arrow_back
என்ன தவம் செய்தேன்! 79
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 79 / 85

79

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

“ஏன்?…”  என்று  சிவகாமி, சைகையில்  கேட்க,  மதுரா  புன்னகை  மட்டுமே  புரிந்தாள்.

மீண்டும் மதுரா, ஏதோ பிளான் போட்டுவிட்டாள்.
இந்த முறை ஆப்பு யாருக்கோ!

“சங்கரா!… இன்று இரவு எட்டு மணிக்கு நீ பிரீயா?…. ஒண்ணும் இல்லை உன்னிடம்,  சூர்யாத்  தம்பி  நேரிடையாகப் பேசணுமாம். அதான்!…. சரி இரவு   எட்டு  மணிக்கு ,  சூர்யாவின்   ஸ்டார்  ஹோட்டல்,  ‘ப்ளூ   டயமண்ட்’  வந்துடு.

உன்னை,  உன்  ஹோட்டலிலிருந்து  அழைத்து வரக் கார் வரும்.  வச்சிடவா?…. பவானியை கேட்டதாகச் சொல்லு.” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.

“என்னை,  ஏன்  உன்  டாடியை மீட் செய்யச் சொல்றே!… அதுவும், இன்றே!… நிதானமாகச் செய்யலாம். எதற்கு, இந்த அவசரம்?” என்றான் சூர்யா .

“பெரியவர்களை,  அதுவும்  சொந்தப்  அப்பாவை  இப்படி  பேசக் கூடாது தான்…  இருந்தாலும் வேறு வழி இல்லை.
‘நாய்  வாலை, யாராவது நிமிர்த்தியே  தானே’  ஆகணும்.”  என்றாள்  மதுரா,  கண்கள் மின்ன.

அந்த அறையில் இருந்த பவானி, சிவகாமி, சூர்யா, கார்த்திக் ஒருவரை ஒருவர்  பார்த்துக்  கொண்டனர்
அடுத்த  செக் மேட்  சங்கரனுக்கு .

“இப்போ சந்தோசமா பவானி. சூர்யா,  உன் வீட்டுக்காரரிடம் பேசி விடுவான். அவராகவே, ரகு விஷயத்தில் முடிவு எடுப்பதாக, அவருக்குத் தோன்றும்.
சரி  நான் கிளம்பறேன். உடம்பை பார்த்துக்கோ. மதுராவிற்கு நாங்க  இருக்கோம். அவளைப், பற்றியக் கவலை உனக்கு வேண்டாம்.” என்றார்  சிவகாமி .

“சரிங்கத்தை…” என்று  புன்னகை  புரிந்தார்  பவானி,  ‘ஆனால்  அது அவரின்  கண்களை  எட்டவில்லை’  என்பதைக்  கண்டுக் கொண்டது மதுராவின்  கண்கள் .

சிவகாமி   கிளம்பும்  போது,  சூர்யாவிற்குக்  கண்  காட்ட,  அவரோடு  அவனும்  வெளியே  சென்றான்.

அங்குக்  காரிடோரில் ஏற்கனவே,  விவாதம்  நடந்து  கொண்டு  இருந்தது. இவர்கள்  வருவதைக்  கண்டதும்  விஜய்,  ஆல்வின், பாலாஜி பேச்சுத் தடைப் பட்டது.

“உங்க ரெண்டு பேரையும், பொறுப்பானப் பசங்க என்று நினைத்தேன்!… ஆனா, சின்னப் பிள்ளைத்தனமா ஹாஸ்பிடலில் அடித்துக் கொண்டு இருக்கீங்க!….  

‘ஊரு  ரெண்டுப்பட்டா   கூத்தாடிக்குத் தான் கொண்டாட்டம்’ என்று பெரியவங்க சொல்வாங்க. அந்த ராட்சசனை, அவன் பேய் கூட்டத்தை  வைத்துக்    கொண்டு   இப்படியா  செய்து  வைப்பீங்க?

ரெண்டு பேரும் மதுராவை காதலிக்கறீங்க. சரி, ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து,  அவளை  மணக்க  முடியாது.

‘யாரைக்   கணவனாக  ஏற்பது’  என்பது  அவள்  விருப்பம்.  ஏதாவது  அவளைப் போர்ஸ் செய்தீங்க என்று கேள்விப்பட்டேன் தோலை உரிச்சுடுவேன்.
எனக்கு மதுரா முக்கியம். அவளைக் காப்பாத்துங்க. ஆனா, எந்தத் தகிடு தத்தம்   வேண்டாம்.   முடிவு,   அவள்   தான் எடுக்கணும்.

அவ குழப்பத்தில் இருக்கா. ஸ்ட்ரெஸ்  அதிகமாகி, மயங்கும் அளவுக்கு போயிருக்கா. அவ உடல் நிலையோடு, மனசோடு, இரண்டு பேரும் விளையாடாதீங்க.

கொஞ்சம் அவளைப் பிரீயா விடுங்க. அவள் யாரை  தேர்ந்து  எடுக்கிறாளோ, அவனோடு திருமணம் முடிப்பது என் வேலை. என்ன  புரிஞ்சுதா?” என்றார் சிவகாமி .

“சரி பாட்டி…” என்றனர் சூர்யாவும், விஜய்யும் தலைத் தொங்கிப் போனவர்களாய் .

“கருணா!… என்ன பிரச்சனை!…நாங்க  வரும் போது, உன் முகமே சரி இல்லை…” என்றார் சிவகாமி .

“பிரச்சனைத்  தான்  பாட்டி!…  மதுரா  கிட்டே,  ‘பார்ம் ஹவுஸ்சில்’ அந்தச் சுமன்  தவறாக  நடக்க  முயன்றான்  என்று,  கைக்காலை  உடைத்து, ‘சுந்தர்பன்  காட்டுக்குப்’  பேக்   செய்தேன்.

அங்குப்  பேசும்  மொழி  இவனுக்குத் தெரியாது. சரியான மெடிக்கல் கேர் இல்லாமல், நோய்  பிடித்தே, அணு  அணுவாய்   துடித்துச்   சாவான்… யாரும்  உதவ  மாட்டார்கள்  என்று  ஏற்பாடு  செய்தேன்.

அங்குப்   போவதற்குள் ஆந்திரா, ஒரிசா பார்டரில் போன ஆளின் குரல் வலையைக்   கடித்து   துப்பித்   தப்பித்து   இருக்கிறான். ரெண்டு நாட்களுக்கு முன்.  
இப்போ எங்கே   இருக்கான்… என்ன, ஏது என்று விவரம் தெரியலை. அடிபட்டப்   பாம்பு! … கொத்தாமல் விடாது.”  என்றான்  விஜய்  கோபத்துடன்.

“அப்படியே, ‘கௌதம புத்தர்’, கருணை காட்டறார். அங்கேயே போட்டுத் தள்ளுவதை விட்டு, தலையைச் சுற்றி ஏன் மூக்கை தொடரே! பைத்தியாமாடா   உனக்கு ?”  என்றான்  சூர்யா,  கோபத்துடன் .

“ஏன் ரித்திகா  இறந்த உடன், ரெண்டு பேரைப் போட்டுத் தள்ளின நீ, இவனை   ஏன்   விட்டு   வைத்தே!… மாசிலாமணி   சாருக்காகத்  தானே!

எனக்கும்  அவர்  அப்பா மாதிரி.  தொழில் கற்றுக் கொடுத்தக் குரு.  என் கையால்   கொல்லவில்லையே  தவிர,  அவன் நரகத்தை அனுபவித்து சாகும் படித்  தான் ஏற்பாடு செய்தேன்.

இங்கு  எங்காவது, ‘ செத்து   வைத்தான்’ என்றால், மாசிலாமணி சாருக்கு தான் மன வேதனை.  அதான்,  ‘கண்  காணமால்’  மகன்  சென்று  விட்டான் என்று  நினைக்கட்டும் என்று இப்படி செய்தேன். இவனுங்க கொஞ்சம் அஜாக்கிரதையாக  இருந்து  விட்டார்கள்.”  என்றான் விஜய் .

“இப்போ,  எங்கே இருக்கான்?…”  என்றான் சூர்யா.

“ட்ரேஸ் செய்ய முடியலை. எங்கேயோ தலைமறைவாகி இருக்கான்.  அவன் இருக்கும் நிலையில்,  தனியே  அவனால்  செயல்ப்பட முடியாது தான். யாரோ,  உதவிட்டு  இருக்காங்க…” என்றான் விஜய் .

“சரி,  இனி  நான்  பார்த்துக்கறேன்…  நீ  தலை  இடாதே!… மதுராவின் காவல்,  என்  பொறுப்பு.”  என்றான் சூர்யா .

“இந்தப் பிரசங்கத்தை வேறு யாரிடமாவது சொல்லு. என் கடைசி மூச்சு உள்ள வரை, மதுராவைக் காப்பது என் கடமை.  யார் வந்தாலும், அதைத் தடுத்து  நிறுத்த முடியாது. மதுராவிற்கான,  என் காவல் தொடரும்.” என்றான்  விஜய்  ரௌத்திரமாக .

“ரெண்டு  பேரும் உங்க சண்டையை நிறுத்துங்க. ரெண்டு பேருமே உங்களால் முடிந்த அளவுக் காவல், பாதுகாப்பு மதுராவிற்கு கொடுங்க. ஒன்றுக்கு  ரெண்டு  பாதுகாப்பு  வளையம், இருப்பது நல்லது தான்.

இதுக்குக் கூட அடிச்சுக்காதீங்க. உங்க கவனம் இப்போ, மதுராவின் பாதுகாப்பின்  மேல்  தான்  இருக்கணும்.
இன்னொரு விஷயம்…  அவன் கையில் கிடைச்சா பாவம், புண்ணியம் பார்க்க   வேண்டாம். அவனோடு  யார்  இருந்தாலும்,  அவர்களையும்   விட்டு   வைக்க   வேண்டாம்.”  என்றார்  சிவகாமி,   எஃகு  போன்ற  குரலில்.
  
“சரி  பாட்டி!…  ஆனா,  அந்த ஆள்…  அவரும் சுமனோடு சேர்ந்து தான் இந்தக் கடத்தல், பாலியல் தொழில், ஹியூமன் ட்ராபிக் செய்வதாகத் தெரிகிறது. எல்லாமே இவரின் பினாமி இடங்கள். இன்னும் இவருக்குக் கருணைக்  காட்ட  வேண்டுமா ?”  என்றான் விஜய் .

“சீனா   டீல்   முடியட்டும் விஜய். பிறகு முடிவு எடுக்கலாம்.” என்றார் சிவகாமி.

“பாட்டி!…  அந்த   டீல்   ஜெயிச்சா,  இவருக்குப்  பில்லியன் கணக்கான பணம்  வந்து  விடும்.   இவரைக்  கையில்  பிடிக்கவே முடியாது.
இப்போவே,   நிறையக்  கடன்  வாங்கி  தான்,  இந்த டீல் ஜெயிக்கப் போராடிட்டு   இருக்கார். 

ஐ  திங்க்,  இவரிடம்  கொடுக்கப்பட்டு  இருந்த  பல   பெரியப்   புள்ளிகளின், கருப்புப்  பணத்தை  இதன்  மூலம்  வெள்ளையாக்க  முயல்கிறார்.
இதில்   ஜெயிச்சா,  அவரை  அசைக்கவே  முடியாமல்,  போகும்.

இப்போ தான்  இவரிடம்  பணம்  கொடுத்து  இருக்கிறவங்க, வருமானம் வராமல் கோபத்தில்  இருப்பதாகக்  கேள்வி.  இது  தான்  சரியான சமயம். இப்போ அடிச்சால்,   நிச்சயம்  எழவே  மாட்டார்.”  என்றான் சூர்யா .

“அவர் ஜெயிக்க மாட்டார் சூர்யா. அவரால், இதில் ஜெயிக்கவே முடியாது. கரெக்ட் செக் மேட் வைத்து இருக்கேன்!
இதில் அவர் தோற்றால், அவரின் மேல் நாம் கை வைக்கவே வேண்டி இருக்காது. மத்த எல்லாவற்றையும், யாரின் பினாமியாக இருக்கிறாரோ, அவர்களே பார்த்துப்பாங்க. நாம கை வைக்கவே வேண்டி வராது.” என்றான் விஜய்  கண்கள்  மின்ன .

விஜய்யின் கண்களின் மின்னலுக்கு, ஈடாகச் சிவகாமியும் கண்களும் மிளிர்ந்தது.

மற்றவர்கள் அறியாமல்,  விஜய்யும்,  சிவகாமியும்  மட்டும் ஏதோ பிளான் போட்டு,  அந்தச்  சீனா  டீல் வைத்துக் கஜாவிற்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்   அனைவருக்குமே  புரிந்தது. 

அதனால் தான் கஜாவிற்கு,  அந்த டீல் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள், கொட்டேஷன்  அதிகமாய்  கொடுத்து. 

“சரி  கிளம்பறேன். ஏதாவது  தேவை  என்றால்,  கேட்கத்  தயங்க  வேண்டாம். உங்கச் சண்டையில், மதுராவை கோட்டை விட்டு விடப் போகிறீர்கள். கவனம்.”  என்ற சிவகாமிக் கிளம்ப, அந்த ஹாஸ்பிடலின் தோட்டத்தில்,   ராஜியுடன்  பேசிக்  கொண்டு  இருந்த ருத்ரா, சிவகாமி சைகை   காட்டியதும்,   ராஜியுடன்  வந்து  அவருடன்  சேர்ந்து  கொண்டான்.

இவர்கள்,  பேசியது  மட்டும்  ராஜீ  கேட்டு  இருந்தால்,   மீண்டும்  முருங்கை மரம் ஏறி இருப்பாள்.  அதான் பாட்டி முன்னெச்சரிக்கையாக ருத்ராவை ராஜியுடன், கோர்த்து விட்டு,  இவர்  மட்டும்  சூர்யா,  விஜய்யிடம்  பேச வந்து  இருந்தார்.

தன்னைச்  சுற்றி  நடப்பதை  பற்றிக்  கவலைப்படாமல்,   தன்  தந்தை சங்கரனைப்  பற்றி  யோசித்து  கொண்டு  இருந்தாள்  மதுரா.

அடுத்த  ரெண்டு  மணி  நேரத்தில்  தலைமை  டீன், ‘ அம்மா!…  போய்  வா மா…” என்று  மதுரவையும், அவளின்  பாடிகார்ட்  இருவரையும்  பேக் செய்து  விட்டு,  நிம்மதியாகத்  தன்  சேரில்  அமர்ந்தார் .

அன்று  மாலை,  எல்லா  நியூஸ்  சேனல்களிலும்,  ‘பிளாஷ்  நியூஸ்’  ஓடியது.

‘பிரபல மருத்துவமனையில் இளம் தொழில் அதிபர்கள் இருவர் தொழிற் பகைக் காரணமாக மோதல்.’ என்று .

மதுராவிற்காக அடித்துக் கொண்டது வெளியே வராமல், தொழிற் பகை என்று வந்தது.

‘ஆதவனின் பெயரைக் கொண்ட, ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவருக்கும், ‘இளைய தளபதி’ பெயரைக்  கொண்ட  தொழிலதிபர்,   ஒருவருக்கும் தொழிற்  பகை  முற்றல்.’.
இந்த  நியூஸ்  பார்த்த  கஜா,  சுமனுக்கு  அழைத்தார்.

“ஹ்ம்ம்ம்!… நானும் பார்த்தேன். நம்ம வேலை சுலபம். சூர்யாவைப் போட்டுத் தள்ளிட்டுப் பழியை, விஜய் மீது போட்டுடலாம். யாருக்கும் நம்ம மேல் சந்தேகம் வராது.

சூர்யா, தான் சிவகாமிக்கு ஹெல்ப் செய்யறவன். சோனாவை,  A.C.Pட்டே  மாட்டி விட்டு இருக்கான். நம்ம  இடங்களில், ரைட் செய்து, பெண்களை மீட்டதும் சூர்யா தான். அவன்,  உயிரோடு இருக்கக்  கூடாது.”  என்றான் சுமன்.

“கொஞ்ச  நாளுக்கு,   எந்த  விவகாரமும்  வேண்டாம்.”  என்றார்  கஜா.

“கண்டவனுக்கு  பயந்து,  எல்லாம்  இதை விட முடியாது. ஏற்கனவே ஒரு ஷிப்மென்ட்  மிஸ் ஆகிடுச்சு.  இந்த  தடவை,  பீகார், சட்டிஸ்கர் போன்ற பின் தங்கிய,  மாநிலங்களில் உள்ள கிராமங்களிலிருந்து பெண்களைப் பிடிக்கச் சொல்லி இருக்கேன்.

இந்தத் தடவை புதுசா, காசு கொடுத்தா ‘திருமணம் என்ற பெயரில் பெண்களைக்  கூட்டிப்  போனால்’  கூட,  ஏன் என்று கேட்க அங்கு எல்லாம் நாதி  கிடையாது.

‘ஒரு  மொத்தக்  கிராமமே,  இப்படித்  தான், பெண்களைக் கடத்தி வந்து திருமணம்  செய்து  வைக்கறாங்க நியூஸ் வந்தது.  நாம் தான் இதன் பின்னால் இருக்கிறோம்’   என்று  யாருக்குமே  தெரியாது.

அங்கு   லோக்கல்    ஆளைப்  பிடித்து  வைத்து  இருக்கேன். சில,  பல  லட்சம் கொடுத்து விட்டால், அவனே நாம் சொல்லும் இடத்திற்கு, பெண்களை அனுப்பி  விடுவான்.  எல்லாம் ரெடி.

இருநூறு, முன்னூறு பெண்களுக்கு, ‘போலித் திருமணம்’ நடக்கும். அங்கிருந்து, அவங்களை வேலை   என்று   நம்ம   கிட்டேக்    கூட்டி  வருவாங்க.”  என்றான்  சுமன்.

“பீகார்,  சட்டிஸ்கர் ?” என்றார் கஜா.

“அங்கேத் தான் யாருக்கும் விஷயம் தெரியாது.  ஒருத்தனுக்கு இருபது  மனைவி    இருந்தாலும்,   யாரும்   ஏன்   என்று கேட்பதில்லை.
ஹே!… உண்மையைத் தான் சொல்றேன்… அங்கெல்லாம் இது சர்வ சாதாரணம்.

ஹிந்துஸ்தான்  டைம்ஸ்ல,  டிசம்பர்  2014,  ‘the  MARRIAGE  bazzar’ , 2017 இல்,  ‘அராபியன் நைட்மேர்/ arabian nightmare’ என்ற பெயரில்    என்ற  தலைப்பில்,   இதைப்  பற்றி  நியூஸே  வந்திருக்கு. கூகிள் சர்ச் செய்து பாரு.
    
இன்னமும்  பதினெட்டு,  இருபது  குழந்தைங்க பெத்துப்பது எல்லாம் இங்கே சாதாரணம்.
‘child bearing machine’ என்று தான் இவங்களை சொல்வதே!….
அதில்   கூட   நமக்கு   லாபம்  தான்.

இதுவரை  அப்படி  பிறந்த,  இருபது  குழந்தைகளைக்,  ‘குழந்தைகள் இல்லாத வெளி நாட்டுத் தம்பதிக்கு’ விற்று இருக்கிறேன்.
செம பணம்.

‘இன்னமும்  நிறைய குழந்தைகள் வேண்டும் என்று ஆர்டர் வருகிறது’  பொன்  முட்டை  இடும்  வாத்து  அறுக்கச்  சொல்கிறாயா?” என்றான் சுமன் .

“கொஞ்ச  நாளைக்கு  தான் சுமன். போலீஸ் டிபார்ட்மென்ட் கவனம் நம் மேல்  தான்  இருக்கு.  தேவை   இல்லாத ரிஸ்க்  எடுக்க வேண்டாம்.” என்றார் கஜா.

“அதில்  தான்  த்ரில்லே  இருக்கு!… இத்தனை  வருடமாய்  செய்து வருகிறேன். எவனும் என்னைக் கண்டு பிடித்தது இல்லை. இனிமேலும் கண்டு  பிடிக்கப்  போவதில்லை.
நீ தேவைப் படும் போது செய்யும், பண உதவியோடு நிறுத்திக்கோ… நீ கொடுக்கும்  பணம்,  பத்து, நூறு மடங்காக   திரும்பி வந்து விடும். அதைத் தாண்டி,   அட்வைஸ்   நான்   கேட்கவில்லை.

சூர்யாவைப் போட்டுத் தள்ளும் பிளான் செய்து விட்டுச் சொல்றேன். ஆட்களை அனுப்பி வை…. சோதா  பசங்க வேண்டாம்… புரிந்ததா?” என்றான்  சுமன் .

“எங்கே  இருக்கே ?”  என்றார் கஜா .

“அது  உனக்கு  தேவை  இல்லாதது.  என்  ஆள்  வருவான்.  பணம்  கொடுத்து  அனுப்பு.”  என்றான் சுமன் .

“ஏற்கனவே கொடுத்தப் பணத்திற்கு, இந்த மாதம் வட்டி வரவில்லை சுமன். என்னிடம் பணம் கொடுத்து வைத்து இருப்பவர்களுக்கு, என்ன பதில் சொல்வேன்?”  என்றார் கஜா .

“உன்  புத்தியைக்  காட்டாதே  கஜா.  பெண்களை  விற்று  இருந்தால், இந்நேரம்  பணம்  வந்து இருக்கும். அதான், இந்த முறை முடியாமல் போச்சே!

எத்தனையோ  தடவை,  வாங்கிய பணத்திற்கு, பல மடங்குத் திருப்பிக் கொடுத்து  இருக்கேன்.  அதற்கு எல்லாம் கணக்கு கேட்கவா?
வாங்கி உள்ளே  விட்டுக்க   முடியுது  இல்லை!
என்னைப்  பகைச்சுக்காதே கஜா. நான் ரொம்ப மோசமானவன். தொழிற் பார்ட்னர் என்றால்,  வரவில் மட்டும் அல்ல, இது போன்ற லாஸ் கூடச் சமமாய் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

என்னைச் சீண்டி பார்க்காதே! கொல்லவும்  தயங்க  மாட்டேன்.”  என்றான் சுமன் .

முகம்  வெளுத்துப்  போனவராய்,  அழைப்பைத்  துண்டித்தார்  கஜா .

அன்று மாலை ஹோட்டல், ‘ப்ளூ டைமென்ட்’ எக்சிகியூட்டிவ்  அறையில் சூர்யாவின்,  வரவுக்காகக்  காத்து  இருந்தார்  சங்கரன்.

புதிய   வேலை  மாற்றம்,  கிடைத்து  இருந்த    பதவி உயர்வு, அவருக்குத் தனிச்  சோபையை  கொடுத்து இருந்தது.

தவிர சூர்யாவின் ஆட்கள் அவருக்குக் கொடுத்த மரியாதையைக் கண்டு நெக்குருகிப் போனார்.
பாவம்,   அது அவர் மகளுக்கான மரியாதை, ‘மகளைக் கவிழ்க்க மாமனாருக்கு வீசப்படும் வலை’ என்று யார் அவருக்குச் சொல்வது!

‘நெல்லுக்கு,  பாயும்  தண்ணீர்,   கொஞ்சம்  புல்லுக்கும்’  பாய்கிறது.
அது தெரியாத அவர், ஒருவிதக் கர்வமான மனநிலையில் தான் காத்து இருந்தார் .

இருக்காதா  பின்னே!
தன் மகனின் பண்பு, தங்களின் குடும்பத்தைப் பார்த்து ஒரு ராஜ வம்ச சம்பந்தம்  வருகிறது  என்பதே  பெருமை  தானே!

அவரை  வெகுநேரம்  காக்க வைக்காமல், வந்து சேர்ந்தான் சூர்யா.

அதுவரை அவனைப் போட்டோவிலும், டிவிப் பேட்டிகளிலும் மட்டுமே பார்த்துப் பரவசப்பட்டுக் கொண்டு இருந்த சங்கரன், சூர்யாவை நேரில் கண்டதும், ‘கடவுளைக்  கண்டப்  பக்தன்  கணக்காய் பாவனைக் காட்ட’ சூர்யாவே,  ஒரு  கணம்  ஜெர்க்  ஆகித்  தான்  போனான்.

‘இந்தப்  பார்வை,  இவர்  மக  நம்மை  பார்க்க  வைக்க,  நானும்  தலையால் தண்ணீக்  குடிக்கிறேன்…  நாம  தான், அவளை  அப்படி பார்க்க வேண்டியதாக   இருக்கிறது.  என்  நேரம், இவர்  எல்லாம்  இப்படி  லுக் விட்டு, அதையும்  நாம  பார்க்கணும்  என்று தலையில் இருக்கு போலிருக்கு. 
சூர்யா!…  உனக்கு  இதெல்லாம்  தேவையாடா!..’.    

வெள்ளை   நிற  டக்சிடோவில்,  ஆண்  அழகனாய்  வந்து  இறங்கியவனை,  அந்த  ஹோட்டலில் இருந்த அனைத்து பெண்களின் கண்களும் மொய்த்தன  என்றால்   மிகையல்ல.

வயது  வித்தியாசம் பாராமல், ஒரு சிலரால் தான் அனைவரின் பார்வையையும்   தங்கள்  மேல்  திருப்ப  முடியும். 
அப்படியொரு, ‘ஆகர்சனம்’ அவர்களிடம்  இருக்கும். அந்த வகையைச் சார்ந்தவர்கள் சூர்யாவும்,  விஜய்யும் . 

“ஹலோ சார்!…”  என்று சூர்யா, கை  நீட்டப், ‘ பாட்ஷா  படத்தில்  ரஜினியின்  கையைப்  பயபக்தியுடன் பிடிப்பார்களே’ அந்த மாதிரி, ஒரு ரியாக்ஷன்  அவர்  முகத்தில்  நிலவியது .

“ஹலோ சார்!… ஹலோ!… ஹலோ!…” என்றார் சங்கரன், வாயில் தந்தி அடித்து .

“ஹலோ சார் எப்படி இருக்கீங்க? உங்களுக்கு  ஆபீஸ்,  இங்கேத்  தங்கி இருக்கும் ஹோட்டல் அறை, அலாட் செய்து  இருக்கும் வீடு,  எல்லாம்  வசதியாக  இருக்கா!
ஏதாவது குறை  என்றால் சொல்லுங்க. உடனே நிவர்த்தி செய்து விடலாம்.” என்றான்  சூர்யா.

“ஐயோ சார்!… இதுவே  ரொம்ப அதிகம் சார். தவிர,  உங்க  ஏற்பாட்டில் குறை,   ஏதாவது  இருக்குமா  என்ன?”  என்றார்  சங்கரன் .

“ப்ளீஸ் அங்கிள்!…   உங்களை  விட,  வயதில் சின்னவன். உங்க மகன் மாதிரி… என்னைப் போய்ச் சார் என்று எல்லாம் கூப்பிட வேண்டாம். பெயர் சொல்லியே  கூப்பிடுங்க.”  என்றான் சூர்யா .

“ஐயோ!… சார்,  நீங்க  எவ்வளவுப்  பெரிய  பிக்  ஷாட்… உங்களைப்  போய்…” என்று  திணறினார்  சங்கரன் .

“சிவகாமி  பாட்டி,   உங்கக்  கிட்டேப் பேசி இருப்பாங்க. உறவு ஆகப் போறோம்.  இன்னும்  என்ன போர்மாலிட்டீஸ் அங்கிள்!…
ப்ளீஸ்,  ஜஸ்ட் கால் மீ  சூர்யா!… ப்ளீஸ்,  டேக்  யுவர்  சீட்.”  என்றவன்  அவர்கள் அமர்ந்ததும்
, “வாட் டூ யு லைக் டு ஹவ் அங்கிள்?… ஹாட் ஆர் கோல்டு?” என்றான்.

“சூப்  இஸ் குட்.”  என்றார் சங்கரன் .
சூர்யாச்  சைகைக்  காட்ட, அவர்களுக்குகாவே காத்து நின்ற அந்த ஹோட்டலின்   தலைமை செஃப்,  சூப்  செய்து  கொண்டு  வரச்  சென்றான் .

“தம்பி!…  உங்களை   அப்படி  கூப்பிடலாம்  தானே!…”  என்றார் சங்கரன் .

“ஸூர்  அங்கிள்…  ஆஸ்  யு  விஷ்.”  என்றான்  சூர்யா.

“தம்பி!…  உங்க  ஸ்டேட்டஸ்க்குப் பெரிய இடத்தில, இருந்து எல்லாம் சம்பந்தம்  வந்து  இருக்கும்.  நாங்க,  அப்பர்  மிடில்  கிளாஸ்  அவ்வளவுத் தான்.  உங்க  வசதிக்கு,   உங்கத்  தங்கையை  இளவரசி  மாதிரி  வளர்த்து இருப்பீங்க. அவங்க  இளரவரசியே  தானே!…. 

அந்த  அளவு  வசதி  எல்லாம்   எங்களால்  கொடுக்க  முடியாது.
இல்லை  நான்  பேசிடுறேன். நீங்க,  ‘எல்லா  வசதி  செய்து  தருவீங்க   என்று எதிர்பார்ப்பது,  இல்லை, செய்து கொடுங்க என்று கேட்பது ரெண்டுமே’  சரி  வராது.

நீங்க  எதற்கும்  ஒன்றுக்கு  பலமுறை  யோசிச்சுக்கோங்கோ. அதனால்   தான்  இன்னும்,  என் வீட்டினரிடம் கூட இதைப் பற்றி, எதையும் சொல்லமால்  இருக்கிறேன்.

திருமணத்திற்குப்  பிறகு,  ‘வீட்டோடு மாப்பிளை, தனிக் குடித்தனம்’ இது எல்லாம்  எங்களுக்குப்  பழக்கம் இல்லை.

தவிர, எனக்கு ஒரு மகளும் இருக்கா. அவளுக்குத் திருமணம், அண்ணனாய் செய்து வைத்து, என் காலத்திற்குப்  பிறகுத்  தட்டாமல்  அவளுக்குச்  சீர் செய்யும் கடமையும் ரகுவிற்கு  இருக்கு.

பெரியவங்கச்   சொல்வாங்க,  ‘பெற்றோருக்குப்  போடும்  சாப்பாட்டுக்கும், கூடப்  பிறந்தவளுக்கு,  செய்யும்  சீருக்கும்  ஒருத்தன்  கணக்கு  பார்க்கக் கூடாது…  அப்படி   பார்த்தால்,  அவன்  ஏழு  தலைமுறை,  பாவத்தைத்’   தான்  சுமக்கும்   என்று.

இதில் எல்லாவற்றிலும், ‘தோள் கொடுக்கும் ஒரு துணைத் தான்’ எங்கள் குடும்பத்திற்கு  வேண்டும். என் மகளின் கடைசி மூச்சு இருக்கும் வரை, நானே இல்லாமல் போனாலும், அவளைத் தாங்கும் கடமை, கூடப் பிறந்தவனாய்  ரகுவிற்கு  உண்டு. 

இதற்கு எல்லாம் உங்கத் தங்கைச் சரி வருவார்களா?… யோசித்து சொல்லுங்க. பிறகு மன பொருத்தம் இல்லா விட்டால்,   வாழ்க்கை   நரகமாகக்   கூடாது  இல்லையா?” என்றார் சங்கரன்.

அவரைத்  தான்,  ‘குறைவாக எடை போட்டு விட்டோம்’ என்று புரிந்து போனது சூர்யாவிற்கு.

எந்த ஒரு மனிதனின் குணத்தையும், அந்த அந்தச் சூழ்நிலையே  வெளிக்  கொண்டு வருகிறது.
ங்கள் தங்கைக்கும் குறை இருக்க கூடாது, எங்களுக்கும்  உங்கள்  தங்கையால் மனவருத்தம்  வரக்  கூடாது’  என்று மிகத்  தெளிவாகக்  கோடிட்டுக் காட்டி விட்ட, சங்கரனின் மேல் அவனுக்கு மதிப்பு  வரவே  செய்தது.

“அங்கிள்!… சிவகாமி  பாட்டி, எங்க வீட்டின் பெரியவங்க. அவங்க உங்களைப் பற்றியும், எங்களைப் பற்றியும் தெரியாமல், சம்பந்தம் பேசி இருக்க மாட்டார்.

தவிர, எங்களை வளர்த்தது பாட்டித் தான். ரெண்டு குடும்பமும் ரொம்ப க்ளோஸ்.  அவங்க முடிவுச் செய்யும் எதுவும், எங்க விஷயத்தில் என்றுமே தவறாய் போனது  இல்லை.

‘ரகுவிற்கு சந்திரா சரியான இணை’ என்று அவர் சொல்லி இருக்கிறார் என்றால், ‘உங்களின் எதிர்பார்ப்பு தெரியாமல்’ சொல்லி இருக்க மாட்டார்.

நீங்க எதிர்பார்த்த படியே தான், சந்திரா நடந்துப்பா. உங்க மருமகளாய் இல்லை… மகளாய்!…” என்றான் சூர்யா .

“ரொம்ப  சந்தோசம்  தம்பி!… சிவகாமி மேடம் முடிவுச் செய்தால், அது சரியாகத் தான் இருக்கும்.
இருந்தாலும், நானும் சொல்லி விடுவது என் கடமை இல்லையா!… அதான்,  நீங்கத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்… 
உங்க  வீட்டுப்  பெரியவங்க  வரலையா?” என்றார் சங்கரன் .

வந்த  சூப்,  ஒன்றை  அவருக்கு நகர்த்தி வைத்தவன், “சாரி அங்கிள்!… லாஸ்ட் மந்த் டாடி,  மாம்  வேர்ல்ட்  டூர்  போய்   இருந்தாங்க.  அமெரிக்காவில்,  திடீர்  என்று   டாடிக்கு,   ‘மைல்டு   ஹார்ட்  அட்டாக்’  வந்துடுச்சு.
இதய வால்வு ப்ளாகேஜ் இருக்கு. ஒரு மாதம்  முன்னாடி தான் ஆபரேட் செய்தாங்க.  அங்கேயே, ஹி இஸ் இன் பெட் ரெஸ்ட். கொஞ்சம் காம்ப்ளிகேஷன்ஸ்  இருக்கு.

சோ, பெட் விட்டுக் கூட அவர் நகர, மாம் அங்கு,  அல்லோவ்  செய்யறது  இல்லை.
அவங்கக்  கிட்டே விஷயம் பாட்டி சொல்லிட்டாங்க. தே ஆர் ஹாப்பி.

வீடியோ காலில் உங்கக் கிட்டே பேசணும் என்று வெயிட் செய்துட்டு இருக்காங்க…  பேசறீங்களா ?…”  என்றான்  சூர்யா .

“ஐயோ  தம்பி!… என்ன நீங்க, என் கிட்டே பெர்மிஸ்ஸின் எல்லாம் கேட்டுட்டு!….”  என்றவர் சூர்யா,  தன் அன்னை நிரஞ்சனாதேவி, தந்தை ஆதித்ய  பிரதாப்   வீடியோ  காலில்  அழைத்தான் .

இருவரிடமும் பேசிய சங்கரனுக்கு கொஞ்சம், நஞ்சம் இருந்த தயக்கமும் அகன்று  விட,  மனம்  நிறைந்து  இருந்தார்.

பணக்காரர்கள், ராஜவம்சம் என்ற பந்தா எதுவும் இல்லாமல்  பழகிய சூர்யாவின்  பெற்றோர்,  அவருக்கு  உடனே  நண்பர்கள்  ஆகி  விட்டார்கள் .

“அண்ணா!…  இவங்களுக்கு  உடம்பு  கொஞ்சம்  முடியலை.  இப்போதைக்கு,  இவங்க, அங்கே வர முடியாது. நீங்க எல்லாம் எடுத்துச் செய்யுங்க.
நல்ல  நாள்  பார்த்துச்  சொல்லுங்க.

அப்போ நான் மட்டும் வந்து நிச்சயம் முடிச்சுடறேன். இவர் உடல் கொஞ்சம் தேறியப் பிறகு, திருமணம் பற்றி யோசிக்கலாம். உங்களுக்கு  எதுவும்  மனவருத்தம்  இல்லைத் தானே அண்ணா?” என்ற நிரஞ்சனாதேவி வார்த்தையில், அந்த அண்ணன் உருகி போனார்.

“மாப்பிள்ளை  உடல்  தேறட்டும்  தங்கச்சி.  ரகுவிற்கு தங்கை ஒருத்தி இருக்கா. தங்கையை  வீட்டில் வச்சிட்டு, அண்ணனுக்குத் திருமணம் செய்தால்,  ஊர்   உலகத்தில்   ஏதாவது  சொல்வாங்கமா.

மாப்பிள்ளை உடல் தேறும் முன், என் மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். அதே மேடையில் நிச்சயம் வைத்துக் கொள்வோம். பிறகு உங்களுக்குத்  தோதுபடும்  நாளில், திருமணம் நடத்திக் கொள்ளலாம்.”  என்றார்  சங்கரன் .

இரு  வீட்டாருக்கும்  மன  நிறைவாகத்,  திருமண  பேச்சு நிறைவேற,
“ரொம்ப சந்தோசம் அங்கிள். இந்தச் சந்தோசத்தைக் கொண்டாட, நைட் டின்னெர் என் ட்ரீட்… ரெஸ்டாரண்ட் போகலாமா?… வாங்க அங்கிள்.” என்றவன்,  அவரோடு, அந்த  ஹோட்டல்லின்  ரெஸ்டாரண்டுக்கு  அழைத்துச்  சென்றான்.

அவனுக்கு  ஒரு  மொபைல்  அழைப்பு  வர,  “எக்சிகியூஸ்  மீ  அங்கிள்.” என்று  கூறி,  அழைப்பை  பேசச்  சென்றான்.

அவன்  சென்ற சில நிமிடங்களில், சங்கரனை நோக்கி வந்தனர் இருவர். அவர்களைக் கண்ட சங்கரன்  மிகவும்  சந்தோசத்துடன்,  அவர்களை  வரவேற்றார்.

சிறு வயதில் அவர் கிராமத்தில், சங்கரன் வீட்டின் அருகே வசித்தவர் டேனியல்.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

80

"ஹலோ அண்ணா!... பார்த்துப் பல வருஷம் ஆச்சு. எப்போ அமெரிக்காவிலிருந்து  வந்தீங்க?....” என்றார்  வந்த  நபரைப்  பார்த்து .“ஹாய்  சங்கர்!... ஹொவ்  ஆர்  யு  மேன்!... லாங் டைம் நோ சீ. கடைசியா பார்க்கும்  போது,  காலேஜ்  படிச்சுட்டு  இருந்தே!...இப்போ என்ன…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்