arrow_back
என்ன தவம் செய்தேன்! 83
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 83 / 85

83

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

பெசன்ட் நகர்!
அஷ்டலக்ஷ்மி  திருக்கோயில்.

‘ஓம்காரச் சேத்திரம்’ என்று அழைக்கப்படும் ஸ்தலம்.

‘ஓம்கார வடிவில்’ கட்டப்பட்டு, வங்காள விரிகுடாவின், கடல் அலைகளின் ஓசையும், காற்றின் சப்தமும், ‘ஓம்’ என்ற ஓசையினை ஏற்படுத்தும் ‘அஷ்டாங்க விமானம், எட்டு பகுதியாகக்’ கட்டப்பட்டு, 1976 முதல் கும்பாபிஷேகம்  நடத்தப்பட்ட  திருக்கோயில்.

மூன்று   தளங்களை  உடையதாகவும்,   திருமாலின் நின்ற, அமர்ந்த, சயனித்த கோலத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும், ஒரு மனிதனுக்கு தேவைப்படும்,  ‘எட்டுச்  செல்வங்களை’ கொடுக்கும் ஆற்றல் கொண்ட திருக்கோயிலாக வணங்கப்படும் இடம்.

‘செல்வம்’  என்பது  பணத்தினை  மட்டும் குறிப்பதன்று. 

கல்வி, நீண்ட ஆயுள்,  நம்பிக்கைக்குரிய நண்பர்கள்,  வாழ்க்கைக்கு  தேவையானச்  செல்வம்,   உழைப்புக்குச்  சரியான   ஊதியம்,  நோயற்ற  வாழ்க்கை,  எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன், மனைவி, அறிவு, ஒழுக்கம்,  ஆற்றல், கொண்ட குழந்தைகள்,  மேன்மேலும்  வளரக்கூடிய  புகழ்,  மாறாத  வார்த்தை,  தடங்கலில்லாத  வாழ்க்கை,  வருவாயைச்  சிக்கனமாகச்  செலவழித்து  சேமிப்பு  அதிகரித்தல்,  திறமையான  குடும்ப நிர்வாகம், நமக்கு   உதவக்கூடிய   பெருமக்களின்  தொடர்பு,   பிற  உயிர்களிடம்  அன்பு  செலுத்துதல்’  போன்றவற்றை  குறிக்கும்,  ‘எட்டு  சக்திகளாக  லஷ்மி’ எழுந்து  அருளி   இருக்கும்   திருத்தலம் .

அந்தத்   திருக்கோயிலின்   முன் வந்து நின்றன மூன்று கார்கள்.

முன் காரிலிருந்து ஆல்வின் இறங்க, நடுவே இருந்து மதுராவின் குடும்பம் இறங்க,  பின்  காரிலிருந்து  உத்தம் இறங்கினான்.

மற்றவர்கள்  உள்ளே  சென்று  விட,  உத்தமும்,  ஆல்வினும் மட்டும் வெளியே  நின்று  விட்டனர்.
காவல்  காக்கிறார்களாம்!.

ஆனால்,  இவர்கள்  யாருமே பின்னால் வந்து நின்ற, ஆம்னி வேன் ஒன்றினை  கவனிக்கத்  தவறி  விட்டனர்.

அதில் உள்ளிருந்த  ஐவர், பீகார் மாநில  இளைஞ்சர்களை போல் இருந்தனர். ஒவ்வொருத்தனின் முகமும், ‘எந்தவித பஞ்சமா பாதகத்தினையும்’ செய்யத் தயங்காதவர்கள் என்று தெள்ளத் தெளிவாகக் கட்டியம் கூறிக் கொண்டு இருந்தது .

அதிலிருந்து  ஒருவன்  மட்டும்  இறங்கி திருக்கோயிலுக்குள்  சென்றான்.

ஆல்வினும், உத்தமும், ‘வி.ஜி.பி சிலை போல் வெளியே நின்று காவல் காக்கிறோம்’  என்று  ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு இருந்தனர்.

அங்கு எப்படி விஜய்க்கும், சூர்யாவிற்கும், காதல் போட்டியோ, இங்கு ஆல்வினுக்கும்,  உத்தமிற்கும்,   ‘யார்   சிறந்த   அண்ணன்’   என்ற   போட்டி.

நல்லவேளை  மதுராவின்  வற்புறுத்தலால்,  ‘கமாண்டோ  கெட் அப்பில்’ வந்து, அங்குக் கடையில் அண்ணாச்சிக்கு கொடுத்த ஹார்ட் அட்டாக்கை, இங்கே  கோயிலுக்கு  வருபவர்களுக்குக் கொடுக்கவில்லை. 

கெட்டப்பை விட்டு இருந்தார்கள், இல்லை என்றால் கோயிலுக்கு வந்தவர்கள் எல்லோரும்,   மிரண்டு   ஓடி   இருப்பார்கள் .

‘மதுராவிற்குக்  காவல்  காக்கிறோம்’  என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டு இருந்த இரு காதலர்கள் ஆகட்டும், காவல் காக்க வந்தவர்கள்  ஆகட்டும், அவளின் குடும்பத்தினர் ஆகட்டும் அனைவருமே சிலப் பல விஷயங்களை  மறந்து தான் விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .

ஒன்று, ஒரு மளிகைச் சாமான் கடைக்கு,  மதுராவைத்  தொடர்ந்து  சென்றதைப்  போல்  அல்ல,  ஒரு  கோயிலில்  அவளைக்  காப்பது .

இரண்டாவது, கோயில்  என்பதற்கு  ஒன்றுக்கு  பல  வாயில்கள்  இருக்கும்.

மூன்றாவது,  அவ்வளவுப் பெரிய கோவிலில், கும்பலாகச் செல்வதில் பாதுகாப்பும் உண்டு,  குறைகளும்  உண்டு .

நான்காவது,  கூட்டாகச் செல்லும் போது கூட, ஒருவர் முன், ஒருவர் பின் என்று  வந்தவர்கள்  பிரிந்து  செல்ல  வாய்ப்பு   அதிகம் .

ஐந்தாவது, பவானிக் கடவுளின் மேல் கவனத்திலும், கார்த்திக் பூரணியை டாவ் அடித்துக் கொண்டு வருவதிலும், பவானி அழைப்பில் வந்து இருந்த சந்திராவின் மேல், ரகு கவனத்தைத் திருப்பி இருக்க, பாலாஜி நிறைமாத கர்ப்பிணியான, தன் மனைவி சுபாவின் மேல், கவனமாக இருக்க என்று ஒவ்வொருவரும், ‘மற்றவர்கள் மதுராவின் மேல் கவனமாய் இருப்பார்கள்: என்ற எண்ணத்தில், கடைசியில், ஒருவருமே மதுராவைக் கவனிக்கவில்லை என்பது  தான்  உண்மை .

எப்பொழுதும் கவனத்துடன் நடக்கும் மதுராவும், காலையிலிருந்து தான் கண்ட கனவால், மனஉளைச்சலில் இருக்க, ‘பின்னால் இவர்கள் வருகிறார்களா’ என்பதைக் கவனிக்காமல், அவள் பாட்டுக்கு, ஏதோ ஒரு எண்ணத்தில்,  முன்னால்  சென்று  கொண்டே  இருந்து  விட்டாள் .

பின்னால்  வந்தவர்களின்  கவனமும்,  அதிகமாகச்  சிதறும்  வண்ணம், படியில்  இறங்கிக் கொண்டு இருந்த நிறைமாத கர்ப்பிணியான சுபாவின் கால், படியில் இடறி விட, காலில் ஏற்பட்ட வலியோடு, கீழே விழாமல் சமாளித்து, அப்படியே  மடங்கி படியில் அமர்ந்தாள்.

ஏற்பட்ட பரபரப்பில், :மதுரா என்ன ஆனாள்’ என்று யாருமே கவனிக்கவில்லை.

சுபாவிற்கு  முதல்  உதவி  அளிப்பதிலேயே, அவர்கள் கவனம் முழுவதும் இருந்து  விட,  ‘கர்ப்பிணிப் பெண்ணுக்கு என்ன ஆனதோ, ஏது ஆனதோ’ என்று கவனித்தவர்கள், ஏறக்குறையப் பதினைந்து நிமிடத்திற்கும் மேல், மதுரா அங்கு இல்லை என்பதை  யாருமே  கவனிக்கவில்லை .

அந்தச் சில நிமிட இடைவேளையில், பலரின் வாழ்வு  மாறுவதற்கான அச்சாரம்  இடப்பட்டு விட்டது.

விதி,  தன்  விளையாட்டு  ஆரம்பித்து  விட்டதை நினைத்துச் சிரித்து கொண்டு இருந்தது .

கோயிலுக்கு வெளியே காவலுக்கு நின்ற இரு அண்ணன்களும், கோயிலுக்குள் இருந்த மதுராவின் குடும்பமும், மதுரா கோயிலுக்குள் மட்டும் இல்லாமல் போகவில்லை,  அந்தச்   சுற்றுவட்டாரத்திலேயே, ஏன் இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாட்டிலேயே இருக்கப் போவதில்லை என்பதை அறியவில்லை. 

மதுரா,  ‘அந்த  இடத்திலேயே  இல்லை’  என்பதைக்  கவனிப்பதற்குள் எல்லாமே  கை மீறிப்  போய்  இருந்தது.

இருபதாவது  முறையாக,  விஜய்யிடமிருந்து,  ஆல்வினுக்கு  அழைப்பு வந்தது.

இந்த  முறை, ‘என்ன ஆச்சு?’  என்று  கேட்பதற்கு  பதில்,
“ஆல்வின்!… மதுராக் கிட்டேப் போனைக் கொடு. நான் இப்பவே பேசியே ஆகணும்.”  என்றான்  விஜய் .

“என்னடா இது!… ஏண்டா இப்படிப் படுத்தி எடுக்கறே!… மதுரா என்ன போர்க்களத்திற்கா  போய் இருக்கா!… உள்ளே, சாமிக் கும்பிட, குடும்பத்தோடு போய்  இருக்காடா!…   வெளியே  வந்ததும்  கொடுக்கிறேன். இப்போ,  ஆளை விடு.”  என்றான் ஆல்வின் .

“வாட்  கம் அகைன்…  அவ, உள்ளே சாமி கும்பிடப் போய் இருக்கா,  வெளியே வந்ததும் கொடுக்கறியா!… அப்போ, நீ எங்கே இருக்கே?” என்றான்  விஜய்,  பதறியவனாக .

“என்னடா கேள்வி இது!… கோயிலுக்கு வெளியே, உத்தமோடு நின்று இருக்கேன்.”  என்றான் ஆல்வின் .

சில  பல  நிமிடங்கள்,  விஜய்யிடமிருந்து  பதில்  வராது  போகவே,
“டேய்!… லைனில் இருக்கியா!…”  என்று  பலமுறை  ஆல்வின்  கேட்டும் பதில்  வரவில்லை.

“கருணா!..  கருணா!… ஆர்  யு  தேர்  மேன் ?”  என்றான் ஆல்வின் .

“உள்ளே, உடனே போ ஆல்வின். மதுரா கிட்டே, இப்பவே போன் கொடு. நான்  பேசியே  ஆகணும்.”  என்றான்  விஜய் .

“நான்,  எப்படிடா  கோயிலுக்குள்?”  என்று  ஆல்வின்  தயங்கி நின்றான் .

“மவனே!… உன்னைச் சாகடிச்சுடுவேன். நீ, கோயிலுக்குள் போனா என்ன, அந்தச்  சாமிச் சூலத்தை எடுத்துக் குத்த போகுதா?…
இல்லை ஜீசஸ், உன்னைச்  சிலுவையாலேயே   அறையப்   போறாரா?

ஏன் கிறிஸ்துமஸ்க்கு உன்னோடு நான் சர்ச் வரவில்லை?…
கிருஷ்ண ஜெயந்திக்கு, கனகா அம்மா சமையலை நீ சாப்பிட்டதே இல்லை! மிருதுளாவோடு   கோயிலுக்குப்   போனதே   இல்லையா  என்ன!…

மனுஷன்  இருக்கும்  நிலை  புரியுமா,  இப்போத் தான்,  உனக்கு ஜாதி, மதம் எல்லாம்  தோணுமா?
சொல்வதைச் செய்து தொலைடா. மதுராக் கிட்டே  நான் பேசியே ஆகணும். அவக்  குரலைக் கேட்டால், தான் நிம்மதி எனக்கு.

உள்ளே போ ஆல்வின்.  உன்  காலில்  வேண்டும்  என்றால்  விழுகிறேன்.”  என்றான் விஜய் .

முன்னர், ஒரு  முறை  நண்பன்  இது  போல்  தவித்ததை,  நேரில்  கண்டவன் என்பதால்,  மதுராவின்  குரலைக்  கேட்கும்  வரை,   இவன்  சமாதானம்  ஆக மாட்டான் என்பது புரிந்து விட, லைன் கட் செய்யாமலேயே ஆல்வின் கோயிலுக்குள்  ஓட  ஆரம்பித்தான்.

அவன்  உள்ளே  செல்வதைக்  கண்ட,  உத்தமும், அதுவரை சூர்யாவிடம் பேசிக் கொண்டு இருந்த அழைப்பைக் கட் செய்யாமல், ஆல்வினை தொடர்ந்து  உள்ளே  சென்றான்.

கோயிலுக்குள்  வந்த இருவரும் சிறிது நேரம் கழித்து, சுபாவோடு மற்றவர்கள்  அமர்ந்து  இருக்கும்  இடத்திற்கு  வந்து  சேர்ந்தனர்.

சந்திரா, சுபாவின் காலில்,  சுளுக்கு  பட்டையை  ஒட்டிக் கொண்டு இருப்பதை  கண்டனர்.

“என்ன… என்ன… ஆச்சு சுபா ?” என்றான்  ஆல்வின்  பதறியவனாக .

“ஒண்ணும் இல்லை அண்ணா!… கால், படி இறங்கும் போது சுளுக்கிக் கொண்டது. அதற்கு இத்தனை அலம்பல் செய்துட்டு இருக்காங்க எல்லோரும். ஒன்றுமே இல்லை.”  என்றாள் சுபா .

சுபா, ‘ ஒன்றும்  இல்லையென்று  சொன்னாலும்,’ கால் புசுபுசுவென்று வீங்கித் தான் இருந்தது. 
வலித்  தாங்க  முடியாதவளாய்,  சுபாவின் முகம் வாடியிருந்தாலும், மற்றவர்கள் அதை அறியக் கூடாது என்று அதை அவள் மறைக்கவே முயன்றாள்.

“ஒகே…. சரி… மதுரா எங்கே ?”  என்றான் ஆல்வின் .

“அவ,  இங்கே   எங்கேயாவது  புளியாவரை கிடைக்குதான்னு  பிரசாத ஸ்டாலில்,  டேரா  அடித்து  இருப்பா.  பெருமாள்  கோயில் புளியவரை, மிளகு  பொங்கல்  என்றால், சும்மா விடுவாளா என்ன?” என்ற ரகுவிற்கு, ஹை பைவ்   கொடுத்தான்   கார்த்திக் .

பதில்   பேசாத  ஆல்வின்,  பிரசாத ஸ்டாலில் நோக்கிச் சென்று பார்க்க, அங்கு,  ஈ,  காக்கை   கூட   இல்லை  என்பதை  கண்டவன்,  ‘ஏதோ  விபரீதம்’  என்று    புரிந்து   மீண்டும்   அவர்களை    நோக்கி  வந்தான் .

“மதுரா அங்கே   இல்லை. மதுராவை  கடைசியா எப்போ பார்த்தீங்க?” என்று ஆல்வின் கத்த,  ஒருவர்  மற்றவரைப் பார்த்தார்களே  ஒழிய, யாருக்கும்  ஒன்றும்  தெரியவில்லை.
பேந்த,  பேந்த  முழிக்க  மட்டுமே  அவர்கள்  முடிந்தது .

“கருணா!… மதுரா மிஸ்ஸிங்டா…” என்றான் ஆல்வின்.

“கருணா!…  லைன்னில் இருக்கியாடா நான் சொல்வது கேட்குதா?… மதுராவை  காணவில்லை.”  என்று  அலறினான் ஆல்வின் .
மயங்கிச்   சரிந்தார்  பவானி.

‘எது  நடக்கக்  கூடாது  என்று  அஷ்ட லக்ஷ்மியை  வேண்ட வந்தாரோ’ அங்கேயே,  மகள் காணாமல் போகச் சில, பல நாட்களாய் தொடர்ந்து இருந்த,  மனஅழுத்தம்,  துக்கம்,  துயரம்  என்று  அவரை  மயக்கிச் சாய்த்தது.

உத்தமும்,  சூர்யாவிற்குத் தகவலைச் சொல்ல, அடுத்த சில நொடிகளில் ஆளுக்கு   ஒரு  திசையில்  ஓடினார்கள்  மதுராவை  தேட.
அதுவும்  காலம்  கடந்து .

விஜய், உடனே ராஜேஸ்வரிக்குத் தகவல் சொல்ல, அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்தவள் அவளும் கிளம்பி வருதாகவும்,  கண்ட்ரோல்  ரூமிற்கு  தகவல்  கொடுத்து  விடுவதாகவும்  பதில்  அளித்தாள் .

கோயிலுக்குள்  மற்றொரு  முறை  ஆல்வினும்,  உத்தமும்  தேட,  அவர்களின் கண்ணில்  பதுங்கிப்  பதுங்கி, இவர்களை நோட்டம் இட்டுக் கொண்டு இருந்த பீகார் ரவுடி, வகையாக, இவர்கள் கையில் சிக்கினான்.

அவன் மீது சந்தேகம் வர, ஆல்வினும், உத்தமும் அவனை விசாரிக்க, முன்னுக்கு  பின்  ஹிந்தியில்  உளறிக்  கொட்டினான் அவன்.

மாட்டிய  அவனை  நொய்யப்  புடைத்து  எடுத்தனர்  ஆல்வினும், உத்தமும். அடி தாங்க முடியாதவனாய், ‘மதுராவை கடத்தத் தன் சகாக்களோடு வந்ததாகவும்,  வெகுநேரமாய்  மதுராவை  தான்,  அந்த  இடத்தில  தான் தேடிக் கொண்டு இருப்பதாகவும், அவளைக் கண்ட உடன், தன் கூட்டாளிகளுக்குத் தகவல் கொடுப்பதாக இருந்ததாகவும், மதுரா வருவதற்காக, அவன் காத்து இருப்பதாகவும்’ உண்மையை ஒத்து கொண்டான் .
Bank Robbers Putting Their Mask On Stock Photo 1309282408 | Shutterstock
மப்பிட்டியில் வந்த அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் நிரஞ்சனின் உதவியால், அங்கு வேன் அருகே இருந்த மற்ற ஆட்கள் கைது செய்யப்பட்டு ராஜேஸ்வரியிடம்  அழைத்துச்  சென்றனர்.

மற்றவர்களைக் கூட்டிக் கொண்டுப் பாலாஜி, பவானிக்கு வைத்தியம் பார்க்கக் கிளம்பி விட, ஆல்வின், உத்தம், ரகு, கார்த்திக் மட்டும் சில போலீஸ்காரர்களோடு கோயில் அருகே, பின் புறம் இருந்த கடைகளில் விசாரித்துக்  கொண்டு  இருந்தனர்.

விஜய்யும்,  சூர்யாவும்   நேராக  ராஜேஸ்வரி  அலுவலகத்திற்கு  சென்றனர்.

‘வேட்டையாட  வரும்  இளம் சிங்கங்களின் வேகத்துடன், கண்களில் எரிமலை  குமுறிக் கொண்டிருக்க’, ‘எப்போ அவர்களின் கண்ட்ரோல் போகுமோ’  என்று அவர்களுக்கேத் தெரியாதவர்களாய், ‘யாரையாவது கொல்ல வேண்டும் என்றாலும் அதற்கும் தயாராகத் தான்’ அங்கே வந்திருந்தார்கள்.   

அடுத்த இருபது வினாடிகளில், பெண்களுக்கு ஏதாவது என்றால், பத்ரகாளியாக  மாறும்  ராஜியின்  டிரீட்மென்டில், பாதி உயிர் ஆகி இருந்தனர்  அந்த  ஐவரும் .
Watch Visaranai | Netflix

சூர்யாவும், விஜய்யும் வந்து சேர, “இந்தாங்க லத்தி… உங்களுக்குப் பத்து நிமிஷம் டைம். உயிர் போன கூடக் கவலைப் படாதீங்க… ஏற்கனவே பிஹாரில், இவங்க பேரில் பிடிவாரண்ட், சூட் அட்சைட் ஆர்டர் இருக்கு.

சமூகத்தின் விஷச் செடிங்க இவங்க. எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க.” என்றவள் இருவரிடமும் லத்தியை கொடுத்து விட்டு, விசாரணை அறையிலிருந்து   வெளியேறி  விட்டாள்.  

ராஜேஸ்வரி   கொடுத்த   டிரீட்மெண்டிலேயே,  சர்வமும்  நடுங்கி  போயிருந்த அந்த   ஐவரும்,  உள்ளே  ராட்சசனின்  மறு  உருவமாய்,  கண்களில்  கொலை வெறியுடன்  உள்ளே  வந்தவர்களைக்  கண்டு,  அவர்களின்  உயிர்  ஊசல்  ஆட   ஆரம்பித்தது.

கேட்கவும்  வேண்டுமோ!
லத்தி  எடுத்து  விளாசித்  தள்ளி விட்டார்கள்,  விஜய்யும்.  சூர்யாவும்.
அடித்  தாங்க  முடியாமல்,  மயங்கி  விழுந்தவர்களை, தெளிய வைத்து, அடித்துப்  பின்னித்  துவைத்து  எடுத்தார்கள்  இருவரும்.

‘ரத்த ஆறு ஓடியது’ என்று பேச்சுக்குச் சொல்வார்களே, அந்த அறையில் உண்மையான  ரத்த   ஆற்றினை,  இருவரும்  ஓட வைத்தார்கள்.

அந்த  ஐவரும்,  அலறிய  அலறலில்    அந்தக்  கட்டடம்  நடுங்க  ஆரம்பித்தது.
உடம்பில்,  எவ்வளவு  முடியுமோ,  அத்தனை  எலும்புகள்  உடைக்கப்பட்டன.

எத்தனை    நரம்புகளில்  அடி  கொடுத்தால்,  மரண அடியாய்,  ‘அந்த வலிக்குப் பதில்,  உயிரேப்  போனால்  கூடப் போதும் என்று எண்ணம் வருமோ’ அத்தனை  நரம்புகளும்   முறுக்கப்பட்டன.

பாக்சிங் கற்று கொள்ள, அடித்து ப்ராக்டிஸ் செய்யப் பயன்படும் மணல் மூட்டையை   விட,   அந்த   ஐவரின்   நிலை  மிகவும்  மோசமாகி போனது.

“வேண்டாம் பையா!… போதும். உண்மையைச் சொல்லிடறேன். விட்டுடுங்க.”  என்று  விஜய்யின்   காலில்  விழுந்தான் கோயிலில் சிக்கியவன் .

‘மதுராவைக் கடத்த சொல்லித் தங்களுக்குப் பணம் கொடுத்தது, தாங்கள் போதை மருந்து வாங்கும்  மிஸ்ரா என்பவன் என்றும், மதுராவை மயங்க வைத்து,  ஓசூருக்குக்  கொண்டுச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே தங்களுக்குக்  கொடுக்கப்பட்டத்  தகவல்’  என்றும்  சொல்லிக்  கதறினான் அவன்.

ராஜேஸ்வரி  அறைக்குத் திரும்பியவர்கள், “ இவங்க இல்லை ராஜீ. இவங்க மதுராவை கடத்தத் தான் வந்து இருக்காங்க. ஆனா, மதுராவை இவங்கக் கடத்துவதற்கு  முன்னே, வேறு யாரோ கடத்தி இருகாங்க.

இவனுங்க,  புதுசா சுமன் இறக்கி இருக்கும், பீகார் கூலிப் படை என்று நினைக்கிறன்.” என்றான்  விஜய் .

“நானும் அதே தான் நினைக்கிறன் அண்ணா!… இவங்கக் கடத்தலை. மதுராவின்  போன் ட்ரேஸ்  செய்ததில்,  கடைசியாகப்  போன்  மீனம்பாக்கம் பக்கத்திலிருந்து இருக்கு.

கால் செய்து பார்த்தேன். ரெண்டு, மூன்று ரிங் போனபிறகு, ‘மொபைல் சுவிட்ச் ஆப்’ என்று வருது. ட்ரேஸ் செய்ய முடியலை.

சென்னை விட்டு வெளியே செல்லும், எல்லா  செக்  போஸ்ட்  அலெர்ட் செய்துடறேன். அந்த மிஷ்ராவை,   பிடிக்க   ஆட்களை  அனுப்பிட்டேன்.”  என்றாள் ராஜேஸ்வரி .

“நான் சென்ட்ரல், ஹோம் மினிஸ்டர் கிருஷ்ணசேகரிடம் பேசி விடறேன். அப்போ தான், உங்கத் துறைக்குப் பிரஷர் வரும். இல்லை  என்றால்  பத்தோடுப் பதினொன்றாக  இந்தக்,  கிட்நாப்  போய் விடும்.” என்ற சூர்யா
மத்திய  மினிஸ்டரிடம் பேச, அவர் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் பேசி, அவர் கமிஷனர் இடம் பேச,  எல்லாவித  ஒத்துழைப்பும்  கொடுக்க வேண்டும்  என்று  ராஜிக்கு  தகவல்  வந்தது.

‘மதுராவைக் கண்டுபிடிக்க,  எதை  வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்’  என்ற  மறைமுக  சம்மதம் .

பவானி  ஹாஸ்பிடலில், அட்மிட் செய்யப்பட்டு,  டிரீட்மென்ட் நடக்க சங்கரன்,  அங்கு  வரவழைக்கப்பட்டு  விவரம்  சொல்லப்பட்டது.

‘காணாமல் போன மகளுக்காகப் பார்ப்பாரா, மகள் காணாமல் போன பயத்தில்,  மயங்கிப்,  பேச்சு மூச்சு இல்லாமல்,  படுத்து விட்ட மனைவிக்காகப்  பார்ப்பதா’  என்று புரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு  அமர்ந்து  விட்டார் .

ராஜேஸ்வரி,  ஓசூர்  போலீஸ்  தலைமை  அதிகாரியிடம் பேச, வந்த தகவல்கள்  சற்று  மிரட்டலாகவே  வந்தது.

அந்த, மிஸ்ரா என்பவன் பல தீவிரவாதிகள் குழுவுடன் தொடர்பில் இருப்பவன். 
ஆள்கடத்தல்,  ஆயுதக் கடத்தல் எல்லாம் சர்வ சாதாரணம். பணம்  கொடுத்தால்,  எதை வேண்டும் என்றாலும் செய்யத் தயங்க மாட்டான்.

உளவுத்  துறையின்  கண்காணிப்பில்  இருப்பவன். அன்று அவனையும், அவன்  கும்பலையும்  பிடிக்கும் ஆபரேஷன் நடந்து கொண்டு இருப்பதாகவும், ‘என்கவுண்டர் நிச்சயம்’ என்று அறிவித்தான் ராஜேஸ்வரியின்  நண்பன் .

‘டெட் எண்டு/dead end’ என்பார்களே, அந்த நிலைமை தான், அவர்கள் விசாரிப்புக்கு.  

மதுராவை யார் கடத்தியது?
மதுரா எங்கே சென்றாள்?
மதுராவுக்கு என்ன ஆனது?

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

84

அடுத்து  என்ன’  என்று  புரியாமல்,   விஜய் ,சூர்யா ராஜேஸ்வரி குழப்பத்தில் ஆழ்ந்து விட்டனர்.ஏதாவது க்ளூ கிடைத்தாலாவது, எந்தத் திசையில்  போவது,   யாரைப்   பிடித்து   விசாரிப்பது  என்று  தெரியும்.கண்ணைக்  கட்டி,  காட்டில்  விட்டது  போல்  இருந்தது  அவர்களுக்கு .ஆனால்,  எதிர்பாராத  இடத்திலிருந்து  அவர்களுக்குத் …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்