arrow_back
என்ன தவம் செய்தேன்! 76
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 76 / 85

76

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

போனினை,  காதை  விட்டுத்  தள்ளிப்  பிடித்து,  காதை  ஒரு  தடவை  அழுத்தி விட்டான்.

விஜய்,  அந்த  அளவுக்குக்  கத்தியதால்,   இவன்  காது,  ‘கொய்ங்’ என்றது .

“இன்னும்  மயக்கத்திலே  தான்  இருக்காங்க. எல்லா டெஸ்டும் நார்மல் என்று  தான்  இருக்கு. ஆனா, ஏன் இன்னும் மயக்கம் தெளியலை என்று தான்  குழம்பிட்டு  இருக்காங்க” என்றான் உத்தம் .

“எந்த  டாக்டர் டிரீட்மென்ட் தருவது?… அவரிடம் போனை கொடுங்க உத்தம்.” என்றான் விஜய்.

“விஜய் சார்!… உங்களுக்குப்  பெஹன்  மேல் உள்ள பாசம் புரியாமல் இல்லை. ஆனா, இப்போ தான், சூர்யா சார் கிட்டே மாட்டி, எல்லாரும்  அலண்டு  போய் இருக்காங்க.
நீங்களும் ஆரம்பிக்காதீங்க. பத்து நிமிஷத்துக்கு, ஒரு தடவை கடிச்சு வச்சா டாக்டர்களும், மனுஷங்கத் தானே! அவங்க மட்டும் என்ன செய்ய முடியும்?.
லெட் தெம் டூ தேர் ஜாப்.”  என்றான் உத்தம் .

“உத்தம்!… இங்கே என் கூட ஆல்வின் வைப், மிருதுளா இருகாங்க. அவங்களும்  டாக்டர்  தான்.  நேத்து  மது,   ஒரு  முறை  மயங்கி  விழுந்துட்டா… இவங்க தான் ட்ரீட் செய்தாங்க.

அதைப்  பற்றி,  இப்போ  ட்ரீட் செய்யும் டாக்டர்ஸ் கிட்டே அவங்க பேசணும். போய்ப்  போனை, டாக்டர் கிட்டே கொடுங்க.

போனை சூர்யா எங்கே வைத்துத் தொலைச்சான்?
அவனுக்குக் கால் செய்து அவன் எடுக்காமா   தான்,    உங்களுக்குக்  கால்  செய்து  சொல்றேன்.
இன்னும் டைம்   வேஸ்ட்    செய்யாதீங்க…   டாக்டர் கிட்டே போன் கொடுங்க. குயிக்.”   என்றான் விஜய்  கோபத்துடன் .

உத்தம் மொபைலுடன் இன்டென்சிவ் கேர் யூனிட், நோக்கி ஓட, அதே நேரம் விஜய்யின்  கார்,  அந்த  ஹாஸ்பிடலின் காம்பௌண்ட்டுக்குள் புயலெனச் சீறி   பாய்ந்து   வந்து   நின்றது.

விஜய்   இறங்குவதற்குள்,  இறங்கி   இருந்த   ஆல்வின்,   மதுரா அட்மிட் ஆகி   இருக்கும்   தளத்தின்   விவரத்தைக்   கேட்டு   அறிந்து   இருந்தான்.

மிருதுளாவும் டிரீட்மென்ட் கொடுக்கும் டாக்டர் இடம் போனில் பேசியவாறே நடக்க,  லிஃப்டுக்கு  கூடக்  காத்து  இருக்காமல், படிகளில் தாவி  ஏறினான்  விஜய் .

அவர்கள்  பின்னாலேயே  வந்து  சேர்ந்தனர்  பவானியும்,  ரகுவும்.

இவர்கள்  மதுராவை  பற்றி  விசாரித்து,  லிப்ட்  மூலம்,  வி.ஐ.பி பகுதிக்கு வந்து  சேர்வதற்கும், விஜய்யின் ருத்ரதாண்டவம் நடக்கவும் சரியாக இருந்தது .

விஜய்  அறைந்த  அறையில்,  சூர்யா  தள்ளிச்  சென்று விழுந்தான்.

“என்னடா செய்து தொலைச்சே என் மதுவை!…
கடன்காரா!…
எங்களை விட்டுப் போகவே மாட்டாயா?

காலேஜ்  டைம்மில்  தான்,  உயிர்  எடுத்தேன்னு  பார்த்தா,  இப்போ  ஏன்டா மறுபடியும்  வந்து  உயிரை  எடுக்கறே?

என் மதுவுக்கு மட்டும் ஏதாவது நடக்கட்டும். உன்னை உயிரோடு விட மாட்டேண்டா.” என்று சூர்யாவைப் புரட்டி எடுக்க முயன்ற விஜய்யை, சூர்யாவிடமிருந்து பிரிக்க முடியாமல் ஆல்வின், உத்தம், பாலாஜி ,  செக்யூரிட்டி  ஆட்கள்  மிகவும்  போராட  வேண்டி  இருந்தது .

சூர்யாவும், விஜய்யை  விடும்  நோக்கில் இல்லை.
பல  வருட  பகை,  புகைச்சல் இருவருக்கும்.
அதை தீர்த்துக் கொள்ளும் சமயம் கிடைக்க, சூர்யாவும் விஜய்யைப் புரட்டி எடுத்தான்.

‘அது ஹாஸ்பிடலா, இல்லை குழாய் அடி சண்டை உருண்டு பிரண்டு நடக்கும்  இடமா!…’   என்று  கேட்கும் அளவிற்கு, அங்கே ஒரு மினி மல் யுத்தம்  போல் கட்டி, பிடித்து, உருண்டு பிரண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர்  விஜய்யும், சூர்யாவும்.    

“உன்னை இப்போ யார் வரச் சொன்னது?. அவளை விட்டு ஒரு முறை போனாய் தானே!…
அப்படியே இருந்து தொலையேன். உன்னை யார் மீண்டும்   எங்களுக்கு   நடுவே   வரச்   சொன்னது.

இனி மதுரா எனக்குத் தான். அவளை இனி யார் வருத்தவும் விட மாட்டேன்டா. என் மதுராவை, இனி நினைக்கக் கூட, உனக்குத் தகுதி இல்லை.

அதான் உன் உத்தம பத்தினி சோனா இருக்காளே!…. அவ  எல்லாம் ஒரு மனுசி. அவளை அடக்க முடியலை. பெரிய இவனாட்டம் வந்துட்டே!

காதலிச்சா மட்டும் பத்தாது.  அவளைக்  கண் கலங்க விடக் கூடாது. கடைசி வரை  எது  வந்தாலும்,  உறுதியா  நின்று கைப்பிடிப்பவன் தான் ஆம்பிள்ளை.
நான் ஆம்பிள்ளைடா!

இனி,  எவன் மதுராவின் நிழலைத் தொட நினைத்தால்  கூட, அவன் உயிர் அவனுக்கு இல்லை.” என்று உறுமி கொண்டு இருந்தான் . 

அது  வி .ஐ .பி பகுதி  என்பதால், தனி தளத்தில் அமைந்து இருப்பதால், அங்கு   நடக்கும்   அடிதடி   வெளியே   தெரியவில்லை.

இல்லை  என்றால்   அன்றைய  தலைப்புச்  செய்தி மதுராவாகத் தான் இருந்து  இருப்பாள் .

‘காதலிக்காக அடித்துக் கொண்ட காதலர்கள்.’
‘மதுராவின் மாலை யாருக்கு?’
‘அடிதடி   சண்டையில்  இறங்கிய  இளம்  தொழில்  அதிபர்கள். 
காரணம் ஒரு  பெண்ணா?’  என்று  செய்தி  ஓடி  இருக்கும் .

இவர்கள்  காதல்  பற்றி  அறியாத  கார்த்திக்,  ரகு,  பவானி  மட்டுமே தாங்கள்  கேள்விபட்டத்தை  ஜீரணிக்க  முடியாதவர்களாய், அங்கு நடந்த அடி   தடியைக்   கண்டு   சர்வமும்   நடுங்கி  நின்றனர்.

சூர்யா,  விஜய்  கதை  அறிந்தவர்களுக்கு,  இந்த  அளவுக்கு அதிர்ச்சி இல்லை என்றாலும், ‘இருவரும் இப்படி லோக்கல் ரவுடி ரேஞ்சுக்கு’ இறங்கி அடித்துக்  கொள்வார்கள்  என்று  அவர்களும்  எதிர்பார்த்து   இருக்கவில்லை என்று  தான்  சொல்ல  வேண்டும் .

‘பிராமபிராயத்தனம்’  என்று  சொல்வார்களே,  அதைச்   செய்து இருவரையும்   பிரித்து   விட்டனர்   மற்றவர்கள்.

அந்தத் தளத்தின் ஒவ்வொரு மூலைக்கு இருவரையும் பிரித்து நிறுத்தினர்.

முகம் வீங்கி, வாய் கிழிந்து ரத்தம் வழிய, சட்டைக் கிழிந்து தொங்கி,  எப்பவுமே  டிப்டாப்பாக   இருக்கும் இருவரா இப்படி’ என்று தான் நினைக்கத்   தோன்றியது   அங்கு  இருந்தவர்களுக்கு .

பிரித்து வைத்தாலும்,  இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் எரித்துக் கொண்டு  இருந்தனர்.

ஹிரோஷிமா, நாகசாகிக் குண்டுகளுக்கு, இணையான கோப அலை இருவரிடமும் இருந்து வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது என்றால் மிகையல்ல.

அதிர்ந்து  கூடப்  பேசாத  விஜய்யின், இந்த முகம், பவானியைக் கதி கலக்கியது.

சூர்யாவையும் அவர் அறிவார் என்றாலும், இருவரின் மறுமுகம் அவரைப் புரட்டிப்  போட்டுக்  கொண்டு  இருந்தது.

இருவரும்  அடித்துக்  கொள்வது  அவர்  மகளின்,  உடல்  நிலையைக் குறித்து  என்னும்   போது  அவரின்  பதற்றம்  மேலும்  கூடிப்  போனது.

நடந்த சண்டையைப் பார்த்து, இதயத்தைப் பிடித்துக் கொண்டு, அப்படியே உறைந்து நின்று விட்டார் பவானி.

இப்படி  அங்கு ஒரு பிரளயமே நடப்பது அறியாமல், ‘மயக்கமா, உறக்கமா’ என்று  பிரித்துக்  கூற  முடியாத  அளவு   இருந்த  மதுரா,  ரெண்டு மணி நேரம் கழித்து கண் விழித்துத் தலைமை மருத்துவருக்கு ஏற்பட இருந்த, ‘ஹார்ட் அட்டாக்கை’  நிறுத்தினாள் .

சூர்யா  போன்ற  அரக்கனை,   நினைத்தே பதறிக் கொண்டு இருந்தவர் அங்கு  விஜய்   என்னும்  மற்றொரு  அரக்கன் வந்து விட்டதையும்,  இருவரின்  அடிதடி நர்ஸ் மூலம் கேள்விப்பட்டு இருந்தவர், வேண்டாத தெய்வம்  இல்லை  என்றே சொல்லலாம்.

சூர்யாக் குதித்தக் குதியில், ஏற்கனவே நடுங்கிக் கொண்டு இருந்த அவர், ‘மதுராவிற்கு காப்பாத்தவே முடியாத நோய்’ என்ற கோணத்தில் தான் டெஸ்ட்களை   செய்து   கொண்டு   இருந்தார்.

மிருதுளா, மதுராவின் நிலைபற்றிக் கூற, அவரின் கண்களுக்கு அவள் தெய்வமாகவே   தோன்றி   விட்டாள்.
உயிர்,  யாராய்  இருந்தாலும் வெல்லம் தானே!..
சூர்யா, விஜய்  கையால்  சாக,  அவருக்கு  வேண்டுதலா  என்ன!

மதுரா  கண்  விழித்து  விட,   தான்  உயிர் பிழைத்த சந்தோசத்தில் திக்குமுக்கு ஆடிப் போனார் அவர்.

வெளியே  வந்து  அவர்  மதுராவின் மயக்கக் காரணத்தைச் சொல்லி, ‘பயப்பட  ஏதும்  இல்லை’ என்று அவர்   சொல்லி  முடிப்பதற்குள், அவரை இடித்துத் தள்ளாதக் குறையாய் விஜய்யும், சூர்யாவும், மதுரா இருந்த அறைக்குள் ஓடினார்கள் .

மிருதுளாவிடம்  பேசிக்  கொண்டு இருந்த மதுரா, உள்ளே நுழைந்த இருவரின்   கோலத்தைக்   கண்டு   ஒரு   நொடி,   ஆடித்   தான்   போனாள்.

பின்   மெல்ல   கோபம்   ஏற   இருவரையும்   முறைத்தாள்.

‘மதுரா  நலமாக இருக்கிறாள்’ என்பதால் ஆசுவாசப்பட்ட இருவரும், மதுராவின்  கோபப்  பார்வையை,  எதிர்க்  கொள்ள  முடியாதவர்களாய்,  ஆளுக்கு ஒரு  பக்கம்  தலையைத்  திருப்பிக்  கொண்டனர் .

“என்ன  இது?  மனசுக்குள்ள  சின்னப்  பசங்க என்று நினைப்போ!…
அண்ணி,   இவங்களுக்கு  டிரீட்மென்ட்  பாருங்க.”  என்றாள் மிருதுளாவிடம்.

“அதெல்லாம்  வேண்டாம்  மதுரா. இட்ஸ் நத்திங்.” என்று பேசிக் கொண்டு இருந்த சூர்யாவின் குரல், மதுராவின் முறைப்பில் அடங்கிப் போனது .

“என்ன,   ‘குணா  கமல்’  என்ற  நினைப்போ!…
‘ ஹ்ம்ம்!… எனக்கு  உண்டான காயம்,  தன்னாலே ஆறிடும்…
அது  என்ன  மாயமோ  தெரியலை… என்ன மர்மமோ  புரியலை…
எனக்கு  ஒண்ணுமே  ஆகறது இல்லை.’  என்று  டயலாக்  விட,
இல்லை,   ‘ராக்கிப்  படச்   சில்லவெஸ்டெர்  ஸ்டாலோன்’  என்று  நினைப்போ, உங்க ரெண்டு பேருக்கும்?…

போய் அமைதியா அந்தச் சோபாவில் உட்காருங்க. 

மூச்!
வாயிலிருந்து  ஏதாவது  சத்தம்  வந்துச்சு,  உங்க ரெண்டு பேரையும் நானே கொன்னுடுவேன். 
மிருது அண்ணி!… நீங்க இவங்களுக்கு டிரீட்மென்ட் ஆரம்பியுங்க.” என்றவளின் கோபக் குரலுக்குக் கட்டுப்பட்டு  அமர்ந்தனர் இருவரும் .

‘வெளியே  அப்படி  சண்டை  போட்டவர்களா  இவர்கள்!’ என்றே தோன்றியது   மற்றவர்களுக்கு.

‘ஆண்  சிங்கங்களான  இருவரையும்  கட்டுபடுத்தும்  ஆற்றல்,  தன்  மகளின் ஒற்றைப்  பார்வைக்கு’   இருப்பதை  கண்ட  பவானி,  ‘இவர்கள் வாழ்வில் தான்  ஒரு  பார்வையாளர் மட்டுமே  என்பதையும்,   அவ்வளவுச் சுலபமாக ருத்ரா உடன், தன் மகளின் திருமணம் நடந்து விடாது’ என்பதையும் புரிந்து கொண்டார்.

“இது ஹாஸ்பிடல் என்ற நினைப்பு இருக்கா!… இல்லையா உங்க ரெண்டு பேருக்கும்!…
மனசுக்குள்ள, ‘அக்னி நட்சத்திரம் கார்த்திக், பிரபு’ என்று எண்ணமா?

எப்போ பார்த்தாலும் முட்டிட்டே இருக்கீங்க!… வெளியே போய்ச் சொல்லிடாதீங்க… பெரிய பிசினெஸ் மாக்னெட்ஸ் என்று… சிரிக்கப் போறாங்க. பைத்தியமா புடிச்சிருக்கு உங்க ரெண்டு பேருக்கும்?

என்னங்கடா, ரெண்டு பேரும் சண்டை போட்டு இருக்கீங்க!… ரத்தம் இவ்வளவு,  கம்மியா  ஊத்துது?… 

அப்படியே  ரத்தம்,  அருவி  மாதிரி கொட்ட  வேண்டாம்?
கை, கால் எலும்பு எல்லாம் அப்படியே இருக்கு… ரிப்ஸ் கூட நொறுங்கியிருக்க  வேண்டாமா?…
சப்பையான  சண்டையா இருக்கு.” என்றால் மதுரா நக்கலாக.

“ஹாஸ்பிடல் தானே இது!.. இங்க விதவிதமா ரகம் ரகமாய்  கத்தி எல்லாம் இருந்திருக்குமே!… எடுத்து, ‘சதக் சதக்குன்னு’ குத்திக் குத்திச் சண்டைப் போட்டு இருக்க வேண்டியதுதானே!  

என்ன  லுக்  வேண்டி  கிடக்கு?
ட்ரீட்மென்ட் அங்கேத் தானே செய்யறாங்க?… 
அடுத்த  தடவை  ஒண்ணு  செய்யுங்க  ரெண்டு பேரும்…  AK 47 எடுத்து வந்து, சுட்டுச் சுட்டு விளையாடுங்க.. .இன்னும் மாஸ்ஸா இருக்கும்.

திரும்ப இது  போல் சின்னப் பிள்ளை அடிச்சு கொள்வது போல் செஞ்சு வச்சீங்க..  என்ன  செய்வேன்  என்று  எனக்கே தெரியாது.

ஊர்,  உலகத்தில்  இருப்பவனுங்க  உங்களைக்  கொல்ல  துடிப்பது  போதாது என்று, நீங்க ரெண்டு பேருமே, ‘ஒருவரை ஒருவர் கொல்லப் போவதாகப்  பொது  இடத்தில,  கத்தி’ இருக்கீங்க.  கிறுக்கு பிடிச்ச குரங்குங்களா!

டிரீட்மென்ட் முடிச்சாச்சு இல்லை. ரெண்டு  பேரும்  ‘கெட்  அவுட்  ஆப் திஸ் ஹாஸ்பிடல்’.”  என்றாள்  மதுரா   கோபமாக.

அவளை  எதிர்த்து, ஒரு  பேச்சுக்  கூடப்  பேசாத இருவரும்,  தலையைத் தொங்க போட்டுக் கொண்டு வெளி ஏறி விட, இது அனைத்தையும் வேடிக்கை  பார்த்துக்  கொண்டு  இருந்த  பவானிக்கு,  மகளின் இந்தப் பக்கம்  வியப்பாக  இருந்தது  என்றால், ஆண்கள்  இருவரின்  நடவடிக்கை, உட்சபட்சத்   திகைப்பைத்   தான்  கொடுத்தது .

அவர்கள் வெளியேறியதும், அவர்கள் உடன் இருந்த உத்தம், ஆல்வின், பாலாஜிக்கு  ஒரு  பொங்கல்  வைக்க,  அவர்களின்  தலைத்  தொங்கிப்  போனது.

“அவனுங்க ரெண்டு பேருக்கும் தான் புகைச்சல்… ஆகாதுன்னு தெரியுது இல்லை… அவனுங்க கையை ஓங்கும் வரை, என்னத்தைக் கழற்றிட்டு இருந்தீங்க   நீங்க   மூவரும்?…

நெக்ஸ்ட்  டைம்  ரோட்டில்,  அந்த  லூசுங்களை குழாய் அடிச் சண்டை போடச்  சொல்லுங்க…  உங்களுக்குக்  கையில்  குட்டைப்  பாவாடை அதான், ‘சியர் லீடர் காஸ்டியூம்/ Cheer leader costume’ என்று  கிரிக்கெட்,  புட் பால் எல்லாம் குஜிலிங்க பின்னால்   நின்று  சியர்  செய்வார்களே!… அது  போல்  நீங்க  மூன்று  பேரும்   செய்யுங்க…கெட் அவுட். ”  என்று  வறுத்து  எடுத்தாள்.

வெளியே  வந்த  இருவரும்,  அங்கு இருந்த காரிடோரில் இருந்த நாற்காலியில்,  ஆளுக்கு  ஒரு  பக்கம்  அமர்ந்து  கொண்டனர்.
முறைப்புத்  தொடந்து  கொண்டுத்  தான்  இருந்தது.

இவர்கள்  மீண்டும்  அடித்துக்   கொள்ளாமல்  இருக்க,  அடித்துக் கொண்டால் பிரித்து விட என்று ஆல்வின், உத்தம், பாலாஜி தயாராக நின்றனர்.

விஜய்யை  முறைத்து  கொண்டு  இருந்த  சூர்யாவின்,  தோளில்  கை  வைத்து  அழுத்தினாள்  சந்திரா.

“என்ன ப்ரோ!…  ஹாஸ்பிடல்லையே  ஒரு  வழி செஞ்சுட்டிங்க போல் இருக்கு இருவரும்!…
டீன், ஹார்ட் ஸ்பெஷலிஸ்டை  பார்க்கப் போகும் அளவு,  அவரைப்  படுத்தி எடுத்து இருக்கீங்க.
செம்ம  பைட்  போல்  இருக்கு!…
ச்சே!…. ஒரு ஆக்சன் சீன் மிஸ் செய்துட்டேனே!…”   என்றாள்  அவன்,  அருகே  அமர்ந்தவாறு.

“என்ன நக்கலா?…. எங்கே போய்த் தொலைந்தே!… உனக்காகத் தானே, இந்த  ஹாஸ்பிடல் கட்டிக்  கொடுத்தேன். அவசரம் என்னும் போது எங்கே  தொலைந்தே!…”  என்றான்  சூர்யா, கடுப்போடு .

“தோடா!…  நீ  அவசரம்  என்று  குதிக்கிறாய், என்பதற்காகச் செய்து கொண்டு இருக்கும் ஆபரேஷன்னை அப்படியே, விட்டா வர முடியும்? உனக்கே    ஓவர்ரா   இல்லை.
ஆமா,  நீங்க   ரெண்டு  பேரும்  முட்டி  மோதுவது   என்றால்,  அது  ஒரே  ஒரு  ஆளுக்காகத்   தானே  இருக்கும்.

அதுவும்,  இந்த  நாலு  வருஷமாய் இல்லாமல்,  உத்தம், ஆல்வின், நான் எல்லோரும் அமைதியாய் இருந்தோம்.
இப்போ, எதுக்குடா மறுபடியும் உங்க வார் ஆரம்பித்து இருக்கு?.    

வழக்கமா,  அது  நடப்பது  தான்.  இந்த முறை  யாருக்காக,  இந்த  அடி, தடி, ரத்த   வெள்ளம்   எல்லாம்?”  என்றாள் சந்திரா .

“மதுரா  தான்  மயக்கமாகிட்டா.  அவளைத் தான் அட்மிட் செய்து இருக்கோம்.”  என்றான் சூர்யா .

“அதானே  பார்த்தேன்!…  நீ,  இந்த  அளவுக்கு,   டீன் வரை டென்ஷன் படுத்தி   இருக்கியே   என்று   அப்பவே   யோசித்தேன்.
‘மீண்டும்  கோகிலா’  மாதிரி…  மீண்டும்  மதுரா  என்ட்ரியா!…
ஒகே… ஒகே… எனக்கு என்டெர்டெய்ன்மெண்ட்  தான் இனி…” என்றாள் சந்திரா புன்னகையுடன்.

“என்னடீ!… ரொம்ப  ஓவர்ராப்  பேசிட்டு போறே!… கொழுப்பா?” என்றான் சூர்யா  கடுப்போடு .

“இல்லை  ப்ரோ!…  நக்கல்ஸ்….” என்றவள்,
“இரு ப்ரோ!… அங்கே உன்ர உயிர்   தோழர்,  ரொம்ப  பாசமா  பார்த்துட்டு இருக்கார்… அங்கே போய் ஒரு  வம்பு  வளர்த்துட்டு,  உன்  ஆளைப்  பார்த்து,  ஒரு  அட்டெண்டென்ஸ் போட்டுட்டு வரேன்.” என்ற சந்திரா, சூர்யா ஏதோ சொல்வதற்குள் விஜய்யிடம்  சென்று  இருந்தாள்.

“என்ன  ப்ரோ!…  ரெண்டு பேரும் மறுபடியும், உங்க ரகளையை ஆரம்பித்தாகி விட்டதா!… 
நாலு  வருஷத்திற்கு  முன்பு  புலம்பி,  புலம்பியே உத்தம்  முடிக் கொட்டிப் போச்சு…
சூர்யா,  போன்  செய்து  உங்களுக்குப்,  பொங்கல் என்னிடம் வைத்ததில், என்  காதே   தீஞ்சிப் போச்சு…
மீண்டும் முதலில் இருந்தா!…
வேண்டாம் ப்ரோ…
உங்க  ரெண்டு பேருக்கு நடுவில், இருக்கும் நாங்க பாவம்…
கொஞ்சம்   கருணை    காட்டுங்க  ப்ரோ…”  என்றாள்  சந்திரா.

“வாலு!…  வாலு!…  வாலு   ஒண்ணு   தான்  உனக்கு  இல்லை…” என்று சந்திரா,  காதைப்  பிடித்துத்  திருகினான்  விஜய்.

“போ ப்ரோ… நான்  ஆபரேஷன்  முடிச்சு  வருவதற்குள்,  சண்டையை இப்படி  பொசுக்குன்னு  நிறுத்திடீங்களே!…   பாப்  கார்ன்  ஆர்டர் கொடுத்து,   சேர்ரை    அங்கே   ஓரமா  போட்டு  உட்கார்ந்து,  பார்ப்பது  மிஸ் ஆகி போச்சே!…

சேதாரம், ரெண்டு பக்கமும் ரொம்பவும் கம்மி தான் ப்ரோ!… பெட்டெர்  லக் நெக்ஸ் டைம்..” என்றவளை  விஜய் முறைக்க,  சந்திரா   ஓடியே    போனாள்.

கதவைத் தட்டி விட்டு மதுரா, இருந்த அறைக்குள் நுழைந்த சந்திரா, அப்படியே  ஸ்டன்  ஆகி  நின்றாள்.

அங்கு  இருந்த  ரகு,   இவளைக்  கண்டு ஜெர்க் ஆக,  அவனைக் கண்டு இவள்,   ‘மிட்டாய்   கடையைப்  பார்த்தக்  குழந்தைப்  போல்  லுக்  விட ,  இந்தப்  பார்வைப்   பரிமாற்றம், இருவரிடம் தென்பட்ட மாற்றத்தை, மதுராவின்,   கழுகுக்  கண்கள்  ஒரே  நொடியில்  கண்டு  விட்டது .

‘ஓஹ்!…  அண்ணாத்தை  இந்த  அளவு  ரியாக்ட்  செய்யறான்  என்றால்,  இது தான்  மூன் போல் இருக்கு. 

ஆளு பார்க்கச் சும்மா நச்சுன்னு, ‘ஸ்ரேயா’ கணக்கா, செமையா   தான்   இருக்கா.
இந்த  ரசகுல்லாவையா,  ‘இந்த  மடையன்  வேண்டாம்’  என்று  இருக்கிறான்… 
சூர்யா தங்கச்சியா!

சுப்பா!… தரகர்  வேலையை  நிரந்தரம்   ஆக்கிடுவாங்க போல் இருக்கே!’ என்று  தனக்குள்   நினைத்துக்   கொண்டாள்  மதுரா .

“ஹாய் மதுரா!…. ஐ ஆம்…” என்றவளை இடைமறித்த மதுரா,
“டாக்டர் சந்திரா!… 
ஓனர்  ஆப்  திஸ்  ஹாஸ்பிடல்.
சூர்யப் பிரதாப் ரத்தன் சிங் ஆசை தங்கை.
முன்னே பேசி இருக்கோம்.  யாம் ஐ கரெக்ட்.” என்றாள் தன் கைகளை  நீட்டிய  படி.

“எஸ் யு ஆர் கரெக்ட்…”  என்றவள் மிருதுளாவிடம், மதுராவின் உடல் நலத்தை  பற்றிக்  கேட்டு  அறிந்து  கொண்டு,  பவானிக்கு,  மதுராவின்  உடல் நலத்தை பற்றிக் கூறி, ‘பயப்பட எதுவும் இல்லை’ என்று தேறுதல் கூறினாள் .

அவளை  அங்கேயே  நிறுத்திக்  கொண்டு  மதுரா,   பேச  ஆரம்பித்து  விட, ரகு மெல்ல வெளியேறினான்.
அதைக்   கண்டு  சந்திராவின் முகம் வாடிப் போக,  மதுரா உள்ளுக்குள் சிரித்து  கொண்டாள்.

கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் காதல்
நோய கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்
எத்தனைப் பேர்
பார்த்திருக்கேன் எங்கிட்ட
நீ மறைக்காதே சோத்துல
முழுப் பூசணிக்காய்
மறையுமுன்னு நினைக்காதே
காதில் பூவ
சுத்திப்பாக்க நீ தான்
நினைச்சா நடக்காதே!….’  என்று  மதுரா,   திடீர் என்று பாட, சந்திராவின் தலைத்   தானாகக்  கவிழ்ந்தது.

பாவனிக்கும்,  மிருதுளாவிற்கும் மதுராவின் இந்த திடீர்  இசைக் கச்சேரி எதற்கென்று  புரியாமல்  குழம்பி  போய்  நின்றார்கள்.   

“போதும்   ரெஸ்ட் எடு… அவங்க  டாக்டர் இல்ல… வேலை இருக்கும்… சும்மா பேசிப், பேசியே எனெர்ஜியை வேஸ்ட் செய்துக்காதே!… படுத்துத் தூங்கு.”  என்றார்  பவானி .

“அட!… என்னமா நீங்க… மாமியாரும், மருமகளும் ஒருவரை ஒருவர் தெரிஞ்சுப்பீங்க  என்று  பேசினால் , அவங்களை, நீங்கப் பேக் செய்யறதிலேயே, குறியா இருக்கீங்க! போங்க மா  நீங்க…” என்றாள் மதுரா.

“என்னடி  சொல்றே!…  மருமகளா!…  யாருடீ  அது ?” என்றார் பவானி.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

77

"இதோ!... உன்  கண்   முன்னாலேயே நிற்கிறாங்களே!... தங்கச் சிலையாட்டம்.  டாக்டர் சந்திரா,  இவங்கத்  தான்  என்  அண்ணி!உங்க மருமக!....”  என்றாள்  மதுரா  புன்னைகையுடன் .‘இன்று   ராசிபலனில்   தனக்கு,   ‘திகைப்பு’  என்று போட்டு இருந்தார்களோ!’   என்று பவானி யோசிக்கவே ஆரம்பித்து விட்டார்.ஒருத்தர்,    எத்தனை …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்