77
“இதோ!… உன் கண் முன்னாலேயே நிற்கிறாங்களே!… தங்கச் சிலையாட்டம். டாக்டர் சந்திரா, இவங்கத் தான் என் அண்ணி!
உங்க மருமக!….” என்றாள் மதுரா புன்னைகையுடன் .
‘இன்று ராசிபலனில் தனக்கு, ‘திகைப்பு’ என்று போட்டு இருந்தார்களோ!’ என்று பவானி யோசிக்கவே ஆரம்பித்து விட்டார்.
ஒருத்தர், எத்தனை திகைப்பைத் தான், ஒரு நாளில் எதிர்க் கொள்ள முடியும்!…
ஒரு வேளை, மகள் தன்னிடம் விளையாடுகிறாளோ!
“வர, வர உன் விளையாட்டுக்கு, அளவே இல்லாமல் போய்ட்டு இருக்கு. சாரி டாக்டர். அவ இப்படித் தான் எதையாவது உளறிட்டு இருப்பா. நீங்கத் தப்பா நினைச்சுக்காதீங்க.” என்றார் பவானிப் பதறியவராய் .
“அம்மா!… யாரு, இவங்கத் தப்பா நினைச்சுக்க போறாங்க!… அம்மா, கொஞ்சம் கண்ணை நல்லா திறந்து பாருங்க.
‘அண்ணி!…’ என்று கூப்பிட்ட உடனே, அவங்க அண்ணனோடு, டூயட் பாடவே போய்ட்டாங்க.
ஐந்தாறு வருஷமா, ஒன் சைடு லவ் மா. பார்க்கச் சும்மா நச்சுன்னு இருக்காங்க. டாக்டர் வேற. ஜெய்ப்பூர் இளவரச குடும்பம்.
இவ்வளவு இருந்தும், ‘உங்கச் செல்லப் புள்ளை’ நோன்னு சொல்லிட்டு, லூசு மாதிரி இவங்களை ரிஜெக்ட் செய்துட்டு இருக்கு. இவங்களும் ‘சற்றும் மனம் தளராத விக்ரமாதித்த மகாராஜா, வேதாளம் பிடிக்கப் போவதைப் போல்’ தொறத்தித், தொறத்தி லவ் செய்துட்டு இருகாங்க ஹ்ம்ம்!… நோ ரெஸ்பான்ஸ்.” என்றாள் மதுரா .
“உங்களுக்கு எப்படி மதுரா இது எல்லாம் தெரியும். அவங்க சொன்னாங்களா?” என்றாள் சந்திரா அதிர்ந்தவளாய்.
“யாரு அவங்க?… ஓஹ்!… மேரா அண்ணத்தையா?… சொல்லிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான் பாருங்க.
6 மாதம் முன்னாடி, குன்னூர் வந்த போது, உங்களைப் பார்க்கில் வைத்துக் கடிச்சி வைச்சானே, அப்போ தெரிய வந்தது.
அவன் நண்பன் அதான், ‘கார்த்திக் என்னும் ஓட்டைவாய்’ இருக்கே!… அதைக் கொஞ்சம் கிளறினேன்… ஏபிசி என்று எல்லாத்தையும் ஒப்பிச்சுட்டான்.
ஆமா, தெரியாமத் தான் கேட்கிறேன், உங்களுக்கு, இந்தப், ‘பெட்ரோமாஸ் லைட்டே’ தான் வேண்டுமா ?…” என்றாள் மதுரா.
பதில் பேசாமல் சந்திரா, வேதனையோடுத் தலைக் குனிந்து விட, “ஏன், ரகு இப்படிச் சொன்னான்?” என்றார் பவானி, நீண்ட யோசனைக்குப் பிறகு.
அவர் கண்கள், சந்திராவை மேல் இருந்து கீழ், அளவெடுத்துக் கொண்டு இருந்தது .
“அட!… நீங்க வேற… அவனுக்குத் தங்கை திருமணம், பெற்றோர் என்ன சொல்வார்கள் என்பது எல்லாம் இல்லை. நீங்க ஓவர்ரா கற்பனை வளர்த்துக்காதீங்க.
அவனுக்கு, ‘நட் போல்ட் கழண்டு’ போய் இருக்கு. இவங்க, ‘கோடீஸ்வரங்களாம்!. பணக்காரங்க எல்லோரும் கெட்டவங்களாம். குடும்பத்தைப் பிரித்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பங்களாம்.
திருமணம் எல்லாம், அவங்களுக்கு பொழுது போக்காம். உதாரணம் நம்ம அப்பா, அவர் ஆசை அண்ணனைப், பிரியக் காரணம் கஜா, அவரின் பணம்.
விஜய், சோனா மேரேஜ் லைப் பார்த்துட்டு, இவங்களும், சோனா போல் இருப்பாங்க. இப்போ இல்லை என்றால், பின் நாளில் மாறிடுவாங்களாம். அவனுக்கு, ‘ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை’ தான் லாயக்காம்.
இவங்க வளர்ந்த முறை, இவங்க வசதியான வாழ்வு முறை, அவன் வேலை, சம்பளம், குடும்ப முறைக்கு ஒத்து வராதாம்.
இவங்க அழகுக்கு முன், அவன் நிற்க முடியாதாம்’.
இப்படி எல்லாம், பார்க்கில் உளறிட்டு இருந்தான். வந்தக் கோபத்திற்கு, அங்கேயே அப்பி இருப்பேன்.
யாரை, யார் கூட இணைக் கூட்டுவது என்று தெரியாதக் கூமுட்டைமா அவன்.
பயங்கர, inferiority காம்ப்லெக்ஸ் பிடிச்சவனா இருக்கான். பணமா வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகுது?
மனசு ஒன்றாம வாழ்ந்து, தான் என்ன பயன் என்று புரியாதவன். மனசு ஒன்றாம வாழ்வதற்கு பதில், ‘ரிஸ்க் எடுத்துப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்து தான் பார்ப்போமே!…’ என்று யோசிக்க மாட்டேன் என்கிறான்.
எனக்கு உங்க மேலத் தான் கோபம் சந்திரா. அன்னைக்கு அவன் பார்க்கில் , பேசினப் பேச்சுக்கு, நீங்க இந்நேரம் வேறு யாரையாவது திருமணம் செய்துட்டு, அவன் முன் வாழ்ந்து காட்டி இருக்க வேண்டும்.
இன்னும், ‘இவன் மட்டும் தான் உலகில் ஆண் என்று காலில் விழுவதால் தான்’ உங்கள் மேல் இத்தனை இளக்காரம்.” என்றாள் மதுரா ஆற்றாமையுடன்.
கணவரின் புலம்பல், ‘மகனின் மனதில், எத்தகைய விஷத்தை விதைத்து இருக்கிறது’ என்று புரிய பவானி ஆடி போய் நின்றார்.
சங்கரன், ‘இப்படி ஆகிப் போச்சே!… பணம் என்னையும், எங்க அண்ணனையும் இப்படிப் பிரிச்சி விட்டதே!…
பணம் வந்தால், மனுஷ மனம் இன்று இல்லையென்றாலும், என்றாவது மாறி விடும்.’ என்று அவர் புலம்பியதை கேட்டே வளர்ந்தவன்.
“பேசிட்டு போகட்டும் மதுரா!… அவர் தானே சொன்னது. என் காதல் உண்மையானது. அவரைத் தவிர, இந்த ஜென்மத்தில், வேறு யாரையும் நான் மணக்கப் போவதில்லை என்பது தான் நிஜம்.
நினைவில் முடியாவிட்டால், கனவில் அவரோடு, வாழ்ந்து விட்டுப் போகிறேன். அவ்வளவுத் தானே!…
ரிலாக்ஸ்!…
நீங்க டென்ஷன் ஆகாதீங்க.
அவர் கிடைக்கவில்லை என்றால், ‘உடனே தற்கொலை’ என்று எல்லாம் போகும் அளவு நான் கோழை இல்லை.
வாழ்ந்தால் தானே, அவரைக் கடைசி மூச்சு உள்ள வரை, காதலிக்க முடியும்!
நீங்க உடம்பு தேறும் வழியைப் பாருங்கோ.
உங்களுக்கு இருக்கும் பிரச்சனையில், என் கவலையையும் இழுத்து போடுக்காதீங்க… டேக் ரெஸ்ட்.
நான் பிறகு வந்து பார்க்கிறேன்.
பை மதுரா. வரேன் ஆன்ட்டி.” என்றவள் அந்த அறையை விட்டு, வெளியேறினாள்.
“என்னமா!.. சூர்யாக் கிட்டே பேசிடலாமா?… உங்க, ‘ஆசை மகன் தான்’ இவங்களை, வேதனைப்படுத்தறான் என்றால், ‘நீங்களும் வேண்டாம் என்று சொல்லி’ அவங்களை மேலும் நோகடிக்காதீங்க.
ரொம்ப நல்லவங்கமா அண்ணி. ரொம்ப சாப்ட் கேரக்டர். பணக்காரங்க என்ற பந்தா எல்லாம் துளியும் கிடையாது.
ஜெம் ஆப் எ வுமன்!
இவங்களை மிஸ் செய்தால், இழப்பு நமக்குத் தான் அம்மா!…
இவங்களை விட, நீங்கத் தேடி பார்த்தாலும், எல்லாம் அமைந்த பெண் கிடைப்பது ரொம்பவே கஷ்டம் அம்மா.” என்றாள் மதுரா, தாயின் கரங்களைப் பிடித்துக் கொண்டு .
“அது இல்லை… அரண்மனை மாதிரி வீட்டில் வளர்ந்தவங்க… நம்ம வீட்டில் எல்லாம் வந்து இருப்பாங்களா!… அவங்க அளவுக்கு, வசதி எல்லாம் நம்மால் செய்ய முடியுமா?
சொந்த ஹாஸ்பிடல், அதுவும் சென்னையில் மட்டும் இல்லை இந்தியாவில் மிகப் பெரிய, நல்ல பெயருள்ள ஹாஸ்பிடல் வைத்து இருபவங்களை போய், நாம அடுப்படியில் விட முடியுமா என்ன?” என்றார் பவானி .
“மாமியார் புத்தியாமா!…
திருமணமே இப்பொழுது தான் பேச ஆரம்பிக்கறோம். அதற்குள் உங்களுக்குள் இருந்து, ‘மாமியார்’ எட்டிப் பார்க்கறாங்க…
‘சீரியல் வில்லி மாமியார்’ மாதிரி, உங்க குணத்திற்கு மாற்றாய் நடக்கறீங்க?
ஏன் அவங்களை, மருமகளாய் நினைக்கறீங்க முதலில்?…
மகளாய் நினையுங்க.
ஏன், எனக்கு ஒன்று தேவை என்றால், ஓடி ஓடிச் செய்ய மாட்டிங்களா என்ன? இது நாள் வரை, நாம நாலு பேரும், சேர்த்து வைத்து இருப்பது எல்லாம் எதற்காக?
என்றைக்காவது நான் சமையல் கட்டில், நிற்க அனுமதித்து இருக்கீங்களா?
‘போகும் இடத்தில என்னை என்ன சொல்வார்கள்’ என்று டயலாக் மட்டும் விடுவீர்களே தவிர, நான் கேட்கும் அத்தனையும் ஹால் சோபாவிற்கே தானேமா வரும்?
அது போல் அண்ணியையும், இன்னொரு மகளாய் நினைத்துச் செயுங்க. ஏன் உங்க மகளை மட்டும் அடுப்படியில் நிற்க வைக்கமாட்டீர்கள். இன்னொரு வீட்டு பெண் என்றால், உங்களுக்கு வந்து செய்ய வேண்டுமா என்ன?
தவிர, இந்தக் கால பெண்கள், ‘சகலகவல்லிகள்’ மா… வீட்டையும், வெளி வேலையையும், ‘ஜஸ்ட் லைக் தட்’ செய்துட்டு போயிட்டே இருப்பாங்க. வீடு, அலுவலகம், மாமனார், மாமியார், குழந்தைகள் எல்லாரையும், ‘தசாவதானியாகக் ’ கவனித்து கொண்டு இருப்பவர்கள். அவங்களுக்கு தேவைத் துணை, ஒரு encouragement மட்டுமே!... அது நாம கொடுப்போம்.
ஏன், நீங்களே அப்படி தானே!… வீடு, ஸ்கூல், நாங்க, அப்பாவின் பெற்றோர் என்று அவர்கள் இருந்த வரை, பம்பரமாய் சுழன்றுக் கொண்டுத் தானே இருந்தீர்கள்!…. இன்னும் இருக்கிறீர்கள்.
உங்களால் முடியாத போது, வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வோம். பிறகு என்ன அம்மா? நீங்க அண்ணியை, மகளா பாருங்க. அவங்கத் தானா, உங்களைச் சொந்த அம்மா போல் பார்த்துப்பாங்க.” என்றாள் பவானி .
“இல்லை… அப்பா, என்ன சொல்வாங்களோ என்று!…” என்றார் பவானி.
“அட!… நீங்க வேற மா. அவருடைய ஐகான் சூர்யா. அந்த ஐகானின், ‘தங்கையைத் தன் மகனுக்கு வேண்டாம்’ என்று சொல்லிவிட போகிறார்.
சும்மா காமெடி பண்ணாதீங்க.
அண்ணி மட்டும், ரகு கிட்டே பேசுவதற்கு பதில், அப்பா கிட்டே பேசி இருந்தாங்க, இந்நேரம் ரகுவோடு திருமணம் முடிந்து, வீட்டில் ரெண்டு மூன்று குட்டி க்ரிஷ், இல்லன்னா ராதாங்க விளையாடிட்டு இருப்பாங்க.” என்றாள் மதுரா .
“ஆனா, சூர்யாத் தம்பி உன்னை…” என்றார் பவானி, மகளிடம் எப்படி கேட்பது என்று தயங்கியவராய் .
“அம்மா!.. நான் உங்க மக… வழக்கம் போல் கெத்தா கேளுங்க. இப்படி தயங்குவது எல்லாம், ‘டீச்சர் அம்மாவுக்கு, என் ஆசை ஹிட்லருக்கு’ ஒத்து வரலை.
சூர்யா, என்னைக் காலேஜ் டேஸ்ல இருந்து, லவ் செய்யறார்.
விஜய்யும் அப்படி தான்.” என்றவள் விஜய் டைரி விஷயம், அலுவலகத்தில் சூர்யாத் தன்னிடம் சொன்னது, எல்லாம் சொல்லி முடித்தாள்.
மீண்டும் திகைப்பில், ஆழ்ந்தப் பவானி, “நீ, என்னமா முடிவுச் செய்து இருக்கே!…” என்றார் குரல் உள்ளே போனவராய் .
“அம்மா!… முதலில் அவங்க ரெண்டு பேருமே என் நண்பர்கள் அம்மா. ரெண்டு பேருமே, என் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுபவர்கள். எனக்காக என்றால், உயிரைக் கொடுக்கவோ, எடுக்கவோ தயங்காதவங்க. நான் விளையாட்டுக்கு சொல்லலை மா. எனக்கு ஒண்ணு என்றால் விஜய், சூர்யா ரெண்டு பேருமே உயிரை கொடுக்கவோ, எடுக்கவோ தயங்கவே மாட்டாங்கம்மா. இது சினிமா டயலாக் மாதிரி உங்களுக்கு தோணலாம். ஆனா அது உண்மை என்பது எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். என்னை காயப்படுத்துவது மாதிரி முதலில் அவங்க எதையும் செய்ய மாட்டாங்கம்மா.
இது எல்லாவற்றையும் விட, என் சிறந்த நண்பர்கள். ஒரு சிலது இன்னும் குழப்பதும்மா… இந்த மயக்கம் கூட, அந்த ஸ்ட்ரெஸ்னால தான் வந்தது. ஏதோ ஒன்று, ‘எனக்குக் கிளிக் ஆகாமல்’ கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்கு. நானும் யோசித்து பார்த்துட்டே இருக்கேன்.
என்னன்னு தான் பிடிப்பட மாட்டேன் என்கிறது. அது புரியாமல், எந்த முடிவையும் இப்போது எடுக்க முடியாது அம்மா.” என்றாள் மதுரா யோசனையோடு.
அதன் பிறகும், தாயின் முகம் தெளியாததைக் கண்ட மதுரா, “இன்னும் என்ன அம்மா,
‘எல்லார்க்கும் தலைமேல
எழுத்தொண்ணு உண்டு
என்னான்னு யார்
சொல்லக்கூடும்?
கண்ணீரக் குடம் கொண்டு
வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று
விதிபோடும் பாதை
போனாலும் வந்தாலும்
அது தான்.’
‘சின்னத் தம்பி’ படத்தில் வரும் பாட்டுமா இது.
நாம் பிறக்கும் போதே, அன்னையிடம் நமக்கான உணவைப் படைத்த அவனுக்கா தெரியாது, யாரிடம், யாரை சேர்க்க வேண்டும் என்று!…
அவன் போட்டக் கணக்குமா நம்ம வாழ்க்கை. அவனின் அனுமதி இல்லாமல், எதுவுமே நடக்காது.
‘இன்னாருக்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று!…’ என்று கூட, இதை எடுத்துக்கலாம்.” என்றாள் மதுரா.
“இல்லை…. இவங்க ரெண்டு பேரில், நீ யாரை சூஸ் செய்தாலும் நீ அவங்களுக்கு, ‘ரெண்டாம் தாரம்’ என்று தான் உலகம் சொல்லும்.
அது என்னால் தாங்க முடியாது.
அதனால் காலையில், சிவகாமி அத்தையிடம் போய், அவங்க பேரன், ‘ருத்ரமாறனை’ உனக்குக் கேட்டு வந்தேன்.
அவங்களும் சரி என்று சொல்லி விட்டார்கள்.
நீ, ருத்ராத் தம்பியைத் தான் மணக்க வேண்டும் மதுரா.” என்றார் பவானி .
“வாட்!… கம் அகைன்… சிவகாமி மேடம், ருத்ரா சார், இதற்கு ஒத்துக்கொண்டார்களா!…
இது என்ன புது ட்விஸ்ட்?…
நான் வேறத் தானே கேள்விபட்டேன்!….” என்றாள் மதுரா.
“அவங்க உனக்குப் பாட்டி முறை. ருத்ரா, உனக்கு மாமா முறை. சும்மா, ‘சார், மேடம் என்று எல்லாம் சொல்லிட்டுத் திரியாதே!
அப்புறம், இதைப் பற்றிச் சூர்யாவிடமும், விஜய்யிடமும் நீயே பக்குவமாகச் சொல்லி விடு. நாளைக்கு, அவங்களோடு, உன் பெயர் அடிப்பட கூடாது இல்லை.
அவங்களும் மனதில் ஆசை வளர்த்துக்க வேண்டாம். நீயே சொல்லிடு.” என்று பேசிக் கொண்டே இருந்தவர், கதவைத் தட்டி விட்டுச் சிவகாமி, ருத்ராவோடு உள்ளே வர எழுந்து நின்றார்.
“அத்தை!… என்ன நீங்க என்ன இங்கே ?” என்றார்.
“மருமக, இப்படி ஹாஸ்பிடலில் கிடக்கா… ஆத்தாக்காரி ஒரு தகவல் சொன்னாயா எனக்கு!…
விஷயம் தெரிந்து நானா, அடிச்சுப் பிடிச்சு ஓடியாரேன்…” என்றவர்,
“என்ன பேத்திப் பொண்ணு!…. எப்படி இருக்கே!….
பார்க்கக் கொத்தவரங்காய் மாதிரி இருக்கே!… அதான் மயக்கம் போட்டு விழுறே!
திருமணத்திற்கு முன், நல்லா சாப்பிட்டு, உடம்பைத் தேத்திக்கோ.
என் பேரனைக் கவனிக்கணுமே!…” என்றார் அவர் தடாலடியாக.
அதைக் கேட்டுப் பவானி முகம் மலர, ருத்ராவின் முகம் அஷ்டகோணலாய் மாற, மதுராவின் முகம் யோசனையைத் தத்து எடுத்தது.
“செஞ்சுட்டா போச்சு மேடம்!…” என்றாள் மதுரா.
“ச்சூ!… இன்னும் என்ன மேடம், கூடம் என்று சொல்லிட்டுத் திரியரே!… அழகா, உரிமையா, ‘பாட்டி!’ என்று கூப்பிடு ராசாத்தி.
பவானி, நீ போய் நான் குடிக்கக் காபி வாங்கி வா.
ருத்ரா!… டாக்டர் கிட்டே போய், மதுரா சாப்பிடும் மாத்திரை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கோ.
டாக்டர் நல்லவர் தானே, ஒழுங்கா வைத்தியம் பார்ப்பவரா என்று விசாரி…” என்றவர் அவர்கள் சென்றதும், மதுராவின் கட்டிலின் அருகே அமர்ந்து,
“சொல்லு, பேத்திப் பொண்ணு!…. என் பேரனைக் கட்டிக்க, உனக்குச் சம்மதமா?” என்றார் மர்ம புண்முறுவலுடன்.
வெளியே வந்த ருத்திராவிற்கு, ‘எங்கேயாவது ஓடி விடலாம்’ போல் தோன்றியது .
கையில் மட்டும் ராஜீ கிடைத்தால், ‘அவளை உண்டு இல்லை’ என்று செய்யும் வெறியே வந்தது அவனுக்கு.
அவளும் காலையிலிருந்து விடாமல், இவனை அழைத்துக் கொண்டுத் தான் இருக்கிறாள். இவன் கால் அட்டென்ட் செய்தால் தானே!
‘கொஞ்சம் ஹாஸ்பிடல் வரை போகணும் ருத்ரா!… வண்டி நீயே எடு…’ என்று சொன்ன பாட்டியின் பேச்சைக் கேட்டுக் காரை ஒட்டி வந்தது தான் தவறாய் போனது.
அவர் தன்னை, ‘மதுராவின் முன், நிறுத்துவார்’ என்று கனவிலும், அவன் நினைக்கவேயில்லை.
தடாலடிக்கு பெயர் பெற்றவர் ஆச்சே சிவகாமி!…
புது விதமாய், ‘மணமகன் பார்ப்பதை’ ஏற்பாடு செய்திருக்கிறார்.
மறுபடியும் ராஜேஸ்வரியிடமிருந்து அழைப்பு வர, அதை எடுக்காமல் விட்டான்.
‘இவள் அப்பா, விஷயத்தைச் சொல்லி இருப்பார். உடனே மேடம் டென்ஷன் ஆகி இருப்பாங்க.
இவ கால் செய்தால், உடனே அட்டென்ட் செய்யணுமா என்ன!
இத்தனை வருடம் தவிக்கவிட்டே இல்லை… படு… நல்லா அவஸ்தைப் படு.
இன்னொருத்திக் கழுத்தில், தாலி கட்டுறேன்… வந்து மூக்கு முட்டக் கொட்டிக்கோ…’ என்று உள் மனம் உலைக்களமாகப் பற்றி எரிந்து கொண்டு இருந்தது.
‘பாட்டியின் முடிவிலும், ஏதும் தவறு இல்லை’ என்றுத் தான் அவன் சொல்வான்.
‘பிடிக் கொடுத்தலாவது, இவளுக்காகப் பாட்டியிடம் பேசலாம்.
‘முடியவே முடியாது’ என்பவளை என்ன தான் செய்வது ?
யுத்தக்களத்தில் நிற்பவர்களிடம், அமைதியை எதிர் பார்க்கும் ஒரு லூசு பெண்ணைக் காதலித்து விட்டு, அவன் படும் அவஸ்தை இருக்கே!…
கொஞ்சம் அசந்தாலும், ‘ஆப்பு வைப்பதில், கொல்வதில் கஜாவை மிஞ்ச உலகில் யாருமே இல்லை’ என்னும் போது, ‘சமாதானம், வெள்ளைப் புறா, அன்பு, பாசம், புத்தர் வழி’ என்று போகாத ஊருக்கு வழிக் காட்டும்’ அதிப் புத்திசாலி, அவன் காதலி.
‘கௌதம புத்தர், காந்தியின் பெண் பால்’ போல், ‘அகிம்சை’ என்று உபதேசம் செய்து கொண்டு இருப்பவளை, என்னத் தான் செய்வது!…
இவள் எல்லாம் காவல் துறைக்குப் போனதே, ‘பெரிய உலக அதிசயம்.’ அங்கும் அக்குயிஸ்ட்களுக்கு, ‘கோனார் நோட்ஸ்’ போல் கிளாஸ் எடுக்கிறாளோ என்னவோ யார் கண்டது!
என்றுமே தர்ம மார்க்கம் உதவாது. அதர்மத்தைத் தடுக்க, தர்மத்தைக் காப்பாற்ற, மேலும் பல அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க, சில சமயம் போர் அவசியமாகிறது.
இதைத் தானே, கிருஷ்ணப் பரமாத்மா, அர்ஜுனனுக்கு, கீதா உபதேசமாய் செய்து இருக்கிறார்.
ஓவர்ரா சினிமா பார்ப்பாளோ!…
அதில் தான், வில்லன் என்பவன் பேடி மாதிரி, ‘ஹீரோவின் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரை, காவு’ வாங்குவான். சில சமயம், ‘collateral damage’ என்று நிஜ வாழ்வில் இவனைப் போன்றவர்களின் குடும்பத்தினர் மாட்டுவதும் உண்டு தான்.
அதற்காக எல்லாம், இவ்வளவுக் காலம் போராடி விட்டுக் கஜாவை ஒட்டுமொத்தமாய், அழிக்க முயலும் சமயத்தில், ‘புத்தம் சரணம்’ மா சொல்ல முடியும்?
தன் பாட்டி சிவகாமி போல், எத்தனை பெண்களோ!…
எத்தனை குடும்பங்கள், சிதறிப் போய் இருக்கிறதோ!…
இதற்கு எல்லாம் முடிவு கட்டாமல் விடத் தான் முடியுமா?
எல்லோரும், ‘தங்கள் வாழ்க்கை, தங்கள் குடும்பம்’ என்று விலகி, ஒதுங்கிப் போனால், நடக்கும் அநியாயங்களைக் கண்டு, எல்லாவற்றையும் மூடிட்டு சென்றால், மிஞ்சப் போவது என்னவோ சுடுகாடுத் தான்.
வந்தோம், பிறந்து விட்டோம், வெந்ததை சாப்பிட்டு, உயிர் போகும் வேளை வந்தவுடன் போய்ச் சேரும் உப்புச் சப்பில்லாத, மாமூல் வாழ்க்கை சுயநலமாய் வாழச் சொல்கிறாள்.’
தன் எண்ணப் போக்கில் உழன்று கொண்டு இருந்தவன், “ருத்ரா!…” என்று பின்னால் இருந்து குரல் கேட்க, அதிர்ந்து திரும்பினான்.
பின்னால் அவன், ‘எண்ணங்களின் நாயகியே’ நின்று இருந்தாள் .
முகம் வீங்கும் வரை நன்றாக அழுது, அதை மறைக்க ராஜீ செய்து இருந்த மேக் அப் ருத்ராவின் கண்களிலிருந்து தப்பவில்லை.
எதையும் பேசாமல், அங்கிருந்து ருத்ரா நகர முயல, அவன் கைப்பிடித்து நிறுத்தினாள் ராஜீ .
“வாட் கேன் ஐ டூ போர் யூ A.C.P மேடம்?” என்றான் ருத்ரா வெகுநக்கலாக .
“எதற்கு அப்பாக் கிட்டே, உங்க பாட்டி அப்படிச் சொன்னாங்க!… அப்பா, அம்மா ரெண்டு பெரும் ரொம்பவே கோபமாகிட்டாங்க. ஒரு நாள் கூட என்னை அடிக்காத அம்மா, இன்று என்னை அடிச்சுட்டாங்க. நான் தான் சொல்றேன்ல!…
அந்தக் கஜாவோடு உள்ள சண்டை எல்லாம் மூட்டைக் கட்டி வச்சுட்டு வாங்க… இல்லை உங்கப் பாட்டி, அப்பாவே இந்த அடித் தடி, பழிவாங்கல் எல்லாம் பார்த்துக்கட்டும். நாம எங்காவது போய்டலாம் என்று.
எதற்குமே ஒத்து வராம, இப்படி எல்லாம் பொய் சொன்னா மட்டும், உடனே உங்கக் கிட்டே ஓடி வந்துடுவேன்ன்னு, கனவு காணாதீங்க.” என்றாள் ராஜீ .
“பேசி முடிச்சுடீங்களா மேடம்?… இப்போ நான் பேசலாமா!…
பாட்டி உன்னை வரவழைக்க, ‘இப்படி பொய் சொன்னாங்க’ என்று நீயா நினைச்சுட்டா, அதற்கு நான் பொறுப்பு இல்லை.
பாட்டி, எனக்குத் திருமணம் ஏற்பாடு செய்தது உண்மை.
பொண்ணு மதுராக்ஷி!
பவானி அத்தையின் மகள்.
உடம்பு சரி இல்லாம, இங்கேத் தான் அட்மிட் ஆகி இருக்கா.
அவளைப் பார்த்துக் கொள்ளத் தான், நானும் பாட்டியும் வந்து இருக்கோம். என் வருங்கால மனைவி ஆச்சே!… நான் தானே கவனிச்சுகணும்.” என்று சூர்யா சீரியஸாகச் சொல்ல, ராஜேஸ்வரியின் முகம் மாறி போனது.
“அவ… என் வருங்காலப் பொண்டாட்டி மது, உன்னை மாதிரி, கண்டிஷன் எல்லாம் போடலை.
நாங்க இருக்கும் சூழ்நிலை புரிந்தவள்.
நாங்கப் பிடித்து இருப்பது புலியின் வால். விட்டுட்டுப் போக முடியாது: என்ற நிதர்சனம் புரிந்தவள்.
எங்க மேல், ரொம்பவே நம்பிக்கை வைத்து இருக்கா.
‘புலியைக் கொல்லாமல் விடமாட்டோம்’ என்பதும் அவளுக்குத் தெரியும். உன்னை மாதிரி, வெளியே போலீஸ் கெத்து காட்டிட்டு, உள்ளே தொடை நடுங்கியா அவ இல்லை.
எது வந்தாலும், துணிந்து மோதச் சொல்கிறாள்.
பொண்ணு என்றால், இப்படி இருக்கணும். நாங்க விலகிட்டால், ‘இன்னும் பலக் குடும்பம் அழிந்து விடும்’ என்ற உண்மை புரிந்தவள்.
இன்னும் சொல்லப் போனால் நீ பிடித்ததாக, ‘உனக்குப் பாராட்டு மழை பொழிகிறதே!’ அதற்கு மூலக் காரணமே, நாங்கத் தான் என்ற உண்மை அறிந்தவள்.
‘நாங்க இல்லை என்றால்’ இந்நேரம் நீ காப்பாற்றியப் பெண்கள், பாலியல் தொழிலில் தான் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள் என்பது உனக்கு எப்பொழுது தான் விளங்கும் ராஜீ?…. வந்துட்டா… பெருசா பேச…
ஏய்!… என் பாட்டித் தனி மனுசியா போராடி, அதில் வந்தப் பணத்தில் தாணேடீ நீயே வளர்ந்தே , படிச்சே!…
ஏன், இப்போ, உன் அம்மாவின் வைத்தியச் செலவுக் கூடச் செய்வது என் பாட்டி தான்டீ.
இது எல்லாம் வேண்டும். வரும் போது எதையும் கவனிப்பதில்லை. ஆனா, இப்போ மட்டும் கசக்குதா?…
போடி!… பச்சையா ஏதாவது சொல்லிட போறேன்.
இதுவரை பாட்டித் தான், ‘மதுராவை திருமணம் செய்யணும்’ என்று என் கிட்டே சொன்னார்கள்.
இப்போ, உன் முகத்துக்கு முன், நான் சொல்றேன்.
மதுராவை மட்டும் தான், நான் மணக்கப் போகிறேன். உன்னால் முடிந்ததை பார்த்துக்கோடீ.” என்று கர்ஜித்தான் ருத்ரா .
கண் கலங்கி தலைக் குனிந்து நின்ற ராஜீ, “ப்ளீஸ் ருத்ரா!… இப்படி எல்லாம் பேசாதே!… மனசு கஷ்டமா இருக்கு…” என்றாள் .
“ஆமா, எனக்கு மட்டும் குளுகுளுன்னு இருக்குப் பாரு!… ஏன்டீ மனசு முழுக்க இவ்வளவு ஆசை வச்சிட்டு, இப்படிப் படுத்தி எடுக்கறே!
எங்களுக்குத் தெரியாதா, எங்களை எப்படி பார்த்துக்க வேண்டும் என்று… எங்களுக்கு மட்டும், எங்க உயிரின் மேல் ஆசை இல்லையா என்ன?
நாங்களும் நல்லவங்க தாண்டீ!
எங்களைச் சுற்றி, எங்களுக்கு உதவி செய்து கொண்டு இருப்பவர்களும் நல்லவங்க தாண்டீ!
‘சாக்கடை நாத்தம் அடிக்குதேன்னு மூக்கைப் பொத்திட்டு’ போக முடியாது ராஜீ.
‘அநியாயம் கண் முன்னே நடக்கும் போது’, ஒரு மனுஷனாய் தட்டிக் கேட்கவில்லை என்றால், ‘நான் எல்லாம் ஆண்’ என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமே இல்லை.
பக்கத்து வீட்டில் தானே, தீப்பிடிச்சு இருக்குன்னு, சும்மா இருந்தா, அதே தீ, நாளை நம்மையே பொசுக்கி விடும். ‘எங்கேயோ, யாருக்கோ ஏதோ நடந்துட்டு போகட்டும்’ என்று இருந்தால், நாளை, நமக்கு நடக்கும் போது, யாரும் உதவ வரமாட்டார்கள்.
எனக்குத் தெரிந்தே, கஜா, அவனின் ஆட்களால் மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து விட்டு, கண்டும் காணாமல் போக முடியாது ராஜீ.
படுத்தா தூக்கம் வராது. இது தான் நாங்க. என் குடும்பம்.
கஜாவை அடக்கும் வரை ஓய மாட்டோம். உனக்குப் பிடிக்கவில்லையா!…
நீ விலகிவிடு.
‘கௌதம புத்தர் மாதிரி’ யாராவது கிடைப்பான்.
விஷ் யூ ஹாப்பி MARRIED லைப் வித் ஹிம்.” என்றவன் அவளைச் சுற்றி கொண்டுச் செல்ல முயல, மீண்டும் அவன் கைகளைப் பிடித்து நிறுத்தினாள் ராஜீ .
“ப்ளீஸ்!… உன் ராஜிக்காக… செய்ய மாட்டியா!…” என்றாள் அவள் .
பெருமூச்சு விட்டுக் கண்களை அழுந்த மூடித் திறந்த ருத்ராவின் கோபம் எல்லையைக் கடந்தது.
அவளை அருகில் இருந்த டாக்டர் அறைக்குத் தள்ளிச் சென்றவன், கதவை மூடி விட்டு, “செய்யத் தானே வேண்டும்!.. செய்துடறேன்.” என்றவன் அவள் அதிர்ந்து நிற்கும் போதே, அவளை இழுத்து அணைத்து அவளை முத்தமிட ஆரம்பித்தான் .
அவளின் எதிர்ப்பு, எல்லாவற்றையும் வெகுசுலபமாக முறி அடித்தவன், மேலும் மேலும் அவளைத் தன் வசம் ஆக்கிக் கொண்டு இருந்தான்.
அவளாலும், அதிக நேரம் அவனை எதிர்க்க முடியவில்லை. அணைத்து முத்தமிடுவது அவளின் சரி பாதி ஆயிற்றே! …
அவளின் உயிர், மனதளவில் அவளின் கணவன்.
இடம், காலம் என்று எதையும் பார்க்கும் நிலையில் சூர்யா அப்பொழுது இல்லை. கட்டுக்கடங்காத கோபம், தாபம், ராஜி ஏற்படுத்தி இருந்த சூழ்நிலை அங்கே காதலாய், காமமாய் வெளிப்பட்டு கொண்டிருக்க, அவனின் முரட்டுத்தனத்தை எதிர்க்க இயலாமல், முடியாமல் அவன் கைகளில் குழைந்து கொண்டிருந்தாள் ராஜி.
அத்தனை காலமாய் காதல் இருந்தும் ராஜியின் பைத்தியக்காரத்தனமான பிடிவாதத்தாலும், குடும்பத்தின் சூழ்நிலையாலும் சூர்யா அடக்கி வைத்திருந்த விரக்தி, கோபம், வெறி என்று எல்லாம் சேர்ந்து ராஜியிடம் வெளிப்பட்டு கொண்டிருந்தது.
மனிதனாய் இருந்தவனை தடைகளை எல்லம் தகர்க்கும் மிருகம் ஆக்கி இருந்தது ராஜியின் பிடிவாதம்.
அவனின் கைகளில் மெழுகு சிலையாய் உருகி நின்றாள்.
அவர்களின் நெருக்கம் எவ்வளவு நேரம் தொடர்ந்ததோ, சட்டென்று அருகில் ஏதோ உடையும் சப்தம் கேட்க, இருவரும் அதிர்ந்து விலகி நின்றனர்.
இன்னும் கொஞ்ச நேரம் கடந்து இருந்தால், எல்லா எல்லைகளையும் கடந்து இருப்பார்கள்.
எதையும் பேசாமல் விலகி நின்ற ருத்ரா, தன் தலையை அழுந்தக் கோதி விட்டு, பெரு மூச்சுகள் எடுத்துத் தன்னைச் சமாளித்து கொண்டான்.
“நான் வெளியே நிற்கிறேன்… கெட் ட்ரெஸ்ஸெட்.” என்றவன் வெளியே போய் நின்று விட்டான்.
‘தான் என்ன செய்து வைத்து இருக்கிறோம்’ என்று ராஜேஸ்வரி தலையைப் பிடித்து அமர்ந்து விட்டாள்.
‘என்றுமே எல்லை மீறாதவனை, எல்லை மீறப் போகும் அளவுக்குத்’ தான் கொண்டு போய் இருக்கிறோம்.
இந்த அளவுக்கு, அவன் மேல் பைத்தியமாய் இருந்து கொண்டு, தான் பிடிக்கும் பிடிவாதம் பைத்தியக்காரத்தனமாய் அவளுக்கே தோன்ற ஆரம்பித்து இருந்தது .
நெகிழ்ந்து, அவிழ்ந்து விலகி இருந்த ஆடைகளைச் சரிச் செய்து கொண்டு வெளியே வந்தவளை எதிர்க் கொண்ட ருத்ரா,
“நடந்ததற்கு நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. இப்பவும் உன்னைத் தான் விரும்பறேன். உன்னைத் தான் திருமணம் செய்ய நினைக்கிறன்.
உன் கண்டிஷன்ஸ், அப்படியே இருக்கிறது என்றால், இனி என் கண் முன்னே வந்து விடாதே!… என்னை, இன்று போல் கண்ட்ரோல் செய்துட்டு இருக்க மாட்டேன். என்னை மிருகமாக்கி விடாதே ராஜீ!
என்னுள், ‘எரியும் நெருப்புக்கு, நீ தான் மருந்து’
அது நீயாக இல்லை என்றால், மீண்டும் கிட்டே வராதே!…
நான் பெண்களை மதிப்பவன் தான். ஆனால், நீ என்று வரும்போது, என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லை. நான் உனக்கு ஹீரோவா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, நீ என்னை, வில்லனாக ஆக்கி விடாதே!… திரும்பவும் சொல்றேன் என்கிட்ட வராதே!…
அப்புறம் எல்லாம் போச்சேன்னு அழுது பிரயோஜனம் இல்லை. குட் பை” என்றவன் விலகிச் சென்று விட, விக்கித்து நின்றாள் ராஜேஸ்வரி .
செதுக்கி வைத்த சிலையாக எவ்வளவு நேரம் நின்றாளோ, அவளின் தோளில் ஒரு கை அழுத்த, ‘ருத்ரா’ என்று புன்னகையோடு திரும்பியவள், அங்குச் சிவகாமி ஒரு பெண்ணோடு நிற்பதைக் கண்டு முகம் மாறினாள்.
“அட!… ராஜீ!… என்னமா இந்தப் பக்கம்?… ஓஹ்!… கேஸ் விஷயமா வந்தாயா!..
ம்ம் சொல்லவே மறந்துட்டேன்… இது யாருன்னு தெரியுதா பாரு?
பவானி அத்தை, பொண்ணு மதுராக்ஷிமா…
நம்ம ருத்ராவிற்கு பார்த்து இருக்கும் பெண்.” என்று அவர் அறிமுகம் செய்ய, அழகாய் கைக்கூப்பிய அவளைக் கண்டு, ராஜேஸ்வரி மிடறு விழுங்கினாள் .
மதுராக்ஷியின் சாந்தமான, மனதைக் கொள்ளைக் கொள்ளும் அழகு, ராஜேஸ்வரியையே திக்குமுக்கு ஆட வைத்தது.
அடிவயிற்றில் சூட்டுக் கோல் கொண்டு, யாரோ இழுத்தது போன்ற உணர்வு.
“எப்படி இருக்கா ராஜீ என் பேத்தி?… நம்ம ருத்ராவுக்கு, ஏற்ற அழகு, அறிவு, கம்பீரம், ஜோடிப் பொருத்தம் செமையா இருக்குன்னு பார்க்கும் எல்லோருமே சொல்றாங்க.
ரெண்டு பேருமே அழகு… இவங்கக் குழந்தைகளும், செம்ம அழகா, லட்டுக் கணக்கா இருக்க போகுதா இல்லையான்னு பாரேன்.” என்றார் மதுராவை அணைத்து.
“யாருங்க பாட்டி இவங்க?… உங்களுக்கு தெரிஞ்சவங்களா?…” என்றாள் மதுரா.
“தூரத்து சொந்தம் மது.” என்றார் சிவகாமி விட்டேத்தியாக.
இதற்கு அவர், அறைந்தே இருக்கலாம் போல இருந்தது. கன்னத்தில் அடி வாங்கியது போல், ஒரு கணம், தள்ளாடினாள் ராஜி.
“வணக்கங்க. என் பெயர் மதுரா. எனக்கும், எங்க ருத்ரா மாமாவுக்கும், பாட்டி, திருமண ஏற்பாடு செஞ்சிருக்காங்க. இந்த வாரம் நிச்சயம் செய்யப் போறாங்க. நீங்க கண்டிப்பா வரணும்.” என்றாள் மதுரா, ராஜியின் கையைப் பிடித்துக் கொண்டு, புன்னகையுடன்.
மதுராவின் புன்னகை, டன் கணக்கில், நெருப்பை, அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தது ராஜியின் தலையில்.
“சரி மா… உனக்கு, உன் வேலை இருக்கும்… பாவம் மதுக்குட்டியையும் என்னால் ரொம்ப நேரம் நிற்க வைத்துப் பேசறேன். எங்கே போனான் இந்த சூர்யா?… போன தடவை இந்த பொண்ணை பைக்கில் கூட்டிட்டு போனான். அப்பவே போட்டோ எடுத்து வச்சேன். ஜோடி பொருத்தம் பாரேன் ராஜி!… என் கண்ணே பட்டுடும் போலிருக்கு!… இவங்களுக்கு பிறக்கும் பசங்களும் செம அம்சமாய் இருப்பாங்க.” என்ற சிவகாமி தன் போனில் இருந்து சில பல புகைப்படங்களை எடுத்து காட்ட ராஜுக்கு மூச்சு முட்டி போனது.
“உன் அப்பா, அம்மா கிட்டே சொல்லு. கூடிய சீக்கிரம் இவங்கத் திருமண பத்திரிகையுடன் வீட்டுக்கு வரோம் என்று.
ராஜீ!…. நீ தான் மணப்பெண் தோழியா நின்று ருத்ரா, மதுரா திருமணத்தை நடத்திக் கொடுக்கணும்.
ராசாத்தி!… மதுக்குட்டி!… வாடா மா… உனக்குக் கால் வலிக்கப் போகுது.” என்றவர் மதுராவோடு, கிளம்பி விட, வழிந்தக் கண்ணீரைக் கூடத் துடைக்கத் தோன்றாமல் சிலையாக நின்றாள் ராஜேஸ்வரி.
‘புலி வருது… புலி வருது…’ என்று பேச்சுவாக்கில் சொல்லப்பட்டதை உண்மையாக்கி இருந்தார் சிவகாமி.
‘மதுரா என்ற பெண் புலியைக்’ களம் இறக்கி.
புலி வந்தே விட்டது ராஜிக்கும், ருத்ராவிற்கும் நடுவே.
அழகான பெண் புலி!
ஆளை அசரடிக்கும் அழகோடு.
தவம் தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!