arrow_back
என்ன தவம் செய்தேன்! 81
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 81 / 85

81

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

மதுரா தான், தங்கியிருக்கும் வீட்டின் அருகே இருந்த மளிகைச் சாமான் கடைக்குச் சென்றாள்.
அவளுக்குப் பிடித்த மழை. இளையராஜா மியூசிக் என்று கடையினுள் நுழைந்தாள்.

கடை  அண்ணாச்சி  இவளின்  நண்பர்.  எங்கே சென்றாலும், நட்பைப் பெற்று, அவர்களின் வீட்டில் ஒருத்தியாய், ஆகி விடுவது தான் இவளின் பழக்கம்  ஆயிற்றே!

வழக்கமாக  அண்ணாச்சியின்  வாயைக் கிளறி,  ஊர் கதை, உலகக் கதைக் கேட்டு  விடுவாள்.

அன்று  மதுரா,  மட்டும்  பேசிக்  கொண்டிருக்க, அண்ணாச்சி,  பேந்தப்  பேந்த முழித்துக்  கொண்டு  இருந்தார்.

“அண்ணாச்சி!…  வாட்  ஆச்சி?…  வீட்டுல பூரிக் கட்டைப் பேசுச்சோ!… இம்புட்டு,  முழி  முழிக்கறீங்க!…”  என்றாள்  மதுரா .

பதில்  சொல்லாத அவர், அவளின் பின்னால் பார்க்க, ‘நாம கேள்விக் கேட்டால்,  இவர் என்ன பின்னால் லுக் விட்டுட்டு இருக்கார்!…
சைட் அடிக்கறாரோ!…
மாட்டி  விட்டுடா போச்சு.
அண்ணாச்சி வீட்டில், ‘இன்னைக்கு குழம்புக்குப் பதில் இவரைப் போட்டு ஆன்ட்டி கொதிக்க வைக்கப் போறாங்க…’ என்று எண்ணியவாறே திரும்பினாள்.

அண்ணாச்சி அங்கே லுக் விட்டுக் கொண்டு இருந்தது, கடைக்கு வந்த ஆன்ட்டிகளை பார்த்து இல்லை. அவளுக்குப் பின்னால் நின்று கொண்டு இருந்த,  இரு  பாடிகார்ட்ஸை பார்த்து.

‘தான்  காண்பது  என்ன!…’  என்று  புரியாமல், தன் கண்களை ஒன்றுக்கு ரெண்டு  முறை  கசக்கி  விட்டு, மீண்டும் பார்த்தாலும், கண் முன்னே இருந்தது மறையாமல், ‘அது உண்மை தான் கனவெல்லாம் இல்லை’ சொன்னது.

அண்ணாச்சியின்  கண்கள் மட்டும் இல்லை, மதுராவின் கண்களும், சாசர் மாதிரி  விரிய,  வாய்  தானாய்  பிளந்து  கொண்டது.

அந்த   கார்ட்ஸ்  வேறு   யாரும்  அல்ல.  நம்ம  ஆல்வினும்,  உத்தமும்  தான்.

முழு பாடிகார்ட்ஸ்  உடையில்,  கமாண்டோகள் தோற்கும் விதத்தில், இருந்தது  அவர்கள்  கெட்  அப். 
கருப்புக்  கோட்  சூட்,  கண்களுக்குக் கூலர்ஸ்,  காதில்  ‘ப்ளூடூத் ஹெட்செட்’ என்று ஏதோ ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு,  நின்றவர்களைக்  கண்டு,  மதுராவே,  ஒரு  கணம்  அலண்டு  தான்   போனாள்.

கையில்,  AK 47  மட்டும்  இல்லாதது  ஒன்றுத்  தான்  குறை’ என்று நினைத்தவள் ஏதோ தோன்ற,  ஒரு புறம் சரிந்து பார்த்தவள், அவர்களின் கோட் உள்புறம்,  பிஸ்டல்  இரு பக்கமும்  இருப்பதைக் கண்டு கொண்டவளின்,  ரத்தக்  கொதிப்பு   தாறுமாறாக  எகிறியது. 

“ஏம்மா!… ஏதாவது கட்சி தொடங்கிட்டியா?. இல்லை யார் கிட்டேயாவது வாயைக் கொடுத்து மாட்டிகிட்டேயா!…

உனக்குத் தான், அந்த கடவுள், வாயில் ஓட்டையை வைக்காமல், ஓட்டைக்குள், வாயை வைத்திருக்கிறாரே!
எங்கே, என்ன வம்பை, விலைக் கொடுத்து  வாங்கிட்டே!… பாதுகாப்பு எல்லாம் பலப்படுது.” என்று   கேட்டு   வைத்தார்.

அண்ணாச்சிக்கு, மனைவி கையில் மதுரா ஆப்பு வைக்க முயன்றால், சூர்யாவும்,  விஜய்யும்  சேர்ந்து   இவளுக்கு   ஆப்பு   அடித்து  இருந்தனர்.

நல்ல வேளை, மழைக் காரணமாக அந்தக் கடையில் ரெண்டு, மூன்று வாடிக்கையாளர்களைத்  தவிர,  வேறு அதிகம் இல்லாதால், மதுராவின் மானம்  கொஞ்சமாகத்  தான்  கப்பல்  ஏறியது .

அடுத்த  நொடி,  கான்பிரன்ஸ்  அழைப்பு விஜய்க்கும், சூர்யாவிற்கும் பறந்தது.  ரெண்டு  பேரும் எதிரிலிருந்து இருந்தால், அவள் கோபப் பார்வையில்,  பொசுங்கி  இருப்பார்கள் .

“என்னமா?…” என்றனர்   இருவரும்   கோரஸாக .

“என்ன,  நொன்னைமா  வேண்டிக்  கிடக்குது… ரெண்டு  பேரும் கையில் கிடைச்சீங்க… கைமாத்  தான்.”  என்றாள்  கடுப்போடு .

“என்ன  மது,  ஆன்ட்டி,  நீ   கேட்ட   ஸ்னாக்ஸ்  செய்து  தரலியா  என்ன! இந்த அளவு அனல் அடிக்குது!… நான் வேண்டும் என்றால், ஹோட்டலில் ஆர்டர்  செய்யவா?…” என்றான்   விஜய்,   நேரம்   காலம்   தெரியாமல்.

அவனுக்குத்  தெரிந்து,  இவள்  கோபப்படுவது  கேட்ட  ஸ்னாக்ஸ், சாக்லேட்,  ஐஸ்கிரீம்  கிடைக்காதப்  போது  தான்.

அந்த எண்ணத்தில் கேட்டு வைத்துப் பயபுள்ளத் தனக்குத் தானே, ஆப்பு     வைத்துக்   கொண்டோம்   என்பதை   வெகுத்  தாமதமாய்  புரிந்து கொண்டான்.

‘இவ  சும்மாவே  வச்சு  செய்யறவ. விஜய்  கண்ணா!…  இந்த நேரத்தில் இது  உனக்குத்  தேவையா?’  என்பது தான் சூர்யாவின் எண்ணமாய் இருந்தது.

விஜய்   தான்  மாட்டிக்  கொண்டான்  என்று  பார்த்தால், இவன் சொன்னதைக் கேட்டுச் சூர்யா சிரித்து வைத்து, ‘ஆப்பு வாங்குவோர் லிஸ்ட்டில்   தானாய்  வந்து  சிக்கிக்  கொண்டான்.

“டேய்!… உங்க ரெண்டு பேருக்கும், என்னைப் பார்த்தா, ‘கடோகஜன்’ போலவா இருக்கு!… ‘தீனிப்பண்டாரம்!…’ என்று சொல்லாமல் சொல்லிக் காட்டறீங்களாடா?…”  என்றாள்  மதுரா,  எரிமலையாக .

“இதை  நாங்க சொல்லவே இல்லை மதுரா. உண்மை எது என்று உலகத்திற்குத்  தெரியும்.” என்றான் சூர்யா .

“டேய் பிரபு!… வேண்டாம்… கடுப்பு  ஏத்தாதே!…” என்றாள்  மதுரா .

“சரி… சரி… கடையில்  நின்று  கத்தாதே!… எதற்குப்  போன் செய்தே சொல்லு.”  என்றான்  விஜய் .

“நான் கடையில் இருப்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்றாள் மதுரா, திகைப்புடன்.

“ஹ்ம்ம்!… வெத்தலையை மைத் தடவிப் பார்த்துத் தெரிஞ்சுகிட்டேன்…. கேக்குறா பாரு கேணை மாதிரி… உன் கூடத் தான் ஆல்வின், உத்தம் இருக்காங்க  இல்லை.

அவங்க,  நீ  எங்கேப் போறே, என்ன செய்யறே  என்று  என்று  பத்து நிமிடத்திற்கு, ஒரு முறை எனக்கும், சூர்யாவிற்கும் தகவல் சொல்லிட்டே தான் இருப்பாங்க. இப்போ, எதுக்கு கூப்பிட்டே சொல்லு.”  என்றான்  விஜய். 

“ஹ்ம்ம்!…  அண்ணாச்சி  கடையில்  லோடு  தீர்ந்து  போச்சாம்…  போய் நீயும்,  அந்த  அனகோண்டா  தலையணும்,  மூட்டைத்  தூக்குங்க… பேசறான்  பாரு. பெரிய  பருப்பு  மாதிரி.
    
இதோ, ‘ஏதோ மனசுக்குள்ள நேவி சீல்/navy seal, அமெரிக்கன் ப்ரெசிடெண்ட் பாதுகாவலன் ரேஞ்சுக்கு’ எதுக்குடா இவங்க ரெண்டு பேருக்கும்,  ‘பான்சி  டிரஸ்  காம்பெடிஷன்’  வைச்சு  இருக்கீங்க!

பார்க்கறவங்க,   கண்ணு அவிஞ்சு போறதுக்கா?
அண்ணாச்சி,  என்னைக்  கிண்டல் செய்யறார். ‘கட்சி ஆரம்பித்து இருக்கியா… இல்லை வாய் கொடுத்து வாங்கிக் கட்டிகிட்டியா’ என்று.

எதற்கு டா  இப்படி  ஓவர்,  பில்ட் அப்  கொடுக்கறீங்க  ரெண்டு பேரும்!…” என்று பொரிந்து  தள்ளினாள்.

‘எங்களுக்கு  இது  தேவைத்  தான்.’  என்ற  ரேஞ்சில்  ஆல்வினும்,  உத்தமும் அவளை   முறைத்தனர் .

“நீ எங்கே வெளியே போனாலும், அவங்கக் கூட வருவாங்க. ‘சுமன் தப்பிச்சுட்டான்’ என்பதைச் சுபா சொல்லி இருப்பாளே!…
அதன் பிறகும்,  ‘ஹாயா  உலாத்திட்டு’ இருக்கே!

வீட்டில் தான், ரெண்டு தடி மாடுங்க கார்த்திக், ரகு இருக்கானுங்கலே! அவனுகளை  எழுப்பிக்  கடைக்கு  அனுப்ப  வேண்டியது  தானே!…

‘இளவரசி!… அப்படியே நந்தவனத்தில் உலா வருவது போல், பவனி’ வந்துட்டு இருக்கீங்களோ!

‘என்னைக்   கடத்துங்க!…’  என்று  நீயா  வழி  ஏற்படுத்தித்   தரே!…  இப்போ,  நீ  ஸ்னாக்ஸ் சாப்பிடலை என்றால், உலகம் அழியப் போகுதா என்ன?

அண்ணாச்சியை, இன்னொரு சொந்த வீடு வாங்க வைக்காம விடப் போவதில்லை  என்று  கங்கணம்  கட்டிட்டு  அலையறியா  என்ன?” என்றான்  விஜய்  கோபத்துடன் .

“பைத்தியம்  மாதிரி,  உளறாதே  விஜய்!… சுமன்  இன்னும்  பத்து  வருடம் கழிச்சி கடத்துவான். அதுவரை இவங்க ரெண்டு பேரும் பின்னாலேயே வருவார்களா  என்ன!… be practical man.” என்றாள் மதுரா.

“practical!… you want me to be practical?… எது நிதர்சனம் என்று சொல்லவா!… என் கையில் தான், ஒரு பெண்ணின் உயிர் போனது. அவளைப்  பறிக்  கொடுத்துட்டு,  தினம் தினம் புழுங்கிச் செத்துட்டு இருக்கிறவன்,  இதோ  லைனில்  தான் இருக்கான்.

என் கண் முன்னால் தான், இதுவரை மூன்றுத் தடவை, பல பெண்களை விடுவித்து  இருக்காங்க. இதுவரை அர்ரெஸ்ட் ஆனவங்க எத்தனை பேர் தெரியுமா?…
முப்பதிற்கும்  குறையாது.
மாச மாசம், புதுசு புதுசா பீகார், ஜார்கண்ட், ஒதிஷா என்று ஆட்கள் கடத்தலுக்கு  வராங்க.

இது  எல்லாத்துக்கும்,  ‘ஹெட்  சுமன்’ என்று  தெரியும்.  ஆனா,  ப்ரூப்  இல்லை.
ஒரு க்ளு  கூட  இல்லாமல்,  ‘எங்கே,  எந்தப்  பெண்  வாழ்வு  நாசம் ஆகும்’ என்று  பதறி  ஓடிட்டு  இருக்கேன். இந்த லிஸ்டில் நீயும் சேர வேண்டும் என்கிறாயா?.
இடியட்!….   போய்த்   தொலை  என்று  ஒரு வருசமா, கத்திட்டு இருந்தேன்.

 

‘எங்க  அப்பா சொன்னார், ஆட்டுக் குட்டிச் சொல்லிச்சுன்னு…. கல்லுக் கணக்கா இங்கேயே இருந்துட்டு, அவ கொள்ளிக் கண்ணில்’ பட்டு வைச்சே!

அவ சும்மாவே கிரிமினலா யோசிப்பா. அதான், ‘உன்னை அழித்தே ஆகணும்   என்று  சுமனிடம்’  மாட்டி  விட்டு இருக்கா.

நீ,  இருக்கும்  நிலைமையின்  தீவிரம்  கொஞ்சமாவது  ரியலைஸ் பண்ணு மது!…  ப்ளீஸ்!…  ஐ பெக் யு. நீ  எவ்வளவுத்  தான் கோவிச்சுக்கிட்டாலும், ஆல்வின்  உன்  கூடத்  தான்  இருப்பான். No aruguements. பை.” என்ற விஜய்,  அழைப்பைத்  துண்டித்து விட, மதுரவால் எதையும் பேச முடியவில்லை .

“ஏன் நீ அமைதியா இருக்கே!… நீயும்,  எதையாவது சொல்ல வேண்டியது தானே  பிரபு.” என்றாள்  மதுரா,  உள்ளே  போனக்  குரலில் .

“சுவீட்டி!… உனக்கே தெரியும், நாங்க எதைச் செய்வதாக இருந்தாலும், காரணம்  இல்லாமல்  செய்யமாட்டோம்  என்று… நீ  என்று   வரும்போது, ‘ஒரு  பிரைவேட்  ராணுவத்தையே’  கூட, உன் பாதுகாப்பிற்காக வைக்க ரெண்டு  பேருமே  தயங்க  மாட்டோம்டா.

ஏதோ  கதையில்  சொல்வாங்களே,  ‘சமுத்திரத்திற்கு  நடுவே,  ஏழு  கடல், ஏழு  மலைத்  தாண்டி,  யாரும்  இல்லாத,  தீவில், கோட்டை அமைத்து இளவரசி  வைக்கப்பட்டாள்  என்று…’ தேவையென்றால்,  அதை செய்யக் கூட நாங்க தயங்க மாட்டோம். அதை எல்லாம் செய்தால், உனக்குப் பிடிக்காது  என்று  தான்  ஆல்வின்,  உத்தம்  மட்டும்  உன்  கூட  இருக்காங்க.       

விஜய் கூட, எனக்குச் சண்டை இருக்கலாம்.  ஆனால், அவன் சொன்னது தான்  நானும்  சொல்வேன்.
போதும்…  ஒருத்தி,   அவனால்,  துடி துடித்துச் செத்தது போதும். என்னை விட, ரித்திகா  மரணத்தில் அதிகம்  பாதிக்கப்பட்டவன் விஜய் தான்டீ!…

அவள்  உயிரைக்  காக்கப்  போராடி,  நான்  வரும்  வரை  மருத்துவமனையில் அவளுக்குத்  துணை  நின்று,  அவள்  உயிர்  போன போது, அப்படியே துடிச்சு,  கதறி அழுது,  உடைந்து  போனவன்  அவன்  தான்டீ.     

இதற்கும்   ரித்திகா   அவனுக்குச் சொந்தமும் இல்லை… பந்தமும் இல்லை. அதற்கே,   அவனால் தாங்க முடியலை.
ஒவ்வொரு பெண்ணைக் காப்பாற்றும்  போதும்,  அவங்க   இருக்கும்   நிலையைப் பார்த்து, மனதிற்குள்   நாங்க   அழுதுட்டுத்  தான்டீ  இருக்கோம்.   

அந்தப் பெண்களுக்கு,  குழந்தைகளுக்கு  எதுவும்  நடப்பதற்கு  முன்  எல்லாம், பல  தடவைக் காப்பாற்ற  முடியாமல் போய்யிருக்குடீ.

எத்தனையோ பெண்கள், தங்களுக்கு நடந்த கொடுமையைத் தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொண்டும், மனநலம் பாதிக்கப்பட்டும், எவனோ ஒருவன் செய்ய்யும் குற்றத்திற்கு, இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும்  சிலுவை  சுமக்கிறார்கள்  மது.    

எங்கள் கண் முன்னே விரிவது, மனித வக்கிரத்தின் உட்சக் கட்டம் மது!…  அதில்,  சிக்கிக்  கருகிப்  போன உயிர்கள் ஏராளம். 

நான்கு சுவற்றுக்குள் இருந்து, ‘நீல படம்’ பார்ப்பவன் கூட, ஒரு விதத்தில் இந்த மனித ஆட்கடத்தலுக்கு  உடந்தை  தான்.  குற்றவாளி  தான். 
டிமாண்ட் இருப்பதால்  தான்,  அவனுங்க  சப்லை  செய்யறானுங்க.

உன்னையும்,  இழக்க  என்னால்  முடியாது. இந்த விஷயத்தில், உன் பேச்சை,  நாங்க  ரெண்டு  பேருமே  கேட்க  மாட்டோம்…  தயவு  செய்து இந்த விஷயத்தைப் பற்றி, இதற்கு மேல் பேசாதே!. ஆல்வின்  உடன்  உத்தமும்,  உன்  கூடத்  தான்  இருப்பான்.. .பை.” என்றான் சூர்யா.

இதற்கு  மேல்,  ‘இவங்க  ரெண்டு  பேரிடமும்  பேசி,  ஏற்பாட்டை  நிறுத்துவது  முடியாதக்  காரியம்’ என்று புரிந்து விட, பெருமூச்சொன்றை விட்டு,  வீட்டினை  நோக்கிச்  சென்றாள்  மதுரா.

மழையில் நனைந்தவாறு, அவள் பின்னால் சென்றனர், மனதால் வந்த சகோதரர்கள்  இருவரும்.

ஒருவன் முன்னே, ஒருவன் பின்னே, இவள் நடுவில் என்று வீட்டினை அடைந்தாள்  மதுரா.

மதுரா, குடையின் பாதுகாப்பில் வீடு வந்து சேர, ஆல்வினும், உத்தமும் தொப்பலாக நனைந்து இருந்தனர்.

அதைப்  பற்றிக் கவலைபடாமல், அவரவர்  காரில்,  மதுராவின்  வீடு  முன்,   பாதுகாப்பிற்காக, நிறுத்தி இருந்த  அவர்கள்  காரில்  ஏறச் சென்றனர். 

“அண்ணா!…” என்ற  மதுராவின்  குரல்  கேட்டுத்  திரும்பினர்  இருவரும் .

“உள்ளே  வந்து  தலையைத்  துவட்டி,   ட்ரெஸ்   மாத்துங்க  அண்ணா.  ஜுரம் வரப் போகுது. பாதுகாப்பை வீட்டிற்குள் இருந்தும், நீங்க ரெண்டு பேரும் கொடுக்கலாம்.
நடுத் தெருவில்  கொட்டும் மழையில் காரிலிருந்து தான் கொடுக்க  வேண்டும்  என்ற  அவசியம்  இல்லை.”  என்றாள் மதுரா கண்ணில்  நீரோடு .

“இல்லை மா… வேண்டாம்.” என்ற  ஆல்வினை,  மதுராவின் கோபப் பார்வைத் தடை  செய்தது .
“இப்போ  ரெண்டு  பேரும் உள்ளே வரப் போறீங்களா!… இல்லை மழையில் நடு  ரோட்டில்  அமர்ந்து,   நான்  தர்ணா செய்யணுமா!…
ஜன்னி வந்து நான் செத்து தொலைச்சா… சுமன் மாதிரி எவனுக்கும் நான் பயப்படத் தேவை இருக்காது  இல்லை?” என்றாள்  மதுரா  கோபத்துடன் .

“ச்சூ!… மதுரா என்னமா!… இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கே!… நாங்க வரோம்.” என்ற  ஆல்வின்,  உத்தமோடு  வீட்டினுள்  சென்றான்.

உள்ளே வந்த மதுரா கார்த்திக்கிடம், “அவங்க ரெண்டு பேருக்கும், டவல், வேறு டிரஸ் எடுத்துக் கொடு.” என்று சொல்லி விட்டுத் தன் அறைக்குச் சென்று  விட்டாள்.

ரகுவும்,  கார்த்திக்கும்  பேய்  அடித்தது  போல்  தான்  நின்றிருந்தனர். 

மதுரா உள்ளே  வருவதற்கு, சற்று முன் தான், விஜய், சூர்யா இருவரும் கான்பிரன்ஸ் காலில் ரகுவையும், கார்த்திக்கையும் சரமாரியாகக் காய்ச்சி எடுத்திருந்தனர்.
அதன்  விளைவு  அது.

மூன்றாம் பேஸ்து அடித்தது போல், முகத்தை வைத்துக் கொண்டு, மதுரா திரும்ப  வரக்  காத்திருந்த, அவர்கள் இருவர் இருந்த நிலையையும் கவனிக்கும்  நிலையில்  மதுரா  இல்லை.       

அறையினுள்,  இவள்   துணியை  மடித்து  கொண்டு  இருந்த  பவானி, “ஏய்!…  என்னடீ,  ஏதோ  முந்திரிப் பகோடா  வேண்டும்… செய்து கொடு என்று  சொல்லிட்டு  கடைக்குப்  போனே!… என்ன ஆச்சு, முகமே சரி இல்லை…” என்றார் .

எதையும்  பேசாத  மதுரா,  ஹால் நோக்கிக் கைக்காட்ட, எட்டிப் பார்த்த பவானி,  தொப்பலாக  நனைந்து  நின்ற  இருவரையும்  கண்டு  ஒரு  கணம் அதிர்ந்து, இவளைப்  பார்த்தார்.

“போய்ச் சூடா, ஏதாவது டிபன், காபி செஞ்சு கொடுங்கமா…” என்றாள் வேதனையில்  முகம்  சுருங்க .

“கண்ணம்மா!…  உன்  பாதுகாப்பிற்காகத்  தானேடா!…” என்றார் பவானி .

“என்  நோர்மல்  லைப்  இது  இல்லைமா… எனக்காக இவங்க ரெண்டு பேரும்  வெயில், மழைன்னு  பார்க்காம, தூக்கம் கெட்டு, இருப்பதைக் கண்டால்  மனசு  வலிக்குதும்மா.

ஆல்வின் அண்ணா, மிருதுளா அண்ணி, குழந்தை ஜான்சியை விட்டுட்டு இங்கேயே  கதியா  இருகார்மா. இவங்க  பாசத்திற்கு,  என்னமா  கைமாறு செய்யப்  போறேன்!…  சொன்னா,  அவனுங்க ரெண்டு பேரும், என்னைக் குதறி  எடுக்கறானுங்க.”  என்றாள்  மதுரா .

“கொஞ்ச  நாளுக்குத்  தான்மா. எல்லாம்  சரி ஆகிடும். நீ ரெஸ்ட் எடு. நீ ஸ்ட்ரெஸ் ஆகாதே!… நான் போய் அவங்களை கவனிக்கிறேன். அவங்களை பார்த்துட்டே இருந்தா, உனக்கு   மனசு  கஷ்டப்படும். நீ  இங்கேயே இரு.”  என்ற பவானி சென்று விட,  தன்  அறையில்  படுத்த  மதுராவிற்கு,  மனது  பாரமாகிப் போனது .

‘தன்னால் யாரும் கஷ்டபடக் கூடாது’ என்று நினைப்பவள் அவள். அவளாலேயே,   இன்று  இருவர் மெய் வருத்தி, அவளைக் காப்பதை, அவளால் ஏற்க முடியவில்லை.

அன்று  இரவு,  ‘உணவும்  வீட்டில்  வந்து  தான்  சாப்பிட  வேண்டும்’ என்று மதுரா  முடிவாகக்  கூறி  விட, சாப்பிட்டு  முடித்துக்  கிளம்பியவர்களை, மதுரா  வெளியே  விடவில்லை .

“மழை  ரொம்ப  அதிகமா  பெய்யுது.  இங்கே  நிறைய அறை இருக்கு. அதில் ஒன்றில் படுத்துகோங்கோ. காருக்குப்   போக   வேண்டாம்.” என்றவளின் பேச்சை இருவரும் ஏற்க மறுக்க,   விஜய்யையும்,  சூர்யாவையும்  மொபைலில்  அழைத்தவள்,
“இங்கே  பாருங்க… நீங்கச்  சொன்னது,  எனக்குப்  பிடிக்கவே  இல்லை  தான். ஆனாலும், ‘நீங்கச் சொல்லிடீங்களே என்று இவர்கள் எனக்குப் பாதுகாப்பு  அளிக்க  ஒத்து  கொண்டேன்.’

மழை  ரொம்ப  கொட்டுது. இவங்க ரெண்டு பேரும் தெருவில் இருக்க, என்னால்  சொகுசாக  வீட்டினுள் தூங்க முடியாது.

ஒண்ணு இவங்க ரெண்டும் பேரும், இங்கேயே படுக்கட்டும். ரெண்டு, நான் அவர்களோடு காரில் சென்று தூங்கறேன். மூன்று சொல்லாம கொள்ளாம, எங்கேயாவது கண்காண தூரத்துக்குக் கம்பி நீட்டிடுவேன்.

மூன்றில்  எது  என்று  முடிவுச்  செய்து  இவங்கக்  கிட்டே  சொல்லிடுங்க.
ஈவினிங், ராத்திரி  மட்டுமாவது, ஆல்வின் அண்ணாவுக்கு பதில், வேற யாரையாவது அனுப்பு விஜய்.

அவருக்கும் குடும்பம் இருக்கு. மனைவி, குழந்தை இருக்கா.
இந்தப்  பாவத்திற்கு,  எங்கே போய் நான் பரிகாரம் செய்வேன்  என்று  எனக்கேத்  தெரியலை.”  என்றவளின்  முதல்  ஆப்சன்,  ஏற்றுக் கொள்ளப்பட்டு,  உத்தம்  வீட்டிற்குள் உறங்கவும், ஆல்வின் அவன் வீட்டிற்கு செல்லவும், அவனுக்குப் பதில் இன்னொருவன் வெளி வராண்டாவில்  காவல்  இருப்பது  என்று  முடிவு  செய்யப்பட்டது.

ஷிப்ட்  போட்டுக்  காவல்  காத்த  உத்தமையும்,  இன்னொருவனையும் கண்டு  பெருமூச்சு  மட்டுமே  விட  முடிந்தது மதுராவால்.

‘தனக்கே  இப்படி  இருக்கிறது  என்றால்,  இருபத்தி  நாலு  மணி  நேரமும் பாதுக்காப்பு   வளையத்திற்குள்   இருக்கும்   சில,  V.I.P நிலையை  நினைத்து   மதுராவிற்கு  தலைச்  சுற்றியது.

‘ஏதோ  தன்னால்  முடிந்தது  அவ்வளவுத்  தான்’ என்று பெருமூச்சு விட்டுத் தன் அறைக்குள் வந்த மதுரா, பூரணி இன்னும் தூங்காமல் விழித்துக் கொண்டு இருப்பதை கண்டாள்.

பூரணி,  மதுராவின்  அறையில், அவளுடன் தங்கி இருக்கிறாள். இருவரும் திக் தோழிகள் ஆகி விட்டார்கள். அதில், சுபாவிற்கு லேசான பொறாமை எழுந்தது  என்று  கூடச்  சொல்லலாம்.

“என்னடீ!… இன்னும்  தூங்காம,  என்ன   செய்துட்டு   இருக்கே!… நைட் பேய் உலாத்தும் நேரம். போகும் போக்கில், உன்னை ஏதாவது பேய்,  தூக்கிட்டுப் போய்ட போகுதுடீ.  குட் நைட்.” என்றாள் மதுரா, தன் படுக்கையில்  படுத்துக்  கொண்டு .

“ஒண்ணும்  இல்லை  மதுரா!… யோசிச்சுட்டு  இருக்கேன்பா.” என்றாள் பூரணி.

“ஐயோ!…” என்று அலறியவாறு எழுந்து அமர்ந்த மதுரா, “அது ரொம்ப ஆபத்து  ஆச்சே!..” என்றாள்.

“ஆபத்தா!… எது ?” என்றாள்  பூரணி  ஒன்றும்  புரியாமல் .

“அதான்மா  நீ  யோசிப்பது…  நீ,  எப்பவுமே  லூசுத்தனமா   யோசிச்சு தானே  முடிவு எடுப்பே!… அதான் நீ யோசிக்கிறேன் என்றதும், காபரா ஆகிடுச்சு.” என்றவளை  தலையணை  எடுத்து  மொத்தினாள்  பூரணி .

சற்று நேரம், தலையணையை வைத்து  ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள்.  இருவரும்  மேல்   மூச்சு   கீழ்   மூச்சு   வாங்க   அமர்ந்தனர்.

“ஐயோ,  கார்த்திக்!…  ஒரு  ராட்சசி  கிட்டே சிக்கிட்டியே!… என்னமா மொத்தி எடுக்கறா!…”  என்றாள் மதுரா.

“மதுராக்ஷி!…”  என்று  கத்தினாள்  பூரணி .

“ஏண்டீ, என் பெயரை ஏலம் போடுறே!… எனக்கு, என் பெயர் தெரியாதா என்ன?” என்றாள்  மதுரா .

“ஐயோ சாமி!… உன் அறுவைத் தாங்க முடியலை. நீ செய்யும் அலம்பலில், நான் கேட்க வந்ததையே மறந்துடுவேன் போல் இருக்கு. உன் கிட்டே ஒண்ணு  கேட்கணும்.”  என்றாள் பூரணி .

“சாரி மா… உனக்குக்  கொடுக்கும் அளவு என் கிட்டே, டப்பு லேது.”  என்றாள்  மதுரா .

“ஜோக்கு?… சிரிப்பே வரலை… நான்  சீரியஸ்சா  பேசணும்.” என்றாள் பூரணி.

“சரி… அப்போ,  அவசரச் சிகிச்சைப் பிரிவில், ஒரு ரூம் போட்டுடறேன்… நீ தானே,  சீரியசா பேசணும் என்று சொன்னே!…”  என்று மதுரா கடித்து வைக்க,  பூரணி  டென்ஷன்  ஆக, “லெஸ்  டென்ஷன்  மோர்  ஒர்க்!…
மோர் ஒர்க், 
லெஸ்  டென்ஷன்  பூரணி.”  என்று செந்தில் வாய்ஸில் பேசி வைத்தாள்.

“வேணாம்… அழுதுடுவேன்…” என்ற பூரணி, அவள் கடித் தாங்க முடியாமல் பாவமாய் சொல்ல,
“சரி  சொல்லு… என்ன பிரச்சனை?”  என்றாள்  மதுரா .

“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லை. டவுட் அதான்.” என்ற பூரணி தயங்கித் தயங்கி, 
“தப்பா  நினைச்சுக்காதே, கோவிச்சுக்காதே!… நீ  யாரை செலக்ட்  செய்து  இருக்கே ?” என்றாள் .

“புரியலை…  எதற்கு,  யாரை  செலக்ட்  செய்து  இருக்கேனா, என்று கேட்கிறே ?”  என்றாள் மதுரா .

“இல்லைப்பா… கருணா  மாமா,  சூர்யா  அண்ணா, ரெண்டு பேருமே உன்னை,  ரொம்ப டீப்பா லவ் செய்யறாங்க.  ஹாஸ்பிடலில்   கருணா  மாமா  கோபத்தைக்  கண்டு,  எனக்கு   இதயமே   நின்னு  போச்சு.
அவருக்கு  அவ்வளவு கோபம்  வரும்  என்று  அன்று தான், எனக்குத் தெரியும்.

உனக்கு ஒன்று என்றால், அவர் துடிப்பதும், ‘சூர்யா அண்ணா செத்தாங்க’  என்றே   நினைச்சேன்.
எத்தனை  பேர் தெரியுமா போராடி, இருவரையும் பிரிச்சு விட்டாங்க!…

சூர்யா அண்ணா, முதலில் கொஞ்சம் தடுமாறினாலும், அவரும் செமையா தான் சண்டை போட்டாங்க.

இவங்க ரெண்டு பேரில் யாரை நீ தேர்ந்து எடுக்கப் போறே!… இல்லை ஏற்கனவே தேர்ந்து  எடுத்துட்டியா?.

ஒருத்தர் விடோவ்ர். இன்னொருத்தருக்கு,  ‘ஒரு பிசாசு,  மனைவி என்ற பெயரில் அவரைப் படுத்தி எடுத்துட்டு’ இருக்கு. இவங்க ரெண்டு பேரில் யார் உன் சாய்ஸ்?” என்றாள்  பூரணி .

“உன்னைத் தான் கேட்கிறேன் மதுரா!… விஜய் மாமா, சூர்யா அண்ணா இருவரில்,  யார்  உன்  சாய்ஸ்?… உதை  வேண்டுமா?… கேட்டுட்டே இருக்கேன், தோளைக்  குலுக்கி,  உதட்டைப்  பிதுக்கினால்,  என்ன  அர்த்தம்?” என்றாள்  பூரணி.

“எனக்கே  தெரியலை   என்று  அர்த்தம்  கூமுட்டை. 
உன் கிட்டே, வலது கண்  முக்கியமா, இடது  கண் முக்கியமா என்று கேட்டால் எதைச் சொல்வாய்?
அது  போல்  தான் சூர்யாவும், விஜய்யும் எனக்கு.
ரெண்டு பேருமே என் வெல் விஷேர்ஸ்.

என் நண்பர்கள்!

எதையும் எதிர் பார்க்காமல் உதவிட்டு இருக்காங்க. 
ரெண்டு  பேருமே  என்னை  விரும்பறாங்க.
இதில்  யாரைத் தேர்ந்து எடுக்கச் சொல்றே?”  என்ற  மதுரா விஜய், சூர்யாவின் லவ் ஸ்டோரி, தனக்கு தெரிந்த அளவில் சொல்லி முடிக்க, இப்பொழுது  பூரணியால்  எதையும்  பேச  முடியவில்லை .

“இப்போ  புரியுதா  என் நிலை!…  பாவத்திலே,  மிகப்  பெரிய  பாவம்,  நம்பிய இதயத்தை உடைப்பது. இருவரில்,  யாரை நான் தேர்ந்து எடுத்தாலும்,  அது  மற்றவருக்கு,  மரண  வலி  தான்  தரும்.

என்  மானத்தை   காப்பாற்றும்,  இரு நண்பர்களில், யாருக்குத் துரோகம் செய்யச் சொல்கிறாய்?

திருமணம் என்பது ஆண் பெண் சம்பந்தபட்டது மட்டும் இல்லை, இரு குடும்பம் சம்பந்தபட்டது. நான் என் பெற்றோருக்குக் கட்டுப்பட்டவள்.

அம்மா,   ருத்ரா  மூலம்  குழப்பி  வைத்ததை  பார்த்தாய்  தானே!…  இருத்தலைக் கொல்லி  எறும்பாய்  இருக்கார்.
அவரால் இவர்களை ஏற்கவும் முடியவில்லை. ‘இவர்களின் பாதுகாப்பு வேண்டாம்’  என்று தைரியமாக  சொல்லவும்  முடியவில்லை.

இவர்களில்  யாரைத்  தேர்ந்து எடுத்தாலும், என் பெற்றோருக்கு வலி ஏற்படுத்தும் பூரணி.

ஒருவேளை,  காதல்  வந்தால்,  காதலுக்காக  வீட்டை  எதிர்த்து,  இத்தனை வருடம்  எனக்குப்  பார்த்துப்  பார்த்துச்   செய்த   பெற்றோரை,  ‘ஜஸ்ட்  லைக்  தட்’  என்று  உதறி  தள்ளிட்டு,  போகும்  அளவுக்  கல்  நெஞ்சம்  எனக்கு  வருமா  என்று  தெரியலை!

இப்போ இதைப் பற்றிப் பேசும் அவசியம் இல்லை. அவசரமும் இல்லை. பூரணி. நானே, குழப்பத்தில் தான் இருக்கேன். என் கிட்டே வந்து யாரு, யாருன்னு  கேட்டா  என்ன  பதில்  தான்  சொல்ல  முடியும்?” என்றாள்  மதுரா கண்  கலங்க .

“அப்போ, அங்கிள், ஆன்ட்டி வேறு யாரையாவது உனக்கென்று முடிவுச் செய்தால்!…”  என்றாள் பூரணி .

“பூரணி!… ‘உன்னுடைய நடந்தால், போனால், வந்தால்’ என்ற எதிர்காலக் கேள்விக்கு, விடை தெரியும் ஞானி நான் இல்லைம்மா. இதுவரை எந்த ஐடியாவும்   எனக்கு   இல்லை.

என் பாட்டி சொல்வாங்க, காலம் பிரச்சனைகளை மட்டும்  கொடுக்காது,  அதற்கு  உண்டான  வழியையும் காட்டும் என்று’
‘விதி  விட்ட,  வழின்னு தான் இருக்கேன்’. 

நாளைக்கு  என்ன  நடக்கும் என்று   யாருக்கு   தெரியும்!… நத்திங்  இன்  மை  ஹாண்ட்ஸ்.

போய்த்  தூங்கு. நடப்பது, நடக்கும்  போது, பார்த்துக் கொள்ளலாம்.” என்ற மதுராவின்  குழப்பம்,  இப்பொழுது  பூரணிக்கு  வந்து  விட்டது .

அதே  சமயம்  பவானியும்,  சங்கரனும்  தங்கள்  அறையில்  பேசிக்  கொண்டு இருந்தனர் .

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

82

ஆல்வின்,  உத்தமின் அந்தப் பாசம், அவர்களை மதுராவின் பாதுகாப்பிற்காக, அனுப்பி  வைத்த  விஜய், சூர்யாவின் அக்கறை பார்த்ததும், அவருக்குத் தன்னையே எதைக் கொண்டாவது அடித்துக் கொள்ளலாம்  போலிருந்தது.   “ச்சே!... என்னால்  தானே,  நம்ம  பொண்ணு, இத்தனை கஷ்டப்படறா! முன்னே பின்னே தெரியாதவங்க எல்லாம்,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்