arrow_back
என்ன தவம் செய்தேன்! 75
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 75 / 85

75

visibility 514
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

பெருமூச்சு  விட்ட  பவானி, “முழு  விஷயம்  தெரியாது  தான்  என்றாலும், விஜய்  தம்பி,  அவர்  நண்பர்கள், சூர்யா எல்லோரும் காப்பாற்றுவது இப்போ தான் தெரிய வந்தது.

இந்தச் சோனா ஏன் இப்படி எல்லாம்… பெண்ணாய்   இருந்து  இன்னொரு  பெண்ணின் வாழ்வை…” என்று முகத்தை  மூடி  அழுதார் .

“ச்சூ!.. என்ன பவானி நீ!… அவளை எல்லாம் பெண் என்று சொல்லி, பெண்ணினத்தைக்  கேவலபடுத்தாதே!… 
அவ  ஒரு   psycho. 
தானும் வாழாது,   மற்றவர்களையும்   வாழவிடாதவள்.

இல்லை என்றால், விஜய் போன்ற உயர்ந்த மனிதன் கிடைத்தும் கண்டவனோடு அலைவளா?…
மதுராவிற்கு எதுவும் ஆக விடமாட்டான் விஜய்.   அதை  மட்டும்  மனதில்  வை…” என்றார் ஆதி .

“பிரச்சனையே அது தான். சோனாவிடமிருந்து மதுராவை, விஜய்யும், சூர்யாவும்  காப்பாற்றி  விடுவார்கள்.
ஆனால்,  இந்த   இருவரிடமிருந்து  என்   மகளை   எப்படிக்   காப்பாற்றுவேன்?….  கெட்டவர்களாய்  இருந்தால்  மோதலாம். ஆனால்,   இருவருமே என் மகளின் உயிரை, மானத்தைக் காப்பாற்றும்   கடவுள்.”   என்றார்   பவானி   வேதனையுடன் .

“இதில் என்ன இருக்கு!…. அவங்கக் கிட்டே இருந்து மதுராவை, காக்கும் அவசியம் என்ன ஏற்பட்டது இப்போ?… எதற்கு இப்படி எல்லாம் பேசறே?”  என்றார்  சிவகாமி.

“மகளைக் காப்பாற்றினால் நன்றி கூறலாம். வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருக்கலாம்.  தெய்வமாய்   கூட   வணங்கலாம்.
ஆனால்,   இதற்காக எல்லாம் மகளையே தூக்கிக் கொடுக்க முடியுமா என்ன?… விஜய்யும்,   சூர்யாவும்   மதுராவை  விரும்பறாங்க.

விஜய்  குழப்பத்தில்  இருப்பது  போல்  இருக்கு.  சோனா,  மனைவியாக  ஊர்  உலகத்திற்கு  முன்  இருக்கிறாள்.

சூர்யாவிற்கு   அப்படி   எல்லாம் தடை இல்லை. அவனைத்  தடுக்க எங்களால்  முடியவில்லை   என்பதற்கு  பதில், தடுக்கும்  எந்த ஒரு வழியையும் அவன் வைக்கவில்லை.”  என்றவர்  சூர்யா செய்த  ட்ரான்ஸபெர்,  மகளுக்கு   வேலை,   போன்றவற்றைச்  சொல்லி  முடித்தார் .

“நீ தேவை இல்லாம குழம்பறே என்று தோன்றுகிறது பவா. ரெண்டு பேரையும்    எனக்கு    மிக    நன்றாகவே    தெரியும்.  
ரெண்டு    பேரும்  ஜெம்   ஆப்   எ பெர்சொன்ஸ்.
ரொம்ப நல்லவங்க. பெண்களை மதிப்பவங்க.”  என்ற ஆதியை,  நிறுத்தினார் பவானி .

“அவங்க  ரொம்ப  நல்லவங்க.  எப்படியோ  இருந்துட்டு  போகட்டும். ஆனால்,  என்  மகளுக்கு  ரெண்டு  பேருமே  வேண்டாம்.” என்றார் பவானி  உறுதியாக .

“பவானி!.. என்னமா… இவர்கள் ரெண்டு பேருக்கும் என்னக் குறை?” என்றார் சிவகாமி,  பவானியின்  போக்குப் புரியாதவராக.

“குறை எல்லாம் இல்லை. ஆனால், ரெண்டு பேருக்குமே திருமணம் ஆகிவிட்டது.

ஒருத்தருக்கு மனைவி உயிரோடு இல்லை. இன்னொருத்தருக்கு  மனைவி என்றே சொல்லத் தகுதி இல்லாதவள் மனைவி.”  என்றார் பவானி .

“இதில்,  இவர்கள்  தவறு  என்ன  இருக்கு?”  என்றார் சிவகாமி.

“தவறு,  இவர்கள்   மேல்    இல்லை. சமுதாயத்தின்   மேல். 
ஆண்கள் எத்தனைத் திருமணம் செய்தாலும், இவர்களுக்கு எந்தப் பட்ட பெயரும் வருவதில்லை.  

‘ரெண்டாம்   தாரம்’   என்ற பெயர் பெண்ணிற்கு மட்டும் தான்.
உங்களுக்கு    ஏற்பட்ட  குத்தல்  பேச்சுக்களை  பார்த்து  வளர்ந்தவள்  அத்தை   நான். 
ஆதி  மாமாவை,  யாரும்  விரல்  நீட்டி,  அப்படி  சொன்னது  இல்லை. அப்படி  சொன்னதைக்  கேட்டு,  நீங்க  எத்தனை  முறை  கண்   கலங்கி   நின்று   இருந்தீர்கள்   என்று   கூட   இருந்து   பார்த்தவள்  நான்.

மேடை  போட்டுப்  பெண் சுதந்திரம், பெண்ணியம் பேசிடலாம். ஆனால், இது போன்ற பட்டப் பெயர்கள் நீங்குவதில்லை.

இப்போ ஒரு திருமணத்திற்கு   சென்றேன்.
மணமகளின் அப்பாவிற்கு முதல் மனைவி இறந்து விட்டு இருக்க, மனைவியின் தங்கையையே மணந்து இருந்தார்.

இதற்கும், அந்தப் பெண்ணிற்கு  முதல்  திருமணம்.
மணமகளை  விட,  ஐந்தாறு  வயது  தான்  அதிகம். ஆனால், அங்கு இருந்தவர்கள், அந்த மனைவியை எப்படி அறிமுகம் செய்தார்கள் தெரியுமா?…
இவங்க   தான்   உயர்திரு….. ரெண்டாம் மனைவி.

மனைவியை    இழந்தது  அந்த  ஆண். ஆனால்,  ‘ரெண்டாம் தாரமாய்’ மணந்த  அந்தப்    பெண்ணுக்குத்    தான்    பட்டப் பெயர். 

நீங்க எல்லாம் பட்டக்  கஷ்டத்தை  என்  மகள்  பட,  அதைப்  பார்க்க நான் தயாராய் இல்லை.   என் மகளுக்கு,  இவர்கள், இருவரில் யாரை மணந்தும் தியாகம் செய்ய   வேண்டியக் கடமை இல்லை.

இதனால், என் மகளுக்கு யாரும் சிலையும்   வைக்கப்  போவதில்லை.” என்றார்  பவானி,  ரௌத்திரமாக .

இதற்குப்  பதிலை  அவர்களால்  சொல்ல  முடியவில்லை.

சமுதாயத்தின்  நிதர்சனம் இது  தானே!
சமுதாயமும், மக்களும் சில விஷயங்களைத் தவிர்த்துத், தேவை அற்ற ஒன்றுக்காகவே  போராடுகின்றனர்  என்பது  தான்  உண்மை .

“சபரிமலைக்கு 18-60 வயது வரை போகலாம் என்று வாதிடுபவர்கள், பெண்களின்,  ‘மாதவிடாய்  காலத்தில்,  கட்டாய  அலுவலக விடுமுறை’ என்று போராடவில்லை. அனைத்து பொது இடங்களிலும், ‘இலவச நாப்கின்’ என்று போராடவில்லை.

பல்வேறு  போட்டித்  தேர்வுகளில்,  பெண்களுக்கு, ‘வயது வரம்புச் சலுகை’ என்று போராடவில்லை.

வெளிநாடுகளில், ‘கற்பழிப்பு போன்ற பாலியல்  குற்றங்களை விசாரிக்க, ‘special victims Unit’ என்ற போலீஸ் டிபார்ட்மென்ட்,  ஒவ்வொரு நகரத்திலும் செயல்ப்படும். அது இந்தியாவில், ‘ஒவ்வொரு நகரத்திலும் தேவை’ என்று போராடவில்லை.

ஒவ்வொரு நகரத்திலும், ‘pedhophiles, sexual offenders’ லிஸ்ட் கொண்ட வெப்சைட், அந்த அந்தத் தெருவில் வசிக்கும் பெண்கள் தொடர்பான குற்றவாளிகளின்  டீடைல்  பிரசுரிக்கப்படுவதில்லை.

ஜாதி, மதம் பார்த்துத் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் சில இடங்களில்  பதிவு  செய்யப்படுகிறது .

அரசு  அலுவலகத்தில்,  பணியாற்றும்  கணவன்மார்கள், கட்டாயமாகத் தங்கள் மனைவிக்கு மாதம்தோறும் கைச்செலவுக்குப் பணம் தர வேண்டும். அப்படி இல்லை என்றால், மனைவி புகார் கொடுத்தால், அவர்கள் மேல் நடவடிக்கை  எடுக்கப்படும்.

ஆனால், பெரும்பாலான குடும்பத் தலைவிகள் இந்தச் சுதந்திரத்தைப் பெறுவதில்லை.  மனதிற்குள்  மூடி மறைத்து, வெளியே சொல்ல முடியாமல் புழுங்கிக்   கொண்டு   இருக்கும்  பெண்கள்  தான்  அதிகம் .

இது  எல்லாம்  எவ்வளவு இன்றியமையாதது என்று புரியாமல், போராடாமல், இருக்கும் இவர்கள் தான், ‘பேச்சுவாக்கில்  சொல்லப்படும்’ இது  போன்ற  வார்த்தைகளுக்காகப்  போராடப்  போகிறார்களா என்ன ?…

‘விதவை,  கைம்பெண்,  ரெண்டாம் தாரம்,  மலடி’  போன்ற சொற்கள்,  குழந்தை இல்லை  என்றால்,  இந்த விரதம், அந்தக் கோயில் என்று பெண்களை  மட்டும்   அலைக்கழிக்கும்   நிலை  தான்  உள்ளது.

‘சொன்னால் சொல்லி விட்டுப்    போகட்டும்’  என்ற  மனப்பாண்மை  அனைவர்க்கும்  வந்து  விடாது.

‘ஒரு    சொல்  வெல்லும், ஒரு  சொல்  கொல்லும்’  என்பது  இது  தான்.” என்று பவானி, குமுறி விட, அவர்களுக்கு என்ன சொல்வது என்று கூடப் புரியவில்லை.

இதில்,   பவானியின்  குமுறல்  நியாயமானது  தான். 

60  வயதான  பின்னும், இது  போன்ற  அடைமொழிகள்  தொடரும்  வயதான  பெண்களை, அவர்கள்  அறிமுகம்  செய்யப்படும்  விதத்தை  இன்றும்  கண்கூடாகப் பார்க்க  முடியும்.

சிவகாமியும்  இதனைத்  தாண்டி  வந்தவர்  என்னும் போது, ஒரு அன்னையின்  குமுறலை  எதிர்த்து  அவரால்  பேச  முடியவில்லை .

“புரியுது  பவா. மக்கள் மனம் மாற வேண்டும். அதற்கு இன்னும் எவ்வளவு காலம்  ஆகுமோ!….
இது Patriachial society.
ஆண் என்பவனை மிகப்பெரிய பெடஸ்டலில் வைத்து பார்க்கும் உலகம்.

நான் எந்தத் தவறு செய்தாலும், அவனுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், அவனுக்கு சப்போர்ட் செய்ய மட்டுமே, இந்த சமூகம், அதிக அளவு முன் வரும்.

ஆயிரம் பெண்ணியம் பேசிவிடலாம். கதைகள், நாவல்களை, கருத்துக்களை சமூகவலை தளத்தில் பதிவிடலாம்.

ஆனால், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று பார்த்தால் தான், அங்குள்ள நிலைமை எல்லோருக்கும் புரியும்.”    என்றார் சிவகாமி.

“சமுதாயம்   எப்படியாவது   போகட்டும்.   எனக்கு,   என் மகள் தான் முக்கியம்  அத்தை.” என்றார் பவானி .

“சரி பவா….  இதற்கு  என்ன  செய்யப்  போகிறாய்?”  என்றார் சிவகாமி .

“அத்தை!…  என்னால்   எப்போ, எப்படி, யாரால், என் மகளுக்கு ஆபத்து வரும்  என்று   என்னால்    ஒவ்வொரு   நொடியும்,  உயிரைக் கையில் பிடித்துக்   கொண்டு   வாழ   முடியாது.

இந்த மாதத்திலேயே, மதுராவிற்கு திருமணம் முடித்து விடலாம் என்று நினைக்கிறேன். அதற்கு  உங்கள்  உதவி  வேண்டும்.  அதற்காகத் தான் வந்து  இருக்கிறேன்.”  என்றார் பவானி .

“உதவி  என்று   எல்லாம்  ஏன்  சொல்கிறாய்!…  என்ன  செய்ய  வேண்டும் என்று  சொல்லு.”  என்றார் ஆதி .

“என்  அப்பாவுக்கு,  நீங்க  வாக்கு  கொடுத்து   இருக்கீங்க…  என்னையும், என்  குடும்பத்தையும், கடைசி வரை பார்த்துக் கொள்வதாக. 
அது உங்களுக்கு  நினைவு  இருக்கிறதா  அத்தை?”  என்றார் பவானி .

“மறக்கும் உதவியையா, உன் அப்பா செய்து இருக்கார்?… போடி பைத்தியக்காரி.
உங்க அப்பா கிட்டே, பேசிய எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு.”  என்றார் சிவகாமி .

“நான்  கேட்கப்  போவது,   நியாயமா  என்று  கூடத் தெரியாது அத்தை. என் அப்பா  செய்த  உதவிக்கு,  பதில்  உபகாரத்தை, நான் கேட்பது தவறு தான்.

ஆனால்,  நியாயம்,  நீதி,   நேர்மை  இது  எல்லாம்  பார்க்கும்  நிலையில் நான்  இல்லை.  இதற்கு,  எனக்கு மன்னிப்பும் கிடையாது தான்.” என்றவரை இடை மறித்த  ருத்ரமாறன்,

“அத்தை!… என்ன கேட்கணுமோ கேளுங்க… எதற்குத் தயங்கறீங்க? நாங்களும்  உங்கக்  குடும்பத்தினர்  தான்.”  என்றான் .

பெருமூச்சை வெளியிட்ட பவானி, “அத்தை!… என் மக மதுராவை, உங்க வீட்டு  மருமகளாக  ஏற்று  கொள்வீர்களா?
உங்க  பேரன் ருத்ரமாறனுக்கு, என் மகளைத் திருமணம் செய்து வைப்பீர்களா?…. 
இது    தான், என்   அப்பாவுக்கு   நீங்கப்பட்டு   இருக்கும் நன்றிக்  கடனுக்கு  உபகாரம்.

என்  மகளின்  மானத்தையும்,  உயிரையும் காப்பாற்றிக்   கொடுங்க   அத்தை.”  என்றார் பவானி, சிவகாமியின் காலடியில்   அமர்ந்து,  மடியில் தலை வைத்து. 

“பவானி!…”
“அத்தை!…”
“அம்மா!…”   என்று  ஏகக்  காலத்தில்,  பல  குரல்கள் ஒலித்தன.

“என்னை  எல்லோரும்  மன்னிச்சுடுங்க.  எனக்கு வேறு வழி இல்லை. உங்கள் குடும்பத்தைத்   தவிர,  வேறு யாராலும் என் மகளைக் காப்பாற்ற முடியாது.

இந்தக்  குடும்பத்திற்கு   என்று   ஒரு  பெயர்   இருக்கு. ஆள் பலம்,  பண பலம்,  சமூகத்தில்   நல்ல   பெயர்   இருக்கு.
மத்தவங்க செய்யறதுக்கும், கணவனாய் உரிமையோடு செய்யறதுக்கும், நிறைய  வித்தியாசம் இருக்கு. 

இவை கொடுக்கும் மதிப்பும் மரியாதையையும்,  ‘ரெண்டாம் தாரம்’  என்ற  பெயர் கொடுத்து விடாது.

ருத்ரா  தம்பியைத்  தவிர,  இப்போ   இருக்கும்  நிலைக்கு  வேறு யாராலும், என்  மகளுக்கு  ஒரு  நல்ல  வாழ்வை  கொடுக்கவே  முடியாது. 
கேட்டது தப்பு.  

எங்க  நிலைக்கு  ரொம்பவே  அதிகம்  என்று  தெரியும்  தான்.   ஆனா,  வேறு  வழி  இல்லை.
எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க.” என்றார்  பவானி,  கண்கள்  கலங்க.

வெகுநேரம்  அங்குக்  கனத்த  மௌனம்  நிலவியது. யாராலும்  எதையும்  பேச  முடியவில்லை. 

பவானியின் நிலை அவர்களுக்குப் புரியாமல் இல்லை.
அவர்கள், ‘அந்த வார்த்தைகளால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்னும் போது, பவானியையும் குறைச் சொல்ல அவர்களால்  முடியவில்லை.

கடலில் முழுகிக் கொண்டு இருப்பவனுக்கு, பற்றுக் கோல் போல் ருத்ரா, பவானியின்   கண்களுக்குத்  தெரிந்ததில்  வியப்பில்லை  தான்.

சற்று  நேரம்  எதையோ  யோசித்த  சிவகாமி,  “பவானி!…  நான்  சொல்வதை மனதில்   வை.  சில  காலம் உங்களை எல்லாம் மறந்து எங்கள் பிரச்சனையில்  முழுகி  இருந்து  விட்டோம் தான்.

முளையில்   கிள்ளி   இருக்க  வேண்டிய   பிரச்சனையை,   இவ்வளவுத் தூரம் பலர்  சேர்ந்து வளர்த்து விட்டோம்.  அது  உன்  மகளின்  வாழ்வைக்  குறி வைக்கிறது.

எப்போ  இருந்தாலும்,   மதுரா  இந்த  வீட்டுப் பெண் என்பதில் எந்த மாற்றமும்   இல்லை.  அவளைப்  பற்றிய   கவலை, உனக்குத் தேவை இல்லை. 
இனி  மதுரா  எங்கள்  பொறுப்பு.”  என்றார் சிவகாமி.

“அத்தை!… அப்போ  திருமணம்?”  என்றார்  பவானி, சிவகாமி என்ன சொல்ல  வருகிறார்  என்பது  புரியாமல் .

“மதுரா  என்  பேரனுக்குத்  தான்  பவா.   இந்த,  ‘வீட்டின்  மருமகள்’  அவ தான்.  இனி,  அவளைப்  பற்றியக்  கவலை  உனக்கு  வேண்டாம்.” என்றார் சிவகாமி,  புன்னகையுடன் .

“பாட்டி!…”  என்றான் ருத்ரா, அதிர்ந்து போனவனாய்.

என்றுமே, சிவகாமி எடுக்கும், எந்த முடிவுக்கும், கட்டுபட்டேப் பழக்கமானவர்கள்  அந்தக்  குடும்பத்தினர்.

இன்றும்,  தன்  பாட்டியின்  முடிவை  எதிர்க்கத்  துணியாதவனாய், கண் கலங்க  நின்றான்  ருத்ரமாறன்.

“ரொம்ப  சந்தோசம்  அத்தை.  இப்போ தான், மனசு நிம்மதியா இருக்கு. நான் கிளம்பறேன்.” 

பலரின் வாழ்வில், சூறாவளியைக் கிளப்பி விட்டு, பவானி,  நிம்மதியோடு   கிளம்பி விட, அந்த வீட்டினரின் மனம் தான் குழம்பிப் போனது .

மன வலியோடு,  ருத்ரா  தன்  அறைக்குச்  செல்ல  முயல,  சிவகாமியின்  குரல்,  அவனை  நிற்க  வைத்தது .

“ஹலோ யாரு!…   முருகானந்தமா?… நல்லா  இருக்கேன். நீ எப்படி இருக்கே? செண்பகம்  எப்படி  இருக்கா?.. .உடம்பு  இப்போ  பரவாயில்லையா?

ஒண்ணும் இல்லைபா… நம்ம  ருத்ராவுக்குத்  திருமணம்  ஏற்பாடு ஆகி இருக்கு.  
பொண்ணு  நம்ம  சொந்தம் தான். பவானி   தெரியும்   தானே!.. அவ   பொண்ணு    மதுராக்ஷி. 
இப்போ  தான்  பேசி  முடிச்சோம்.

அதான்,  உடனே  உனக்குச் சொல்லிடலாம் என்று அழைத்தேன். செண்பகம், ராஜேஸ்வரியிடம் சொல்லி விடுப்பா.

என்னப்பா செய்யறது!… நாம  ஆசைப்பட்டோம்…  வாஸ்தவம் தான்.
இவனும்,  ஐந்து  வருடமாய்,  ராஜிக்காகக்   காத்துட்டு   தான் இருந்தான்.

உன்   மகத்  தான்,  பிடிக்  கொடுக்கவே  மாட்டேன்  என்கிறாளே!.
என்னவோ,  ‘நீதி,  நேர்மை,  நியாயம்,  தர்மம்’  என்று  பிதற்றிட்டு  இருக்கா.

ஆமா,   நாங்க   நிறையத்  தப்புச்  செய்யறோம்  தான்.   ஆனா,  ‘அது  ஒரு  மனித மிருகத்தை எதிர்த்து’ என்று உன் மகளுக்குப் புரியவே மாட்டேன் என்னும்  போது,  என்னை  என்ன  செய்யச்  சொல்றே!

‘முள்ளை முள்ளால் எடுப்பது’ எப்படி குற்றமாகும்?.

அவ நல்லவளாவே இருந்துட்டு போகட்டும்.  இந்த, ‘ரவுடிக் குடும்பம்’ அவளுக்கு வேண்டவே வேண்டாம்  முருகா. அவ போலீஸ்காரி. அவ லெவலுக்கு, ஒரு கமிஷனரோ, லாயரோ, டாக்டரோ, கட்டிகிட்டு சந்தோசமா இருக்கட்டும்.

அதான்… எனக்கும், வம்சம் விருத்தி ஆகணும் இல்லை?

இப்பவே  ருத்ராவுக்கு  வயசு  ரொம்ப ஆகிடுச்சு. சரி,  நீயும்,  உன்  குடும்பமும்  வந்து   திருமணத்தை  நடத்தி  கொடுங்க.

எனக்கென்று இருப்பது நீங்கத்  தானே!…
சரி வச்சுடறேன்.” என்றார் சிவகாமி, ACP ராஜேஸ்வரியின்  அப்பா  முருகானந்தத்திடம்.

அதிர்ந்து  நின்ற  ருத்ராவின்  தோளில்  தட்டியவர்,  “எப்பவோ  கிடைக்கும் பலாக்காய்க்கு   ஆசைபட்டு,  இன்று  கிடைக்கும், களாகாயை விட்டு விடாதே ருத்ரா.
உனக்கு,  அவ  மேல காதல், கத்திரிக்காய் இருக்கலாம்.

அவளுக்காக,  ‘நீ ஆயுசு முழுவதும் தவம்’ இருக்கலாம்.  ஆனா, என்னையும், உன் அம்மாவையும் நினைத்துப் பாரு. 

இன்னும் எத்தனை வருடம், ஏன் நாளைக்கு  உயிரோடு  இருப்போமா  என்பதே  நிச்சயம் இல்லை.

எத்தனையோ  தடவை,  மயிரிழையில்,  உயிர் தப்பி இருக்கோம். இதுவரை அந்த  ஆளை,  எதிர்த்துட்டே  என் வாழ்வும், உன் அப்பா வாழ்வும் போய்டுச்சு.

எங்களின் ஒரே சந்தோசம், உன் திருமணத்தால் கிடைக்கட்டுமே!…
உன் மகனைக் கொஞ்சும்  ஆசை  இருக்குடா  ருத்ரா. 
இந்த  ஒரு நிம்மதியையாவது எங்களுக்குக்  கிடைக்கட்டும்.”  என்றவர் கசந்தப்  புன்முறுவல்  புரிந்து  தன் மகனோடு  சென்று  விட்டார்.

அவர்  சென்றதும்,  பாரம் தாள முடியாதவனாய், பொத்தென்று அங்கு இருந்த   சோபாவில்   அமர்ந்தான்   ருத்ரா.

தலையைப்  பிடித்துக் கொண்டு,  எவ்வளவு  நேரம்  அப்படியே  இருந்தானோ, அவனுக்கே  தெரியாது.

மனதின் வலி, தாங்க முடியாமல், இதயம் தவிக்க, கண்கள் கலங்கி கண்ணீர் கோடாய் வழிய ஆரம்பித்தது. அதைத் துடைக்கக் கூட தோன்றாமல், விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் மொபைல் அழைக்கும் சப்தம் கேட்டுக் கலைந்தவன், மொபைல் பார்க்க,  டிஸ்பிலே ,  அது  “better half calling/பெட்டர் ஹாப் காலிங்.’ என்றது. 

அதே சமயம், காரில் சென்று கொண்டு இருந்த பவானியை, கார்த்திக் அழைத்துக்  கொண்டு  இருந்தான் .

“டேய்!… உனக்கு நேரம் காலமே இல்லையா!… நான் தான் கால் கட் செய்துட்டே இருக்கேன்லே!… அப்பவே தெரிய வேண்டாமா?… ஏதோ முக்கியமான விஷயம் என்று… ஆள் வளர்ந்த அளவு, உனக்கு அறிவு வளரவே   இல்லை  கார்த்திக்.”  என்று  அவனுக்கு  ஒரு  ஷொட்டு  வைத்தார்.

“கொஞ்சம்  நிறுத்தறீங்களா!… ஒரு மனுஷன் விடாமல், கால் செய்துட்டு இருக்கான்  என்றால், ‘அதுவும் அவசரம்’ என்று புரிய வேண்டாமா உங்களுக்கு?

சூர்யாவைப்  பார்க்க  மகளை  அனுப்பி விட்டு, துணைக்கு என்னையும் அனுப்பி  விட்டு,    பத்து  நிமிடத்திற்கு  ஒரு  முறை  அப்டேட்  கொடுக்கணும்   என்றது    நீங்கத்    தான்.

இதோ அப்டேட் தரேன் கேட்டுக்கோங்க. உங்க மக, சூர்யாவின் ஹாஸ்பிடலில்,  மயக்க  நிலையில்,  ‘இன்டென்சிவ்  கேர்  யூனிட்டில்,  அதான்  ICUன்னு  சொல்வாங்களே,  அதில்  அட்மிட்   ஆகியிருக்கா!…

ரெண்டு  மணி  நேரம்  ஆச்சு,  அவ  மயங்கி  விழுந்து.   இன்னும்  மயக்கம் தெளியலை….  அந்தச் சூர்யாவிற்கு இருக்கும் பாசம் ,அன்புக் கூட உங்களுக்கு  இல்லை… போதுமா!…  எதிராளியையும்  பேச  விடுங்க.” என்று பொரிந்து   தள்ளினான்  கார்த்திக் .

“கார்த்திக்!…” என்று பவானி அலறி விட, அதில் பயந்து போன ரகு, நடு ரோட்டில்  காரை  நிறுத்திப்  பலரிடம்  திட்டு  வாங்கினான் .

சமாளித்து கொண்டு கார் கிளம்ப, “என்ன கார்த்திக் சொல்றே!… என்ன ஆச்சு?… அந்தச் சூர்யா ஏதாவது தப்பா… அவளை…”  என்று  கேட்க வந்ததை,  கேட்க  முடியாமல்  நிறுத்தினார் .

“ஏன்,  அத்தை   எப்பவுமே,   உங்களுக்கு மத்தவங்க கிட்டே இருக்கும் நல்லது தெரியவே தெரியாதா!…
நல்லது செய்யறவங்களை, ‘வில்லன் ரேஞ்சுக்குத்  தான்’   பார்ப்பீங்களா?…  அந்தச்  சூர்யா,  உங்க  மகளின்  காலேஜ்   நண்பன்,   ‘சின்னத்   தம்பி   பிரபு’ வாம்.

அப்பவே,  மதுராவின் மானத்தை காப்பாத்தியவன் தான், இப்போ துச்சாதனன் வேலை செய்வானா?… வாயில் ஏதாவது வந்துட போகுது அத்தை.

சீக்கிரம் சூர்யாவின், ‘லைப் சப்போர்ட்’ ஹாஸ்பிடலுக்கு வந்து சேருங்க. மனுஷன்   இருக்கும்  நிலை  புரியாம  நீங்க  வேறு  ஏதாவது  பேசிக் கொலை  வெறியை  கிளப்பி விடாதீங்க .” என்றவன் அழைப்பைத் துண்டித்து  விட்டான் .

அதே  சமயம்,  ‘லைப் சப்போர்ட்’  ஹாஸ்பிடல் டாக்டர்களை, ஒரு வழி செய்து  கொண்டு  இருந்தான்  சூர்யா  என்றால்  மிகையில்லை .
அவர்களும்  என்ன தான் செய்வார்கள்!
எல்லா  டெஸ்டும், ‘நார்மல்’ என்று தான் வருகிறது.

ஆனால், மயக்கம் தெளியவில்லை என்னும் போது தலையைப் பிய்த்துக் கொண்டு  இருந்தனர் .

“சூர்யா!… ரிலாக்ஸ்!… அவங்களை அவங்க வேலை செய்ய விடு. நம்ம ஹாஸ்பிடல் டாக்டர்ஸ்,  ‘வேர்ல்ட் பெஸ்ட்’ என்று உனக்கே தெரியாதா என்ன?… நீ டென்ஷன் ஆகி,  அவங்களையும் பயமுறுத்தாதே!…” என்றான் உத்தம்,  சூர்யாவின்  தோளில்  கை  வைத்து .

“எப்படிடா அமைதியா இருக்க முடியும்?… ரெண்டு  மணி நேரம் ஆச்சு மது மயங்கி… ஏன்  என்று  புரியாம  குழம்பிட்டு இருக்காங்க…

பெஸ்ட் டாக்டர்ஸ்,  பெஸ்ட்  ஹாஸ்பிடல் இருந்து என்ன பயன்? அவளுக்கு  ஏதாவது ஆகட்டும்… இவங்களை எல்லாம் உயிரோடு எரிச்சுடறேன்…” என்றான்  கோபத்துடன்.

அவனைச்  சமாதானம்  செய்வது  இயலாதக் காரியம்  என்று  உத்தம் பெருமூச்சு  விட்டுத்  தள்ளி  நின்றான்.

அதே  சமயம்,   அவன்   மொபைல்  அழைப்பது, ‘விஜய்’ என்றது .

‘ரவுண்டு டூ வா!… கடவுளே!… காப்பாத்து.’ என்று உலகில் உள்ள கடவுள்களை  எல்லாம்  வணங்கி விட்டு  அழைப்பை  ஏற்றான்  உத்தம்.

“மதுவுக்கு என்ன?… எப்படி இருக்கா?” என்றது விஜய்யின் சிம்மக் குரல்.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

76

போனினை,  காதை  விட்டுத்  தள்ளிப்  பிடித்து,  காதை  ஒரு  தடவை  அழுத்தி விட்டான்.விஜய்,  அந்த  அளவுக்குக்  கத்தியதால்,   இவன்  காது,  ‘கொய்ங்’ என்றது .“இன்னும்  மயக்கத்திலே  தான்  இருக்காங்க. எல்லா டெஸ்டும் நார்மல் என்று  தான்  இருக்கு. ஆனா, ஏன் இன்னும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்