகும், உன்னால் சகஜமாக பழக முடியுமா என்று ரொம்பவே கவலை பட்டோம் மதுரா.
பயம்!… எங்கே, எங்களை விட்டு போய் விடுவாயோ என்று பயம்!… ஆனா விதி, சொல்லாம அப்ஸ்காண்ட் ஆனது நாங்க ரெண்டு பேர் தான்… சாரி மா… ரியல்லி சாரி…” என்றான் சூர்யா மதுராவின் கைகளைப் பிடித்துக் கொண்டு.
“ச்சே!… மடையா!… லூசா நீ… நீ எப்பவுமே, என் நண்பன் தாண்டா!…
நீ பத்திரமா இருக்கே தானே!…
அதுவே போதும்.
பணமா நட்பை முடிவுச் செய்யப் போகுது?…
முட்டாள்!… சொல்லிட்டே போய் இருக்கலாம்.” என்றவள், ‘எப்பொழுது, ‘எந்தக் கெட்டத் தகவல் வரப் போகிறது’ என்று தினமும் தான் பயந்து கொண்டு இருந்தது மட்டும் தெரிந்தால், அவன் வேதனைபடுவான்’ என்பதால் அதைச் சொல்லமால் விடுத்தாள் மதுரா.
“ஆமா டாடி, இப்போ எப்படி இருக்கார்! அம்மா, சந்திரா எல்லாரும் நலமா?” என்றாள் மதுரா.
“எல்லாரும் நல்லா இருக்காங்கடீ… எல்லாரும், உன்னை ரொம்பவே மிஸ் செய்தாங்க. உன்னை நேரில் பார்த்தது இல்லை தான் என்றாலும், நீ தான் வாராவாரம் அவங்க கூடப் பேசிடுவியே!…
தே மிஸ் யு எ லாட் டிராகன்!.” என்றான் சூர்யா.
“ஒகே… ஒகே… ஒரு நாள் மீட் செய்துடலாம்… ஆமா, இளவரசரின் வனவாசம் முடிந்து விட்டதா!… இல்லை, மீண்டும் தொடருமா?” என்றாள் மதுரா.
“சும்மா ஒட்டாதே!… அந்தப் பிரச்சனை எல்லாம், எப்பவோ சால்வ் செய்தாச்சு.” என்றவனைக் கண்டு, உத்தம் பெருமூச்சு விட்டான்.
‘இவனைப் போல் யார் இருப்பாங்க!… ராஜப் பட்டத்தைத் தூக்கி இன்னோருத்தனுக்கு தாரை வார்த்து விட்டு நிற்கிறான்.
பரதனுக்கு அரியணையை, தூக்கி கொடுத்த, ‘ஸ்ரீ ராம சந்திரன்’ போல் இவன் இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு வந்திருக்கிறான்.
ஏற்கனவே, ‘சக்ரவர்த்தியாய்’ இருப்பவனுக்கு அரியணை எல்லாம் தூசு தான்.’ என்று மனதிற்குள் பெருமையுடன் சூர்யாவின் மீது பார்வையை ஓட்டினான்.
“ஆனா, ‘உன் கூட நான் இல்லை என்றதும், நீ தான் நிறைய பிரச்சனையில் மாட்டி இருக்கே’ போல் இருக்கே!…
கை, கால் வைத்துட்டு சும்மா இருந்ததா தானே!
‘சிங்கத்திற்கு பிரஷ் செய்தே விடுவேன்’ என்றால், ‘அது கடிச்சு தானேடீ வைக்கும்’.
உனக்கு, இந்த வேலை தேவையா!…
இந்த லட்சணத்தில் என்னை, லூசுன்னு சொல்றே!… நீ தாண்டீ லூசு…” என்றான் சூர்யா, அவள் தலையில் கொட்டி.
“நீ தாண்டா லூசு… நட்டு போல்ட் கழன்றவன்.” என்றாள் மதுரா.
“நீ… தாண்டீ லூசு.”
“நீ தாண்டா.”
இவர்கள் இப்படி அடித்துக் கொள்ள, அந்தக் குழாய் அடி சண்டையைத் திறந்த வாய், திறந்த படி இருக்க, பார்த்து விழித்துக் கொண்டு இருந்தான் கார்த்திக்.
அவன் தோளில் கை வைத்த உத்தம், “என்ன!… அப்படி பார்க்கறீங்க?… இப்படி அடிச்சிகிறாங்க என்றா!… அது அப்படி தான்… ரெண்டும் சரியான, ‘லாரல் ஹாடி, டாம் அண்ட் ஜெர்ரி’.
உள்ளே, நாம போனோம் நாம் காலி. ரெண்டும் சேர்ந்து நம்மைக் குதறி வைப்பாங்க… இது சகஜம். கண்டுக்காதீங்க…” என்றான்.
“அது இல்லை ப்ரோ… சார்!… பாஸ்!…. எவ்வளவுப் பெரிய பிசினெஸ் மாக்னெட். இவளுக்குச் சரிக்குச் சமமாய்…” என்று இழுத்தான் கார்த்திக், கண்ணால் காண்பதை நம்ப முடியாமல் .
“ரிலாக்ஸ் கார்த்திக்!… எதுக்கு இவ்வளவு டென்ஷன்?… ஜஸ்ட் கால் மீ ப்ரோ.
பிரபுவாய் இருந்த போது, ‘எப்படி ஜோவியலா’ என்னிடம் பழகினீங்களோ அப்படியே இருங்க. இப்பவும் நான் அதே பிரபு தான். அப்படி உங்களுடன் இருக்க தான் பிடிக்கிறது. இந்த டிஸ்டன்ஸ் எல்லாம் வேண்டாமே!…
‘பெரிய ஆள்’ அது, இதுன்னு எதோ சொன்னீங்களே!… எவ்வளவு பெருசு கார்த்திக்?… ஒரு ஏழு, எட்டு அடி இருப்பேனா?…
நீங்க வேற… இவ கிடைத்ததற்கு, நான் தான், கடவுளுக்கு நன்றி சொல்லணும்.
அன்றும், இன்றும் மதுராவின் பார்வையில், நான் அவளின் சின்னத் தம்பி பிரபு தான்.
என் பணத்திற்கோ, எனக்கென்று இருக்கும் பெயருக்கோ, அவள் மதிப்பு தரவில்லை. நான் தான், ‘சூர்யா’ என்று தெரிந்த பின்னரும், மதுரா அப்படியே தான் இருக்கா.
அவளுக்கு நான் தான் முக்கியம்.
என்னிடம் பணம் இருந்திருந்தாலும், நான் உண்மையில் ஏழையாகவே இருந்தாலும், அவளுக்கு நான் தோழன் மட்டும் தான்.
‘பணம் இருந்தால் ஒரு மாதிரி, பணம் இல்லையென்றால் வேறு மாதிரி மக்களிடம் பழகும்,’ சீப் குணம் மதுராவிடம் இல்லை. அவ எப்படி இருந்தாளோ, அப்படியே தான் இருக்கா.
அவளே, டென்ஷன் ஆகாம இருக்கா.
நீங்கத் தான், ரொம்பக் குழம்பறீங்க. ரிலாக்ஸ் கார்த்திக்.” என்றான் சூர்யா.
“சரி ப்ரோ… எப்படி, இந்தப் பிசாசு கிட்டே மாட்டினீங்க!… பிளாஷ்பேக் என்ன ஆச்சு?” என்றான் கார்த்திக்.
பிரபுவும், மதுராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, தங்களின் காலேஜ் வாழ்க்கை, மோதல், நட்பு பற்றிச் சொல்ல ஆரம்பித்தனர்.
“ஒரு tortoise கொசுவத்தி சுருள் சுத்தி விடுங்கப்பா…” என்று கிண்டல் அடித்து, தங்கள் சந்திப்பைச் சொல்ல ஆரம்பித்தார்கள் மதுராவும், சூர்யாவும்.
தவம் தொடரும்…





