கிழக்கு இலங்கையில் வாழும் முஸ்லிம் குடும்பங்களைத் தழுவியதாக நகர்கிறது இந்தக் கதை. இந்தப் பகுதியில் வாழும் மக்களின் சமய, கலாசாரங்களோடு இணைந்து, அழகியின் கற்பனையோடு கை கோர்த்திருக்கிறது கதை. இங்கு வாழும் மக்களின் உறவு முறை விளிப்புகள் வேறாக இருந்தாலும், கதையைப் படிக்கும் அனைத்து வாசகர்களையும் கருத்தில்கொண்டு சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். என் கதாநாயகர்கள் வேஷ்டி, சட்டையில் வலம் வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் நாயகன் பல இடங்களில் வேஷ்டியோடு வலம் வருகிறான். இந்தக் கதையில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் கிழக்கிலங்கை வாழ் முஸ்லிம் வாசகர்கள் என்னைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். என் தாய்நாட்டின் சில இடங்களுக்கு உங்களையும் அழைத்துச் சென்றிருக்கிறேன். உங்களோடு சேர்ந்துதான் நானும் அந்த இடங்களை எல்லாம் பார்வையிடுகிறேன் என்று சொன்னால் மிகையாகாது. கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொன்னால் நான் மகிழ்வேன்.
அன்புடன் அழகி.