arrow_back
என்ன தவம் செய்தேன்! 78
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 78 / 85

78

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

ராஜேஸ்வரி அழுது கொண்டே  கிளம்புவதைத்   தங்கள் அறையிலிருந்து பார்த்த மதுரா, சிவகாமியிடம்,
“ஏ பாட்டி!… இது உனக்கே ஓவர்ரா இல்லை!… என்ன என்கவுண்டர்  கேட்குதோ  உமக்கு?” என்றாள்  புன்னகையுடன் .

“அடி  போடி!…  இவளை  மாதிரி,  எத்தனைப்  பேரைப் பார்த்துட்டேன். நேத்து மழையில் மொளைச்ச காளான்!…. இவளுக்குப் போய் நான் பயப்படுவேனா  என்ன?” என்றார் சிவகாமி .

“அதானே!…  நீங்க  யாரு,  என்ன!…  ஆனா,  ரொம்ப  ஓவர்ரா செய்வது போல்   இருக்கு   பாட்டி!.. இதுல போட்டோஷாப்பிங் செய்து அத்தனை போட்டோ நானும் ருத்ராவும் ஒண்ணா இருப்பது போல வேற!… எனக்கே ஒரு செகண்ட் பக்குன்னு ஆகி போச்சு.ஹார்ட் அட்டாக் வராத குறை. ஆனாலும், உனக்கு இருக்கும் லொள்ளு இருக்கே! 
பாவம்!… ருத்ராவும்,  ராஜீயும். 
உங்க  சாணக்கியத் தந்திரத்தை,   வீட்டுக்கு  வெளியே  வைத்து  இருக்கலாம். இப்போ   பாருங்க,   ரெண்டு   பேரும்   எவ்வளவு கஷ்டப்படறாங்க.”  என்றாள்  மதுரா .

“ஆமாடீ அம்மா!… எனக்கு மட்டும் என் பிள்ளைகளைக் கஷ்டப்படுத்திப் பார்க்கணும் என்று வேண்டுதல் பாரு.

‘தேன் குடிக்கணும் என்றால், தேனீக்குப்   பயபட்டால்’  வேலைக்கு   ஆகாது செல்லம்!…
அடிச்ச வேப்பிலை  வேலை    செய்யுது. விட்டுப்   பிடிப்போம்.”  என்றார்  சிவகாமி.

இவர்கள்  பேசிக்  கொண்டு  இருக்கும்  போது,   பதட்டத்துடன்  உள்ளே வந்த  சுபா,  “மதுரா!..  கொஞ்சம்   உட்காரேன். இந்தா,  இந்தத்  தண்ணீரை, கொஞ்சம்  குடி.  நான்  சொல்வதைக்  கேட்டுப்   பதட்டப்படாதே!…” என்றாள்.

“ஓவர்ரா  பில்ட் அப் கொடுக்காம, மேட்டரை சொல்லு மா…” என்றாள் மதுரா .

“அது  ஒண்ணும்  இல்லை…  ஆன்ட்டிக்கு,  கொஞ்சம் லேசா மயக்கம் வருதாம். நெஞ்சு படபடன்னு இருக்குன்னு சொல்லறாங்க.
சந்திரா பார்த்துட்டு  இருக்காங்க. உன்னைப் பாக்கணுமாம்.
ப்ளீஸ்!… நீ பதட்டப் படாதே!…  ஆன்ட்டிக்கு   ஒண்ணும்   இல்லை.”  என்றாள் சுபா.

பார்வையைப்  பறிமாறிக்  கொண்டனர்  சிவகாமியும்,  மதுராவும்.

“அடியேய்!…  முதலில்  நகரு.  பதட்டப்படாதேன்னு  சொல்லிச் , சொல்லியே மனுஷியைக்  காபரா  கிளப்பி  விடுறே!…. 
எங்கே   இருக்காங்க?… கூட்டிப் போ.”  என்ற  மதுரா   முன்னே  நடக்க,  சுபா  பின்னால்  ஓட  வேண்டி  இருந்தது .

வழியில்  பதட்டத்துடன்  நின்று   இருந்த  கார்த்திக்கின்,  தலையில்,   ‘நங்கு’ என்று  ஒரு  கொட்டு  வைத்த  மதுரா,  “நாங்க  என்ன  சொன்னோம்!…  நீ என்ன   செய்து   வைத்தே!…” என்றாள்.

“அடியேக்  குரங்கு!…  இப்படியா  கொட்டுவே!…  வலிக்குதுடீ.  நீங்க ரெண்டு பேரும்   சொன்னதைத்   தான்   செய்தேன்.

நீங்கக் காபி வாங்கி வர அனுப்பிய அத்தையை, வழியை மாற்றிச் சுற்றிக் கூப்பிட்டு போய், நீங்கச் சொன்ன ரூமிற்கு, வெளியேத் தான் பேசிட்டு இருந்தேன்.

அத்தையும்   சூர்யா,  விஜய்  பற்றி  நான்  சொல்வதை  எல்லாம்  கேட்டுட்டே தான்  இருந்தாங்க.  நீங்கச்  சொன்னா  மாதிரியே,  அந்த அறை   ஜன்னலைத்  திறந்து  தான்  விட்டேன்.   

ஆனா,  அந்த   அறைக்குள்,   ருத்ரா   பெவிகால்  போடாதக்  குறையாய்,  ராஜீ  மேல்  ஓட்டிப்பான், ஆங்கிலச் படம், ‘ப்ரீ ஷோ ஓட்டுவார்’ என்று எனக்கு  என்ன  ஜோசியமா  தெரியும்?

இன்னும்   சொல்லப்   போனால்,  ஆங்கில  பிட்டுப் படம்  கூடத்  தோத்துடும். பார்த்த  எனக்கே,  ‘ஹார்ட் அட்டாக்’  வராதக்  குறை.  அத்தையின்    நிலைமை சொல்ல வேண்டுமா!…” என்று அழுக் குரலில் கார்த்திக் கூற, தலையில்   அடித்துக்   கொண்டனர்   சிவகாமியும்,  மதுராவும் .

“பாட்டி!…   போகும்   போக்கைப்  பார்த்தால்,  நிலைமை கை மீறிப் போய்டும்  போல்   இருக்கே!…  உங்க  கொள்ளுப்  பேரன்  வந்து  தான்,  உங்க  பேரனின்   திருமணத்தை,   நடத்தி   வைப்பாங்க   போலிருக்கே!…

பஞ்சையும், நெருப்பையும்  பக்கத்தில்  வச்சி,  இப்படி  என் ஹிட்லர் மனதில், இதோ, இந்தக் கார்த்திக் பச்சைப் புள்ள மனதில், தீயை ஏற்றி விட்டாயே   சிவகாமி!… 
இது   உனக்கே   நியாயமா,  அடுக்குமா?
இது   ஹாஸ்பிடல்லா!… 
இல்லை  உன்ர  பேரனின்  அந்தப்புரமா?…

முழுப் பிட்டுப்   படத்தையே,  பவானிக்கு  போட்டுக்  காண்பித்து  இருக்கிறார் உங்க பேரன்.
முகத்தைப்  பார்த்தா,  ‘அக்மார்க்  அப்பிராணி’  மாதிரி  இருக்கு. செய்யறது எல்லாம்,  உல்ட்டாவா  இருக்கே!… 

ஆனா,  சும்மா  சொல்லக் கூடாது, இந்தக் காட்ஜில்லாவும், மீன்  சாப்பிடுமான்னு  இருந்துட்டு,  உங்க பேரன் புகுந்து,  ‘காதல்  மன்னனாய்’ விளையாடி இருக்கார் போல் இருக்கே!… சீக்கிரம், ரெண்டு  பேருக்கும் திருமணத்தை முடியுங்க.” என்றாள் மதுரா புன்னகையுடன் .

“கொஞ்சம்   ஓவர்ராத்  தான்  சீண்டி   விட்டுட்டோமோ!…”  என்றார் சிவகாமி.

“கொஞ்சம் இல்லை பாட்டி! ரொம்பவே….” என்ற மதுரா, தன் அன்னை இருந்த  அறைக்குள்  நுழைய,  ஓடி  வந்து  அவளை  அணைத்து  கொண்டப் பவானிக்   கதறி   விட்டார்.

“மன்னிச்சுடு  மதுரா!…  இந்தப்  பாவியை  மன்னிச்சுடு.  உன் வாழ்வை நானே கெடுத்துட்டேன்.
அய்யோ!…. என் மக மனசுல, ஆசை வளர்த்து விட்டேனே!…
ரொம்ப அவசரப்பட்டுட்டேன். என்னை மன்னித்துவிடு கண்ணம்மா!.”  என்று அழுதவரை எவ்வளவு சமாதானம் செய்தும், அவர் அழுகை  நிற்கவில்லை .

“அம்மா!…. அம்மா!…. யம்மோவ்!…” மதுரா உச்சஸ்தாயில் கத்தி விட, அதிர்ந்து  போன  பவானியின்  அழுகை,  தானாக  நின்றது.

“அம்மா!…  முதலில்  உட்காருங்க. இந்த   ஜூஸ் குடிங்க.” என்றவள் சந்திரா  கொடுத்த  ஜூஸ்சை,  பவானிக்கு  புகட்டி  விட்டு,
“கொஞ்சம்  கவனிங்க மா.  நீங்க  ருத்ராவுடன்  திருமணம்  என்று  சொல்லிய  உடன்,   கனவுலகில்   டூயட்   பாட   நான்   என்ன   லூசா? 
என்ன,  அப்படி  ஜெர்க்  ஆகறீங்க!
இல்லை  தெரியாமத்  தான் கேட்கிறேன் நான் என்ன லூசா?…
இல்லை லூசு, ‘நட் போல்ட், என் தலையில்  கழன்று  போய்   இருக்குன்னு’    எழுதி   ஒட்டி வைத்திருக்கா!

ரியாலிட்டின்னு ஒண்ணு இருக்குமா. நீங்கச் சொல்லும் போதே, இது நடக்காதுன்னு எனக்குத் தெரியும். ஏனென்றால், ருத்ரா விரும்புவது ராஜேஸ்வரியைத்   தான்.

இத்தனை  வருடமாய்,  அவங்களை தான், மனைவியா நினைத்து வாழ்ந்துட்டு’  இருக்கார்.  ராஜிக்கு,   இவங்கப்  போகும்  வழி,  அந்த ஆள், கஜாவை, எதிர்த்து போராடும்  முறை  பிடிக்கவில்லை.

சோ,  ‘திருமணமே  வேண்டாம்  என்று  சொல்லிட்டு இருக்காங்க’ தான். ஆனா, அவங்க ருத்ராவை தவிர, வேறு யாரையும் மணக்கமாட்டாங்க.

ரெண்டு  பேரும்,  ஈகோ  பார்த்துட்டு, வாழ்க்கையை அழிச்சுட்டு இருக்காங்க.
அதான்,  பாட்டி   நீங்கப்   போய்க்  கேட்டவுடன், இருவருக்கும் நிதர்சனத்தைப்  புரிய  வைக்க,  இப்படியொரு  நாடகம்  ஆடினாங்க.

பாட்டி வைச்ச  ஆப்பில்,  ரெண்டு  பேருக்கும்,  டர்  ஆகிடுச்சு.
நீங்களும் சும்மா இருக்காம, ‘செய்ந்நன்றி அது இதுன்னு’ இவங்களை கார்னெர்  செய்யப்  பார்த்தீங்க.

தெரியாம  தான் கேட்கிறேன், எதையும் எதிர்பார்க்காமல்,   உங்க அப்பா இவங்களுக்கு செய்த உதவிக்கு, நீங்க எப்படி  பலன்  எதிர் பார்க்கலாம்?

ஏதோ,  ‘என்   மகளைக் காப்பாற்றுங்கன்னு’  கேட்பதோடு நின்று இருக்காம, உங்களுக்கு ஏன் இந்த வேலை? 
நீங்க சொல்லாமலேயே, பின் இருந்து இத்தனை வருடமாய், என்னை காப்பாற்றிக் கொண்டு வருபவர்கள் இவர்கள்.

‘மகளைக் காப்பாற்றுன்னு’ சொல்லி இருந்தாலே, இவங்கக் குடும்பம் மொத்தமும், எனக்காக உயிரைக் கூடக்   கொடுக்கத்   தயங்கி  இருக்க   மாட்டாங்க.

அப்படி   இருக்கும்  போது, நீங்கச் செய்ததற்கு பெயர், ‘பிளாக்மெயில்’. எப்போ  இருந்து,  இப்படியொரு சுயநலம் பிடித்தவங்க ஆனீங்க?

அப்பா தான் எப்பவுமே, மத்தவங்க நினைப்புக்கு மதிப்பு கொடுக்காம தனக்குத் தோன்றியது தான், ‘சரி என்று முடிவு எடுத்துட்டு’ அதை நம் மேல் திணிப்பாங்க.

நீங்க  எப்போ  இருந்து, அப்பா மாதிரி ஆனீங்கமா?  எதை முடிவுச் செய்வதாக இருந்தாலும், ஏன் பத்து ரூபாய் சாக்லேட் வாங்குவதாக இருந்தாலும்  என்னைக்  கேட்டு,  கேட்டுத்   தானேமா  வாங்குவீங்க!

சின்னப்  பொருளுக்கே,  அப்படி  என்னும்  போது,  ‘இது  என்  வாழ்க்கைம்மா’  இதில் எதையும் விசாரிக்காம, நீங்களா முடிவு எடுத்து என் மேல்  திணித்தாக்  கூடப்  பரவாயில்லை.  பாட்டிக்  குடும்பத்தின்  மீதும்  தானே திணிச்சு  விட்டிங்க.
ஏன்  மா!… 
உங்கக்  கிட்டே,  இதை நான் எதிர் பார்க்கவேயில்லை என்று தான்  சொல்வேன்.”  என்ற  மதுராவின் பேச்சைக்   கேட்ட பவானியின் தலைத்  தானாகத்  தொங்கிப்  போனது .

“பவா!…   ஒரு   அம்மாவா,   நீ   செய்தது   எங்களுக்குப்   புரியுது.  ஆனா,  நீ செய்த  விதம்  தான்  சரி  இல்லை.  
எதையும்,  ‘எடுத்தோம்,  கவிழ்த்தோம்’ என்று   செய்ய  முடியாது.  அதுவும்,  ஒரு  பெண்ணின்  திருமணத்தில்.

நீ  கேட்டு  இருந்தாய்  என்றால்,  மதுரா சொன்னது போல், அவளுக்காக எங்க  உயிரையும்,  கொடுக்கத்  தயங்கி  இருக்க  மாட்டேன்  தான். 

ஆனா, நீ  கேட்டது,  என்  பேரனின்  நிம்மதியை,  அவன்   சந்தோசத்தை!
அதை,  எப்படிம்மா  நான்  பணயம்  வைக்க  முடியும்?

இத்தனை வருடம், அவன் மனசுல, ‘ராஜி தான் அவன் மனைவி’ என்று சொல்லிச் சொல்லி வளர்த்து  விட்டு,  ‘கடமை,  தியாகம்’  என்று  எப்படி அவங்க ரெண்டு பேரின் மனசைக் கொல்ல முடியும்?
என் குடும்பம் தான், எனக்கு மற்ற யாரையும் விட எனக்கு முக்கியம். ருத்ராவுக்கும்  அப்படி  தான்.

அதனால் தான் இதுவரை, ‘ஏன்!’ என்று என்னை   ஒரு   வார்த்தை கேட்கவோ, என்னால் முடியாது என்று சொல்லவோ  இல்லை.

இந்த  வயசில், அவனுக்கு  என்  மேல்  இந்த  அளவு  மதிப்பு  இருக்கும் போது,  அவன்  மேல்  எனக்குப்  பாசம்  இருக்காதா  என்ன!

நீ  ஏண்டீ  வருத்தப்படறே,  மதுரா  மாதிரி  ஒரு பெண்ணைப் பெத்துட்டு!

இவ  மேல் அன்புக் கொண்டவங்க, எத்தனை பேர் இவளைச் சுற்றி இருக்காங்க   என்பதாவது   உனக்குத்   தெரியுமா?

விஜய்,   சூர்யா,  ஆல்வின்,  உத்தம்,  கார்த்திக்,  சேது,  பாலாஜி,  சுபா,  எங்க மொத்தக்  குடும்பம் என்று, மதுராவை காக்க, நாங்க இத்தனை பேர் இருக்கும் போது,  நீ  எதற்கடி  இப்படி  உன்னையே  போட்டு  வருத்திக்கறே?’ என்றார்  சிவகாமி .

“பாட்டி!…” என்ற கூவலுடன் ஓடி வந்த ருத்ராவும், ராஜேஸ்வரியும் சிவகாமியை   அணைத்துக்   கொண்டனர் .

“சாரி பாட்டி!… சாரி!… சாரி… எங்களுக்காகத் தான் நீங்கச் செய்யறீங்க என்பது புரியாமல், உங்களைப் போய்த் தப்பா நினைச்சுட்டேன்!
மன்னிச்சுடுங்க   பாட்டி!…”  என்றாள்  ராஜேஸ்வரி,  கண்ணீருடன் .

“பைத்தியக்காரி!… எனக்கு  என்னடீ  வேண்டும். என் பிள்ளைங்க சந்தோசமா இருக்கனும்  அவ்வளவுத்   தான்.”  என்றார் சிவகாமி, கண் கலங்கி .

“சாரி  பாட்டி!…. தேங்க்ஸ்  பாட்டி.”  என்றான் ருத்ரா .

“போடா வெண்ணை!… உனக்குப் பல்பு எரிய வைக்க, என்ன எல்லாம் பிளான் போட வேண்டியதா போச்சு!…
டேய், நான் உன் பாட்டிடா… என்னை,  ‘மாமா  வேலை’  எல்லாம்  பார்க்க  வைச்சுட்டே!
கலிகாலம்!…

பவானிக்கு  வேற,  ‘ஹார்ட் அட்டாக்’  வரும் அளவுச் செய்துட்டே!…  இந்த  அளவு,  மனசுல  அவ மேல் காதலை வைச்சுட்டு… அவ தான் லூசு மாதிரி உளறிட்டு இருக்கானா, அவளை உளற விட்டு, வேடிக்கைப்   பார்த்த,   ‘அரிக்கேன்   விளக்குடா’   நீயி!

ஏதோ மதுரா ஐடியா கொடுத்தா… எல்லாம் நல்லா நடந்தது.” என்றார் சிவகாமி.

“உன்  வேலை  தானா  இது!…”  என்றார்  பவானித்  தெளிந்தவராக .

“வாட்  டு  டூ மாம்ஸ்!…  இந்தத், ‘தரகர் வேலை’  என்னை  விடாது  போல் இருக்கு.
பாட்டி,  ‘என்  பேரனைத் திருமணம்  செய்து கொள்ளச் சம்மதமா?’ என்று கேட்டு வரும் போதே, டௌட் தான்.

ஏற்கனவே ருத்ரா, ராஜியை விரும்புவதைக்  கேள்விப்பட்டு  இருக்கேன்.
பாட்டிக்கும்,  ராஜியை  ரொம்ப  பிடிக்கும். அப்படி  இருக்கும்போது நிச்சயமா,  தன்    பேரனின்  ஆசைக்கு எதிரா, எதையும் செய்யமாட்டார் என்று  புரிந்து  விட்டது.

பேசியவுடன், பாட்டியும் சொல்லிட்டாங்க. இது மாதிரி, ‘எனக்கும், ருத்ராவுக்கும்  திருமணம்’  என்று புரளிக் கிளப்பி விட்டு இருப்பதாக.

என்னால் முடிந்தது  ராஜிக்கு, ருத்ரா  இங்கு  இருக்கும்  தகவலை  அனுப்பி, இவங்களை  மீட்  செய்து  பேச  வைத்தது…  மீதம்   எல்லோருக்கும் தெரியும்.” என்றாள்  மதுரா .

“அம்மாடீ ராஜீ!… இப்போவாது சொல்லு. என்  பேரனைத் திருமணம்  செய்து  கொள்ளச்  சம்மதமா?”  என்றார்  சிவகாமி .

“ஹ்ம்ம்ம்!…” என்று ராஜீ  கன்னத்தில்  கை வைத்து,  யோசிக்க ருத்ரா போலியாக முறைக்க,
“நிச்சயமா, எனக்கு இந்தக் காட்ஜில்லா தான் வேண்டும்.”  என்றாள்  ராஜேஸ்வரி .

“ஊரெஈஈஈ!…”   என்ற  கூச்சல்,  அந்த  ஹாஸ்பிடலை  அதிர வைத்தது .

பவானி சந்தோசமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், அவரையும் அறியாமல்,   அவர்   முகம் சு ருங்கி  போனது .

“பவா!…. உன் மகளுக்கு என்னடீ குறை!…
திருமலையில், அந்த ஏழுமலையானுக்கு, ‘நித்தியத் திருமணம் கோலாகலமாக, விமர்சையாக நடப்பது  போல்,  உன்  மகளின்  திருமணமும்  ஒரு  விழாவாகவே’  நடக்கும்டீ…
நீ வேண்டும் என்றால் பாரு…. நான் சொல்வது நடக்குதா இல்லையா என்று!… 

இவ  மனசுக்கு,  ‘இவளை  ராணி  மாதிரி,  ஒரு தேவதை  மாதிரி தாங்குபவன் தான், கணவனாக வருவான்.” என்றார் சிவகாமி .

“உங்க வாய் முகுர்த்தம் பலிக்கட்டும் அத்தை.” என்றார் பவானி மனநிறைவாக .

அதைக்  கேட்டு  விஜய் முகம் சுருங்கி விட, அங்கிருந்து வேகமாக வெளியேறி  விட்டான்.
அவன்  பின்னால்  ஆல்வின்,  பாலாஜி,  சுபா  சென்றனர்.

அதனை பார்த்துக் கொண்டு இருந்த மதுராவின் நெற்றி சுருங்கியது. சூர்யாவோ   வானத்தில்   மிதந்து   கொண்டு  இருந்தான் .

“பாட்டி!…  உங்க வீட்டுத் திருமணத்திற்கு மட்டும் ஏற்பாடு செய்துடீங்க. எங்க வீட்டுத்  திருமணம்  என்ன ஆவது?… பொண்ணு  வீட்டுக்காரர், இங்கேயே தானே   இருக்கார்.  பேசி  ஏற்பாடு  செய்யுங்க.”  என்றாள் மதுரா .

“சரியா  சொன்னே, பேத்திப் பொண்ணு…” என்றவர்,
“சூர்யா!…  என்  பேரன்  ரகுக்கு,  உன் தங்கைச் சந்திராவைக் கொடுக்க உனக்குச் சம்மதமா?”  என்றார் .

பவானி  புன்னகைக்க,  சூர்யா, சந்திரா, ரகு அதிர்ந்தனர்.
சூர்யா தங்கையைப் பார்க்க, புன்னைகையுடன் அவள் தலைக் குனிய, “எனக்குச்  சம்மதம்  பாட்டி…”  என்றான்  சூர்யா  புன்னகையுடன் .

“என்ன  பவானி!…  சந்திராவை,  உன்  மருமகள்  ஆக்கிக்  கொள்ள  உனக்குச்  சம்மதமா?”  என்றார் சிவகாமி .

“பெரியவங்க,  நீங்க ஏற்பாடு செய்தா அது சரியாய் தான் இருக்கும்.”  என்றார்  பவானி .

“ரகு, உன் அம்மா, தங்கை ஒகே சொல்லிட்டாங்க… உன் பதில் என்ன?” என்றார்  சிவகாமி .

பதில்  பேசாத  ரகு,   தலையைத் திருப்பிக் கொள்ள, சந்திராவின் முகம் வாடிப் போக, சூர்யாவும் ,மதுராவும் கோபப்பட, அவர்களைக் கண் பார்வையாலேயே  அடக்கிய  சிவகாமி,
“என்ன உனக்கு இஷ்டம் இல்லையா ரகு?. ஒரே ஒரு காரணம் ஏற்று கொள்ளும் படியா சொல்லு பார்ப்போம்.
‘அவப் பணக்காரி. பணக்காரங்க எல்லாம்   கெட்டவங்க’  என்று  டயலாக்  விடாதே!

ஒரே  ஒரு  காரணம்  ப்ரூப்போடு சொல்லு.  உன்னைத்  தவிர,  வேறு  ஒருவனை  சந்திரா காதலித்தா…
பல பேருடன் சுத்தினா…
ஆண்களைக் காதலிப்பதாகக்  கூறி  ஏமாற்றினாள்…
நடத்தை….”  என்றவரை ரகுவின், “பாட்டி!…”  என்ற  அலறல்  நிறுத்தியது .

“பெரியவங்க   என்று  பார்க்கிறேன். இல்லை  என்றால்  நடப்பதே  வேற…”  என்றான்  ரகு  கோபத்த்துடன் .

“அவங்க மேல் ஏன் பாயரே!…. இதைத் தானே, நீ பாலிஷா இத்தனை வருடமாய்,  அண்ணிக்  கிட்டே  சொல்லிட்டு  இருந்தே!… ‘அவங்க கெட்டவங்க என்று…’
அதையே தானே, பாட்டி நேரிடையாக, பச்சையா  சொல்றாங்க.

லைப் டா இது…  இதில்,  ‘ப்ரெஷர்  குக்கர் கேரண்டி, வாரண்டி  எல்லாம்’ யாராலும்  கொடுக்க  முடியாது.

காதலித்து  மணந்த  எத்தனையோ  பேர், டைவர்ஸ் கேட்டுக் கோர்ட் படி ஏறியிருக்காங்க. பெற்றோர் பார்த்துச் செய்து  வைத்த திருமணத்தில் புருஷனோ, மனைவியோ இறந்த அடுத்த நொடி, அவங்களை பிரிய முடியாமல்   போன   உயிர்களும்  உண்டு.

பணக்காரங்க எல்லோரும் கெட்டவங்க, அதே  சமயம் காசே இல்லாத எல்லோரும்  நல்லவங்க என்று சொல்ல முடியாது.

ஏன்  விஜய், சூர்யா, பாட்டி  இவங்க  எல்லோரும்  பணக்காரங்கத் தான். இவங்களால் வாழறவங்க  தான்  அதிகம்.

மத்தவங்க,  ‘இப்படி வாழணும் என்று நம்ம எக்ஸ்பெக்டஷன்’ வைக்கும் போது  தான்,   அங்கே  பிரச்சனை  ஸ்டார்ட்  ஆகுது.

இவங்க, உன்னை விரும்புவதைத் தவிர வேறு எந்தத் தப்பும் செய்யலை அண்ணா!… போதும், எங்களை நம்பு. உனக்கு எந்தக் கெடுதலாவது நினைப்போமா!

அண்ணி  ரொம்ப  நல்லவங்க  அண்ணா. அப்பா, அம்மாவே தேடினாலும், இவங்க மாதிரி ஒரு மனைவி, உனக்குக் கிடைக்கமாட்டாங்க அண்ணா!… புரிஞ்சுக்கோ.”  என்றாள்  மதுரா .

“ரகு!… மதுரா எப்படி குணவதியோ, அதே போல் தான் சந்திராவும்…” என்றார் சிவகாமி .

“இவன்  பெரிய  மனுஷன்  பாருங்க. இவன் கிட்டே போய்க் கெஞ்சிட்டு இருக்கீங்க!… சந்திரா,  நான்  உங்களுக்கு  நல்ல  மாப்பிளை பார்த்துத் தரேன். இவன் வேண்டாம்.” என்ற மதுரா, சந்திராவின் கைப்பிடித்து வெளியே  கூட்டிச்  செல்ல  முயல,
“நீ ஆணியே பிடுங்க வேண்டாம்…”  என்ற ரகு,  சந்திராவின் கைப்பிடித்து, இழுத்து  கொண்டு  வெளியே  ஓடினான் .

“சப்பா!… முடியலைடா சாமி!…  இவனுங்க  திருமணம்  செய்ய, நம்ம டங்குவார்  அறுந்து  போகுது.”  என்றாள்  மதுரா,  புன்னகையுடன்.

மதுரா, கேலிப் பேசிக் கொண்டு இருக்க, சிவகாமி கண் காட்ட, மதுரா பவானியைப்  பார்த்தாள் .

‘இப்போ என்ன?’  என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை அவளால்.

‘நீங்களே கேளுங்க…’  என்று   மதுரா  சைகைக்  காட்ட,  பவானியின்  அருகில்  அமர்ந்த  சிவகாமி,
“என்ன  பவா!…  இன்னும் எந்தக்  கோட்டையைப்   பிடிக்க,  இந்த யோசனை?”

‘மறுபடியும் முதலில் இருந்தா’, என்று அவராலும் எண்ணாமல் இருக்க முடியவில்லை .

“அது  ஒண்ணும்  இல்லை அத்தை.  இவங்க அப்பாவை நினைத்தால் தான்! எந்த  முடிவையும், அவரே எடுக்கணும் என்று ரொம்ப எதிர்ப் பார்ப்பார். 
எங்களுக்குப்   பழகிப் போச்சு. ஆனா,  அவரைக்  கேட்காம  இப்படி ரகுவுக்கு, திருமணம்  ஏற்பாடு  செய்து  இருப்பது  தெரிய  வந்தது…. நாங்க அவ்வளவுத் தான்.
எனக்குமே,  அவரைக் கேட்காம முடிவு எடுப்பது சரியாய் படலை. என்ன இருந்தாலும்,  அவர் என் பிள்ளைகளின் அப்பா, அத்தை. எங்க வீட்டில் அவர்  தான்  எல்லாமுமே!…”  என்றார் பவானி .

“என்னமா!… அந்த அளவு, அப்புஸ் மேல் லவ்வோ லவ்வா?”  என்றாள் மதுரா.

கசந்தப் புன்முறுவல் புரிந்தப் பவானி, “அன்பு, காதல் இது எல்லாம் தானா வரணும்.
இல்லறம் என்பது, ‘கணவன், மனைவி இருவரும் சமம்’ என்று வாழ்ந்து காட்டுவது. 
அர்த்தநாரீஸ்வரர்  மாதிரி.

இது எல்லாம் எதிர்பார்த்து, எதிர் பார்த்து,  ஏமாற்றம்  மட்டுமே  மிச்சம்  என்ற  நிலையில் இருக்கிறேன்.
ஒரு   கைத்தட்டினால்,  ஓசை  வராது.  ஒரு  சில   தருணங்களில்,  கடவுள்  ஏன்  வெளிநாட்டில்  பிறக்க வைக்கவில்லை  என்று  தோன்றி விடும்.

அங்குப்  பெண்  சுதந்திரம்,  இல்லறத்தில் அதிகமாகவே உண்டு. எந்த முடிவும்,  இருவரும்  கலந்து  ஆலோசித்து  எடுப்பார்கள்.

‘பிரைவேட் டைம்’ என்று பெண்களுக்குத் தினமும் உண்டு.  ஓய்வாக அமர்ந்து  டீக்குடித்து  கொண்டு,  எனக்குப்  பிடித்த  பாடலைக்  கேட்கக்  கூட,  ‘அடுத்தவர்  என்ன  சொல்வார்  என்று  பயந்து, பயந்து’ இருக்க வேண்டி  இருக்காது.

ஜோதிகா,  சரண்யா,  ஊர்வசி,   பானுப்ரியா நடித்து வந்துதே, ‘மகளிர் மட்டும் படம்… நீ கூட்டிப் போனியே!
அது போல்  தான் எனக்கும் தோன்றும்,
“நானும் இங்கேத் தான்டா  இருக்கேன்.”  என்று  கத்தத் தோன்றும்.

ஏதோ வேலைக்குப் போகிறேன். அதனால்,  அவர் கையை  எதிர் பார்க்காமல்  இருக்கிறேன். எனக்கு இருக்கும்,   இந்த  வாய்ப்பு  எத்தனை பெண்களுக்குக்  கிடைக்கும்?
திருமணம்  என்பது  மாயாஜால  சிறைத்  தான்.”  என்றார் பவானி .

இதற்கு  என்ன  பதில்  சொல்வது?
எல்லா  வீடுகளிலும்,  ‘வீட்டுக்கு  வீடு  வாசற்படி’  என்று  நடப்பது  தானே!

‘சுவர்க்கம்’  என்ற  ஒன்று   இருக்கிறதோ, இல்லையோ, வாழும் வாழ்க்கையைச்  சொர்க்கமாகிக்  கொள்வது    கணவன்,  மனைவி கையில் தான்  இருக்கிறது.
இது  சொல்லிக்  கொடுத்துத்  தெரிவதில்லை.
ட்ரையல்  அண்ட்  எரர்  தான்.’    என்று எண்ணிய சிவகாமி, பெருமூச்சு விட்டார். 
  
“பவானி!… என்னவோ  புதுசா  நடப்பது  போல்,  ஏன்   புலம்பிட்டு  இருக்கே! சங்கரன் அப்படித் தான் என்று தெரியாதா!…
நாய்  வாலை நிமிர்த்த  முடியாது.  விட்டுத்தள்ளு…

உன் பசங்களைப் பாரு. இப்போ என்ன சங்கரன்  கிட்டே  சம்மதம்  வாங்கணும்…. அவ்வளவுத் தானே!. என் கிட்டே விடு.”  என்றவர்   சங்கரனுக்கு,  மொபைல்  அழைப்பு  விடுத்தார் .

“மேடம்!… நல்லா இருக்கீங்களா?…” என்றார் சங்கரன்,  பேசுவது  யார் என்று  தெரிந்ததும் .

“எத்தனைத் தடவை சொல்வது சங்கரா!…   இப்படி, ‘மேடம்’ என்று அழைக்காதே என்று….  சரி… சரி…  நீ  மாற மாட்டே…
சரி, அழைத்தக் காரணம் சொல்லிடறேன்.

சூர்யப் பிரதாப் ரத்தன் சிங் தெரியுமா உனக்கு?” என்றார்  சிவகாமி  ஒன்றும்  அறியாதவர் போல் .

“தெரியும் மேடம். இப்போ சென்னையில், அவர் கிட்டேத் தான் வேலைப் பார்க்கிறேன். அவரின் எல்லா கம்பெனிக்கும், ஆடிட் நடந்துட்டு இருக்கு. நான்  தான்  இன்ஸ்பெக்ஷன்  செய்துட்டு  இருக்கேன்.

என்னைப் பற்றி, என் பழைய முதலாளி சொன்னார் என்று எனக்குச் சென்னையில்  வேலை,   தங்கப் பங்களா  மாதிரி வீடு, பவானிக்குப் பிரின்சிபால் வேலை, ரகுவுக்கு ட்ரான்ஸபெர் என்று எல்லாமே செய்து கொடுத்து இருக்கார்.  வீடு,  நல்ல  நாள்  பார்த்துப்  போகணும்…” என்றார் சங்கரன்.

“ஓஹ்!… நல்லது,  நல்லது…   சூர்யாக்  குடும்பம்,  ரொம்ப  நாளாக எங்களுக்குப்  பழக்கம். சூர்யாவிற்கு  ஒரு  தங்கை  உண்டு. சந்திரா என்று பெயர். ‘கெட்வெல்  ஹாஸ்பிடல்’  கேள்விப்பட்டு  இருக்கியா!…  அதை,  அவ தான் நடத்திட்டு இருக்கா.

ரொம்ப அழகா இருப்பா. நான் தூக்கி வளர்த்தப் பெண். குணமும் தங்கம். ‘தங்கைக்கு வரன் பார்க்கும் பொறுப்பைச், சூர்யா தம்பி என்னிடம் தான்’ கொடுத்து  இருக்கார்.

சந்திராவிற்கு  ஏற்ற  மாப்பிளை,  குடும்பம்  என்று  யோசிக்கும்   போது  தான்,  உன்  நினைவு  வந்தது.  உன்  மகனுக்குச்  சந்திராவைக்  கேட்கட்டுமா சங்கரா?”  என்றார் சிவகாமி .

ஸ்தம்பித்து  போனார்  சங்கரன்.
“மேடம்!… மேடம்!… அவங்க ராஜ பரம்பரை. பத்து  தலைமுறைக்குச்  சொத்து இருக்கு. கோடீஸ்வரங்க. எப்படி மேடம், எங்களுக்கும் அவங்களுக்கும்  ஒத்து  வரும்?
அவங்க  ராஜப்  பரம்பரையை  எதிர்பார்ப்பாங்க.  பேச்சுக்கு  வேண்டும் என்றால், இது எல்லாம் சரியா இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது.” என்றார்.

“அவங்க  ராஜப் பரம்பரை கேட்கிறாங்க என்றால், உன்னிடம் நான் ஏன் பேசப்  போகிறேன்!… அவர்கள் எதிர்பார்ப்பது நல்ல பையனை, குணமானக் குடும்பத்தை.  பணத்தை இல்லை  சங்கரா.
அவங்க மகளைத், ‘தங்கள் மகளாகப் பார்த்துக் கொள்ளும் மாமியார், மாமனாரை….. இல்லை இல்லை அப்பா, அம்மாவை எதிர்பார்க்கிறார்கள். அது  நீயும்,  பவானியும் என்பது  என் கருத்து.

‘இல்லை… வரும்’ மருமகளை கொடுமை செய்வோம்’ என்று ஒருவேளை சொல்ல  வருகிறாயோ!….
இல்லை,  அவர்கள்  எதிர்பார்க்கும்  நல்ல  பையன்,  உன்  மகன் இல்லை என்கிறாயா!”என்றார் சிவகாமி, சங்கரனின்  ஈகோவை   சீண்டிப்   பார்க்கும்   விதமாக .

“மேடம்!…  அவங்களுக்குச்  சம்மதம்  என்றால்,  எனக்கும் சம்மதம் தான். என் மகனை விட, என் குடும்பத்தை விட, வேறு நல்ல குடும்பம் அவங்களுக்கு கிடைக்காது.  வரும் மருமகளை, மகளாகத் தான் பார்த்துக் கொள்வோம்.” என்றார்  சங்கரன் .

“ரொம்ப  சந்தோசம் சங்கரா!… ஒரு நிமிஷம் லைன்னில் இரு.” என்றவர் மதுரா,  அவர் காதில் எதையோ சொல்ல,  ஒரு கணம் நெற்றிச் சுருங்கினார்.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

79

"ஏன்?...”  என்று  சிவகாமி, சைகையில்  கேட்க,  மதுரா  புன்னகை  மட்டுமே  புரிந்தாள்.மீண்டும் மதுரா, ஏதோ பிளான் போட்டுவிட்டாள்.இந்த முறை ஆப்பு யாருக்கோ!“சங்கரா!... இன்று இரவு எட்டு மணிக்கு நீ பிரீயா?.... ஒண்ணும் இல்லை உன்னிடம்,  சூர்யாத்  தம்பி  நேரிடையாகப் பேசணுமாம். அதான்!....…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்