தினமும் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவள் எனக்குள் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறாள் என்று எனக்கே தெரியாது.
அவளுக்குள்ளும் நான் இருந்திருக்கிறேன். அது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆயினும் காட்டிக் கொண்டதில்லை. குடும்பங்களின் நல்லுறவை எண்ணி மூடி மறைத்திருக்கிறாள்!
நான் என்னைக் கண்டு கொண்டபோது, அவளை எனக்குள் கண்டுபிடித்தபோது நடந்தது என்ன? நாங்கள் இப்போது நலமா? எங்கள் காதல் என்னவானது?