arrow_back
என்ன தவம் செய்தேன்! 80
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 80 / 85

80

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

“ஹலோ அண்ணா!… பார்த்துப் பல வருஷம் ஆச்சு. எப்போ அமெரிக்காவிலிருந்து  வந்தீங்க?….” என்றார்  வந்த  நபரைப்  பார்த்து .

“ஹாய்  சங்கர்!… ஹொவ்  ஆர்  யு  மேன்!… லாங் டைம் நோ சீ. கடைசியா பார்க்கும்  போது,  காலேஜ்  படிச்சுட்டு  இருந்தே!…
இப்போ என்ன தலையில், இவ்வளவுப் பிளாட் வாங்கி வச்சு, தொப்பையும் தொந்தியுமா இருக்கே!…”  என்றார் அவர்  டேனியல் .

“வயசு ஆகுது இல்ல அண்ணா!… அதான்… எப்படி இருக்கீங்க அண்ணி?” என்றார்  சங்கரன்,  டேனியல்  மனைவி  ஜென்னியை  பார்த்து .

“நல்லா இருக்கேன் தம்பி!… நீங்க எப்படி இருக்கீங்க?. வீட்டில் எல்லோரும் நலமா?” என்றார் ஜென்னி.

“எல்லோரும்  நலம் அண்ணி. நீங்க ரெண்டு  பேரும் அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டதாகச்  சொன்னாங்களே!…
இங்கேயே  வந்துடீங்களா  என்ன?” என்றார் சங்கரன் .

“இல்லை, இல்லை… அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டோம். அந்த லைப் ஸ்டைல்  பழகிப்  போச்சு. மகனும்,  மருமகளும்  தான்  இங்கேயே  இருகாங்க.
வருஷத்திற்கு, ஒரு தடவை வந்து பார்ப்போம். இதோ வந்துட்டாங்க.”  என்றவர், தன் மகன் கிறிஸ்டோபர், மருமகள் லீலாவை அறிமுகம்   செய்து   வைத்தனர் .

அறிமுகம் முடிந்ததும், உணவு ஆர்டர் செய்து விட்டு, அவர்கள் பேசிக் கொண்டு இருந்த சமயம்,
“ஆன்ட்டி!… லெட்ஸ் கோ நொவ்.” என்றார் லீலா சட்டென்று .

“என்ன லீலா!.. டின்னெர் ஆர்டர் செய்தாகி விட்டது. என்ன ஏதாவது, ‘டெலிவெரி கேஸ் என்று ஹாஸ்பிடலிலிருந்து போன்’ வந்ததா என்ன?
எதற்கு  இந்த,   ஹர்ரி  அண்ட்  பர்ரி?”  என்றார் ஜென்னி .

எதையும்  பேசாத  லீலா,  கண்  ஜாடை  காட்ட,  அவர்  குறிப்பிட்டத் திசையில் பார்த்த ஜென்னி, ரௌத்திரமானார்.

“லெட்ஸ் கோ… இந்தச் சாத்தான் இங்கே இருக்குன்னு தெரிஞ்சு இருந்தா வேறு ஏதாவது ரெஸ்டாரண்ட் சென்று இருக்கலாம். லெட்ஸ் மூவ்.” என்றவரின்  பேச்சுக்கு,  மற்ற  மூவரும்  கட்டுபட்டுக்  கிளம்பினார்கள் .

“என்ன அண்ணா!… என்ன ஆச்சு?”  என்று  ஒன்றும் புரியாதவராய், பதறினார்  சங்கரன்.

அரை  மணி  நேரம்  கழித்து, மதுரா சுபாவோடுத் தங்கி இருந்த வீட்டின் காலிங்  பெல்  விடாமல்  அடிக்க ஆரம்பித்தது.

சென்னையில்  நல்ல மழை பெய்து கொண்டு இருக்க, இரவுக் குளிருக்கு அனைவரும்  இழுத்து போர்த்திக்  தூங்கிக்  கொண்டு இருந்தவர்களின்,   தூக்கத்தைக்  கலைத்தது  அந்த  அழைப்புச் சத்தம்.

என்னவோ, ஏதோ என்று பதறி, அனைவரும் ஹாலில் குழும, கையில் கட்டையோடு,  எச்சரிக்கையாகக்  கதவைத்  திறந்தான்  பாலாஜி .

கதவைத்  திறந்தவன்,  அதிர்ந்து  போனவனாய்,  ரெண்டு  எட்டுப் பின் வைத்து  நகர்ந்தான்.
வெளியே  மழையில்  நனைந்து,  சொட்டச்  சொட்ட  நின்று இருந்த சங்கரனைக்  கண்டப் பிறகு.

கண்கள்  சிவந்து  கிடக்க,  இலக்கற்று  வெறித்துக்  கொண்டு நின்றார் அவர்.

“அங்கிள்!… என்ன ஆச்சு!… ஆன்ட்டி, கொஞ்சம் இங்கே வந்து பாருங்க. அங்கிள்,  ஒரு  மாதிரி  நிற்கிறார்.”  என்றான்  பாலாஜி, பவானியை நோக்கி .

முன் வந்த அனைவரும், சங்கரன் இருக்கும் நிலையைக் கண்டு ஒரு நொடி ஆடித்  தான்  போனார்கள் .

“என்னங்க!… என்ன ஆச்சு?… ஏங்க!… இங்கே பாருங்க…” என்று அவர் கன்னத்தைத்  தட்டி,  அவரின்  கவனத்தைத்  தன்  புறம்  திருப்பினார்  பவானி.

“பவானி!…”  என்றார்  கிணற்றுக்குள்,  இருந்து  பேசுபவர் போல் .

“பவானித் தாங்க… என்ன ஆச்சு உங்களுக்கு?… உள்ளே வாங்க. மழையில் ஏன் இப்படி, தொப்பலாய் நனைந்து வந்து இருக்கீங்க!… அதுவும் ராத்திரி ரெண்டு மணிக்கு?…

உடம்புக்கு  ஏதாவது  வந்துட போகுது. முதலில் வந்து டிரஸ்  மாத்துங்க.
ரகு!… ஹீட்டர் போட்டு விடுடா… சூடாக் குளிச்சுட்டு வரட்டும். அப்படியே உன் ஷார்ட்ஸ், டீ ஷர்ட்  எடுத்து கொடு.

மதுரா!… போய் ஹார்லிக்ஸ் கலக்கு.” என்றவர் உறைந்து போயிருந்த கணவனைப் பாத்ரூமிற்குள் அனுப்பினார்.

மேலும்  அரை  மணி  நேரம்  கடந்த பிறகும் கூட,  கணவர் வெளியே வராமல்  போகப்  பவானிக்கு   திக்கென்றது.

பாவம், அவருக்கு என்னத் தெரிய போகிறது, சங்கரன் உள்ளே ஒரு முழு சோப்பு,  கரையும் வரை இருபது முறைக்கும் மேல், தன்னைத் தேய்த்து குளித்து,  சுத்தம்  செய்து  கொண்டிருக்கிறார்  என்பது.

“ஏங்க!…  உள்ளே  போய்  அரை  மணி  நேரம்  ஆகுது. இந்த நடு ராத்திரியில் இவ்வளவு நேரம் குளிக்கக் கூடாதுங்க. உடம்புக்கு ஒதுக்காதுங்க. வெளியே வாங்க…”  என்று  கதவைத்  தட்ட,  ஒரு  வழியாகக் கதவைத்   திறந்து   கொண்டு  வெளியே  வந்தார்  சங்கரன்.

மனைவியைக்  கண்டதும், அவர் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பிக்க, பவானி  அவரைக்  கைப்பிடித்து  அழைத்துச்  சென்று, ஹால் சோபாவில் அமர  வைத்து,  அவரிடம்  மதுரா  கொண்டு  வந்த  ஹார்லிக்ஸ்  கொடுத்தார்.

அதை வாங்கிய, சங்கரனின் கை ஏகத்திற்கும் நடுங்க, பாவானியே அவருக்குக்  குழந்தைக்கு  ஊட்டுவது  போல்  புகட்டி  விட்டார். 

அவர்   கையைப்  பிடித்து  நிறுத்திய  சங்கரன், சற்று நேரம் அவரையே உற்று  பார்த்துக் கண் கலங்க ஆரம்பித்தவர், பவானியின் மேல் சாய்ந்து கதறி  அழ  ஆரம்பித்தார் .

“மன்னிச்சுடு பவானி!… மன்னிச்சுடு. நான் பாவி!…. மகா பாவி!… ஐயோ! உன்னை நம்பாமல் போனேனே!….
நான் பாவி!…. மன்னிச்சுடு… என் ஆணவத்தால் கெட்டேன்.” என்று உச்சஸ்தாயில் அலறியவரைக் கண்டு, மற்றவர்கள்   எதுவும்   புரியாமல்   குழம்பி  நின்றனர்.

“என்னங்க!… என்ன ஆச்சு?.. எதற்கு மன்னிப்பு அது, இதுன்னு பெரிய வார்த்தை  எல்லாம்  பேசுறீங்க?… என்ன நடந்தது?” என்றார் பவானி பதற்றத்துடன்.

இத்தனை  வருடத்தில்,  சங்கரன்  இப்படி  உடைந்து  அழுது, அவர் பார்த்ததே  இல்லை… அதுவும்  இப்படி  கதறி  அழுது.   

“அய்யோ!… நான் பாவி!… எனக்கு மன்னிப்பே கிடையாது. என்னை மன்னிச்சுடு பவானி!.” என்று கிளிப் பிள்ளையாகச்,  சொன்னதையே  சொல்லிப்  புலம்பி,  அழுதார்  அவர்.

அவரைச் சமாதானம் செய்ய முயன்ற பவானியின் எல்லா முயற்சிகளும் தோற்றுப் போக,  சிறுப்  பிள்ளையாய்  கதறி அழும் கணவனை, அணைத்து தட்டிக்   கொடுத்தவாறே   நின்றார் .
பதினைந்து  நிமிடங்களுக்குப்  பின்,  அவர்  புலம்பல்  நிற்க,  மதுரா கொண்டு வந்து  கொடுத்த,  இன்னொரு  கப்  ஹார்லிக்ஸ் கணவனுக்குப் புகட்டி  விட்டார்  பவானி.  

சூடானப் பால் உள்ளே இறங்கியதும், சற்று தெம்பு பெற்றவர், மீண்டும் பவானியை  பார்த்துக்  கண் கலங்கி, “ என்னை மன்னிச்சுடு பவானி.” என்றார்.

“என்னங்க  ஆச்சு!… ஏன்,  இப்படி  எல்லாம்  பேசுறீங்க?…” என்றார் பவானி.

“ஒரு  பாரில்,  எனக்கு  ஞானோதயம்  ஏற்பட்டது  பவானி அதான். ” என்றவர்,  “டேனியல்  அண்ணா  பற்றிச்  சொல்லி இருக்கேன் தானே!… என் கிராமத்து வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அண்ணா.

அவரையும், அவர் குடும்பத்தையும்  இன்றைக்கு ஹோட்டலில் பார்த்தேன். என்னோடு சாப்பிட  அமர்ந்து  ஆர்டர்  கொடுத்தவங்க,  சாப்பிடாமலே  கிளம்பிட்டாங்க.” என்றார்.

“ஏன்,  என்ன ஆச்சு?” என்றார் பவானி .

“அது,  பார்  அட்டாச்சுடு  ரெஸ்டாரண்ட். அங்கு ஏதோ, ஒரு பர்த்டே பார்ட்டி நடந்து கொண்டு இருந்தது.

அந்தப்  ப… பார்ட்டியில் ஒரு பெண்ணைப்   பார்த்து,  இவர்கள்  கிளம்பிட்டாங்க.
அரைக் குறை,  ஆடையுடன்,  பார்  டேபிள்  மேல்  ஏறி நின்று ஆடிக் கொண்டு  இருந்தது. 

ட்ரிங்க்ஸ்,  சிகரெட்,  போதை  மருந்து என்று எல்லாமே  இருந்தது.  ‘ஒழுக்கம் என்பது என்ன’ என்று கேட்பது போல இருந்தது, அந்தக் கூட்டத்தின் நடவடிக்கை.”  என்றவரின்  கண் முன் நடந்தது,   மீண்டும்  ஓட  ஆரம்பித்தது.

“சாரி சங்கர்!… அதோ!… அந்தப் பார்ட்டியில், பார் டேபிள் மீது ஆடும் பெண்ணுக்கும், எங்களுக்கும் ஆகாது. அதான்… நாங்க கிளம்பறோம்.” என்றார்   டேனியல்,   ஒரு   பெண்ணைக்  கைக்காட்டி .

அவர் கைக்காட்டிய இடத்தில், அரைகுறை ஆடையுடன், கையில் மது கோப்பையுடன்  ஆடிக்  கொண்டு  இருந்தது,  யாரை அவர் மூத்த மகள் என்று  தலைமேல்  தூக்கி  வைத்துக் கொண்டாடினாரோ, அதே சோனா தான்.

சங்கரன்   இங்குப்  பவானியிடம்  விளக்கிக்  கொண்டு  இருக்க,  மொபைலில்   சூர்யாவை,    அழைத்த  மதுரா,  அவனைக்  குதறி  எடுத்தாள்.

“எருமை!… எருமை!… நான்  என்ன  சொன்னேன்!… நீ என்ன செய்து வைத்தே!… மூளையை  சேட்டு  கடையில்,  அடகு  வைத்து இருக்கியா என்ன?
எப்பவுமே,  என் டாடி அழுதது இல்லை. இன்றைக்கு சின்னப் பிள்ளை போல் அழுதுட்டு இருக்கார். என்ன பிரபுக் குட்டி செய்தே!…” என்றாள் மதுரா .

“சத்தியமா  சொல்றேன்,  நடந்ததற்கும்,   எனக்கும் எதுவும் சம்பந்தம் இல்லை. நீ சொன்னது போல் தான், கடற்கரையில் எல்லாம் ரெடியா இருந்தது.

‘சோனாவும்  அவக்  கூட்டத்தோடு, அங்கு வருவான்னு தான்’ உத்தம்  அங்கு  ரெடியா  நின்றான்.
உன்  டாடி  தலைவிதி!…  நான்,  இந்தப்  பக்கம்,  போன்  பேசச்  சென்ற சமயம்,  யாரோ  டேனியல்,   உன்  டாடி,   ‘அண்ணா!’  என்று அழைத்து உறவுக்  கொண்டாடிட்டு   பேசிட்டு இருந்தார்.

அது மட்டுமில்லாமல் கடற்கரைக்குப் போக வேண்டிய சோனா, என் ஹோட்டலில்,  யாருக்கோ பர்த்டே பார்ட்டின்னு வந்து செமக் கூத்து அடிச்சுட்டு  இருந்தா.

அதை,  அந்த  டேனியல்  குடும்பம்  பார்த்துட்டு,   உங்க   டாடிக்கும்   அவளைப்  பற்றிப்,  புட்டுப்  புட்டு  வைத்துட்டாங்க.

அவங்க   அண்ணன்  மகனை,  ‘எப்படி  காதலிப்பதாக  ஏமாற்றி,  அவனுக்குப்  போதை  மருந்து  பழக்கப்படுத்தி,    கடைசியில்,  அவன்  தற்கொலை  செய்து   கொண்டதையும்,  இவர்கள்  சோனாவிற்கு, அங்கே, அமெரிக்காவில், ஆறு   மாதம்  சிறைத்  தண்டனை  வாங்கிக்  கொடுத்த  ஆதாரத்தையும்,  சில பல போட்டோ, இவள்  கூத்து அடிக்கும் வீடியோ,  எத்தனை  முறை   கருக்கலைப்பு   செய்தாள் ’   என்று  ஹார்பிக்  போட்டுக்  கழுவாதக்  குறை.

இதற்கே,  உன்  டாடி நெஞ்சை பிடிச்சுட்டு, பேய் அறைந்தது போல் அமர்ந்து  இருந்தார்.  ஆனால்,  அடுத்து நடந்தது தான் ஹைலைட்.” என்றான்  சூர்யா.

“என்னடா நடந்தது!… திரில்லர் கதையைப் பாதியில் விடுவது போல், நிறுத்தாதே!…  சொல்லித்  தொலை.”  என்றாள் மதுரா.

“அப்போ,  மாமனைக்  கட்டிக்கறேன்  என்று  சொல்லு…”  என்றான்  சூர்யா.

“எனக்கு  மாமனே  இல்லை…  இருக்கும்  ஒரே மாமன் ருத்ரா. அவனையும் ராஜி,  கரெக்ட் செய்துட்டா. நோ  லக்.”  என்றாள் மதுரா .

“நான்  இந்த  மாமன்,  உன்  சொந்த  மாமன்,  இந்த  அத்தானை சொன்னேன்  டீ  சிட்டு.”  என்றான்  சூர்யா .

“அத்தான்!…   சட்டைப் பொத்தான் என்று விளையாடாதே பிரபு!… என்ன ஆச்சு,  என்  டாடிக்கு?” என்றாள் மதுரா.

“ஹ்ம்ம்!…. உன் அக்காக்காரி இருக்காளே, அரை குறை ஆடையுடன் ஆடியவாறே,  உன்  அப்பா மடியில் வந்து விழுந்தா… அதிலிருந்து தெளியவே,   உங்க  அப்பாவுக்கு,  எவ்வளவு நாள்  ஆகுமோ  தெரியலை.

விழுந்ததும்   இல்லாம,  அவரைக்  கொஞ்சி  வேறு  வைத்தாள்.
‘டார்லிங்!… யு  லுக்  சோ  செக்ஸி. 

என்  கூட  டேட்  வரியா?… 
ஐ வில் ஷோ  யு  ஹெவன்,  இன்  மை  ஆர்ம்ஸ்?…
ஐ  வாண்ட்  யு  நௌ… 
ஹாவ்  மீ டார்லிங்!…’  என்று என்னென்னனவோ, ஹஸ்கி வாய்ஸில், அவரிடம் சென்சார்   செய்யும்  அளவுக்குக்   கொஞ்சி  வைத்தாள்.

நான் சொன்னது கொஞ்சம் தான். மீதத்தை, நீயே கற்பனை செஞ்சு பார்த்துக்கோ.  அவ பேசியதையெல்லாம், வாய் வார்த்தையாக, யார்கிட்டயும் சொல்லவே முடியாது.

கையையும், காலையும் வேற சும்மா வச்சிட்டு இருக்கமா, ஏறக்குறைய, ‘அடல்ஸ்   ஒன்லி படம்’ உங்க அப்பாவுக்கு, ஒட்டிக் காண்பிக்காதக் குறை.” என்று சூர்யா, சொல்லி முடிக்க, ‘சோனா எந்த அளவிற்குத் தரம் இறங்கி இருப்பாள்’ என்பதை மதுராவால் புரிந்து கொள்ள முடிந்தது.

“சரி,  நாம பிளான் போட்டது தான் நடக்கலை…  கடவுள்,  அவராகவே பிளான் போட்டு, உன் டாடிக்கு, ‘வேப்பிலை மரத்தையே, பிடுங்கி அடிச்சுட்டு’ இருக்காரு.  எதுக்கு  இன்வோல்வ்  ஆகி,  தடுத்து  நிறுத்தணும்  என்று  நானும்  எதையும்  செய்யலை.

மனுஷன்  வெலவெலத்துப்  போனார்.  அங்கேயே  நாலு  முறை,  வாமிட் வேறு  எடுத்துட்டார். 
‘பேய் அறைந்தது போல’ என்று ஒரு வார்த்தைத் தமிழில் சொல்வார்கள் கேள்விப்பட்டு இருக்கியா!… அதை ரியலா உன் அப்பா முகத்தில் இன்னைக்கு தான் பார்த்தேன்.

உங்க அப்பா, இருந்த நிலையைப் பார்த்து, ‘எங்கே இவரை வேற ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு, நட்ட நடு ராத்திரியில் ஓடணுமோ!…’ என்று நான் தான் பயந்து போனேன்.
இப்போ உன் டாடி, ‘ஆல் கிளீயர்’.

நீயோ,  உங்க அம்மாவோ இல்லனா சேது அங்கிள் சொல்லியிருந்தாக் கூட இந்த அளவுக்கு, இம்பாக்ட் கிடைத்தே இருக்காது. சோனா நடத்திய, லைவ் ஷோவ’ பாத்துட்டு, மனுஷன் துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று ஓடாதது ஒன்றுதான்  குறை.
 
பிடித்து இருந்த, ‘சோனா  என்னும்  பேய்’  உங்க   டாடியை  விட்டுடுச்சு.
இனி   மேலாவது,  உங்க வீட்டில், ‘மதுரை ஆட்சி மலரும்’ என்று நினைக்கிறன்.”  என்றான் சூர்யா.

“தேங்க்ஸ் டா  பிரபுக்  குட்டி!… ஐ  ம் சோ  ஹாப்பி…” என்றவள் அழைப்பைத் துண்டித்து  விட்டு,  ஹாலுக்கு  வர அதற்குள், சங்கரன் அனைத்தையும் கூறி முடித்து   மீண்டும்,  அடுத்தக்  கட்ட  அழுகையைத்  தொடங்கி  இருந்தார்.

அவரைச்  சமாதானம்  செய்து,  மீண்டும் ஒரு கிளாஸ் பால் கொடுத்துத் தூங்க  வைத்தனர்.
அதில்,  இந்த  முறை  ரெண்டுத்  தூக்க மாத்திரையைக், கலந்து இருந்தாள் மதுரா.

இல்லை என்றால் இரவு முழுவதும், இவர் செய்யும் அளப்பறையை யார் தாங்குவது?

மிகப் பெரிய அதிர்ச்சியில் இருக்கும் அவருக்கும், உறக்கம் என்பது   இப்போதைக்கு   தேவை .

அடுத்த ரெண்டு நாட்களுக்கு, மழை தமிழ்நாட்டை உலுக்கி எடுத்துக் கொண்டு  இருக்க,  இவர்கள்  வாழ்வில்  குறிப்பிடும்  படியாக  எந்த  நிகழ்வும்  ஏற்படவில்லை.

மழையை  ரசித்துக்  கொண்டு,  பவானி  செய்து தரும் சூடானப் பலகாரங்களை  உள்ளே  தள்ளிக்  கொண்டு    இருந்ததையும், சூடாக டீ, காபி அருந்துவதையும், விட்டுப் போன படங்களைப் பார்ப்பதுமாக, மதுரா அண்ட்  கோ  லூட்டி  அடித்துக்  கொண்டு  இருந்தது.

சங்கரன்  தன்  இயல்பு  நிலைக்குத்,  திரும்பி இருந்தார்.

மதுராவைப் பாதுகாக்க விஜய், சூர்யா, மற்றவர்களும் செய்து உள்ள ஏற்பாடுகளைப் பற்றியும், அதற்குக் காரணமான சோனா, சுமன் பற்றித் தகவல்கள்  அவரிடம்  பவானி  பக்குவமாகக்  கூறினார் .

ஒரு நாள் முழுவதும், மதுராவிடமும், பவானியிடமும் மன்னிப்புக் கேட்டே வாட்டி  எடுத்து  விட்டார்  சங்கரன்.

அவரும், ‘சிவகாமி, சூர்யாவிடம் ரகு பற்றிய திருமண விஷயம் தான் பேசியதாகவும், பவானி, ரகு, மதுராவுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே, மேற்கொண்டு அவர்களிடம் திருமணம் பற்றிப் பேசுவதாகவும்’ கூறி அவர்களுக்கு  இன்ப  அதிர்ச்சி கொடுத்தார்.

இனி  மேல்,  ‘இவர்களைக்  கேட்காமல்,  எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை’   என்று  சத்ய  ப்ரமாணமே  செய்து  விட்டார்.

ஏதோ கடவுள் புண்ணியத்தில், இத்தனை வருட தாம்பத்தியத்திற்கு பிறகு, பவானி முதல் முறையாய் அந்தத் திருமண பந்தத்தில், சம உரிமையைப் பெற்று,  நிம்மதியான  சுவாசத்தை  வெளியிட்டார்.

அவரைப்  பிடித்து  இருந்த,  ‘திருமணம் என்னும் கூண்டு தன் கதவைத் திறக்க,  அங்கே  அடைப்பட்டு,  தன் இயல்பையே தொலைத்து இருந்த அந்தப்  பெண்மை’  மீண்டும்  நிம்மதி  பெருமூச்சு விட்டது.

அதற்குக்  கொடுக்கப்பட  வேண்டிய  அங்கீகாரம்,  உரிமை, அதன் கெளரவம்  மீண்டும்  தரப் பட்டது.

நாடுகள்  மட்டும் இல்லை, ஒவ்வொரு இல்லத்தின், தாம்பத்தியத்தின் வெற்றியும்,  ‘ஒவ்வொரு  கணவனும்,  மனைவியும்  செய்யும்  தியாகங்களால்’ தான்   உயர்ந்து   நிற்கிறது.

‘குடும்பம்’ என்று  வரும் போது,  அங்கே, ‘தான்  என்ற ஆங்காரத்திற்கே இடம் இல்லை’ என்ற உண்மை, அத்தனை வருடம் கழித்து சங்கரன் உணர்ந்தார்.

இங்கே,  ‘விட்டுக் கொடுப்பவர் கெட்டதும் இல்லை.
விட்டுக் கொடுக்க  மனம்  இல்லாதவர்  வாழ்ந்ததும்  இல்லை.’ 

“மம்மி!… டாடி,  இப்படித்  திருந்தி  விட்டதால்  தான்,  மழை இப்படி கொட்டோ கொட்டுன்னு கொட்டி தீர்க்குதோ!…” என்று பவானியைச் சீண்டி அவரின்  பிரஷர்,  ஏற்றிக்  கொண்டு  இருந்தாள்  மதுரா.
ஏதோ, அவளால் முடிந்தது.
சாப்பிடும் சாப்பாடு, ஜீரணம் ஆக வேண்டும் இல்லையா!

இதற்கு  நடுவில்,  மதுராவைக்  கடுப்பு  ஏற்றும்,   சில  விஷயங்களும்  நடந்தன  என்றால்  மிகையல்ல…
வேறு யார்!
அவளின், ‘ரெண்டு பிரின்ஸ் சார்மிங்ஸ்/prince charmings’ தான் காரணம்.

சுபாவோடு,   அவள்   தங்கி  இருக்கும்  வீட்டின்  பெயர்,  ‘பிருந்தாவனம்.’

அதன்  அருகில்  இருந்த,  மளிகை சாமான் கடைக்குச் சென்றாள்.
அவளுக்குப் பிடித்த மழை. இளையராஜா மியூசிக் என்று கடையினுள் நுழைந்தாள்.

கடை  அண்ணாச்சி  இவளின்  நண்பர்.  எங்கே சென்றாலும், நட்பைப் பெற்று, அவர்களின் வீட்டில் ஒருத்தியாய், ஆகி விடுவது தான் இவளின் பழக்கம்  ஆயிற்றே!

வழக்கமாக  அண்ணாச்சியின்  வாயைக் கிளறி,  ஊர் கதை, உலகக் கதைக் கேட்டு  விடுவாள்.

அன்று  மதுரா,  மட்டும்  பேசிக்  கொண்டிருக்க, அண்ணாச்சி  பேந்தப்  பேந்த முழித்துக்  கொண்டு  இருந்தார்.

“அண்ணாச்சி!…  வாட்  ஆச்சி?…  வீட்டுல பூரிக் கட்டைப் பேசுச்சோ!… இம்புட்டு,  முழி  முழிக்கறீங்க!…”  என்றாள்  மதுரா .

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

81

மதுரா தான், தங்கியிருக்கும் வீட்டின் அருகே இருந்த மளிகைச் சாமான் கடைக்குச் சென்றாள்.அவளுக்குப் பிடித்த மழை. இளையராஜா மியூசிக் என்று கடையினுள் நுழைந்தாள்.கடை  அண்ணாச்சி  இவளின்  நண்பர்.  எங்கே சென்றாலும், நட்பைப் பெற்று, அவர்களின் வீட்டில் ஒருத்தியாய், ஆகி விடுவது தான்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்