73
இடம் :— குன்னூர்
ஐந்து வருடங்களுக்கு முன்,
டைம் மெஷின் ஏறி, நாம் இறங்க வேண்டிய இடம் குன்னூரில் உள்ள, ‘குறிஞ்சிக் கலைக் கல்லூரி’.
செமஸ்டர் விடுமுறை முடிந்து, அந்தக் கல்வியாண்டுக்கான, முதல் நாள் கல்லூரி, அன்று தான் திறக்கப்பட்டு இருந்தது.
கோ எஜுகேஷன்.
பல ஏக்கருக்கு பறந்து விரிந்து, இயற்கை அன்னையின் மடியில் அமைந்து இருந்தது அந்தக் கல்லூரி.
இயற்கை அன்னையின் மடியில் பூத்த, ‘இளம் பூக்களாய், நட்பு என்னும் மாலையில் கதம்பமாகச் சேர’, மாணவ, மாணவியர் அந்த இடத்தில் குவிந்து இருந்தனர்.
கல்லுரி காலம்.
ஒருத்தர் வாழ்க்கையில், ‘மறக்கவே முடியாதத் தாக்கத்தை ஏற்படுத்தும் பொற்காலம்’ என்று சொன்னால் கூட மிகையல்ல.
ஜாதி, மத பேதங்களைக் கடந்து, அன்பு, பாசம், நட்பு என்ற கயிறால், எங்கிருந்தோ வருபவர் எல்லாம் கட்டப்படும் விந்தை.
அன்னையின் கருவறைக்கு பின்னர், ‘எல்லோரும் சமம்’ என்ற உயர்ந்தத் தத்துவத்தை, மூன்றாவது முறையாகப் பள்ளிக்கு, அடுத்து கற்பிக்கும் அனுபவக் கூடம்.
‘காதல், மோதல், நட்பு, பகை, வெற்றி, அனுபவம், கற்றல், சந்தோஷம்’ என்று வாழ்வின் எல்லா பக்கங்களையும் நமக்குக் காட்டி விடும், ‘போதி மரம்’.
இங்கு ஆரம்பிக்கும் நட்பு, பலருக்கு கடைசி மூச்சு வரை தொடரும் உன்னதம்.
எதிர்காலத்திற்கு, நம்மைத் தயார் செய்யும், ஆராய்ச்சிக் கூடம்.
இந்த நாட்களுக்கு, ‘தோழமைகளுடன் கவலை என்பதே என்ன என்ற தெரியாத, நட்பின் மடியில், எந்தக் கவலையையும் மறந்து, சிறகடித்து வாழும் நாட்களுக்கு’ மீண்டும் செல்ல விரும்பாத உள்ளங்கள் மிகக் குறைவு.
அப்படி, பல வண்ணச் சிறகுகள் கொண்டப் பல பறவைகளின், ‘வேடந்தாங்கலாய்’ , பலர் வாழ்வில் பலத் தாக்கத்தை, ஏற்படுத்தி இருக்கும் கல்லூரிகளின், இன்னொரு சின்னமாய் இருந்தது அந்தக் கல்லூரியும்.
அது ஒரு தனி உலகம்.
வாலிபப் பருவத்தின் சிறகுகளை விரித்து, பறக்கப் பயிற்சி கொடுக்கப்படும் வானம் அது.
அந்த ஜோதிக்குள் ஐக்கியமாகி, அவர்களுடன் வாழ்ந்து, பழகி, மனதால் உணர்ந்தால் மட்டுமே, புரிந்து கொள்ள முடியக் கூடிய, ‘மாயாஜால உலகம்’ அது.
மாணவ மாணவிகளுடன் உள்ளே நுழைந்தால், ஒரு மரத்தைச் சுற்றி, நிறைய பேர் நின்று கொண்டு இருந்தனர்.
பார்த்தாலே தெரிகிறது அவர்களில் பெரும்பாலானோர் அந்த வருடம் சேர்ந்த புது மாணவ, மாணவியர்.
‘ஒஹ் ராக்கிங் நடக்கிறதோ!’
“ஹலோ!… நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.
இங்கே என்ன நடக்குது?… ராக்கிங்கா?…” என்றாள் புது மாணவி ஒருத்தி, தன் அருகில் இருந்த மற்றொரு சக மாணவியிடம்.
“ராக்கிங் இல்லை என்று தான் மாணவ, மாணவியர், ‘Representative’ வார்னிங் கொடுத்துட்டு, ‘இங்கு எல்லோரும் தோழமைகளே!…
ஜூனியர், சீனியர் என்பதெல்லாம் படிப்பில், வயதில் தானாம்.
நட்புக்கு இல்லையாம்.
ராக்கிங் பற்றிக் கவலை இல்லாமல், ஜோவியலா பழகச் சொல்லிட்டு இருந்தாங்க.
ஒவ்வொருவரும், ‘எது, எதில் டாலேண்ட் இருக்குன்னு’ விசாரித்து, cultural டீம் ஹெட் கிட்டே, நேம் கொடுக்கச் சொல்லி இருக்காங்க.
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவில் கூட, எங்கு, எந்தத் துறையில் போட்டி நடந்தாலும், காலேஜ் சார்பில் அனுப்பி வைப்பாங்களாம். அதற்கான செலவையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும், இதற்கென்று இருக்கும் குழு பார்த்துக்குமாம்.
திறமை இருந்தும், வசதிக் குறைவால், தங்கள் திறமையை வெளிக்கொணர முடியாதவர்களை ஊக்குவிக்க, இங்குப் படிக்கும் மாணவர்களே, தங்கள் பாக்கெட் மணி போட்டு, ‘அதற்கென்று ஒரு fund’ ஆரம்பித்து இருக்காங்களாம்.
நமக்குத் திறமை என்ற ஒன்று இருந்தால் போதுமாம். உயரத் தூக்கி விட, தோள்கள் இருக்குன்னு சொன்னாங்க.
சீனியர்ஸ் கிட்டே நோட்ஸ், புக்ஸ் வாங்கிக் கொள்ளவும், ஹாஸ்டல் நடைமுறை, ஏதாவது குறை, தேவை என்றால், யாரை அணுகுவது, இங்கு நடக்கும், ‘volunteer ப்ரொக்ராம்ஸ்’, ரத்ததான முகாம், ஏழை மாணவர்களுக்குச் சனி ஞாயிற்றில் வகுப்பு எடுப்பது, கிளீனிங், NCC, ரெட் கிராஸ், எல்டர்ஸ் விசிட், ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களின் மறுவாழ்வு, மகளிர் சிறுத்தொழில் பயிற்சி, மாணவ மாணவியரின் கைப்பொருட்கள் விற்பனை’ என்று பலத் தொண்டு செய்யும் விளக்கமும் கொடுத்தாங்கப்பா.
ஒவ்வொன்றுக்கும், ஒரு டீம் ஹெட்’ இருக்காங்களாம். அவங்க யார், யார் என்று இன்ட்ரோ செய்தாங்க. வாட்ஸாப்ப் குரூப் இருக்காம்.” என்றாள் அவள்.
அடுத்த அரைமணி நேரத்தில், அந்தக் கூட்டம் களைந்து விட, அந்த மரத்தடியில் Representative, டீம் ஹெட்கள் மட்டும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அந்தச் சமயம், “தல!… தல!…” என்று கத்திக் கொண்டு, ஒருவன் ஓடி வந்தான் .
“டேய்!… எத்தனைத் தடவைச் சொல்வது?… இப்படி, ‘தலைன்னு’ கூப்பிடாதே!… மக்கள் டென்ஷன் ஆகிடுவாங்க. பான்ஸ் கொலைவெறி ஆகிடுவாங்க.”
“அப்போ, பாஸ் ஒகேவா?”
“இல்லை… இல்லை… லீடர்…. இது எப்படி?”
“அடங்குங்கப்பா… நாம என்ன கொள்ளைக் கூட்டமா நடத்தறோம்!… பாஸ், லீடர், என்று பில்ட் அப் கொடுக்க!… அதெல்லாம், மக்கள் தலையில் மிளகாய் அரைக்க நினைப்பவங்க வேலை.
நாலு படம் நடிச்சிட்டு, மக்கள் தங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை, வைத்து ஜாதி, மத அரசியல் செய்து, ஆட்சி நாற்காலி பிடிப்பவர்கள் வேலை. நமக்கெதுக்கு அது எல்லாம்?…
நீ சொல்ல வந்த மேட்டரை சொல்லு…” என்றாள் மாணவ மாணவியரின் Representative ஆக, மூன்றாம் ஆண்டாக தொடர்ந்து, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அவள்.
“நம்ம, சிவா மேட்டர் தான் பா… ராதா கிட்டே போய், லவ் சொன்னதற்கு, ராதாவின் பிரெண்ட்ஸ், முக்கியமா நம்ம காலேஜ் சேர்மன், தூரத்து ரிலேட்டிவ் ஒருவன், ரொம்ப பேசி அவமானம் படுத்தித் திருப்பி அனுப்பியிருக்காங்க .” என்றான் அவன்.
“அடச்சே!… இதுங்களுக்கு இதுவே, வேலையா போச்சு. எப்பப் பார்த்தாலும் அடிச்சிக்க வேண்டியது.
லவ்ன்னு நம்ம உயிரை வாங்க வேண்டியது… மீண்டும் முட்டிக்க வேண்டியது.
இதுங்களுக்கு, ‘நாட்டாமை’ வேலை பார்த்தே, நம்ம ஆயுசு முடிஞ்சுடும் போல் இருக்கு.” என்று அலுத்து கொண்டாள் Representative.
“அது சரி லீடர்… முறைக்காதே!… வாய் தவறி வந்துடுச்சு. சேர்மன் உறவுனா, அதுக்குன்னு எது வேண்டும் என்றாலும், பேசி விடலாமா என்ன!… இதை விடக் கூடாது.” என்றான் ஒருவன் .
“தேவை இல்லாத வேலை. சிவா, ராதா ரெண்டு பெரும் பேசித் தீர்த்துக்கட்டும். நாம நண்பர்களா இருந்தாலும், இது அவங்க பர்சனல். அதற்குள், அளவுக்கு அதிகமாக, நாம தலையிடக்கூடாது நாம் இதில் நுழைய வேண்டாம்.”
“போ பாஸ்!… மாணவர்களுக்கு நடுவே சேர்மன், அட்மின் என்று உறவு கொண்டாடிட்டுப் பிரச்சனை கிளப்புவாங்க. இன்றைக்கு தீர்ப்பு சொல்வாங்க.
நாளைக்கு, எவனாவது ஒரு கவுன்சிலர் மச்சான், மாமன், MLA,MPன்னு உள்ளே நுழைவானுங்க.
மறுநாள் ஏதாவது அரசியல் கட்சி, ஜாதி, மதக் கட்சி உள்ளே நுழைந்து ஒற்றுமையாய் இருக்கும் நம்மைப், பிரிக்கப் பார்ப்பானுங்க.
இதை எல்லாம் முளையிலேயே கிள்ளி எரியனும். பசங்கப் பிரச்சனை பசங்களே தான், டீல் செய்யணும். மூன்றாம் ஆள் எல்லாம், உள்ளே வரக் கூடாது. நாம அமைதியா இருக்கணுமா என்ன!
‘குறிஞ்சி தண்டெர்ஸ் கேங்/kurunji thunders gang’ என்றால் சும்மாவா?
நம்ம பவர் காட்டணும். இனி, வெளியாட்களைக் கூட்டி வந்து சீன் போட, யாராவது நினைச்சாலே, அல்லு உட்டுரணும்.” என்றான் ஒருவன்.
“அவன் சொல்வதிலும் அர்த்தம் இருக்குப்பா. எதுக்கு தேவையில்லாம அரசியல் கட்சிகள், அரசியல்வாதிங்க நம்ம பசங்க பிரச்சனைக்குள், கல்லூரிக்குள் நுழையறாங்க!
நாளை, இதையே, சாக்காக வைத்து, ‘அதை எதிர்க்கணும், இதை எதிர்க்கணும்’ என்று மாணவர்களை தூண்டிவிட்டு, அதில் இவனுங்க குளிர் காய்வானுங்க.
நம்ம வாழ்க்கைத் தான், படிப்புதான் கெட்டுவிடும். இதுவரை, எந்த அரசியல்வாதியும், நம்ம கல்லூரி நிர்வாகத்திலோ, நம்ம பசங்களிடமோ இன்வால்வ் ஆனது கிடையாது.” என்றான் இன்னொருவன்.
“தோ!… அது தான் சேர்மன் உறவு!…” என்றான் கம்பளைண்ட் செய்தவன்.
“எதை வைத்து டா சொல்றே?” என்றாள் ஒருத்தி .
“நம்ம பசங்க இல்லை, பொண்ணுங்கல யாருகௌ காரில் வந்து இறங்க போறாங்க?…
சீன் பார்ட்டி!…
சேர்மன் ரிலேட்டிவ்ன்னு பந்தா!…
பாரு பார்க்கவேத் திமிர், பந்தா, அலட்டல் எல்லாம் தெரியுது.” என்றவன் கைக்காட்ட, ‘சேர்மனின் ரிலேட்டிவ்’ என்று குறிப்பிடப்பட்டவர், போனில் யாருடனோ பேசிக் கொண்டே வந்து கொண்டு இருந்தார் .
Representative, மூன்று முறை விசில் அடித்தும், போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததில்லையே, வந்தவரின் கவனம் இருந்தது.
கவனிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
“அடங்!… போய் டோல்கேட் போட்டு, ராஜமரியாதையோடு கூட்டி வாங்க…” என்று Representative சொல்ல, நான்கு பேர், புது நபரை நோக்கிச் சென்றனர் .
முன்னே சென்று கை நீட்டித் தடுக்க, போனில் பேசியவர், “ஜஸ்ட் ரீச்ட்… ஐ கால் யு பாக் டாட்!…. பை” என்று அழைப்பைத் துண்டித்து,
“யெஸ் வாட் கேன் ஐ டூ போர் யு ஆல்?” என்றார்.
“தோ டா!… ராபர்ட் கிளைவ்!… எலிசபெத் ராணியோடு வாரிசு!… வாயைத் திறந்தா இங்கிலிஷ் தான் வரும் போல…
உலகத்தில், எங்களுக்குப் பிடிக்காதது இங்கிலிஷ்.
தமிழ் தெரியும் தானே!…
தமிழில் பேசு. தமிழ்நாட்டில் தானே இருக்கே!…” என்றான் ஒருவன்.
அவர்கள் பேசுவதைக் கண்ணில் மின்னலுடன், கேட்டுக் கொண்டிருந்தான் அவன். அதுவரை அதுமாதிரி அவனிடம் யாரும் பேசியது இல்லை போலிருக்கிறது.
அவன் வியப்புடன், தன் முன் நின்று இருந்த, அந்த மாணவக் கூட்டத்தை பார்த்துக் கொண்டிருக்க,
“எங்க லீடர் வரச் சொன்னாங்க. வந்து மரியாதையா பேசிட்டு, நீ செஞ்சு வச்சு இருக்குற வேலைக்கு, மன்னிப்பு கேட்டுட்டுப் பொழைச்சி போ. வந்தோமா, படிச்சோமான்னு இல்லாமா, இது எல்லாம் என்ன வேலை?” என்றாள் ஒருத்தி.
“யார் உங்க லீடர்?” என்றார் அவன்.
“அதோ!… அங்க மரத்துக்குக் கீழே இருக்காங்க… வா.” என்று இழுக்காதக் குறையாய் இழுத்து சென்று அவர்களின் லீடர் முன் நிறுத்தினர்.
“லீடர்!… நீங்கச் சொன்னா மாதிரி, கூட்டிட்டு வந்துட்டோம்…” என்று அறிவிக்க, லீடர் நிதானமாகத் திரும்ப, திரும்பிய லீடரைக் கண்டு இழுத்து வரப்பட்டவன் அதிர்ந்து, திகைத்து, ஸ்தம்பித்து நின்றான்.
லீடர் என்றதும், ‘ யாரோ ஒரு ரவுடி, காலேஜ் படிக்க என்று வந்து விட்டுச் சீட் தேய்ப்பவன்.’ என்று நினைக்க, திரும்பியதோ, ஒரு இளம் பெண்.
அதுவும் மிகவும் அழகான இளம் பெண்.
அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்த மறுநொடி, மின்சாரத்தால் தாக்கபட்டவன் போல் நின்றான் சூர்யா .
அனுமதி பெறாமலே, அந்தப் பெண் அவன் இதயத்தை ஆக்ரமித்து கொண்டாள்.
‘லவ் அட் பர்ஸ்ட் சைட்/ முதல் பார்வையிலேயே காதல்’ என்பதில் நம்பிக்கை இல்லாதவனை அடிமைபடுத்தி இருந்தது காதல்.
யெஸ், சூர்யா இஸ் இன் லவ் .
‘1942 love story’ படத்தில், அனில் கபூர், மனிஷா கொய்ராலாவை பார்த்ததும், பாடும் பாடல், இவன் மனதில் ஒலிக்க ஆரம்பித்தது .
‘Ho ek ladki ko dekha to aisa laga
Jaise khilta gulaab
Jaise shaayar ka khwaab
Jaise ujli kiran
Jaise van mein hiran
Jaise chaandni raat
Jaise naghme ki baat
Jaise mandir mein ho ek jalta diya…’
‘இந்தப் பெண்ணைப் பார்த்தபோது ,
இந்தப் பெண் எனக்கு
மலரும் புது ரோஜாவைப் போல்,
ஒரு கவிஞ்சனின் கற்பனைபோல்,
சூரியனின் அதிகாலை ஒளியை போல்,
காட்டினில் ஓடும் மான்போல்,
இரவு நிலவு ஒளியைப் போல் ,
மென்மையான வார்த்தைப் போல் ,
கோயிலில் சுடர்விடும் தீபம்போல்,
எனக்குத் தோன்றுகிறாள்.
காலையின் அழகினை போல்,
பனிக்காலச் சூரிய ஒளி போல் ,
புல்லாங்குழலின் இன்னிசை போல்,
வண்ணங்களின் மொத்தக் கலவைபோல் ,
திராட்சைக் கொடியினை போல் ,
அலைகளின் அசைவுபோல்,
குளிர்ச்சியான பனிக் காற்றினை போல்,
எனக்குத் தோன்றுகிறாள்.
காற்றில் ஆடும் இறகுபோல்,
பட்டு நூல்போல்,
தேவதையின் மெல்லிசை போல்,
சந்தனத்தின் நறுமணத்தை போல்,
பதினாறு விதமான அணிகலன்கள் போல்,
புத்துணர்ச்சி தரும் மழை போல்,
மென்மையாகப் பரவும் போதை போல் ,
எனக்கு இவள் தோன்றுகிறாள்.’ என்று பாடி முடிக்க,
‘ஷாருக்கான் போல், காதல் கொண்ட மனம்’ ஊட்டி ட்ரெயின் மீது மனம் ஏறி ,
‘ஓர் பார்வையிலே, என்னை உறைய வைத்தாய்,
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட! நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்,
உன் பார்வையிலே, என்னைப் பணிய வைத்தாய்
நான் பார்த்துவிட்டால்,
ஒரு வீழ்ச்சி வரும்
நீ பார்த்துவிட்டால்,
ஒரு மோட்சம் வரும்.
என்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ!…’
என்று பாடிக் கொண்டு இருந்தது .
“ஹலோ!… மிஸ்டர்!…. ஹலோ!…” என்று பலமுறை அழைத்தாள் மதுரா.
பதில் வந்தால் தானே!
அவன் தான், சிறகு இல்லாமல், வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறானே! .
“சார்!…” என்று மதுரா, கத்தியே விட,
“யெஸ்!…” என்றான் சுயநினைவுக்கு வந்து அவன் .
“நீங்க ஒகே தானே!… உடம்பு ஏதாவது முடியலையா என்ன?… ஏதாவது உதவி வேண்டுமா?” என்றாள் மதுரா .
‘யெஸ்!… நீ தான், இனி என் மூச்சின் கடைசிக் காலம் வரை வேண்டும்.’
“சார்!… ஏதாவது பேசுங்க…”
‘ஐ லவ் யு! …’
“பாஸ்!… கொஞ்சம் உட்காருங்கோ. என்ன ஆச்சி உங்களுக்கு?…
ஏய்! என்ன செய்து வைத்தீங்க? அடிச்சிடீங்களா என்ன?” என்றாள் மதுரா, தான் தோழர், தோழியரிடம் .
“ஏய்!… இல்லவே இல்லைப்பா… கை எல்லாம் வைக்கலை. கிண்டல் தான் செய்தோம்.”
“ஒருவேளை பேய் பிடிச்சிகிச்சோ?” என்றாள் ஒருத்தி பயந்தவளாய் .
“இல்லைன்னா… ஒரு வேலை மெண்டல் ஹாஸ்பிடல் கேஸ்சா?” என்றாள் மற்றொருத்தி .
அவனுக்குப் பேய் தான் பிடித்து இருந்தது.
‘அழகான, மோஹினி பேய்’.
‘மதுரா’ என்ற பெயர் கொண்ட பேய்!
அவனுக்கு மூளைக் குழம்பித் தான் போனது, மதுரா என்ற பெண்ணைப் பார்த்த மறுகணம்.
“உனக்குத் தெரியுமா கார்த்திக்!… இவன் இருந்த நிலையைக் கண்டு, ‘இவன் பைத்தியம்’ என்றே, என் கேங் முடிவுச் செஞ்சுட்டாங்க.” என்றாள் மதுரா கார்த்திக்கிடம் இன்று .
கார்த்திக், சூர்யாவை அதிர்ந்து பார்க்க, அவனோ புன்னகையுடன் மதுராவையே, கண்களால் ரசித்துக் கொண்டு இருந்தான்.
கார்த்திக்கின் மூளையில் அபாய மணி அடித்தது.
தான் உறைந்து போய் நின்ற, அந்த நொடியை எப்படி அவன் மறப்பான்!…
முதல் முறை காதல்!
அவனைப் புதிதாய் பிறக்க வைத்த அந்த நொடியை அவன் எப்படி மறப்பான்!
‘பக்தனின் முன், கடவுள் தரிசனம் தந்தால்’, எந்த நிலையில் இருப்பார்களோ, அந்த நிலையில் இருந்தான் சூர்யா அன்று.
மூச்சு, பேச்சு, எண்ணம், செயல் எல்லாம் உறைந்த நிலை.
அன்று போல், இன்றும் சூர்யாவின் நிலையை அறியாதவளாய், நடந்ததை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள் மதுரா .
“சார்!… என்ன ஆச்சு சார் உங்களுக்கு?” அவனின் ஆடை, அவன் கம்பீரம், தானாகவே மரியாதையாகப் பேச வைத்தது மதுராவை .
“நத்திங் ….”
“உங்க பெயர் பிரபுத் தானே?…. நீங்க சேர்மன் ரிலேட்டிவ்வா?” என்ற மதுராவின் கேள்விக்குப், ‘பூம் பூம் மாடாகத்’ தலை ஆட்டினான் சூர்யா.
அவன், எங்கே இவள் பேசுவதைக் கவனித்தான்?
அவன் கவனம் எல்லாமுமே, அவளின் அழகில் அல்லவா லயித்துக் கிடந்தது!
அந்நேரம், ‘மதுரா எருமைமாடு ஏரோபிளேன் ஓட்டுது’ என்று கூறி இருந்தால் கூட, ‘ஆமாம் சூப்பரா ஓட்டுது’ என்று ஜால்ரா அடித்து இருப்பான்.
மதுராவிடம், ‘சிவா, ராதா’ விஷயத்தைக் கூறிய நண்பனும் பெயரைத் தவறுதலாக மாற்றித் தான் கூறி இருந்தான்.
அதனால் சூர்யா, ‘பிரபுவாகத் தான் ‘ மதுராவுக்கு பரிச்சயம் ஆனான்.
நண்பர்கள் ஆன பிறகு, ‘பிரபு’ என்றதும், அடைமொழியாக, ‘சின்னத் தம்பி!’ இணைந்து விட்டது.
சூர்யாவும், மதுரா கேட்பதைக் கவனிக்காமலே, அதை ஒத்து கொண்டு இருந்தான்.
“சார்!… நீங்கச் சிவா, ராதா விஷயத்தில் இன்வால்வ் ஆகாதீங்க. அவங்க ரெண்டு பேருக்கும், இதே வேலைத் தான்.
அவங்க ரெண்டு பேரும் லவர்ஸ். ரொம்ப டீப்பா, பல வருஷமா லவ் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா இதுபோல அடிக்கடி முட்டிக்கும்.
இன்று சண்டை போடுவாங்க. நாளைச் சேர்ந்துப்பாங்க. இன்வோல்வ் அகறவங்கத் தான் லூஸாகி நிற்பாங்க. அதைச் சொல்லத் தான் கூப்பிட்டோம்.” என்றாள் மதுரா புன்னகையுடன்.
“சரி… நீங்கச் சொல்லிட்டா அப்பீல் ஏது?… கண்டிப்பா இன்வோல்வ் ஆக மாட்டேன். ஆமா, உங்க பெயர்?” என்றான் சூர்யா .
“ஐம் மதுராக்ஷி சங்கரன்!… பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் வருடம்?… நீங்க?” என்றாள் மதுரா .
அவன் பதில் சொல்வதற்குள், சிவா, ராதாவுடன் அங்கு வந்து சேர்ந்து, “ஏய்!… என்னவோ ராதாப் பிரெண்ட்டை படுத்தி எடுக்கறீங்க, என்று நியூஸ் வந்துச்சு. நீ ஏண்டீ, இதில் இன்வோல்வ் ஆகறே?” என்றாள், ‘சிவா என்கிற சிவசங்கரி’
.
“பாருங்க… நான் சொன்னேனா இல்லையா!… நீங்களே உங்க பிரெண்ட் கிட்டேச் சொல்லுங்க… நாங்க உங்களைப்படுத்தியா எடுத்தோம்?” என்றாள் மதுரா .
“ஏய்!… யாருடீ இது?… இவரை ஏன் என் பிரெண்ட் என்கிறாய்?” என்றான், ‘ராதா என்கிற ராதாகிருஷ்ணன்’.
“இவர்த் தானே உங்கப் பிரெண்ட்!… சேர்மன் ரிலேட்டிவ்?” என்றாள் மதுரா .
“ஐயோ லூசு, மதுரா!… இவர் யாருனே எனக்குத் தெரியாது. இப்போ தான் பார்க்கிறேன்.” என்றான் ராதாகிருஷ்ணன் அலறாதக் குறையாக.





